தனித்துவ கட்சி மீதான அஷ்ரபின் தணியாத தாகம்

0 1,346

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் ஸ்தாபக தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம் .அஷ்ரப்பின் 19 ஆவது நினைவு தினத்தை முன்­னிட்டு இந்த கட்டுரை வெளி­யி­டப்­ப­டு­கின்­றது.

இலங்கை அர­சியல் வர­லாற்றில் தவிர்க்க முடி­யாத அர­சியல் கூறாக முஸ்லிம் அர­சி­யலை கொள்ள முடியும். பெரும் தேசி­யக்­கட்­சி­களின் ஆத­ர­வுத்­த­ளத்தில் நின்று செயற்­பட்டு வந்த முஸ்லிம் சமூகம் ஒரு­கட்­டத்தில் இன்­னொரு சிறு­பான்மை சமூ­க­மான தமிழ் சமூ­கத்தின் அர­சியல் பங்­கா­ளி­க­ளாக செயற்­பட்டு வந்­தது. ஆனால் பெருந்­தே­சிய கட்­சிகள் முஸ்லிம் சமூ­கத்தை ஏமாற்­றி­யது போலவே தமி­ழர்கள் சார்ந்த கட்­சியும் முஸ்லிம் சமூ­கத்தை ஏமாற்­றி­யது. இதனால் விரக்­தி­யுற்ற முஸ்லிம் தலை­மை­களின் மாற்றுத் தீர்­மா­னம்தான் முஸ்­லிம்­க­ளுக்­கான தனிக்­கட்­சி­யான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் எனும் தனித்­து­வ­மான கட்சி உரு­வா­கி­யது.

ஆரம்­ப­கா­லத்தில் சமு­தாய சிற்­பி­க­ளாக செயற்­பட்ட அறிஞர் சித்­தி­லெப்பை, ரி.பி.ஜாயா, சேர்.ராசிக் பரீட் , டாக்டர் பதி­யுதீன் மஹ்மூத் போன்­ற­வர்கள் தம்­மா­லான சமூக பணி­களை மேற்­கொண்­டாலும் அது முஸ்லிம் சமூ­கத்தின் விடு­த­லைக்­கான பரி­பூ­ரண தளத்தை உண்டு பண்­ண­வில்லை. அவர்­க­ளது காலத்தில் தனி­யான முஸ்லிம் கட்சி ஒன்றின் தேவைப்­பாடு தொடர்பில் சிந்­த­னைகள் எழு­வ­தற்கு ஆணித்­த­ர­மான கார­ணங்கள் எதுவும் இருக்­க­வில்லை. ஆனால், பிற்­கா­லத்தில் அது உண­ரப்­பட்­டது. அவர்­களின் பின்னர் பாரா­ளு­மன்­றத்­தினை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­திய முஸ்­லிம்­க­ளினால் சொல்­லிக்­கொள்ளும் அள­வுக்கு அடை­வு­களை பெற்­றுக்­கொள்ள முடி­ய­வில்லை. எனவே முஸ்லிம் சமூ­கத்­தினை ஒன்­றி­ணைத்து பல­மான அர­சியல் சக்­தி­யாக அதனை மாற்­ற­வேண்­டிய தேவை உண­ரப்­பட்­டது. அந்த தேவையை நிறை­வேற்றும் சக்­தி­யாக அஷ்ரப் தன்னை உரு­வாக்கிக் கொண்டார்.

1980 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் கட்­சியின் தோற்­ற­மா­னது வெறு­மனே எழுந்­த­மா­ன­மாக எடுக்­கப்­பட்ட முடிவு கிடை­யாது. அஷ்ரப் எனும் அர­சியல் மேதையின் தூர சிந்­த­னையின் வெளிப்­பா­டா­கவே அது அமைந்­தது. அர­சியல் ரீதி­யாக புறக்­க­ணிக்­கப்­பட்ட ஒரு சமூ­கத்தின் தனித்­து­வ­மான குர­லாக இருக்­க­வேண்டும் என்ற பேர­வாவின் அடை­யா­ள­மா­கவே இந்த கட்சி தோற்றம் பெற்­றது. எல்லா நிலை­யிலும் புறக்­க­ணிக்­கப்­பட்ட ஒரு சமூ­க­மாக முஸ்லிம் சமூகம் இருப்­பதை கண்டு மர்ஹூம் அஷ்ரப் மனம் வெதும்­பினார்.

