ஐக்கிய இராச்சியத்தின் சிறந்த பள்ளிவாசலுக்கான விருதை பேர்மிங்ஹாம் பள்ளிவாசல் பெற்றது
இரண்டாவது வருடாந்த பிரித்தானிய பீகோன் பள்ளிவாசல் விருது வழங்கும் 2019 ஆம் ஆண்டுக்கான நிகழ்வில் ஐக்கிய இராச்சியத்தின் சிறந்த பள்ளிவாசலுக்கான உயர் கெளரவ விருதை பேர்மிங்ஹாம் பள்ளிவாசல் பெற்றுக்கொண்டது.
அவர்கள், கொடுப்பதற்காகப் பத்து விருதுகளை வைத்திருந்தார்கள். இவ்வருடம் சிறந்த முறையில் பராமரிக்கப்படும் பள்ளிவாசல் என்ற விருது எமக்குக் கிடைத்து. இது மிகவும் கௌரவமிக்க விருதாகுமென கிரீன் லேன் பள்ளிவாசல் மற்றும் சனசமூக நிலையத்தின் பொது முகாமையாளரான கமரன் ஹுஸைன் தெரிவித்தார்.
இந்த விருதைப் பெறுவதில் நாம் மகிழ்ச்சியடைகின்றோம், நாம் செய்துள்ள பணிகளுக்கு இது நல்லதொரு அங்கீகாரமாகும் எனவும் அவர் தெரிவித்தார்.
2018 ஆம் ஆண்டு இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்கள் சிறந்த முறையில் பராமரிக்கப்படுவதையும் உலகளாவிய ரீதியான தராதரத்தை உருவாக்கும் வகையிலுமான முன்னெடுப்பாக பெய்த் அசோசியேஷன் என்ற அமைப்பு பீகோன் பள்ளிவாசல் தரப்படுத்தல் பணியினை ஆரம்பித்தது.
பத்து வகுதிகளின் கீழ் பள்ளிவாசல்கள் மதிப்பீடு செய்யப்படுகின்றன. அவை உள்ளூர் சமூகத்திற்கு வழங்கும் பங்களிப்பு தொடக்கம் முகாமைத்துவம் மற்றும் ஆளுகை வரை அமைந்துள்ளன. இறுதியாக மூன்று, நான்கு அல்லது ஐந்து நட்சத்திர தரநிர்ணய விருதுகள் வழங்கப்படுகின்றன.
பீகோன் பள்ளிவாசல் வருடாந்த விருது வழங்கும் நிகழ்வு செப்டம்பர் மாதம் 9 ஆம் திகதி நடைபெற்றது.
பெய்த் அசோசியேஷனினால் வரையறுக்கப்பட்டுள்ள பத்து வகுதிகளின் கீழும் சிறந்த சேவையினை வழங்குவதற்கு உழைக்கும் முஸ்லிம் நிறுவனங்களின் விண்ணப்பங்கள் இதில் உள்ளடக்கப்பட்டன.
கடந்த வருடம் கிரீன் லேன் பள்ளிவாசல் மற்றும் சனசமூக நிலையம் சிறந்த உதவிச் செயற்றிட்டத்திற்கான விருதினைப் பெற்ற அதேவேளை, மற்றுமொரு உள்ளூர் அமைப்பான பல்சால் ஹீத்தில் அமைந்துள்ள பாகு நம்பிக்கை நிதியம் சிறந்த பசுமைத் திட்டத்திற்கான விருதினைப் பெற்றது.
இந்த விருது வழங்கும் விழாவில் குறித்த விருதினை தொழுகையினை முடித்துக்கொண்டு வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தபோது படுகொலை செய்யப்பட்ட ஜமாஅத்தின் உறுப்பினருக்கு குறித்த விருதினை சமர்ப்பணம் செய்வதாக கிரீன் லேன் பள்ளிவாசல் மற்றும் சனசமூக நிலையத்தின் பொது முகாமையாளரான கமரன் ஹுஸைன் தெரிவித்தார்.
விருதினை பெறுவதற்காக மேலே மேடைக்கு சென்றபோது இஸ்லாமியப் பீதி தொடர்பில் பேசினேன். 2013 ஆம் ஆண்டு வெறுப்புணர்வு குற்றச்செயல் காரணமாக கொல்லப்பட்ட எமது ஜமாஅத்தின் உறுப்பினருக்கு இவ் விருதினை சமர்ப்பணம் செய்வதென நாம் தீர்மானித்தோம் எனவும் ஹுஸைன் தெரிவித்தார்.
மாலை நேரத் தொழுகையினை நிறைவேற்றிவிட்டு வீடு செல்லும்போது பேர்மிங்ஹாமைச் சேர்ந்த மொஹமட் சலீம் தீவிர வலதுசாரி தீவிரவாதியினால் படுகொலை செய்யப்பட்டார்.
1970களில் ஆரம்பிக்கப்பட்டு 2008 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் தர்ம ஸ்தாபனமாகப் பதிவு செய்யப்பட்ட அஹ்லி ஹதீத் ஸலாபி இயக்கத்துடன் தொடர்புபட்டதாக பேர்மிங்ஹாமிலுள்ள கிரீன் லேன் பள்ளிவாசல் மற்றும் சனசமூக நிலையம் காணப்படுகின்றது.
பேர்மிங்ஹாம், ஸ்மோல் ஹீத், ககிரீன் வீதியில் மிக முக்கியமான கேந்திர நிலையத்தில் இப்பள்ளிவாசல் அமைந்துள்ளது. இதன் கட்டடங்களுள் ஒன்று உள்ளூர் கட்டடக் கலைஞர்களான மார்ட்டின் மற்றும் சம்பேர்லைன் ஆகியோரால் வடிவமைக்கப்பட்டு செங்கல் மற்றும் மண்ணைப் பயன்படுத்தி 1893 மற்றும் 1902 இடைப்பட்ட கால, கோதிக் – ஜகோபீன் வடிவத்தில் ஆரம்பத்தில் நூலகமாகவும் குளியல் பகுதியாகவும் அமைக்கப்பட்டது.
vidivelli