நெருக்கடிகளுக்கு கோத்தாபய ராஜபக் ஷ ஒரு தீர்வல்ல நெருக்கடியின் ஒரு வெளிப்பாடே ராஜபக் ஷ முகாம்

ம.வி.மு. தலைவர் அநுரகுமார திஸாநாயக்க சுட்டிக்காட்டு

0 1,440

‘ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக நிய­மிக்­கப்­பட்­டி­ருக்கும் முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­தா­பய ராஜபக் ஷ இலங்கை இன்று எதிர்­நோக்கும் நெருக்­க­டி­க­ளுக்கு ஒரு தீர்­வல்ல. உண்­மையில் அந்த நெருக்­க­டியின் ஒரு வெளிப்­பாடே ராஜபக் ஷ முகாம். அவர்கள் இனங்­க­ளுக்­கி­டையில் பிளவை உரு­வாக்­கு­வ­தற்கு நாட்டு மக்­களின் பாது­காப்பைத் தாரை­வார்த்­தார்கள். அவர்­க­ளா­கவே உரு­வாக்­கிய பிரச்­சி­னை­யினால் தேசிய பாது­காப்­பிற்குத் தோன்­றிய அச்­சு­றுத்­தலை தாங்­க­ளா­கவே மீட்­டுத்­தரப் போவ­தாக இப்­பொ­ழுது உறுதி கூறு­கின்­றார்கள். அதனால் ராஜபக் ஷ குடும்­பத்தைச் சேர்ந்த எவ­ருமே இன்­றைய நெருக்­க­டிக்கு ஒரு தீர்­வல்ல’என தேசிய மக்கள் சக்தி இயக்­கத்தின் ஜனா­தி­பதி வேட்­பா­ளரும், மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் (ஜே.வி.பி) தலை­வ­ரு­மான அநு­ர­கு­மார திஸா­நா­யக்க கூறி­யி­ருக்­கின்றார்.

கொழும்பு ஆங்­கி ல வார­வெ­ளி­யீடு ஒன்­றுக்கு நேர்­கா­ண­லொன்றை வழங்­கிய திஸா­நா­யக்­க­விடம் அவரை விடவும் முன்னாள் பாது­காப்பு செய­லாளர் மாத்­தி­ரமே இன்­னு­மொரு ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக நிய­மனம் செய்­யப்­பட்­டி­ருக்­கிறார். இலங்­கையின் ஜனா­தி­ப­தி­யாகு­வ­தற்கு அவர் பொருத்­த­மா­ன­வரா? என்று கேட்­கப்­பட்ட போது அவர் இந்தப் பதி­லை­ய­ளித்தார்.

எந்த அடிப்­ப­டையில் ஐக்­கிய தேசியக் கட்­சி­யையோ அல்­லது ராஜபக் ஷ முகா­மையோ மீண்டும் அதி­கா­ரத்­திற்குக் கொண்­டு­வர முடியும்? அந்த இரு தரப்­பி­ன­ராலும் ஊழல், மோச­டி­களை நிறுத்த இய­ல­வில்லை. உண்­மையில் அவர்­களே ஊழல்­களில் நிபு­ணர்­க­ளாக இருக்­கின்­றார்கள். அதே­போன்றே அவர்­களால் சட்­டத்தின் ஆட்­சியைப் பாது­காக்­கவோ அல்­லது பொரு­ளா­தார ரீதியில் நாட்டை முன்­நோக்கிக் கொண்டு செல்­லவோ முடி­யாது. அவர்கள் தான் சட்டம், ஒழுங்கு சீர்­கு­லை­வ­தற்குக் காரணம். நாட்டைக் கடன்­ப­ளுவில் சிக்­க­வைத்து, மோச­மான பொரு­ளா­தார நெருக்­க­டியை உரு­வாக்­கி­ய­வர்­களும் அவர்­களே என்றும் ஜே.வி.பியின் தலைவர் கடு­மை­யான விமர்­ச­னத்தை வெளி­யிட்டார்.

