தேசிய ஒற்றுமையை நிலைநாட்ட மேலும் 5 வருட ஆணை தாருங்கள்

அலரிமாளிகை நிகழ்வில் பிரதமர் கோரிக்கை

0 679

ஐக்­கிய தேசியக் கட்சி தலை­மை­யி­லான அர­சாங்­கமே நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி ஆட்சி முறையை அறி­மு­கப்­ப­டுத்­தி­யது. அந்த முறையை உரு­வாக்­கி­யதைப் போன்று அதை நாமே ஒழிப்போம். இதே­வேளை நாட்டின் அடை­யா­ளத்தை நிலை­நாட்டி தேசிய ஒற்­று­மையைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு ஐந்து வரு­ட­கால ஆட்சி போதாது. இந்த அர­சாங்­கத்தால் நிறை­வேற்ற வேண்­டிய எஞ்­சிய வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­று­வ­தற்கு இன்னும் ஐந்­தாண்­டு­கால ஆணையை மக்கள் வழங்க வேண்டும் என்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார். 

மொழி பயிற்­று­விப்­பா­ளர்­களை திசை­மு­கப்­ப­டுத்­து­வ­தற்­கான தேசிய நிகழ்ச்­சித்­திட்டம் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் அல­ரி­மா­ளி­கையில் இடம்­பெற்­றது. அந்த நிகழ்வில் உரை­யாற்­றும்­போது இவ்­வாறு குறிப்­பிட்ட அவர் தொடர்ந்து கூறி­ய­தா­வது;

வர­லாற்றில் எமது தலை­வர்கள் சக­லரும் இன, மத வேறு­பா­டின்றி ஒரு­வ­ருக்கு ஒருவர் ஒத்­து­ழைப்­பு­ட­னேயே செயற்­பட்­டனர். அத­னூ­டாக அவர்­களின் இலக்­கு­களை வெற்­றி­கொண்­டார்கள். இதே­வேளை நாம் முப்­பது வருட யுத்­த காலத்தை சந்­தித்­துள்ளோம். அதன் தொடர்ச்­சி­யாக நாட்டை அபி­வி­ருத்தி செய்யும் பணி­களே தற்­போது இடம்­பெற்று வரு­கின்­றன. பாதைகள் நிர்­மாணம், கட்­டிட நிர்­மாணம் போன்ற பௌதிக அபி­வி­ருத்­திகள் கண்­ணுக்கு புலப்­ப­டக்­கூ­டி­யவை. அவ்­வா­றான அபி­வி­ருத்தி பணிகள் பிர­மாண்­ட­மாகப் பார்க்­கப்­படக் கூடி­யவை.

இவற்­றுக்கு அப்பால் நாட்டின் அடை­யா­ளத்தை பாது­காப்­ப­தி­லேயே எங்­களின் முன்­னேற்றம் தங்­கி­யுள்­ளது. நாட்டின் அடை­யா­ளத்தை பாது­காத்­துக்­கொண்டு ஒற்­று­மையை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு ஐந்து வரு­டங்கள் போதாது. அடுத்­து­வரும் ஐந்து வரு­டங்­க­ளிலும் அதற்­காக செயற்­பட்டால் மாத்­தி­ரமே தேசிய ஒற்­று­மையை முழு­மை­யாக கட்­டி­யெ­ழுப்ப முடியும்.

2015 ஆம் ஆண்டு அர­சியல் தீர்வு பெற்­றுக்­கொ­டுப்­ப­தாக வாக்­கு­றுதி வழங்­கி­யி­ருந்தோம். அது தொடர்பில் பல்­வேறு விட­யங்கள் கலந்­து­ரை­யா­டப்­பட்­டுள்­ளன. ஆகவே அந்த விட­யத்தில் தீர்வை பெற்­றுக்­கொள்ளக் கூடி­ய­தாக இருக்கும். நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறையை நாமே உரு­வாக்­கினோம். அதே­போன்று தற்­போது அந்த ஜனா­தி­பதி முறையை ஒழிப்­ப­தற்கும் எதிர்­பார்த்­துள்ளோம்.

பொதுக் கூட்­ட­ணி­யொன்­றி­னூ­டா­கவே ஆட்சி அமைத்தோம். பாரா­ளு­மன்­றத்தில் ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு பெரும்­பான்மை இருக்­க­வில்லை. இருப்­பினும் ஆட்­சியை இடை­நி­றுத்­தாமல் முன்­னோக்கி கொண்டு வந்­துள்ளோம். 2014 ஆம் ஆண்டு காலப்­ப­கு­தியில் மக்­க­ளுக்கு நாங்கள் வழங்­கிய வாக்­கு­று­தி­களில் பாதியை நிறைவு செய்­துள்ளோம். எஞ்­சி­யுள்ள பணி­களை நிறை­வேற்­று­வ­தற்கும் மக்கள் எங்­க­ளுக்கு ஆணையை கொடுக்க வேண்டும்.

சகல சமூ­கங்­க­ளையும் ஒன்று சேர்த்து எமது அடை­யா­ளத்தை பாது­காத்துக் கொள்ளும் நோக்­கி­லேயே 2015 ஆம் ஆண்டு ஆட்சி பொறுப்பை ஏற்­றுக்­கொண்டோம். நாம் அனை­வரும் இலங்­கை­யர்கள் என்ற எண்­ணத்தை அனை­வரும் ஏற்­றுக்­கொள்ள வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். அதே­போன்று வேறு­பட்ட மதங்­களை பின்­பற்றும் ஒவ்­வொ­ரு­வரும் தமது கலா­சா­ரத்தை பின்­பற்­று­வ­தற்­கான உரி­மையை ஏற்­ப­டுத்திக் கொடுக்கும் அதே­வேளை, ஏனைய மதத்­த­வர்­களின் நட­வ­டிக்­கை­க­ளுக்கு இடை­யூறு ஏற்­ப­டுத்­தாமல் சுதந்­தி­ர­மாக செயற்­ப­டு­வ­தற்­கான சூழ்­நி­லை­களை ஏற்­ப­டுத்தி கொடுக்க வேண்டும்.

இவ்­வாறு மக்­களின் உரி­மைகள் முறை­யாக வழங்­கப்­ப­டு­மாக இருந்தால் அநே­க­மான பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு பெற்­றுக்­கொள்ள கூடி­ய­தாக இருக்கும். தேசிய கீதத்தை தமிழ் மொழியில் பாடு­வ­தற்­கான சுதந்­திரம் டி.எஸ். சேன­நா­யக்­கவின் காலத்­தி­லேயே ஏற்­ப­டுத்­தப்­பட்­டது. ஆனால் அது காலப்­போக்கில் பிரச்­சி­னைக்­கு­ரிய விவ­கா­ர­மாக உரு­வெ­டுத்­தது. தமிழ் மொழியில் தேசிய கீதத்தை இசைப்பதை தவறான கண்ணோட்டத்தில் பார்த்தமையினால் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைப்பது பிரச்சினையாக மாறியது.

சகல இனங்களினதும் பிரதிநிதிகளின் ஒத்துழைப்புடனேயே அமைச்சர் மனோ கணேசனுக்கு தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சை பொறுப்பளித்தோம். அதன் விளைவுகள் இன்று நாட்டுக்கு நன்மையை தருவனவாக அமைந்துள்ளன.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.