அவுஸ்திரேலியாவின் முதலாவது முஸ்லிம் திரைப்பட விழா பேர்த்தில் ஆரம்பம்

0 741

முஸ்­லிம்கள் பற்­றிய கதை­களை அல்­லது முஸ்­லிம்­களால் படைக்­கப்­பட்ட கதை­களை உள்­ள­டக்­கிய முத­லா­வது முஸ்லிம் திரைப்­பட விழா அவுஸ்­தி­ரே­லி­யாவின் பேர்த்தில் இவ்­வார இறு­தியில் ஆரம்­ப­மா­க­வுள்­ள­தாக அவுஸ்­தி­ரே­லிய ஊட­க­மான எஸ்.பி.எஸ். தெரி­வித்­துள்­ளது.

முஸ்லிம் சமூ­கத்­திற்கு சுவா­ரஷ்­ய­மாக இருக்­கு­மென நாம் நினைத்­தோமோ அந்த விட­யங்­களை உல­கெங்­கி­லு­முள்ள முஸ்­லிம்­களின் திரைப்­ப­டங்­களின் மூலம் பார்க்கும் சந்­தர்ப்­பத்­தினை வழங்­கு­வதும் உல­கெங்­கி­லு­முள்ள முஸ்­லிம்­க­ளுக்கு ஆர்­வ­முள்ள தலைப்­பு­களை உள்­ள­டக்கும் வாய்ப்பும் இதில் இருக்கும்’ என திரைப்­பட விழாவின் பணிப்­பாளர் ஜோன் மெக்­கீயௌன் தெரி­வித்தார்.

முத­லா­வது முஸ்லிம் திரைப்­பட விழா அங்­கு­ரார்ப்­ப­ணத்­திற்கு 60 திரைப்­ப­டங்கள் வந்­துள்­ளன. அவை இம்­மாதம் திரை­யி­டப்­ப­ட­வுள்­ளன. சிறப்புத் திரைப்­படத் தயா­ரிப்­பா­ளர்­களுள் ஆறு பேர் ஆஸ்­தி­ரே­லி­யர்­க­ளாவர் இவர்­களுள் முஸ்­லிம்­களும் முஸ்­லி­மல்­லா­த­வர்­களும் காணப்­ப­டு­கின்­றனர். இத் திரைப்­ப­டங்கள் கலா­சாரம், உற­வுகள், இஸ்­லா­மியப் பீதி மற்றும் இன­வெறி போன்ற பல்­வேறு சிக்­கல்­களை ஆராய்­கின்­றன.

முஸ்லிம் திரைப்­பட விழா என்று கூறி­ய­வு­ட­னேயே தொழு­கையில் ஈடு­ப­டுதல், நோன்­பி­ருத்தல் சம்­பந்­த­மாக மக்­க­ளுக்கு கற்­பிப்­ப­து­போன்ற சமயம் சார்ந்த விழா­வினை நாம் நடத்தப் போகின்­றோ­மென சிலர் நினைப்பர். ஆனால் விடயம் அவ்­வா­றல்ல என திரைப்­பட விழா ஏற்­பாட்­டா­ள­ரான தாரிக் சம்­கிஹி குறிப்­பி­டு­கின்றார்.

இவ்­விழா உல­கெங்­கி­லு­முள்ள முஸ்­லிம்­களின் கதை­களை சொல்­லப்­போ­கி­றது, அவுஸ்­தி­ரே­லிய முஸ்­லிம்­களின் கதை­யி­னையும் அது சொல்லும். உள்­ளதை உள்­ள­வாறே சொல்லும், அதில் சில சாதக பாத­கங்கள் இருக்கும். உள்­ளதை உள்­ள­வாறே சொல்லும் எனக் கூறும்­போது இன­வெறி, பழ­மை­வாதம், தேசி­ய­வாதம் என்­ப­வற்றை இது தகர்ப்­ப­தோடு மக்கள் தொடர்பில் மேலும் புரி­தலை ஏற்­ப­டுத்தும் எனவும் அவர் தெரி­வித்தார்.

முஸ்லிம் சமூ­கமும் அதன் தலை­வர்­களும் அவுஸ்­தி­ரே­லிய வர­லாற்­றிற்கு எந்­த­ளவு பங்­க­ளிப்பு செய்­தி­ருக்­கி­றார்கள் என இத் திரைப்­பட விழா வெளிப்­ப­டுத்தும். அவஸ்­தி­ரே­லியத் திரைப்­படத் துறைக்கு இது புது வர­வாகும் என்­ப­தோடு அனை­வ­ராலும் வர­வேற்­கப்­படும் ஒன்­றா­கவும் காணப்­ப­டு­கின்­றது.
அவுஸ்­தி­ரே­லி­யாவின் புதிய தலை­மு­றை­யினர் முந்­தைய தலை­மு­றை­யினர் அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்குச் செய்­துள்ள பங்களிப்பை அறிந்துகொள்வது மிக முக்கியமானதாகும். 200 ஆண்டுகளுக்கும் மேலாக முஸ்லிம்கள் அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வருவதோடு 20 மில்லியன் மக்களில் 1.7 வீதமானவர்கள் முஸ்லிம்களாவர்.

கிறிஸ்தவத்திற்கு அடுத்த இரண்டாவது பெரும்பான்மை மதமாக இஸ்லாம் காணப்படுகின்றது.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.