முஸ்லிம் சமூ­கத்தின் வாக்­கு­களை பெற்று பாரா­ளு­மன்றம் சென்­ற­வர்கள் தாம் சார்ந்த கட்­சி­களின் கட்­டுப்­பாட்டில் இருந்­தனர் . அதனால் அவர்­களால் தமது சமூகம் தொடர்பில் வாய்­தி­றக்க முடி­யாத நிலை இருந்­தது. அத்­தோடு குறு­கிய அர­சியல் கார­ணங்­களை அடிப்­ப­டை­யாக வைத்து அவ்­வப்­போது உரு­வா­கிய பல முஸ்லிம் கட்­சிகள் அடை­யா­ள­மற்று காணாமல் போயின. இந்­நி­லையில் பலத்த போராட்­டங்­க­ளுக்கு மத்­தியில் உரு­வாக்­கப்­பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தற்­போது நீண்ட நெடு­ம­ர­மாக கிளை­விட்டு செழித்து வளர்ந்­துள்­ளமை அஷ்ரப் அவர்­களின் தூய எண்­ணத்தின் அடை­யா­ளமே.

இலங்கை அர­சியல் வர­லாற்றை எழு­து­கின்ற எவரும் இனிமேல் அஷ்­ர­புக்கு முந்­திய அர­சியல் வர­லாறு, அஷ்­ர­புக்கு பின்­ன­ரான வர­லாறு என்று பிரித்தே எழுத வேண்டும். அந்­த­ள­வுக்கு இலங்கை அர­சியல் வர­லாற்றில் மர்ஹூம் அஷ்ரப்பின் காத்­தி­ர­மான பங்­க­ளிப்பும், தீர்­மா­னங்­களும் பெரும் மாற்­றங்­களை ஏற்­ப­டுத்­தின. ஒரு காலத்தில் முஸ்லிம் சமூ­கத்தின் வாக்­குகள் வெறும் செல்­லாக்­கா­சு­க­ளா­கவே பயன்­ப­டுத்­தப்­பட்­டன. ஆனால் அஷ்ரப் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் கட்­சியை நிறுவி அதன் மூலம் கிடைக்­கப்­பெற்ற அர­சியல் அதி­கா­ரத்தின் பய­னாக ஆட்­சியை மாற்­று­கின்ற அல்­லது தீர்­மா­னிக்­கின்ற சக்­தி­யாக முஸ்லிம் சமூ­கத்தின் அர­சியல் சக்­தி­யாக நிறு­விக்­காட்­டினார்.

சட்­டக்­கல்­லூரி மாண­வ­னாக இருந்த காலத்­தி­லேயே முஸ்லிம் சமூகம் தொடர்பில் கரி­ச­னையும், அக்­க­றையும் மர்ஹூம் அஷ்ரபிடம் மேலோங்கி காணப்­பட்­டது. அதன்­வி­ளை­வாக வெவ்­வே­றான அர­சியல் கட்­சி­க­ளுடன் அவர் பய­ணித்தார். ஆனால் முஸ்லிம் சமூ­கத்தின் உரி­மை­களை பெற்­றுக்­கொள்­வ­திலும், அதன் அபி­லா­ஷை­களை நிறை­வேற்­றிக்­கொள்­வ­திலும் ஏற்­பட்ட தேக்க நிலையே அஷ்ரப்பின் தனித்­து­வ­மான அர­சியல் கட்­சிக்கு வழி­வ­குத்­தது எனலாம். பெருந்­தே­சிய கட்­சி­களின் நிழலில் பய­ணித்த முஸ்லிம் அர­சியல் தளம் அஷ்­ரபின் முஸ்லிம் காங்­கிரஸ் உரு­வாக்­கத்தின் பின்னர் அதனைச் சுற்றி நக­ரத்­தொ­டங்­கி­யது. இதனால் பெரும் தேசிய கட்­சி­களில் அங்கம் வகித்த முஸ்லிம் பிர­தி­நி­திகள் அஷ்­ரபை வெகு­வாக எதிர்த்­தார்கள். அதற்­கான காரணம் அஷ்ரப்பின் தனிக்­கட்சி தமது வாக்கு வங்­கி­களில் பலத்த பின்­ன­டைவை உண்டு பண்ணும் என்­ப­தனை அவர்கள் உணர்ந்­தார்கள்.