கேள்வி: ஜே.வி.பி. இறு­தி­யாக 1990 டிசம்பர் ஜனா­தி­பதித் தேர்­த­லி­லேயே வேட்­பா­ளரைக் கள­மி­றக்­கி­யி­ருந்­தது. 20 வருட இடை­வெ­ளிக்குப் பின்னர் மீண்டும் சொந்­த­மாக வேட்­பா­ளர்­களை நிறுத்த வேண்­டு­மென்ற தேவையை ஜே.வி.பி தலை­மை­யி­லான தேசிய மக்கள் சக்தி ஏன் உணர்ந்­தது?

பதில் : கடந்த ஜனா­தி­பதித் தேர்­தல்­களின் போது எமது நாடு குறிப்­பிட்ட சில சூழ்­நி­லை­களை எதிர்­நோக்­கி­யது. அப்­போ­தைய சூழ்­நி­லை­களைக் கருத்தில் எடுத்­துக்­கொண்டே குறிப்­பிட்ட சில நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க ஜே.வி.பி. தீர்­மா­னித்­தது. இன்று நாடு இன்­னொரு இக்­கட்­டான சூழ்­நி­லைக்கு முகங்­கொ­டுத்துக் கொண்­டி­ருக்­கி­றது.

பிர­தான அர­சியல் கட்­சி­க­ளான ஐக்­கிய தேசியக் கட்­சியும், ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் தோல்வி கண்­டு­விட்­டன. அவர்கள் இப்­போது ஒரு­மு­க­மாக இணைந்தும் விட்­டார்கள். முற்­று­மு­ழு­தான அழி­வுப்­பா­தையில் நாட்டை அவர்கள் இழுத்துச் சென்­றி­ருக்­கி­றார்கள் என்­பது நிரூ­பிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. அதனால் தேசிய மக்கள் சக்தி என்ற வடிவில் மாற்று சக்­தி­யொன்றின் எதிர்­கால வெற்­றியை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்குத் தேவை­யான தலை­மைத்­து­வத்தை வழங்­கு­வ­தற்­கா­கவே எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்­தலில் ஒரு வேட்­பா­ளரைக் கள­மி­றக்­கு­வ­தற்கு நாங்கள் கூட்­டாகத் தீர்­மா­னித்தோம்.

ராஜபக் ஷ முகா­மி­னது போலித்­தோற்­றத்தை கடந்த தசாப்­தத்தில் நாம் அம்­ப­லப்­ப­டுத்­தி­யி­ருக்­கிறோம். மாற்­ற­மொன்றைக் கொண்­டு­வர வேண்­டு­மென்ற அக்­க­றையில் மக்கள் இருக்­கி­றார்கள் என்­பதை நாம் அவ­தா­னித்தோம். தற்­போ­தைய சீர்­கே­டான நிலை­வ­ரத்தை எதிர்­கால சந்­த­தி­யி­ன­ருக்கும் கடத்­தக்­கூ­டாது என்­ப­தற்­காக சரி­யான தீர்­மா­னத்தை மக்கள் எடுக்க வேண்­டிய நேரம் இப்­போது வந்­து­விட்­டது. அந்த உண்­மை­யான மாற்­றத்தைக் கொண்­டு­வ­ரு­வ­தற்­கான முயற்­சி­க­ளுக்கு மக்கள் பங்­க­ளிப்புச் செய்ய வேண்டும். அவர்கள் அவ்­வாறு செய்­வார்­க­ளென நாம் நம்­பு­கின்றோம்.

கேள்வி : ‘மக்­களின் எதிர்­பார்ப்­பிற்­கு­ரிய வேட்­பாளர்’ என்ற உங்­க­ளது பிர­சா­ரத்­திற்­கான தொனிப்­பொ­ருளின் அடிப்­ப­டை­யள என்ன?

