ஹஜ் பயண தடை ஏற்பட்ட ஆறுபேருக்கு பணத்தை மீள அளிப்பதாக உறுதியளிப்பு

0 806

இவ்­வ­ருட ஹஜ் யாத்­திரை ஏற்­பா­டு­களின் போது யாத்­தி­ரைக்­கான கட்­டணம் அற­விட்டு இறுதி நேரத்தில் ஹஜ் ஏற்­பா­டு­களை மேற்­கொள்­ளாது கைவி­டப்­பட்ட 6 ஹஜ் விண்­ணப்­ப­தா­ரிகள் செலுத்­திய கட்­ட­ணங்­களை எதிர்­வரும் 17 ஆம் திகதி திருப்பிச் செலுத்­து­வ­தாக சம்­பந்­தப்­பட்ட ஹஜ் முகவர் நிலைய உரி­மை­யாளர் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­திடம் உறு­தி­ய­ளித்­துள்ளார்.

இவ்­வாறு கைவி­டப்­பட்ட 6 ஹஜ் விண்­ணப்­ப­தா­ரி­க­ளுக்கு குறிப்­பிட்ட ஹஜ் முகவர் நிலைய உரி­மை­யாளர் சுமார் 5 மில்­லியன் ரூபாவை திருப்பிச் செலுத்த வேண்­டி­யுள்­ளது.

ஹஜ் கட­மைக்­காக 8 ஹஜ் விண்­ணப்­ப­தா­ரி­க­ளிடம் அதற்­கான பணத்தை வசூ­லித்­துக்­கொண்டு அவர்­க­ளுக்­கான ஹஜ் பயண ஏற்­பா­டு­களைப் பூர்த்தி செய்­யாது ஹஜ் முகவர் கைவிட்­டதால் அவர்­களால் ஹஜ் கட­மையை மேற்­கொள்ள இய­லாமற் போனது. சம்­பந்­தப்­பட்ட முகவர் 8 பேரில் இருவர் செலுத்­தி­யி­ருந்த கட்­ட­ணங்­களை ஏற்­க­னவே திருப்பி வழங்­கி­யி­ருந்த நிலையில் ஏனைய 6 பேரின் கட்­ட­ணங்­களை கடந்த 10 ஆம் திகதி (நேற்று) வழங்­கு­வ­தாக அரச ஹஜ் குழு­விடம் உறு­தி­ய­ளித்­தி­ருந்தார். என்­றாலும் நேற்று கட்­டணம் திருப்­பி­ய­ளிக்­கப்­ப­ட­வில்லை. பணத்தை திருப்பி கைய­ளிப்­ப­தற்கு எதிர்­வரும் 17 ஆம் திகதி வரை கால அவ­காசம் கோரி­யுள்ளார். குறிப்பிட்ட தினத்தில் பணம் திருப்பிச் செலுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென அரச ஹஜ் குழு தெரிவித்துள்ளது.

ஏ.ஆர்.ஏ.பரீல்

vidivelli

Leave A Reply

Your email address will not be published.