தமிழர், முஸ்லிம்கள் கோதாவை ஆதரிப்பர்

திஸ்ஸ விதாரண தெரிவிப்பு

0 754

தமிழ் மக்கள் இம்­முறை ஜனா­தி­பதி தேர்­தலில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பை ஏற்­றுக்­கொள்ளப் போவ­தில்லை. தமிழ், முஸ்லிம் மக்கள் கோத்­தா­பய ராஜபக் ஷவுக்கு ஆத­ர­வ­ளிப்­பார்கள் என்ற நம்­பிக்கை எமக்­கி­ருக்­கின்­றது என லங்கா சம­ச­மாஜக் கட்­சியின் தலை­வரும் முன்னாள் அமைச்­ச­ரு­மான திஸ்ஸ விதா­ரண தெரி­வித்தார்.சோச­லிச மக்கள் முன்­னணி நேற்று கொழும்பில் நடத்­திய செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரி­விக்­கையில்,

2015 ஜனா­தி­பதி தேர்­தலில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு இந்த அர­சாங்­கத்­துக்கு ஆத­ர­வ­ளித்­தி­ருந்­தது. ஆனால் கூட்­ட­மைப்­புக்கு அளித்த வாக்­கு­று­திகள் எத­னையும் அர­சாங்கம் நிறை­வேற்­ற­வில்லை. ஆனால் தமிழ் மக்­க­ளுக்கு அர­சாங்கம் ஒன்றும் செய்­யா­விட்­டாலும் கூட்­ட­மைப்பு உறுப்­பி­னர்கள் தனிப்­பட்ட முறையில் இந்த அர­சாங்­கத்­தி­ட­மி­ருந்து நன்­மை­ய­டைந்­தி­ருக்­கின்­றனர்.

அத்­துடன் இம்­முறை ஜனா­தி­பதி தேர்­தலில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு அர­சாங்­கத்­துக்கு ஆத­ர­வ­ளிப்­ப­தாகத் தெரி­வித்­தாலும் வடக்கு தமிழ் மக்கள் இம்­முறை தமிழ் தேசிய கூட்­ட­மைப்பை நம்­பப்­போ­வ­தில்லை. இது­தொ­டர்­பாக தமிழ் மக்­களை அறி­வு­றுத்தும் வேலைத்­திட்­டத்தை நாங்கள் ஆரம்­பித்­தி­ருக்­கின்றோம்.

அத்­துடன் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு வழ­மை­போன்று வடக்கில் இன­வாத பிர­சா­ரத்தை ஆரம்­பித்­தி­ருக்­கின்­றது. கோத்­தா­பய ராஜபக் ஷ தொடர்பில் தவ­றான கருத்­துக்­களை பரப்பி வரு­கின்­றது. 2010 ஜனா­தி­பதி தேர்­தலில் சரத் பொன்­சே­கா­வுக்கு தமிழ் மக்கள் ஆத­ர­வ­ளித்­தார்கள். அப்­ப­டி­யானால் இம்­முறை கோத்­தா­பய ராஜபக் ஷவுக்கு ஏன் ஆத­ர­வ­ளிக்க முடி­யாது என்று கேட்­கின்றேன்.

எனவே, ஜனா­தி­பதித் தேர்­தலில் தமிழ் மக்கள் கடந்த முறை­போன்று இம்­முறை தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பை நம்பி ஏமாற மாட்டார்கள் என்ற நம்பிக்கை எமக்கிருக்கின்றது. அதேபோன்று முஸ்லிம் மக்களும் கடந்த தேர்தலில் விட்ட தவறை நிவர்த்தி செய்யும் வகையில் எமக்கு ஆதரவளிக்க முன்வரவேண்டும் என்றார்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.