முஸ்லிம் சமூ­கத்தின் வாக்­குப்­ப­லத்தின் பெறு­மா­னத்தை மூல­த­ன­மாக்கி பேரம் பேசு­கின்ற சக்­தி­யாக அஷ்ரப் உரு­வெ­டுத்­தி­ருந்தார். அஷ்­ரபின் இந்த தார்­மீக போராட்­டத்தில் மக்கள் கவர்ந்­தி­ழுக்­கப்­பட்­டார்கள். இதனால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ர­ஸுக்­கான மவுசு நாளுக்­குநாள் அதி­க­ரித்­தது. 1985 ஆம் ஆண்டு தலைவர் அஷ்ரப் கட்­சிப்­ப­ணி­களில் சற்று ஓய்­வுடன் இருந்தார் ஆனால் 1986ஆம் ஆண்டு பாஷா விலாவில் நடை­பெற்ற கட்­சியின் 6ஆவது தேசிய மாநாட்டில் போரா­ளிகள் மற்றும் புத்­தி­ஜீ­வி­களின் ஆத­ர­வினைக் கண்டு மீண்டும் புத்­து­ணர்ச்சி பெற்று கட்­சியை மேலும் விரி­வாக்கம் செய்யும் வேலையில் ஈடு­பட்டார்.

முஸ்லிம் காங்­கிரஸ் சில முக்­கிய கோரிக்­கை­களை முன்­னி­றுத்தி செயற்­பட்­டது. அதிலும் அபி­வி­ருத்தி அர­சி­யலை விடவும் சமூ­கத்தின் உரி­மையை பெற்­றுக்­கொ­டுப்­ப­திலும் அதனை பாது­காப்­ப­திலும் உறு­தி­யாக நின்­றது. இலங்கை முஸ்­லிம்கள் தனித்­து­வ­மிக்க ஒரு­தே­சிய இன­மாக அங்­கீ­க­ரிக்­கப்­பட வேண்டும் என்­பதே அதன் தாரக மந்­தி­ர­மாக இருந்­தது. சிங்­க­ள­வர்­க­ளையும், தமி­ழர்­களை போல முஸ்­லிம்­களும் ஒரு தேசிய இன­மாக அங்­கீ­க­ரிப்­ப­தோடு இன­ரீ­தி­யாக அதி­காரப் பர­வ­லாக்­கத்தில் முஸ்­லிம்­க­ளுக்­கான தனி­ய­ல­குக்­கோ­ரிக்கை கருத்தில் கொள்­ளப்­ப­ட­வேண்டும் என்­பதில் உறு­தி­யாக அஷ்ரப் இருந்தார். அஷ்­ரபின் உரிமை சார்ந்த கோஷங்கள் முஸ்­லிம்கள் மத்­தியில் பிர­பல்யம் பெற்­றன.

