ஆளில்லா விமானத் தாக்குதல்களையடுத்து சவூதி அரம்கோ நிறுவனத்தின் இரண்டு எண்ணெய் வயல்களில் எண்ணெய் உற்பத்தி தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக சவூதி அரேபியா அறிவித்துள்ளது.
சவூதி அரேபிய அரசாங்கத்திற்கு சொந்தமான பெரும் எண்ணெய் நிறுவனமான சவூதி அரம்கோவினால் நடத்தப்படும் இரு எண்ணெய் வயல்கள் மீது மேற்கொள்ளப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதல்களையடுத்து எண்ணெய் உற்பத்தி தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக சவூதி அரேபிய சக்திவள அமைச்சர் இளவரசர் அப்துல் அஸீஸ் பின் சல்மான் நேற்று அறிவித்தார்.
இத்தாக்குதலினால் நாளொன்றிற்கு 2 பில்லியன் எனற அளவிலான இணைந்த பெற்றோலிய மற்றும் எரிவாயு உற்பத்தி நிறுவனத்தின் எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதன் காரணமாக எதேன் மற்றம் இயற்கை எரிவாயு என்பவற்றின் விநியோகம் 50 வீதத்தால் குறைவடைந்துள்ளது.
உள்ளூர் சந்தைகளில் எரிபொருளுக்கு எவ்வித தட்டுப்பாடும் இல்லை எனவும் அரம்கோ நிறுவனம் தனது கையிருப்பிலிருந்து விநியோகத்தை மேற்கொள்ளும் அதேவேளை சேத மதிப்பீடுகளையும் செய்துவருகின்றது.கின்றது.
எம்.ஐ.அப்துல் நஸார்
vidivelli