இலங்கைக்கான ஹஜ் கோட்டாவை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பேன்

சவூதி மஜ்லிஸ் சூரா கவுன்சில் தலைவர் கலாநிதி அப்துல்லாஹ்

0 726

இலங்கை முஸ்­லி­ம்க­ளுக்­கான ஹஜ் கோட்­டாவை அதி­க­ரிக்க நட­வ­டிக்கை எடுப்­ப­தாக சவூதி மஜ்லிஸ் சூரா கவுன்சில் தலைவர் அஷ்ஷேக் கலா­நிதி அப்­துல்லாஹ் பின் முஹம்மத் பின் இப்­ராஹீம் தெரி­வித்தார்.

சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரி­யவின் அழைப்­பை­யேற்று மூன்று நாட்கள் உத்­தி­யோ­க­பூர்வ விஜயம் மேற்­கொண்டு இலங்கை வந்­துள்ள சவூதி அரே­பிய மஜ்லிஸ் சூரா கவுன்­சிலின் தலைவர் மற்றும் தூதுக்­கு­ழு­வினர் சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரி­யவை நேற்று முன்­தினம் பாரா­ளு­மன்ற அலு­வ­ல­கத்தில் சந்­தித்துக் கலந்­து­ரை­யா­டினர். 

இதன்­போது இந்த சந்­திப்பில் கலந்­து­கொண்­டி­ருந்த பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஏ.எச்.எம்.பெளசி, இலங்­கைக்கு வழங்­கப்­பட்­டி­ருந்த ஹஜ் கோட்டா தவிர்க்க முடி­யாத சில கார­ணங்­க­ளுக்­காக சிறிது காலத்­துக்கு குறைக்­கப்­பட்­டி­ருந்­தது. என்­றாலும் தற்­போது வழங்­கப்­பட்டு வரும் கோட்டா எமக்குப் போது­மா­ன­தாக இல்லை. அதனை அதி­க­ரித்து வழங்க நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும் என கேட்­டுக்­கொண்டார்.

அத்­துடன் சவூதி அரே­பிய ராஜ்­ஜி­யத்தில் பல்­வேறு துறை­களில் பணி­யாற்­றி­வரும் சுமார் 2இலட்சம் இலங்­கை­யர்கள் அந்­நாட்டில் எதிர்­கொண்­டு­வரும் பல்­வேறு பிரச்­சி­னைகள் தொடர்பில் கவனம் செலுத்­து­மாறும் இதன்­போது சவூதி மஜ்லிஸ் சூரா சபை தலை­வ­ரிடம் எடுத்­து­ரைக்­கப்­பட்­டது.

இதன்­போது சவூதி மஜ்லிஸ் சூரா சபை தலைவர் தெரி­விக்­கையில், சவூதி – இலங்கை ஆகிய நாடு­க­ளுக்­கி­டையே இரு­த­ரப்பு உறவு வலு­வான நிலையில் காணப்­ப­டு­கின்­றது. வர்த்­த­கத்­துறை மற்றும் இரு­த­ரப்பு முத­லீடு மூலம் இரு நாடு­க­ளுக்­கி­டையில் பொரு­ளா­தார ஒத்­து­ழைப்பு அபி­வி­ருத்தி செய்­யப்­ப­ட­லா­மென யோசனை தெரி­வித்தார்.

அத்­துடன் சவூதி அரே­பி­யாவில் இலங்­கை­யர்கள் எதிர்­நோக்கும் பிரச்­சி­னை­களை தீர்க்­கவும், அங்கு பாதிக்­கப்­ப­டு­ப­வர்­க­ளுக்கு வழங்­கப்­படும் நட்­ட­ஈட்டுத் தொகையை துரி­த­க­தியில் பெற்­றுக்­கொள்­ளவும் நட­வ­டிக்கை எடுப்­ப­தா­கவும் அவர் தெரி­வித்தார்.

அத்­துடன் ரியா­தி­லுள்ள சவூதி சூரா கவுன்­சி­லுக்கு விஜயம் செய்­யு­மாறும் சபா­நா­ய­க­ரிடம் அவர் வேண்­டுகோள் விடுத்தார்.

இலங்­கை­யர்­க­ளுக்­கான ஹஜ் கோட்­டாவை அதி­க­ரிக்க நட­வ­டிக்கை எடுப்­ப­தாக தெரி­வித்­தமை மகிழ்ச்­சி­ய­ளிப்­ப­தா­கவும் இவ்­வ­ருடம் 500 ஹஜ் பயணிகள் அதிகரிக்கப்பட்டு மொத்தம் 4ஆயிரம் பேர் ஹஜ் பயணம்கொண்டதாக பாராளுமன்ற உறுப்பினர் பெளசி தெரிவித்தார். இந்த சந்திப்பில் அமைச்சர் ரவூப் ஹக்கீம், பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

எம்.ஆர்.எம்.வஸீம்

vidivelli

Leave A Reply

Your email address will not be published.