பள்ளிவாசலில் சுடப்பட்டு கொல்லப்பட்டவர்களை நினைவுகூரும் கிரிஸ்ட்சேர்ச் வாராந்த நடை பவனி

0 668

ஒவ்­வொரு வெள்­ளிக்­கி­ழ­மை­யிலும் பாரா­ளு­மன்றப் படிக்­கட்­டுக்­களில் ஒன்­று­கூடும் சிறு குழு­வினர், கடந்த மார்ச் மாதம் 15 ஆம் திகதி பயங்­க­ர­வாதத் தாக்­கு­தலில் உயி­ரி­ழந்த 51 முஸ்­லிம்­களை நினை­வு­கூரும் வகையில் கிரிஸ்ட்சேர்ச் வீதியில் நடந்து செல்­கின்­றனர்.

பாரா­ளு­மன்றப் படிக்­கட்­டுக்­களில் ஒன்­று­கூடும் அவர்கள் பொவன் வீதிச் சந்­தி­வரை சென்று வைட்டோர் வீதிக்கு இறங்கி பின்னர் கட­லோ­ர­மாக நடந்து வந்து டீயி பபா­வினை நோக்கி செல்­கின்­றனர்.

அவ்­வி­டத்­திற்கு அவர்கள் வந்து சேர்ந்­ததும் 51 நிமி­டங்கள் தமது தலை­களைத் தாழ்த்தி மௌன­மாக அஞ்­சலி செலுத்­துவர். மார்ச் மாதம் 15 ஆம் திகதி கிரிஸ்ட்சேர்ச் பள்­ளி­வா­சலில் கொல்­லப்­பட்ட 51 பேருக்கும் ஒரு­வ­ருக்கு ஒரு நிமிடம் என்ற அடிப்­ப­டையில் அஞ்­சலி செலுத்­து­கின்­றனர்.

மக்கள் எம்­மோடு வந்து இணைந்து கொள்­கின்­றார்கள். ஏனென்றால் வர­வேற்பு வழங்கும் நாடாக இருப்­பதை, வர­வேற்கும் சமூ­க­மாக இருப்­பதை அவர்கள் நம்­பு­கி­றார்கள் என நடை­ப­வ­னியில் ஈடு­படும் பீட்டர் ஸ்கொட் தெரி­வித்தார்.

‘என்னைப் பொறுத்­த­வரை, இது கிறிஸ்ட்­சர்ச்­சிற்குப் பிறகு அதிகம் சொல்­லப்­பட்ட அந்த முக்­கி­ய­மான செய்­தியை சொல்­கி­றது: அது நாங்கள் அல்ல. என்ற செய்­தியே அது­வாகும்’ எனவும் அவர் தெரி­வித்தார்.இந்த நடை பவனி கடந்த மார்ச் மாதம் 22 ஆந் திகதி ஆரம்­பிக்­கப்­பட்­டது, 51 வாரங்­க­ளுக்கு இது தொடரும். – கிரிஸ்ட்சேர்ச் பள்­ளி­வா­சலில் கொல்­லப்­பட்ட 51 பேருக்கும் ஒரு­வ­ருக்கு ஒரு வாரம் என்ற அடிப்­ப­டையில் இந்த நடை பவனி இம்­பெ­று­கின்­றது.
நினை­வு­கூரல் நடை­ப­வனி என்ற பதா­தை­யுடன் செல்லும் இவர்கள், குறித்த நடை­ப­வனி முடி­வ­டைந்­ததும் மக்­க­ளிடம் தமது சிந்­த­னை­க­ளையும் பிர­தி­ப­லிப்­புக்­க­ளையும் குறிப்­பி­டு­மாறு கோரு­கின்­றனர்.

எதிர்­வரும் வெள்­ளிக்­கி­ழமை திட்­ட­மி­டப்­ப­ட­வுள்ள இவ்­வார நடை பவனி திட்­ட­மி­டப்­பட்­டுள்ள 51 நடை­ப­வ­னி­களுள் 26 ஆவ­தாகும். எம்­மோடு நடை­ப­வ­னியில் ஈடு­படும் மக்கள் உய­ிரி­ழந்­தோ­ரையும் அவர்­க­ளது குடும்­பத்­தி­ன­ரையும் தொடர்ந்து ஞாப­கத்தில் வைத்­தி­ருக்க வேண்டும் என்றே விரும்­பு­கின்­றனர் என நடை­ப­வனி ஆரம்­பிக்­கப்­பட்­ட­தி­லி­ருந்து தொட­ராகக் கலந்­து­கொண்­டுள்ள ஜென்னி வூட்லி ஹிக்கின்ஸ் தெரி­வித்தார். சம்­ப­வத்­தி­னை­ய­டுத்து அனை­வரும் அதிர்ச்­சிக்­குள்­ளா­கினர். நாம் ஒரு தேசத்து மக்கள் என்ற வகையில் எம்­மைப்­பற்றிப் பேசிக்­கொள்­கின்றோம். நாம் அனைத்து விட­யங்­க­ளையும் பற்றிப் பேசு­கின்றோம் ஆனால் சிலர் இந்த உணர்வே இல்­லா­ம­லி­ருக்­கின்­றனர் எனவும் அவர் தெரி­வித்தார்.

பயங்­க­ர­வா­தி­யான பிரெண்டன் ஹரிஸன் டரென்ட் அல்நூர் மற்றும் லின்வூட் ஆகிய பள்­ளி­வா­சல்­களை இலக்­கு­வைத்து கடந்த மார்ச் 15 ஆந் திகதி மேற்­கொண்ட தாக்­கு­தலில் 51 முஸ்­லிம்கள் கொல்­லப்­பட்­டனர்.

நியூ­சி­லாந்தில் இஸ்லாம் மொத்த மக்கள் தொகையில் சுமார் 1 வீதத்­தி­னரால் பின்­பற்­றப்­ப­டு­கி­றது. நியூ­சி­லாந்தில் 1900 களின் முற்­ப­கு­தி­யி­லி­ருந்து 1960 கள் வரை தெற்­கா­சியா மற்றும் கிழக்கு ஐரோப்­பா­வி­லி­ருந்து குறைந்த எண்­ணிக்­கை­யி­லான முஸ்­லிம்கள் குடி­யே­றினர்.

பெரி­ய­ள­வி­லான முஸ்லிம் குடி­யேற்றம் 1970களில் பிஜி இந்தியர்களின் வருகையுடன் தொடங்கியது, 1990களில் பல்வேறு போர்களினால் பாதிக்கப்பட்ட நாடுகளைச் சேர்ந்த அகதிகள் வந்து சேர்ந்தனர். முதல் இஸ்லாமிய மத்திய நிலையம் 1959 இல் திறக்கப்பட்டது, தற்போது பல பள்ளிவாசல்களும் மற்றும் இரண்டு இஸ்லாமியப் பாடசாலைகளும் காணப்படுகின்றன.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.