தங்­களை பாது­காக்­கு­மாறு மஹிந்த தரப்பினர் கோரினர்

பொது பெரமுனாவினருக்கு அது தெரியாது என்கிறார் ஜனாதிபதி

0 759

ஒக்­டோபர் அர­சியல் கிளர்ச்­சி­யின்­போது சுதந்­திரக் கட்­சியை கைவிட்டு மொட்­டுவுடன் இணைந்த சிலர் பாரா­ளு­மன்­றத்தில் எந்த கட்­சியைப் பிர­தி­நிதித்­து­வப்­ப­டுத்­து­கி­றார்கள் என்று சபா­நா­ய­கரால் கேள்­வி­யெ­ழுப்­பப்பட்­டது. அதன்­போது மஹிந்த ராஜபக் ஷவுடன் அவ­ரது தரப்­பினர் என்னை சந்­தித்து அவர்­களை பாது­காக்­கு­மாறு கோரி­னார்கள். அவர்­களை நாமே பாது­காத்தோம். இன்றும் அவர்­களை நாமே பாது­காத்துக் கொண்­டி­ருக்­கின்றோம் என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­துள்ளார்.

இரத்­தி­ன­புரி மாவட்­டத்தில் சீவலி மைதா­னத்தில் நேற்று இடம்­பெற்ற சுதந்­திரக் கட்­சியின் மாவட்ட சம்­மே­ள­னத்­தி­லேயே ஜனா­தி­பதி இவ்­வாறு தெரி­வித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரை­யாற்­றிய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்த­தா­வது:

கடந்த 2015 ஆம் ஆண்டு தேர்­தலில் பொது வேட்­பா­ள­ராகக் கள­மி­றங்கி தேர்தல் பிர­சா­ரத்­திற்­காக இரத்­தி­ன­புரி மாவட்­டத்­திற்கு வருகை தந்த போது என்­மீதும் இவ்­வாறு தாக்­கு­தல்கள் நடத்­தப்­பட்­டன. எனவே இவ்­வாறு தாக்­கு­தல்­களை நடத்­து­ப­வர்­க­ளிடம், அன்று இது போன்ற தாக்­கு­தல்­களால் பாதிக்­கப்­பட்­டாலும் இறு­தியில் நானே வெற்றி பெற்றேன் என்­பதை கூறிக்­கொள்ள விரும்­பு­கின்றேன்.

ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யி­ட­வுள்ள வேட்­பாளர் தொடர்பில் அரச சார்­பற்ற அமைப்­புக்கள் அல்­லது நிறு­வ­னங்கள் சில மக்­க­ளிடம் கருத்து கணிப்­புக்­களை மேற்­கொண்­டுள்­ளன. அவற்றின் அறிக்­கை­க­ளின்­படி தற்­போ­துள்ள எந்­த­வொரு வேட்­பா­ள­ருக்கும் நூற்­றுக்கு 40 வீதத்தை விடவும் அதிக வாக்­குகள் இல்லை என்று அறியக் கிடைத்­தது. எனவே எந்த வேட்­பா­ள­ராக இருந்­தாலும் இன்னும் 11 -– 12 வீத வாக்­கு­களை சேக­ரித்­தே­யாக வேண்டும் என்­பது கட்­டா­ய­மாகும். அதனை ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் ஆத­ரவைப் பெற்றால் மட்­டுமே பெற­மு­டியும் என்று உறு­தி­யாகக் கூறு­கின்றேன். எந்­த­வொரு கட்­சி­யாலும் அடுத்து தனி அர­சாங்கம் அமைக்க முடி­யாது. எனவே அடுத்த அர­சாங்­கத்தை தீர்­மா­னிக்கும் பலமும் சுதந்­திரக் கட்­சி­யி­டமே இருக்­கி­றது.

