பொத்துவிலில் புராதன சின்னங்களை முஸ்லிம்கள் அழிக்கிறார்கள் எனும் குற்றச்சாட்டில் உண்மையில்லை

பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் தெரிவிப்பு

0 707

புரா­தன சின்­னங்­களை முஸ்­லிம்கள் அழித்து வரு­கின்­றார்கள் என்­பதில் எவ்­வி­த­மான உண்­மையும் இல்லை என பொத்­துவில் பிர­தேச சபையின் தவி­சாளர் எம்.எஸ்.அப்துல் வாஸீத் தெரி­வித்தார்.

பொத்­துவில் மண்­மேட்டு தொல்­பொருள் பிர­தேசம் தொடர்பில் அண்­மைக்­கா­ல­மாக முன்­வைக்­கப்­பட்­டு­வரும் இன­வாதக் கருத்­துக்கள் குறித்து விளக்­க­ம­ளிக்கும் ஊட­க­வி­ய­லா­ளர்கள் மாநாடு கடந்த சனிக்­கி­ழமை பொத்­துவில் பிர­தேச சபை மண்­ட­பத்தில் இடம்­பெற்­றது. இதில் கலந்து கொண்டு விளக்­க­ம­ளிக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அங்கு அவர் ஊட­க­வி­ய­லா­ளர்கள் மத்­தியில் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில், எமது நாட்டில் அமைந்­துள்ள தொல்­பொருள் புரா­தன அடை­யாளச் சின்­னங்கள் இந்த நாட்டின் முக்­கிய பொக்­கி­ஷங்­க­ளாகும். அதனைப் பாது­காப்­பது ஒரு சமூ­கத்­தி­ன­ரது கடமை மாத்­தி­ர­மல்­லாது அனைத்து இனத்­த­வ­ரி­னதும் கட­மையும், பொறுப்­பு­மா­க­வுள்­ளது.

தொல்­பொருள் திணைக்­க­ளத்­திற்கு சொந்­த­மான மண்­மேட்டுக் காணியில் சட்­ட­வி­ரோ­த­மான முறையில் அத்­து­மீ­றியே முகுது மஹா­வி­காரை அமைக்­கப்­பட்­டுள்­ளது. அது மாத்­தி­ர­மல்­லாது அங்­குள்ள விகா­ர­தி­பதி இன்று பொத்­துவில் பிர­தேச முஸ்­லிம்கள் தொடர்பில் பெரும்­பான்மை சமூ­கத்தின் மத்­தியில் பொய்­யான இன­வாதக் கருத்­துக்­களைப் பரப்பி இன­நல்­லு­ற­வுக்குப் பாதிப்பை ஏற்­ப­டுத்தி வரு­வது வேத­னைக்­கு­ரிய விட­ய­மாகும்.

1952 ஆம் ஆண்டு முதல் இந்த மண்­மேடு 9 ஏக்கர் நிலப்­ப­ரப்பில் அமையப் பெற்­றி­ருந்­த­துடன், இப்­பி­ர­தேசம் தொல்­பொருள் திணைக்­க­ளத்­திற்­கு­ரி­யது என அறி­வித்தல் செய்­யப்­பட்­டி­ருந்­தது. இப்­பி­ர­தேசம் பொத்­துவில் பிர­தேச மக்­களும், ஏனைய சுற்­றுலாப் பய­ணி­களும் நாளாந்தம் வருகை தந்து பார்­வை­யிட்டுச் செல்லும் முக்­கிய இட­மா­கவும் இருந்து வந்த நிலையில், பொத்­துவில் பிர­தேச செய­ல­கத்தின் அனு­ம­தி­யுடன் அரை ஏக்கர் நிலப்­ப­ரப்பு வழங்­கப்­பட்டு அங்கு முகுது மகா விஹாரை அமைக்­கப்­பட்­டது. மஹிந்த ஆட்­சியில் பிர­தேச செய­ல­கத்­திற்கு அழுத்தம் வழங்­கப்­பட்டு இது 3 ஏக்­க­ராக அதி­க­ரிக்­கப்­பட்டு அங்கு மிகவும் பிர­மாண்­ட­மான விகா­ரையும் அமை­யப்­பெற்­றுள்­ளது.

இப் புரா­தன பிர­தே­சத்தை அடை­யாளம் காட்­டி­ய­டிவர் முஸ்லிம் ஒரு­வரே. அதற்­காக அவ­ருக்குப் பரி­சாக அங்கு காவ­லாளி வேலையும் வழங்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. அது மட்­டு­மல்­லாமல் கடந்த பயங்­க­ர­வாத யுத்த காலங்­க­ளிலும் அங்­குள்ள புரா­தன அடை­யாளச் சின்­னங்­க­ளையும், பிர­தே­சத்­தையும் பாது­காத்­த­வர்கள் முஸ்லிம் மக்­களே. இதனை மறந்து பல்­வே­று­பட்ட இன­வாதக் கருத்­துக்­களைப் பரப்பி பொத்­துவில் பிர­தே­சத்தில் நீண்ட கால­மாக ஒற்­று­மை­யுடன் வாழ்ந்து வரும் மூவின சமூ­கங்கள் மத்­தியில் முரண்­பாட்­டையும், பிரச்­சி­னை­க­ளையும் எற்­ப­டுத்­து­வ­தற்கு ஒரு சிலர் முனைப்­புடன் செயற்­பட்டு வரு­கின்­றனர்.

எனவே, சம்­பந்­தப்­பட்ட உரிய திணைக்களங்கள், அரச அதிகாரிகள் அங்கு வந்து தொல்பொருள் திணைக்களத்திற்குச் சொந்தமான காணியை முஸ்லிம்கள் சூறையாடியிருக்கிறார்களா? அல்லது தொல்பொருள் புராதனச்சின்னங்களை அழித்துள்ளார்களா என்ற உண்மையைக் கண்டறிந்து இந்த தேசத்திற்கும், மக்களுக்கும் உண்மையை எடுத்துக்கூற வேண்டும் என்றார்.

ரீ.கே.றஹ்­மத்­துல்லா

vidivelli

Leave A Reply

Your email address will not be published.