முஸ்லிம் தனியார் சட்டம் : சட்ட வரைபை உடன் சமர்பிக்குக

ஜனாதிபதித் தேறுதலுக்கு முன் நிறைவேற்ற வேண்டுமென அமைச்சர் ஹலீமுக்கு பைசர் கடிதம்

0 680

ஜனா­தி­பதித் தேர்தல் எதிர்­வரும் நவம்பர் மாத இறு­தியில் அல்­லது டிசம்பர் மாத ஆரம்­பத்தில் நடை­பெ­ற­வுள்­ளதால் அதற்கு முன்பு உட­ன­டி­யாக முஸ்லிம் விவாக விவா­க­ரத்து சட்­டத்தின் திருத்­தங்­க­ளுக்­கான சட்ட வரைபு பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்டு உரிய நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­ப­ட­வேண்டும். தவறும் பட்­சத்தில் நாம் கூட்­டாக மேற்­கொண்ட முயற்­சிகள் தேவைப்­ப­டாத ஒன்­றா­கி­விடும் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பைசர் முஸ்­தபா அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் விவ­கார அமைச்­ச­ருக்கு முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தில் திருத்­தங்கள் தொடர்­பாக அனுப்பி வைத்­துள்ள கடி­தத்தில் தெரி­வித்­துள்ளார்.

கடி­தத்தின் பிர­திகள் அமைச்­சர்­க­ளான ரவூப் ஹக்கீம், ரிசாத் பதி­யுதீன் மற்றும் கபீர் ஹாசி­முக்கும் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளன. கடி­தத்தில் மேலும் தெரி­விக்கப் பட்­டுள்­ள­தா­வது, ‘முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தில் மேற்­கொள்­ளப்­பட வேண்­டிய திருத்­தங்கள் தொடர்பில் பல சந்­தர்ப்­பங்­களில் நான் உங்­க­ளது கவ­னத்­திற்குக் கொண்டு வந்­துள்ளேன். எனது கோரிக்­கைகள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், சிவில் சமூக அமைப்­புகள் மற்றும் உல­மாக்கள் மத்­தியில் கருத்­தொற்­று­மையை உரு­வாக்­கின. பின்பு முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் ஒற்­று­மை­யாக தீர்­மா­ன­மொன்­றுக்கு வந்­தனர். நானும், பாரா­ளு­மன்ற உறுப்­பினர் காதர் மஸ்­தானும் எதிர்க்­கட்­சியில் இருந்­தாலும் நாங்கள் முஸ்லிம் அமைச்­சர்­க­ளுக்கும், முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கும் இது தொடர்பில் ஒத்­து­ழைப்பு வழங்­கினோம்.

அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மா­சபை, முஸ்லிம் சிவில் சமூக அமைப்­புகள், முஸ்லிம் பெண்கள் பிர­தி­நி­தித்­துவம் பெறும் அமைப்­பு­க­ளுடன் திருத்­தங்­களை மேற்­கொள்­வ­தற்­காக பேச்­சு­வார்த்தை நடத்­தினோம். கருத்­தொற்­றுமை அனைத்து விட­யங்­க­ளிலும் எட்­டப்­ப­ட­வில்­லை­யா­யினும் பெரும்­பா­லான விட­யங்­களில் இணக்­கப்­பாடு எட்­டப்­பட்­டது.

பின்பு நீதி­ய­மைச்சும் உங்­க­ளது அமைச்சும் இணைந்தே அமைச்­ச­ரவைப் பத்­திரம் சமர்ப்­பிக்­கப்­பட்டு அமைச்­ச­ர­வை­யினால் அது அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டது.
இந்­நி­லையில் தற்­போது முஸ்லிம் விவாக, விவா­க­ரத்து சட்­டத்தில் திருத்­தங்­களைச் செய்­வ­தற்­கான சட்­ட­வ­ரைபு பாரா­ளு­மன்­றத்­துக்கு சமர்ப்­பிக்­கப்­பட வேண்­டி­யுள்­ளது.

இவ்­வ­ருடம் நவம்பர் இறு­தியில் அல்­லது டிசம்பர் மாத ஆரம்­பத்தில் ஜனா­தி­பதி தேர்தல் ஒன்று நடை­பெ­ற­வுள்­ளதை கவ­னத்தில் கொள்­ளுங்கள். அதனால் அதற்கு முன்பு உடனடியாக குறிப்பிட்ட திருத்தங்களுக்கான சட்டவரைபினை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யுங்கள். தவறும் பட்சத்தில் நாம் கூட்டாக மேற்கொண்ட முயற்சிகள் தேவைப்படாத ஒன்றாக மாறிவிடும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏ.ஆர்.ஏ.பரீல்

vidivelli

Leave A Reply

Your email address will not be published.