குறிப்­பிட்ட காலம் அர­சாங்­கமும் இல்­லாமல், எதிர்க்­கட்­சியும் இல்­லாமல் இலங்­கையில் ஆட்சி செய்த ஒரே­யொரு ஜனா­தி­பதி நான் மாத்­தி­ரமே. 2015 இல் ஐ.தே.கவுடன் இணைந்து தேசிய அர­சாங்­கத்தை அமைத்தோம். எனினும் இடை­ந­டுவில் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஊழல் மோச­டியின் உச்­ச­கட்­டத்­துக்கு சென்­று­விட்­டதால் தேசிய அர­சாங்­கத்­தி­லி­ருந்து வெளி­யேற வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டது.

அதன் பின்னர் ஒக்­டோ­பரில் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை பிர­தமர் பத­வி­யி­லி­ருந்து நீக்கி மஹிந்­தவை பிர­த­ம­ராக நிய­மித்தேன். எனினும் அதனை ஐ.தே.க. அர­சியல் சூழ்ச்சி என்று விமர்­சித்­தது. உண்­மையில் அது அர­சியல் சூழ்ச்­சி­யல்ல. அர­சியல் கிளர்ச்­சி­யாகும். அந்த சந்­தர்ப்­பத்தில் சுதந்­திரக் கட்­சியை கைவிட்டு மொட்­டுடன் இணைந்த சிலர் பாரா­ளு­மன்­றத்தில் எந்த கட்­சியைப் பிர­தி­நித்­து­வப்­ப­டுத்­து­கி­றார்கள் என்று சபா­நா­ய­கரால் கேள்­வி­யெ­ழுப்­பட்­டது. அதன் போது மஹிந்த ராஜபக் ஷவுடன் அவ­ரது தரப்­பினர் என்னை சந்­தித்து அவர்­களை பாது­காக்­கு­மாறு கோரி­னார்கள்.

பின்னர் மஹிந்த அம­ர­வீர, நிமல் சிறி­பால டி சில்வா உள்­ளிட்­டோ­ருடன் கலந்­து­ரை­யாடி அவர்கள் ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்பின் உறுப்­பி­னர்கள் என்று சபா­நா­ய­க­ருக்கு கடிதம் அனுப்பி அவர்­களை நாமே பாது­காத்தோம். இன்றும் அவர்­களை நாமே பாது­காத்துக் கொண்­டி­ருக்­கின்றோம் என்­பதை நினை­வு­ப­டுத்த விரும்­பு­கின்றேன். இந்த விடயம் பொது­ஜன பெர­மு­னவின் கீழ் மட்ட உறுப்­பி­னர்­க­ளுக்கு புரி­ய­வில்லை.

எனவே, சுதந்­திரக் கட்­சியின் கொள்கை மற்றும் தனித்­து­வத்­தன்மை என்­ப­வற்றை பாது­காத்துக் கொண்டும், யாரையும் காட்டிக் கொடுக்­காது பொது­ஜன பெர­மு­ன­வு­ட­னான பேச்­சு­வார்த்தை முன்­னெ­டுக்­கப்­படும் என்று உறு­தி­ய­ளிக்­கின்றேன். 1994 ஆம் ஆண்டு முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்க தேர்லில் போட்­டி­யிட்­ட­போது ஊழல் மோச­டியை ஒழிப்­ப­தற்கு ஒத்­து­ழைப்பு வழங்­கு­மாறு கோரினார். அத­னையே 2015 இல் நானும் கோரினேன். ஆனால் இது­வ­ரையில் யாராலும் ஊழல் மோச­டியை முற்­றாக ஒழிக்க முடி­ய­வில்லை. இதற்கு காரணம் அர­சியல் தலை­வர்கள் ஊழல் மோச­டி­க­ளுக்கு தலைமை தாங்­கு­கின்­ற­மை­யே­யாகும்.

எனவே, எதிர்­கா­லத்­தி­லேனும் ஊழல் மோச­டியை முற்­றாக ஒழிக்கக் கூடிய அரசாங்கத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணைவோம் என்றார்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.