பதில் : நினை­விற்கு எட்­டாத காலந்­தொ­டங்கி வாக்­கா­ளர்­களின் எதிர்­பார்ப்­பு­களும், அவர்­களின் தலை­வர்­களின் எதிர்­பார்ப்­பு­களும் துரு­வ­ம­யப்­பட்டு ஒத்துவ­ரா­த­வை­யா­கவே இருந்­தன. நாட்டின் தலை­வர்­களின் எதிர்­பார்ப்­பு­களும், தேவை­களும் சுய­ந­லத்தை அடிப்­ப­டை­யாகக் கொண்­ட­வை­யா­கவே இருந்து வந்­தி­ருக்­கின்­றன. ஆனால் இந்த நாட்டின் மக்கள் தங்­க­ளது சொந்த எதிர்­பார்ப்­பு­க­ளையும், நம்­பிக்­கை­க­ளையும் தொடர்ந்து கொண்­டி­ருக்­கி­றார்கள் என்­பது வெளிப்­ப­டை­யாகத் தெரி­கி­றது. பொரு­ளா­தார வளர்ச்சி, ஊழலைக் கட்­டுப்­ப­டுத்­துதல் மற்றும் சட்­டத்தின் ஆட்­சியை நிலை­நி­றுத்­துதல் போன்ற எண்­ணற்ற எதிர்­பார்ப்­புகள் மற்றும் தன்­னம்­பிக்­கை­யு­ட­னேயே வாக்­கா­ளர்கள் தங்­க­ளது வாக்­கு­களை அளிக்­கின்­றார்கள். மக்­களின் இந்த எதிர்­பார்ப்­பு­களைப் பிர­தி­ப­லிக்­கக்­கூ­டிய நல்­லாட்சி முறையை உறு­திப்­ப­டுத்தும் ஆற்றல் கொண்ட ஒரு வேட்­பா­ளரை நிறுத்த வேண்டும் என்­பதே எமது நோக்­க­மாக இருந்­தது.

கேள்வி : கோத்­த­தா­பய ராஜபக் ஷ ஜனா­தி­ப­தி­யாக வரு­வா­ரே­யானால் அவரின் ஆட்­சியின் கீழ் ஜே.வி.பியின் எதிர்­காலம் எவ்­வா­றா­ன­தாக அமையும்?

பதில் : அவ­ரது வெற்­றியைப் பற்­றியோ அல்­லது ஜனா­தி­ப­தி­யாகத் தெரி­வாகும் பட்­சத்தில் அவர் தொடர்ந்து எடுக்­கக்­கூ­டிய எந்­த­வொரு நட­வ­டிக்கை பற்­றியோ எமக்குக் கவ­லை­யில்லை. ராஜபக் ஷ குடும்பத்தில் மிகவும் பலவீனமான ஒரு பிரமுகரே கோத்தாபய ராஜபக் ஷ. மற்றவர்களின் கருத்துக்களைப் பொறுத்துக்கொள்ள இயலாமையும், பொறுமைகாக்க முடியாதமையுமே பலவீனத்தின் அறிகுறி. தனக்கெதிராக ஏதாவது எழுதப்பட்டால் பொறுமையாக அதற்குப் பதிலளிப்பதற்குப் பதிலாக அவர் வன்முறை சுபாவத்துடன் நடந்துகொள்வார். அவர் ஒரு பலவீனமான மனிதர். ராஜபக் ஷ குடும்பத்திற்குள் குற்றச்செயல்கள் மற்றும் ஊழல்கள் தொடர்பில் பெருமளவு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருப்பவரும் அவரேயாவார்.
எனவே நாம் எவ்வித குழப்பமும் அடையப்போவதில்லை. எந்த சூழ்நிலைக்கும் முகங்கொடுக்கத்தக்க வகை யில் எமது இயக்கத்தைக் கட்டி வளர்ப்பதில் நாம் கவனம் செலுத்துவோம்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.