1987 ஆம் ஆண்டு பிர­தேச சபைத் தேர்தல் நிய­ம­னப்­பத்­திரம் தாக்கல் செய்­கின்ற போது முஸ்லிம் காங்­கிரஸ் ஒரு அர­சியல் கட்­சி­யாக அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை. இருந்தும் மு.கா.சுயேச்­சை­யாக கிழக்கில் கள­மி­றங்­கி­யது. அந்த தேர்­தலை பகிஷ்­க­ரிக்­கு­மாறு விடு­த­லைப்­பு­லிகள் அனைத்து தரப்­பி­ன­ருக்கும் அச்­சு­றுத்தல் விடுத்­தனர். அன்­றைய ஆளும்­த­ரப்பே இந்த அச்­சு­றுத்­த­லினால் ஆடிப்­போ­யி­ருந்த போது தலைவர் அஷ்ரப் தமது ஆத­ர­வா­ளர்­க­ளுடன் கொழும்­புக்கு சென்று அந்த தேர்­த­லுக்கு முகம் கொடுக்க தயா­ரானார். இதில் சில முஸ்லிம் காங்­கிரஸ் வேட்­பா­ளர்கள் உயி­ருக்கு பயந்து தாமா­கவே வில­கிக்­கொண்­டார்கள். ஆனால் எவ்­வி­த­மான உயி­ரா­பத்­தையும் எதிர்­கொள்ள குறிப்­பிட்ட சிலர் அஷ்­ர­புக்கு துணை­யாக இருந்­தனர். மர்ஹூம் அஷ்ரப்பின் இந்த துணிச்­ச­லான முடிவு தேசி­யத்தில் பிர­சித்­த­மாக பேசப்­பட்­டது. எல்லா ஊட­கங்­களும் தலைவர் அஷ்­ரபை மையப்­ப­டுத்­தியே செய்­தி­களை வெளி­யிட்­டன. அன்­றைய தினத்­தி­லி­ருந்து முஸ்­லிம்கள் மத்­தியில் புகழ்­மிக்க ஒரு தலை­மை­யாக அஷ்ரப் நோக்­கப்­பட்­டார்கள்.

1988 ஆம் ஆண்டு முஸ்லிம் காங்­கிரஸ் என்ற கட்சி தேர்தல் ஆணை­யா­ள­ரினால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்டு முழு­நேர அர­சியல் கட்­சி­யாக பரி­ண­மித்­தது. 1988 ஆம் ஆண்டு மாகாண சபைத்­தேர்­தலில் வடக்கு, ­கி­ழக்கு வெளியே பிர­சித்தம் பெற்ற ஒரு முஸ்லிம் கட்­சி­யாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் விளங்­கி­யது. அவ்­வாறே இணைந்த வட, ­கி­ழக்கு மாகாண சபைத் தேர்­தலில் 17 ஆச­னங்­களை முஸ்லிம் காங்­கிரஸ் பெற்று இலங்கை அர­சியல் வர­லாற்றில் தவிர்க்க முடி­யாத ஒரு கட்­சி­யாக தன்னை நிரூ­பித்­தது. 1989 ஆம் ஆண்டு அஷ்ரப் பாரா­ளு­மன்ற தேர்­தலில் வெற்றி பெற்று முஸ்லிம் காங்­கி­ரசின் பாரா­ளு­மன்ற பிர­தி­நி­யாக தெரிவு செய்­யப்­பட்டார். தனது பாரா­ளு­மன்ற கன்­னி­யு­ரையில் முஸ்லிம் சமூ­கத்­திற்­கான தனித்­து­வ­மான ஒரு கட்­சியின் அவ­சி­யத்தை அவர் வலி­யு­றுத்­தினார். 12.5% மாக இருந்த பிர­தி­நி­தித்­துவ அர­சியல் வீ­தா­சா­ரத்தை சிறிய கட்­சி­க­ளுக்கு இல­குவில் பிர­தி­நி­தித்­து­வத்தை பெற்­றுக்­கொள்ளும் வகையில் 5% வெட்­டுப்­புள்­ளி­யாக மாற்­றி­யது அஷ்­ரபின் அர­சியல் அதி­கா­ரத்தின் மூலம் பெற்­றுக்­கொள்­ளப்­பட்ட பெரும் வெற்­றி­யாகும். இதன் பிர­தி­ப­லனை தற்­போது மக்கள் விடு­தலை முன்­னணி உட்­பட சிறிய கட்­சிகள் பலவும் அனு­ப­விக்­கின்­றன என்­பது வர­லாற்­றுப்­ப­தி­வாகும்.

