இலங்கையும் சவூதியும் பயங்கரவாதத்தை ஒழிக்கும் குறிக்கோளுடன் செயற்படுகின்றன

ஜனாதிபதியிடம் சவூதி சபாநாயகர் தெரிவிப்பு

0 1,403

பயங்­க­ர­வா­தத்­திற்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுப்பது இலங்­கையைப் போன்றே சவூதி அரே­பி­யா­வி­னதும் குறிக்­கோ­ளாகும் எனத் தெரி­வித்­துள்ள அந்­நாட்டு சபா­நா­யகர் கலா­நிதி அப்­துல்லா பின் மொஹமட் பின் இப்­ராஹிம் அஷ் ஷெயின், பயங்­க­ர­வாதம் என்­பது குறித்­த­வொரு சம­யத்­திற்கோ இனத்­திற்கோ வரை­ய­றுக்­கப்­பட்­ட­தல்ல என்றும் குறிப்­பிட்­டுள்ளார்.

இலங்­கைக்கு வரு­கை­தந்­துள்ள சவூதி அரே­பி­யாவின் சபா­நா­யகர் செவ்­வாய்­க்கி­ழமை ஜனா­தி­பதி செய­ல­கத்தில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை சந்­தித்துக் கலந்­து­ரை­யா­டி­ய­போதே இதனைத் தெரி­வித்­துள்ளார்.

இரு நாடு­க­ளுக்­கு­மி­டையே பாரா­ளு­மன்ற தொடர்­பு­களை விரி­வு­ப­டுத்த நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­மென சவூதி அரே­பி­யாவின் சபா­நா­யகர் தெரி­வித்த­துடன், இதற்­கான புதிய உடன்­ப­டிக்கை ஒன்றை ஏற்­ப­டுத்­திக்­கொள்ள எதிர்­பார்ப்­ப­தா­கவும் தெரி­வித்தார்.

இலங்­கைக்கும் சவூதி அரே­பி­யா­வுக்­கு­மி­டை­யி­லான ஒத்­து­ழைப்­பினை பல துறை­களில் விரி­வு­ப­டுத்தல் தொடர்­பாக இதன்­போது கலந்­து­ரை­யா­டப்­பட்­ட­துடன், சவூதி அரே­பிய நிதி­யத்­தி­னூ­டாக இலங்­கையில் பல்­வேறு அபி­வி­ருத்தி செயற்­பா­டு­க­ளுக்கு நீண்ட கால­மாக வழங்­கப்­பட்­டு­வரும் உத­வி­க­ளுக்கு சவூதி அரே­பிய அர­சாங்­கத்­திற்கு ஜனா­தி­பதி நன்றி தெரி­வித்தார்.

மேலும், ஹஜ் யாத்­தி­ரி­கர்­க­ளுக்கு வழங்­கப்­படும் வச­திகள் தொடர்­பாக ஜனா­தி­பதி பாராட்டுத் தெரி­வித்­த­துடன், எதிர்­வரும் காலங்­களில் அதி­க­மானோர் ஹஜ் யாத்­தி­ரையில் ஈடு­ப­டு­வ­தற்கு சந்­தர்ப்பம் வழங்­குதல் தொடர்பில் கவனம் செலுத்­து­மாறும் சபா­நா­ய­க­ரிடம் கேட்­டுக்­கொண்டார்.

ஹஜ் யாத்­தி­ரி­கர்­க­ளுக்­கான வச­தி­களை விரி­வு­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் தற்­போது மேற்­கொள்­ளப்­பட்டு வரு­வ­துடன், அந்­ந­ட­வ­டிக்­கைகள் நிறை­வ­டைந்­ததன் பின்னர் ஜனா­தி­ப­தியின் வேண்­டு­கோளை நிறை­வேற்ற நட­வ­டிக்கை எடுப்­ப­தாக சவூதி அரே­பிய சபா­நா­யகர் தெரி­வித்தார்.

சுமார் 136,000 இலங்­கை­யர்கள் தற்­போது சவூதி அரே­பி­யாவில் பணி­யாற்றும் அதே­வேளை, அவர்­க­ளது வினைத்­தி­ற­னான சேவையை பாராட்­டி­ய­துடன், மேலும் அதி­க­ள­வி­லான இலங்­கை­யர்­க­ளுக்கு வேலை­வாய்ப்­பு­களை பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்கும் தமது அர­சாங்கம் கவனம் செலுத்­து­வ­தாக சவூதி அரேபிய சபாநாயகர் தெரிவித்தார்.

பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுத்தல் இலங்கையைப் போன்றே சவூதி அரேபியாவினதும் குறிக்கோளாகும் எனவும் பயங்கரவாதம் என்பது குறித்தவொரு சமயத்திற்கோ இனத்திற்கோ வரையறுக்கப்பட்டது அல்ல என்பதையும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.