பேராதனை போதனா வைத்தியசாலை பெண் காவலாளிக்கு எதிராக முறைப்பாடு

0 666

பேரா­தனை போதனா வைத்­தி­ய­சா­லையில் சிகிச்­சைக்­காக அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்த சிறு­வனை பார்­வை­யிடுவதற்கு முகத்தை மறைக்­காது அபாயா அணிந்து சென்ற பெண்­ணுக்குத் தடை விதித்த அங்கு கட­மை­யி­லி­ருந்த பெரும்­பான்­மை­யின பெண் காவ­லா­ளிக்கு எதி­ராக மனித உரிமை ஆர்­வ­லரால் பேரா­தனை போதனா வைத்­தி­ய­சாலைப் பணிப்­பா­ள­ரிடம் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. 

குறிப்­பிட்ட பெண்­ணுடன் வைத்­தி­ய­சா­லைக்குச் சென்­றி­ருந்த பெண்ணின் உற­வி­னரும் மனித உரிமை ஆர்­வ­ல­ரு­மான மட­வளை பஸாரைச் சேர்ந்த எம்.ஏ.எம். ஹனீப் இந்த முறைப்­பாட்­டினைச் செய்­துள்ளார். 

முறைப்­பாட்டில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது;

எனது உற­வி­ன­ரான பெண், வைத்­தி­ய­சா­லையின் 1 ஆம் இலக்க விடு­திக்குச் சென்­ற­போது கறுப்பு நிற அபாயா (முகத்­திரை அற்ற) அணிந்து செல்ல முடி­யா­தெ­னவும் அபா­யாவைக் களை­யு­மாறும் இந்த உத்­த­ரவு டாக்­டர்­க­ளாலும் தாதி­க­ளாலும் வழங்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் பெண் காவலாளி தெரி­வித்தார்.
அவ­ச­ர­கால சட்டம் அமுலில் இல்­லை­யெ­னவும் முகத்­திரை அணிந்­தி­ருக்­க­வில்லை எனவும் நான் தெரி­வித்­த­போது அங்­கி­ருந்தோர் முன்­னி­லையில் என்னை ‘வாயை மூடிக் கொண்டு போங்கள்’ என்று கூறினார்.

இவ்­வா­றான பத­வி­க­ளுக்கு படித்த பண்­பா­ன­வர்­களை நிய­மனம் செய்­யுங்கள் பல்­லின மக்கள் வாழும் நாட்டில் இவர்­க­ளா­லேயே பிரச்­சி­னைகள் உரு­வாக்­கப்­ப­டு­கின்­றன.

நோயா­ளர்­களைப் பார்­வை­யிடச் செல்லும் சந்தர்ப்பத்தில் இன, மத பேதங்களை ஏற்படுத்தும் இவ்வாறானவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.