மிகச் சிறந்த இலக்­கி­ய­வா­தி­யா­கவும், எழுத்­தா­ள­ரா­கவும்,மேடைப் பேச்­சா­ள­ரா­கவும் இருந்த அஷ்ரப் தமது கொள்­கை­களை மக்கள் மயப்­ப­டுத்தும் ஊட­க­மாக இவற்றை பயன்­ப­டுத்­தினார். இதனால் இல­குவில் அஷ்­ரபின் கொள்­கைகள் பாமர மக்­க­ளையும் சென்­ற­டைந்­தது எனலாம். கட்­சிக்­கான எழுச்சிப் பாடல்கள், வீரி­ய­மிக்க புரட்சிக் கவி­தைகள், உணர்­வு­பூர்­வ­மான மேடைப்­பேச்­சுக்கள் என மக்­களை கவ­ரு­கின்ற சகல யுக்­தி­களும் தலைவர் அஷ்­ரப்­பிடம் இருந்­தன. இதனால் அன்று கோலோச்­சிய முஸ்லிம் இலக்­கிய வாதிகள் அஷ்­ரபை நேசித்­தார்கள். அவரின் புகழ் பாடி­னார்கள் அவரின் அறப்­போ­ராட்­டத்தில் தங்­க­ளையும் இணைத்து இந்த கட்­சியின் பங்­கா­ளி­க­ளாக தம்மை மாற்­றிக்­கொண்­டார்கள்.

1994 ஆம் ஆண்டு அஷ்ரப் மீண்டும் பாரா­ளு­மன்­றத்­திற்கு தெரிவு செய்­யப்­பட்டு முழு அமைச்­ச­ரானார். மு.கா.வின் வெற்­றிக்­காக கிடைத்த தேசி­யப்­பட்­டி­யலை இன்­றைய முஸ்லிம் காங்­கிரஸ் தலைமை ரவூப் ஹக்­கீ­முக்கு வழங்கி அவர் குழுக்­களின் பிர­தித்­த­லை­வ­ராக வரு­வ­தற்கு வழி­ச­மைத்து கொடுத்தார். ரவூப் ஹக்கீம் என்ற இந்த ஆளு­மையின் தலை­மைத்­துவ பண்­பு­களை அன்றே அஷ்ரப் அறிந்­தி­ருந்து தனக்கு பின்னால் ஒரு தலை­மையை அடை­யா­ளப்­ப­டுத்­தி­யுமே ரவூப் ஹக்­கீ­முக்கு தேசி­யப்­பட்­டியல் வழங்­கப்­பட்­ட­தாக அஷ்ரப்பின் மர­ணத்தின் பின்னர் பேசப்­பட்­டது. அது உண்­மையும் கூட. 1989 ஆம் ஆண்டு தனி­ம­ர­மாக பாரா­ளு­மன்றம் சென்ற அஷ்ரப் 1994 ஆம் ஆண்டில் ஒன்­றுக்கும் மேற்­பட்ட ஆச­னங்­க­ளுடன் பாரா­ளு­மன்­றத்­தினுள் நுழைந்தார்.

