என்னை அறியாமலேயே நான் முஸ்லிமாக வாழ்ந்திருக்கின்றேன்

ஐரிஷ் பாடகி சினீட் ஓ கோணர்

0 836

முதன்­மு­றை­யாக அல்-­குர்­ஆனை வாசித்த பின்னர் என்னை அறி­யா­ம­லேயே எனது வாழ்­நாளில் நான் முஸ்­லி­மாக வாழ்ந்­தி­ருக்­கின்றேன் என்­பதை உணர்ந்து கொண்டேன் என ஐரிஷ் பாட­கியும் பாட­லா­சி­ரி­யை­யு­மான சினீட் ஓ கோணர் தெரி­வித்­த­தாக ‘ஐரிஷ் டைம்ஸ்’ கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை தகவல் வெளி­யிட்­டது.

‘மத­மாற்றம்’ என்ற சொல், நீங்கள் அல்-­குர்­ஆனைப் படித்தால், நீங்கள் உங்கள் வாழ்நாள் முழு­வதும் ஒரு முஸ்­லி­மாக இருப்­பதை உணர்­வீர்கள். அதை நீங்கள் உண­ர­வில்லை. இதுதான் எனக்கு நேர்ந்­தது என வெள்­ளிக்­கி­ழமை இரவு நேர ‘லேட் லேட்’ நிகழ்ச்­சியில் தெரி­வித்தார்.

எனக்கு 52 வயது. நான் தற்­போ­தி­ருக்கும் வித்­தி­யா­ச­மான அயர்­லாந்தில் வளர்ந்தேன். மத­ரீ­தி­யாகப் பேசினால் அதனை ஒடுக்கும் ஒரு நாடு. இங்­கி­ருக்கும் அனை­வ­ருமே ஏதோ­வொரு கவ­லை­யு­ட­னேயே இருக்­கின்­றனர். கடவுள் என்ற விட­யத்தில் அவர்கள் எவரும் மகிழ்ச்­சி­ய­டை­ய­வில்லை யென அவர் குறிப்­பி­டு­கின்றார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாதம், ஐரிஷ் பாட­கியும் பாட­லா­சி­ரி­யை­யு­மான இவர் இஸ்­லாத்­திற்­காக கிறிஸ்­தவ மதத்தைக் கைவி­டு­வ­தா­கவும் தனது பெயரை ஷுஹதா டாவிட் என மாற்­றிக்­கொண்­டுள்­ள­தா­கவும் தனது டுவிட்­டரில் அறி­வித்­தி­ருந்தார்.

சிறு­ப­ரா­யத்தில் வேத நூல்­களைப் படித்­த­தா­கவும், அதன் பின்னர் ஏனைய மத நூல்­க­ளையும் வாசித்­த­தாகத் தெரி­விக்கும் அவர், இஸ்­லாத்தைப் பற்­றிய முற்­கற்­பிதம் கார­ண­மாக இஸ்­லாத்­தி­லி­ருந்து வில­கியே இருந்தார்.

பின்­னரே நான் எனது உண்­மை­யான சம­யத்தில் இருப்­பதை உணர்ந்தேன். எனது வாழ்­நாளில் நான் முஸ்­லி­மாக வாழ்ந்­தி­ருக்­கின்றேன். ஆனால் நான் அதனை உண­ர­வில்லை. என்­பதை உணர்ந்­து­கொண்டேன்.

உங்­க­ளுக்கு தற்­போது 52 வய­தா­கி­றது, நீங்கள் வாழ்க்­கையில் மகிழ்­வுடன் இருக்­கி­றீர்­களா என அவ­ரிடம் கேட்­கப்­பட்­ட­போது, எனக்கு தற்­போது 17 வய­தாக இருப்­ப­து­பொ­லவே உணர்­கின்றேன் என அப் பிர­பல பாடகி தெரி­வித்தார்.
எனக்கு வயது அதி­க­ரிக்கும் அனு­பவம் என்­பது எனது உடல் முதிர்­வ­தாகும். நான் இள­மையை நோக்கித் திரும்பிக் கொண்­டி­ருக்­கின்றேன் எனவும் அவர் தெரி­வித்தார்.

நான் மகிழ்ச்­சி­யா­கவும் ஆரோக்­கி­ய­மா­கவும் இருப்­ப­தைக்­கண்டு மகி­ழ்ச்­சி­ய­டையும் ஏரா­ள­மான மக்­க­ளி­ட­மி­ருந்து பலத்த ஆத­ரவு தனக்குக் கிடைப்­ப­தா­கவும் அவர் தெரி­வித்தார்.

பிவ் ஆய்வு மத்­திய நிலை­யத்தின் உலகில் சமயம் மற்றும் கல்வி தொடர்­பான 2016 ஆம் ஆண்டு அறிக்­கையின் பிர­காரம் அயர்­லாந்தில் முஸ்­லிம்­களின் எண்­ணிக்கை கிட்­டத்­தட்ட 70,000 என மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இவர்­களுள் 2,000 பேர் வைத்­தி­யர்கள் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

2011 ஆம் ஆண்டு சனத்தொகை கணிப்பீட்டு புள்ளிவிபரங்களின் பிரகாரம் 12,000 பாடசாலை செல்லும் வயதுள்ள சிறுவர்கள் உள்ளடங்கலாக 49,204 முஸ்லிம்கள் இருக்கின்றனர். 2006 ஆம் ஆண்டில் இருந்த எண்ணிக்கையின் 51 வீத அதிகரிப்பே மேற்படி எண்ணிக்கையாகும்.

vidivelli 

Leave A Reply

Your email address will not be published.