கிழக்கு மாகாண கல்வி பின்னடைவு தொடர்பாக யுனிசெப் அமைப்புடன் இணைந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இதன் முதற்கட்டமாக கல்வியமைச்சு மட்டம், கல்வித் திணைக்கள மட்டம், கிழக்கு மாகாண திட்டமிடல் செயலக மட்டம், பிரதம செயலாளர் மட்டம் என நான்கு பிரதான மட்டங்களில் கலந்துரையாடல்கள் கடந்த வாரம் இடம்பெற்றுள்ளன.
இதனைத்தவிர பின்னடைவுள்ள வலயங்களாக இனங்காணப்பட்டுள்ளவற்றுள் கிண்ணியா கல்வி வலய மட்டத்திலான கலந்துரையாடலும் இடம்பெற்றுள்ளது. இதன் அடிப்படையில் சில விடயங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. தற்போதுள்ள பலவீனங்களை நிவர்த்திப்பது தொடர்பான நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப் பட்டுள்ளன. கல்விப் பின்னடைவுக்கான காரணம், அதனை நிவர்த்திப்பதற்கான நடவடிக்கைகள் போன்றன தொடர்பான ஆய்வுகள் மிக விரைவில் மேற்கொள்ளப்படவுள்ளன.
குறுங்கால திட்டம், இடைக்கலத்திட்டம், நீண்ட காலத்திட்டம் என்ற அடிப்படையில் செயற்பாடுகள் முன்னெடுக்கப் படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
vidivelli