உரிமைக் கோஷங்­களை மூல­த­ன­மாக வைத்து இயங்­கி­வந்த அஷ்ரப்பின் அர­சியல் வியூகம் 1994 ஆம் ஆண்டின் பின்னர் உரிமை சார்ந்த விட­யங்­க­ளோடு அபி­வி­ருத்­தியின் பக்­கமும் தனது பார்­வையை செலுத்­தி­யது. ஏரா­ள­மான தொழில் வாய்ப்­புக்கள், அபி­வி­ருத்தி திட்­டங்கள், சமூகம் தொடர்­பி­லான பல கோரிக்­கைகள் என்று தனக்கு கிடைத்த வாய்ப்­பினை மிகவும் சம­யோ­சி­த­மாக பயன்­ப­டுத்தி பாரிய அபி­வி­ருத்­தியை மேற்­கொண்டார். இதனால் பெரும்­பான்மை அர­சியல் சக்­திகள் அஷ்ரப் மீது பொறாமை கொண்­டனர். அஷ்­ரபை வீழ்த்த பல்­வேறு சூழ்ச்­சி­களை மேற்­கொண்­டனர். அவர்­களின் சூழ்ச்­சிகள் எதுவும் பழிக்­க­வில்லை. மாறாக அஷ்ரப் தொட்­ட­தெல்லாம் பொன்­னாக மாறி­யது. அவரை விமர்­சித்­த­வர்கள், அவர்­மீது பொறாமை கொண்டு வீண்­பழி சுமத்­தி­ய­வர்கள், அவரை ஒரு இன­வா­தி­யாக சித்­த­ரித்­த­வர்கள் எல்­லோரும் ஒரு கட்­டத்தில் ஓய்ந்து போயினர். அஷ்ரப் தனது பணியில் காட்­டாறு போல வேக­மாக முன்­னே­றிக்­கொண்டே போனார். அஷ்­ரபின் சேவை­களில் மிக முக்­கி­ய­மா­ன­வை­யாக கரு­தக்­கூ­டிய பல சேவைகள் உள்­ளன. அதில் ஒலுவில் பல்­க­லைக்­க­ழகம், ஒலுவில் துறை­முகம், கல்­முனை அஷ்ரப் வைத்­தி­ய­சாலை என்­பன சில­வாகும்.

அஷ்ரப் அவர்­களின் காலத்தில் துறை­முக அதி­கார சபையில் பல்­லா­யிரம் முஸ்லிம் இளை­ஞர்­க­ளுக்கு வேலை­வாய்ப்பு கிடைத்தும் இங்கு குறிப்­பிட வேண்­டிய முக்­கிய விட­ய­மாகும். அஷ்­ரபின் ஏறு­மு­கத்தில் உள்­ளூர வெந்து கொண்­டி­ருந்த சிலரின் சூழ்ச்­சி­யி­னாலோ அல்­லது இறை­வனின் விதி­யி­னாலோ 2000 ஆம் ஆண்டு பெருந்­த­லைவர் அஷ்ரப் அவர்கள் ஹெலி விபத்தில் உயி­ரி­ழந்­தார்கள். அஷ்­ரபின் இழப்பு முஸ்லிம் சமூ­கத்தை மீண்டும் அர­சியல் அனா­தை­க­ளாக ஆக்­கி­யது எனலாம். அஷ்­ரபின் வளர்ச்­சியில் வெறுப்­புற்­றி­ருந்த பலர் அஷ்ரப் அவர்­களின் மர­ணத்தின் பின்னர் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் அழிந்து போய்­விடும் என்று கனவு கண்­டார்கள். பிற்­கா­லத்தில் அவர்கள் கண்­டது கனவு மட்­டுமே என்­பது நிரூ­ப­ண­மா­கி­யது.

அஷ்ரப் விட்ட இடம்

2000 ஆம் ஆண்டு அஷ்ரபின் அகால மர­ணத்தின் பின்னர் கட்­சியின் தலைமைப் பொறுப்­பா­னது தலைவர் ரவூப் ஹக்­கீ­மிடம் வரு­கி­றது. முஸ்லிம் காங்­கி­ரசை மர்ஹூம் அஷ்ரப் விட்ட இடத்­தி­லி­ருந்து தூக்கிச் சுமக்­கின்ற தார்­மீக பொறுப்­ப­னாது அவரின் தோள்­களில் சுமத்­தப்­பட்­டது. தேர்தல் காலம் கிழக்கில் ஆளும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணி­யுடன் இணைந்தும் கிழக்­குக்கு வெளியே குறிப்­பாக கண்­டியில் மரச்­சின்­னத்­திலும் மு.கா கள­மி­றங்­கி­யது. அந்த தேர்தல் முஸ்லிம் காங்­கி­ர­சுக்கு சவால் மிக்க தேர்­த­லாக அமைந்­தது. அதிலும் தலைவர் ரவூப் ஹக்­கீமை தோற்­க­டித்து முஸ்லிம் காங்­கிரஸ் என்ற கட்­சியை அழித்­து­விட ஆளும் கட்­சியே திட்டம் தீட்­டி­யது. இதற்­காக உட்­கட்சி பூசலை உரு­வாக்­கி­யது, கட்­சிக்குள் இருந்தே பிள­வு­க­ளையும், முரண்­பா­டு­க­ளையும் தோற்­று­வித்து பிரித்­தாளும் தந்­தி­ரத்தை மேற்­கொண்­டது. இன்னும் சொல்­லப்­போனால் பெருந்­த­லைவர் அஷ்ரப்பை பல­வீ­னப்­ப­டுத்த எடுத்த முயற்­சி­க­ளை­வி­டவும் பல­ம­டங்கு அழுத்­தங்கள் தலைவர் ரவூப் ஹக்­கீமை பல­வீ­னப்­ப­டுத்­தவும்,தோல்­வி­ய­டையச் செய்­யவும் முன்­னெ­டுக்­கப்­பட்­டன.

