சஜித் பிரே­ம­தா­ச­விற்கு ஆத­ரவு வழங்க தயார்

ஐ.தே.மு. பங்காளிக் காட்சிகள் இணக்கம்

0 741

ஐக்­கிய தேசியக் கட்­சியின் பிரதித் தலைவர் சஜித் பிரே­ம­தா­சவை ஐக்­கிய தேசிய முன்னணியின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராகக் கள­மி­றக்­கினால் அவருக்காகத் தமது ஆத­ரவை வழங்கத் தயா­ரென ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் பங்­கா­ளிக்­கட்­சிகள் இணக்கம் தெரி­வித்­துள்­ளன. 

ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் பங்­கா­ளிக்­கட்­சி­களின் தலை­வர்கள் நேற்று முன்­தினம் கட்­சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்­தித்து கலந்­து­ரை­யா­டி­யி­ருந்­தனர்.

இதே­வேளை, அன்­றைய தினம் இரவு அமைச்சர் மங்­கள சம­ர­வீ­ரவின் கொழும்பு இல்­லத்தில் இந்த சந்­திப்பு இடம்­பெற்­றது. இந்த சந்­திப்பு இடம்­பெற முன்னர் அமைச்சர் ரவூப் ஹக்­கீமின் இல்­லத்தில் பங்­கா­ளிக்­கட்சித் தலை­வர்கள் கூடி கலந்­து­ரை­யாடி தீர்­மா­ன­மொன்றை எடுத்த பின்­னரே பிரதித் தலைவர் சஜித் பிரே­ம­தா­சவை சந்­தித்­தனர். இந்த சந்­திப்பில் பங்­காளிக் கட்­சி­களின் தலை­வர்­க­ளான அமைச்­சர்கள் ரவூப் ஹகீம், ரிஷாத் பதி­யுதீன், மனோ கணேசன், பழனி திகாம்­பரம், சம்­பிக்க ரண­வக்க ஆகியோர் கலந்­து­கொண்­ட­துடன் பிரதித் தலைவர் சஜித்­துடன் அமைச்­சர்­க­ளான ராஜித சேனா­ரத்ன, மங்­கள சம­ர­வீர, மலிக் சம­ர­விக்­கி­ரம, பாலித ரங்கே பண்­டார, கபீர் ஹாசிம் ஆகியோர் கலந்­து­கொண்­டனர்.

இதன்­போது ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் குறித்து கட்­சியின் தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வு­ட­னான பேச்­சு­வார்த்தை மற்றும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் சிரேஷ்ட தலை­வர்­க­ளுடன் இடம்­பெற்ற பேச்­சு­வார்த்­தைகள் மற்றும் ஐக்­கிய தேசியக் கட்­சிக்குள் தற்­போது வரையில் உள்ள நிலைப்­பா­டுகள் குறித்து பிரதித் தலைவர் சஜித் பிரே­ம­தாச மற்றும் அவ­ரது தரப்­பினர் கருத்­துக்­களை முன்­வைத்­துள்­ளனர்.

பங்­கா­ளிக்­கட்­சி­களின் ஆத­ர­வி­ருந்தால் அடுத்த கட்­ட­மாக தாம் தேர்தல் நகர்­வு­களை முன்­னெ­டுக்க முடியும். ஆகவே அதற்­கா­கவே உங்­களின் ஆத­ரவை எதிர்­பார்க்­கின்றேன் என சஜித் பிரே­ம­தாச கூறி­யுள்ளார். இதன்­போது ஐக்­கிய தேசிய முன்­ன­ணி­யி­லுள்ள தமிழ் முஸ்லிம் கட்­சி­களின் பிர­தி­நி­திகள் தமது நிலைப்­பா­டுகள் குறித்து கருத்­துக்­களை முன்­வைத்­துள்­ளனர்.

முஸ்லிம் சமூ­கத்தின் மீதான தற்­கால அடக்­கு­மு­றைகள் குறித்தும் அவர்­களின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்தும் வகையில் முன்­னெ­டுக்க வேண்­டிய நட­வ­டிக்­கைகள் குறித்தும் முஸ்லிம் பிர­தி­நி­திகள் கருத்­துக்­களை முன்­வைத்­துள்­ளனர். அத்­துடன், மலை­யக மக்­களின் நாளாந்த பிரச்­சி­னைகள், சம்­பள விவ­கா­ரங்கள் மற்றும் வாழ்­வா­தார பிரச்­சி­னைகள் குறித்து கருத்­துக்­களை முன்­வைத்த பிர­தி­நி­திகள், தமக்கு மேலும் சலு­கைகள் பெற்­று­கொ­டுக்க நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என்ற கார­ணி­களை முன்­வைத்­துள்­ளனர். அதேபோல் பொது­வாக அர­சாங்­க­மாக தாம் எவ்­வா­றான நோக்­கங்­களில் செயற்­ப­டு­வது என்ற கார­ணி­களும் கலந்­து­ரை­யா­டப்­பட்­டுள்­ளன. இந்­நி­லையில் ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் வெற்­றி­பெறும் வேட்­பாளர் கள­மி­றக்­கப்­பட வேண்டும் என்­பதில் தாம் உறு­தி­யான நிலைப்­பாட்டில் இருப்­ப­தாகக் கூறி­யுள்ள பங்­கா­ளிக்­கட்­சிகள், பிரதித் தலைவர் சஜித் பிரே­ம­தாச கள­மி­றங்­கினால் அவ­ருக்­கான ஆத­ரவை வழங்கத் தயா­ராக இருப்­ப­தா­கவும் கட்­சி­யாக ஒன்­றி­ணைந்து பய­ணிக்க வேண்டும் என்­பதே தமது நிலைப்­பாடு எனவும் வாக்­கு­று­தி­களை வழங்­கி­ய­தாக சந்­திப்பில் சஜித் தரப்பில் கலந்­து­கொண்ட அமைச்­சர்கள் உறு­திப்­ப­டுத்­தினர். இதே­வேளை, ஜனா­தி­பதி வேட்­பாளர் தொடர்பில் ஐக்­கிய தேசி­யக முன்­ன­ணியைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் அர­சியல் கட்­சி­களின் தலை­வர்­க­ளுடன் நடத்­திய பேச்­சு­வார்த்­தைகள் மிகவும் வெற்­றி­க­ர­மாக நிறைவடைந்ததாக ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவரும், வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அமைச்சருமான சஜித் பிரேதமதாஸ ஊடகங்களுக்குத் தெரிவித்தார். இந்த வாரத்தில் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இறுதித் தீர்மானம் எட்டப்படுமெனவும் அதுவரை பேச்சு வார்த்தைகள் தொடர்பான விபரங்களை ஊடகங்களுக்கு வழங்குவதில்லை என ஏகமனதாக தீர்மானிக் கப்பட்டுள்ளதெனவும் கூறினார்.

ஆர்.யசி, ஏ.ஆர்.ஏ. பரீல்

vidivelli

Leave A Reply

Your email address will not be published.