2020 இல் ஜனா­தி­ப­திக்கு எந்­த­வொரு அமைச்­சையும் பொறுப்­பேற்க முடி­யாது

பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்

0 688

ஜனா­தி­ப­தியின் நிறை­வேற்று அதி­கா­ரத்தை 19 ஆவது அர­சி­ய­ல­மைப்பு திருத்தம் முழு­மை­யாக கட்­டுப்­ப­டுத்­த­வில்லை. ஆனால் இந்த அர­சி­ய­ல­மைப்பின் பிர­காரம் 2020 இல் தெரி­வாகும் ஜனா­தி­ப­திக்கு எந்த அமைச்சுப் பத­வி­க­ளையும் பொறுப்­பேற்க முடி­யாது என்று பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் தெரி­வித்தார். 

வெகு­சன ஊடக அமைச்சில் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­துக்­கொண்டு உரை­யாற்றும் போதே இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் கூறி­ய­தா­வது; ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ரூப­வா­ஹினி கூட்­டுத்­தா­ப­னத்தை பாது­காப்பு அமைச்­சுடன் இணைத்துக் கொண்­ட­மை­யா­னது அர­சியல் ரீதியில் பவ்­வேறு கேள்­வி­களை தோற்­று­வித்­துள்­ளன. எவ்­வா­றா­யினும் இந்த விட­யத்தை கொள்கை ரீதி­யான பிரச்­சி­னை­யா­கவே கரு­த­வேண்டும். ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் மாநாட்­டிலும் நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­ப­திக்கு தற்­போது எந்த அதி­கா­ரமும் இல்லை என்றும் பிர­தமர் பத­விக்கே அதிக அதி­கா­ரங்கள் குவிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் ஜனா­தி­பதி தெரி­வித்­தி­ருந்தார்.

இந்­நி­லையில் குறு­கிய காலத்­தி­லேயே தனக்கு இன்னும் அதி­காரம் இருக்­கி­றது என்­பதை மீண்டும் நிரூ­பித்துக் காட்­டி­யுள்ளார். பாது­காப்பு அமைச்சின் கீழ் ரூப­வா­ஹினி கூட்­டுத்­தா­ப­னத்தை இணைத்து 19 ஆவது அர­சி­ய­ல­மைப்­பி­னூ­டாக தனது அதி­கா­ரங்கள் எதுவும் குறைக்­கப்­ப­ட­வில்லை என்­ப­தையும் ஒப்­பித்துக் காட்­டி­யுள்ளார்.

ஆகவே, ஜனா­தி­ப­தியின் பேச்சும் செயலும் எண்­ணமும் ஒன்­றுக்­கொன்று மாறுப்­பட்­டவை என்­பதை இந்த செயல் தெளி­வாகக் வெளி­காட்­டி­யுள்­ளது. இந்­நி­லையில் அவ­ரது தீர்­மானங்கள் குறித்து உறு­தி­யாக நம்­பிக்கை வைக்க இய­லாது. ஆனால் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் அர­சியல் வாழக்­கையில் இறு­தி­யான தரு­ணங்­க­ளா­கவே இது அமை­கின்­றது.

ஜனா­தி­ப­திக்கு இருக்கும் அதி­க­பட்ச அதி­கா­ரத்தை ஓர­ளவு கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வ­ரவே 19 ஆவது அர­சி­ய­ல­மைப்பை நடை­மு­றைக்கு கொண்டு வந்தோம். இருப்­பினும் நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி பதவி முழு­மை­யாக ஒழிக்­கப்­ப­ட­வில்லை. நிறை­வேற்று அதி­கா­ரத்­துக்­கான அங்­கீ­காரம் இன்னும் இருப்­ப­தா­லேயே அனை­வரும் ஜனா­தி­ப­தி­யாக வேண்டும் என்று எண்­ணு­கி­றார்கள். நிறை­வேற்று அதி­கா­ரத்­துக்கு இன்னும் அங்­கீ­காரம் இருப்­ப­தா­லேயே முன்னாள் பாது­காப்பு செயலாளர் கோத்­தா­பய ராஜபக் ஷ தனது அமெ­ரிக்க பிராஜா உரி­மையை நீக்­கி­விட்டு ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராகக் கள­மி­றங்­கி­யுள்ளார். முக்­கி­ய­மான அர­சசார் நிய­ம­னங்கள் உள்­ளிட்ட ஒரு­சில அதி­கா­ரங்கள் அர­சி­ய­ல­மைப்பு சபை­யி­னூ­டாக ஜனா­தி­ப­திக்கு வழங்­கப்­பட்­டுள்­ளன. ஆகவே அவ­ருக்கு அதி­கா­ர­மில்லை என்று குறிப்­பிட முடி­யாது. எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்­த­லுக்குப் பின்னர் 19ஆவது அரசியலமைப்பு திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுசூழல் அமைச்சும் பாதுகாப்பு அமைச்சு ஆகிய இரண்டு மாத்திரமே தற்போது இருக்கும் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளன. ஆகவே அடுத்துவரும் ஜனாதிபதிக்கு ஏந்தவொரு அமைச்சையும் பொறுப்பேற்க முடியாது என்றார்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.