4/21 தாக்குதல்களை ஐ.எஸ்.ஐ.எஸ். தாக்குதலாக சித்திரிக்க நடவடிக்கை எடுத்தவருக்கு விளக்கமறியல்

0 1,598

4/21 உயிர்த்த ஞாயிறு தொடர் தற்­கொலை தாக்­கு­தல்­களை ஐ.எஸ். ஐ.எஸ். சர்­வ­தேச பயங்­க­ர­வா­திகள் முன்­னெ­டுத்­த­தாக சித்­தி­ரிக்க, விசேட வலை­ய­மைப்­பொன்­றூ­டாக நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­த­தாகக் கூறப்­படும் தடை செய்­யப்­பட்ட தேசிய தெளஹீத் ஜமாஅத் அமைப்பின் உறுப்­பினர் ஒரு­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்க கோட்டை நீதிவான் ரங்க திஸா­நா­யக்க நேற்று உத்­த­ர­விட்டார். கொழும்பு கிங்ஸ்­பெரி ஹோட்­டலில் நடாத்­தப்­பட்ட தற்­கொலை தாக்­குதல் விவ­கார விசா­ர­ணை­களின் போது சந்­தேக நபர் தொடர்பில் தகவல் வெளிப்­ப­டுத்­தப்­பட்டு, பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்டு தடுத்து வைத்து விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்ட நிலையில் சந்­தேக நபர் நேற்று கோட்டை நீதி­மன்றில் ஆஜர் செய்­யப்­பட்டார். இதன்­போதே அவரை எதிர்­வரும் 18 ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்க கோட்டை நீதிவான் ரங்க திஸா­நா­யக்க உத்­த­ர­விட்டார்.

அஹ­மது முஹம்­மது அர்ஷாத் எனும் குறித்த சந்­தேக நபர், தற்­போதும் சி.ஐ.டி. பொறுப்பில் விசா­ரிக்­கப்­பட்­டு­வரும் தேசிய தெளஹீத் ஜமாஅத் உறுப்­பினர் பஸ்ஹுல் சஹ்ரான் எனும் சந்­தேக நபரின் ஆலோ­ச­னைக்­க­மைய, இந்த தாக்­கு­தல்­களை ஐ.எஸ். ஐ.எஸ். அமைப்பின் தாக்­கு­த­லாக சித்­தி­ரிக்க, யாரும் ஊட­றுத்து கேட்க முடி­யாத விசேட வலை­ய­மைப்­பொன்றின் ஊடாக நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­துள்­ள­தாக விசா­ரணை அதி­கா­ரி­யான சி.ஐ.டி.யின் டிஜிட்டல் பகுப்­பாய்வு அறையின் பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் சேனா­ரத்ன நீதி­மன்றில் தெரி­வித்தார்.

அத்­துடன் சந்­தேக நபர் தொடர்பில் விசேட மேல­திக விசா­ரணை அறிக்கை ஒன்­றி­னையும் நீதி­வா­னுக்கு வழங்­கிய அவர், சந்­தேக நபரை பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் 7 (2) ஆம் அத்­தி­யா­யத்தின் கீழ் ஆஜர் செய்­வ­தாகக் கூறினார்.

குறித்த சந்­தேக நபரை கடந்த ஒரு மாதத்­துக்கு முன்னர் காத்­தான்­குடி பகு­தியில் வைத்து இரா­ணுவ புல­னாய்வுப் பிரி­வினர் கைது செய்து விசா­ர­ணை­க­ளுக்­காக சி.ஐ.டி.யிடம் கைய­ளித்­துள்­ளனர். அதன்­படி முன்­னெ­டுக்­கப்­பட்ட விசா­ர­ணை­களில், சந்­தேக நபர் விசேட வலை­ய­மைப்பு ஊடாக ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்­புடன் தொடர்­பு­களைக் கொண்­டி­ருந்­துள்­ளமை வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக சி.ஐ.டி.யின் அறிக்கை ஊடாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே சந்தேக நபரை எதிர்வரும் 18 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதிவான், அன்றைய தினம் மேலதிக விசாரணை நிலைவரம் தொடர்பில் அறிவிக்க உத்தரவிட்டார்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.