முஸ்­லிம்­களின் சுமார் 10 உயிர்­களை அந்த தேர்தல் காவு­கொண்­டது. இருந்தும் அஷ்­ரபின் மரணம் தந்த மக்கள் அலை அந்த தேர்­தலில் முஸ்லிம் காங்­கி­ர­சுக்கு முன்­ன­ரை­வி­டவும் அதி­க­மான ஆச­னங்­களை பெற்­றுக்­கொ­டுத்­தது. தலைவர் ரவூப் ஹக்கீம் கண்டி மாவட்­டத்தில் மரச்­சின்­னத்தில் போட்­டி­யிட்டு வெற்றி பெற்றார். மர்ஹூம் அஷ்ரப்புக்கு வழங்­கப்­பட்ட அதே கௌர­வமும்,அந்­தஸ்தும் தலைவர் ரவூப் ஹக்­கீ­முக்கு கட்சித் தொண்­டர்­களால் வழங்­கப்­பட்­டது.

தலைவர் ரவூப் ஹக்கீம் இந்த கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்று இப்போது 19 வருடங்கள். இந்த கால எல்லையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை பலவீனப்படுத்த பலர் முயற்சிகள் மேற்கொண்டுதான் வருகின்றார்கள். அவற்றை சாதுரியமாக எதிர்த்து கட்சியை வீழ்ச்சிப்பாதையிலிருந்து மீட்டெடுத்து இயங்கிக்கொண்டிருக்கிறார் இன்றைய தலைவர் அமைச்சர் ஹக்கீம். பெருந் தலைவரின் காலத்தை விடவும் பெரும் சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் இன்றைய தலைவருக்கு தொடர்ந்தும் ஏற்பட்டு வருகிறது. அவ்வப்போது கிளர்ந்தெழுகின்ற இனவாத பேய்களிடமிருந்து முஸ்லிம் சமூகத்தை சேதாரமில்லாமல் பாதுகாக்குகின்ற பொறுப்பும் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் 21 தாக்குதல் சம்பவத்தின் பின்னர் முஸ்லிம் சமூகம் தொடர்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்வதில் அவர் தேசிய மற்றும் சர்வதேச ஊடகங்கள் மூலம் முன்வைத்த முதிர்ச்சிமிக்க கருத்துக்கள் பலராலும் வெகுவாக பாராட்டப்பட்டன.

19ஆவது நினைவு தினம்

மர்ஹூம் அஷ்ரப்பின் 19ஆவது நினைவு தின நிகழ்வு குருநாகல், சியம்பலாகஸ்கொடுவயில் இம்முறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் குருநாகல் மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ரிஸ்வி ஜவஹர்ஷா மற்றும் அந்த மாவட்டத்து மத்திய குழுவினரினதும் வேண்டுகோளுக்கு இணங்க இந்த நிகழ்வு அங்கு நடைபெறுகிறது.

நாச்­சி­யா­தீவு பர்வீன்

vidivelli

Leave A Reply

Your email address will not be published.