ஐ.தே.க.வின் ஜனாதிபதி வேட்பாளராக கரு ஜயசூரிய?

வார இறுதியில் அறிவிப்பு

0 1,011

எதிர்­வரும் நவம்பர் மாத இறு­தியில் நடை­பெ­று­மென எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்ற ஜனா­தி­பதித் தேர்­தலில் ஐக்­கிய தேசியக் கட்­சியின் வேட்­பா­ள­ராக சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய கள­மி­றக்­கப்­ப­ட­வுள்­ள­தாக நம்­பத்­த­குந்த வட்­டா­ரங்கள் தெரி­வித்­தன.

இது தொடர்­பான அறி­விப்­பினை ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­வ­ரான பிர­தமர் ரணில் விக்­கிர­ம­சிங்க, இந்த வார இறு­தியில் மேற்­கொள்வார் என குறித்த வட்­டா­ரங்கள் குறிப்­பிட்­டன.

இந்த அறி­விப்­பை­ய­டுத்து சபா­நா­யகர் பத­வி­யி­லி­ருந்து கரு ஜய­சூ­ரிய இரா­ஜி­னாமா செய்­ய­வுள்­ள­தாக ஐக்­கிய தேசியக் கட்­சியின் சிரேஷ்ட உறுப்­பி­ன­ரொ­ருவர் கூறினார்.

ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­வ­ரான ரணில் விக்கி­ர­ம­சிங்க மற்றும் அக்­கட்­சியின் பிரதித் தலை­வ­ரான சஜித் பிரே­ம­தாஸ ஆகிய இரு­வரும் ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யி­ட­வுள்ள எண்­ணத்­தினை கட்சி முக்­கி­யஸ்­தர்­க­ளிடம் வெளி­யிட்­டுள்­ள­துடன் சஜித் பிரே­ம­தாஸ அதற்­கான பிர­சா­ரங்­க­ளையும் முன்­னெ­டுத்­துள்ளார்.

இதனால் ஐக்­கிய தேசியக் கட்­சிக்குள் பிள­வொன்று ஏற்­ப­டக்­கூ­டிய சூழ­லொன்றும் ஏற்­பட்­டுள்­ளது. இதனை தவிர்க்­கு­மு­க­மா­கவே சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரி­ய­வினை ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக கள­மி­றக்க ஐக்­கிய தேசிய கட்­சியின் சிரேஷ்ட உறுப்­பி­னர்கள் இந்த தீர்­மா­னத்­தினை மேற்­கொண்­டுள்­ள­தாக தெரி­ய­வ­ரு­கின்­றது. இதற்கு கட்­சியின் தலை­வ­ரான பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் இணக்கம் வெளி­யிட்­டுள்­ள­தாக மேலும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.
இதே­வேளை, மாத்­தளை தம்­மா­கு­சல அனு­நா­யக்க தேரர் தலை­மை­யி­லான பௌத்த தேரர்கள், பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்­க­வினை கடந்த சனிக்­கி­ழமை அலரி மாளி­கையில் சந்­தித்து பேச்சு நடத்­தி­ய­போது சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரி­ய­வை ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக கள­மி­றக்­கு­மாறு கோரிக்கை விடுத்­தனர்.

இவ்­வா­றான நிலையில், சிவில் அமைப்­புக்கள் மற்றும் தொழிற்­சங்க பிர­தி­நி­தி­க­ளுக்கும் இடை­யி­லான முக்­கிய சந்­திப்­பி­பொன்று கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை இடம்­பெற்­றது.

இதன்­போது, “கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பா­ளரை கட்­சியின் செயற்­கு­ழுவே தீர்­மா­னிக்கும்” என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­துள்ளார்.

அத்­துடன் ஐக்­கிய தேசியக் கட்­சியின் வாக்­கு­களை மாத்­திரம் வைத்துக் கொண்டு தேர்­தலில் வெற்­றி­பெற முடி­யாது. அதனால் பரந்த ஒரு பல­மிக்க அணி­யாக தோற்­றம்­பெற வேண்டும். அதற்­கா­கவே சிறந்த வேலைத்­திட்­டங்கள் தற்­போது எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது எனவும் பிர­தமர் கூறினார்.
ஐக்­கிய தேசியக் கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராகப் போட்­டி­யிட நினைக்கும் அனை­வரும் வெற்­றி­பெறும் கொள்­கைத்­திட்­டங்­களை முன்­வைக்க வேண்டும். அனைத்து கார­ணி­களும் முழு­மை­யாக பரி­சீ­லனை செய்­யப்­பட்­டதன் பின்­னரே தீர்­மானம் எடுக்­கப்­படும் எனவும் அவர் கூறி­யுள்ளார்.
இதே­வேளை, ஐக்­கிய தேசியக் கட்­சியின் பிரதித் தலைவர் சஜித் பிரே­ம­தா­சவை ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக கள­மி­றக்­கினால் அவ­ருக்கு தமது ஆத­ரவை வழங்கத் தயா­ரென ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் பங்­காளிக் கட்­சிகள் இணக்கம் வெளி­யிட்­டுள்­ளன.

முன்­ன­ணியின் பங்­காளிக் கட்­சி­களின் தலை­வர்கள் கடந்த சனிக்­கி­ழமை அமைச்சர் சஜித் பிரே­ம­தா­சவை கொழும்பு – 07 இலுள்ள அமைச்சர் மங்­கள சம­ர­வீ­ரவின் இல்­லத்தில் சந்­தித்துக் கலந்­து­ரை­யா­டினர்.

இந்த சந்­திப்பில் பங்­காளிக் கட்­சி­களின் தலை­வர்­க­ளான அமைச்­சர்கள் ரவூப் ஹகீம், ரிஷாத் பதி­யுதீன், மனோ கணேசன், பழனி திகாம்­பரம், சம்­பிக்க ரண­வக்க ஆகியோர் கலந்­து­கொண்­ட­துடன் பிரதித் தலைவர் சஜித்­துடன் அமைச்­சர்­க­ளான ராஜித சேனா­ரத்ன, மங்­கள சம­ர­வீர, மலிக் சம­ர­விக்­கி­ரம, பாலித ரங்கே பண்­டார, கபீர் ஹாசிம் ஆகியோர் கலந்­து­கொண்­டனர்.

இதே­வேளை, ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக சஜித் பிரே­ம­தா­சவை கள­மி­றக்­கு­வ­தற்கு அக்­கட்­சி­யுடன் நெருங்கிச் செயற்­படும் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு பலத்த எதிர்ப்­பினை வெளியிட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களான மங்கள சமரவீர, மலிக் சமரவிக்ரம மற்றும் ராஜித சேனாரத்ன ஆகியோர் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளை சந்தித்தனர்.

இதன்போதே சஜித்தின் நியமனத்திற்கு எதிர்ப்பு வெளியிட்டதுடன் குறித்த தேர்தலில் யாரையும் ஆதரிப்பதாக நேரடியாக தற்போது அறிவிக்க முடியாது என்று தமிழ் கூட்டமைப்பு அவர்களிடத்தில் கூறியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.