ஊழல்வாத அரசியலுக்கு இனியும் இடமில்லை

மாற்றமே எமது இலக்கு என்கிறார் ம.வி.மு. தலைவர் அநுர

0 663

வெறு­மனே ஆட்­சி­யாளர் தலை­களை மாற்­றிக்­கொண்டு வழ­மை­யான ஊழல்­வாத அர­சி­யலை செய்ய இனியும் இட­ம­ளிக்­க ­கூடாது. இந்த ஜனா­தி­பதி தேர்­தலில் மக்­களின் பலத்­தைக்­கொண்டு அடுத்த பொதுத் தேர்­தலில் அர­சியல் மாற்­ற­மொன்றை செய்­வதே எமது இலக்கு என தேசிய மக்கள் சக்­தியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் அனு­ர­கு­மார திசா­நா­யக தெரி­வித்தார்.

இந்த ஒரு முறை எமக்கு வாய்ப்­ப­ளித்துப் பாருங்கள். ஜன­நா­யக மாற்­றத்­தையும், அதேபோல் ஜனா­தி­ப­திகள் வச­மி­ருந்த மக்­களின் சொத்­துக்­களை மக்கள் மய­மாக்கிக் காட்­டு­கின்றோம் எனவும் அவர் வாக்­கு­றுதி வழங்­கினார்.
தேசிய மக்கள் சக்­தியின் அனு­ரா­த­புரம் மக்கள் சந்­திப்பில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றும்­போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார். அவர் அங்கு மேலும் கூறு­கையில்,

இன்று ஜனா­தி­பதி தேர்தல் ஒன்­றுக்­காக நாம் இயங்கி வரு­கின்றோம். இந்த தேர்தல் இந்த நாட்­டுக்­கான ஆட்­சி­யாளர் ஒரு­வ­ரையும் அர­சாங்கம் ஒன்­றி­னையும் உரு­வாக்கும் முக்­கிய தேர்­த­லாகும். ஜனா­தி­பதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் மிகவும் எதிர்­பார்ப்பு மிக்க தேர்­தல்­க­ளாகும். இதில் மக்கள் எதிர்­பார்ப்­புடன் ஆட்­சி­யா­ளர்­களை நிய­மித்து குறு­கிய காலத்தில் அர­சாங்­கத்­தையும் ஆட்­சி­யா­ளர்­க­ளையும் விமர்­சிக்க ஆரம்­பித்து விடு­வார்கள். இந்த விமர்­ச­னங்கள், குற்­றச்­சாட்­டுக்­களில் மாத்­திரம் ஆட்­சியை மாற்­றி­விட முடி­யாது. மாறாக மக்கள் சரி­யான மாற்­ற­மொன்றை உரு­வாக்க வேண்டும். மாற்­றத்தை உரு­வாக்கும் அதி­காரம் மக்­க­ளி­டமே உள்­ளது. ஐந்து ஆண்­டு­க­ளுக்கு ஒரு­முறை மக்­களின் அதி­கா­ரத்தை ஒரு குழு­வி­ன­ருக்கு வழங்­கு­கின்­றனர். இம்­முறை இந்த அதி­கா­ரத்தை யார் கைகளில் கொடுக்க வேண்டும் என்­பதை மக்­களே தீர்­மா­னிக்க வேண்டும்.

இன்று எமக்கு எவ்­வா­றான ஆட்சி வேண்டும் என்­பதை சிந்­திக்க வேண்டும். இந்­நாட்டில் ஏற்­பட்­டுள்ள வீழ்ச்­சி­யி­லி­ருந்து மீளும் ஆட்­சி­யொன்று வேண்டும். ஆகவே இத்­த­ருணம் மிகவும் முக்­கி­ய­மான தரு­ண­மாகும். இது­வரை கால­மாக மக்கள் உரு­வாக்­கிய ஆட்­சிகள் பல­வீ­ன­மான ஆட்­சிகள் என்­பது தொடர்ச்­சி­யாக உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. ஜன­நா­ய­கத்தை உரு­வாக்க கொண்­டு­வ­ரப்­பட்ட ஆட்­சி­யா­ளர்கள் முதலில் ஜன­நா­ய­கத்­தையே மீறி­னார்கள். அதேபோல் பொரு­ளா­தா­ரத்தை கட்­டி­யெ­ழுப்ப வந்­த­தாக கூறி­ய­வர்கள் செய்­த­தெல்லாம் கள­வு­களும் கொள்­ளை­க­ளுமே. ஜன­நா­யகம் என கூறி­ய­வர்கள் மூல­மாக வெள்­ளைவேன் கடத்தல், கொலைகள், குற்­றங்கள் அதி­க­ரித்­த­தையும் கடன்­களை வாங்கி நாட்டின் பொரு­ளா­தா­ரத்தை நாச­மாக்­கி­ய­துமே நில­வி­யது. இவ்­வாறு ஆட்­சியில் இருந்­த­வர்கள் மாறி மாறி தமது நாச­கார வேலை­யி­னையே செய்­தனர். ஒரு ஆட்­சி­யாளர் மீது நம்­பிக்கை வைத்து அவரை தெரிவு செய்­வதும் பின்னர் அவர் ஊழல்­வா­தி­யென அவரை மாற்­று­வ­து­மாக இதே சக்­க­ரமே சுழன்று கொண்­டுள்­ளது. இனி­யா­வது மக்கள் இதி­லி­ருந்து விடு­பட வேண்டும். இந்த சுழற்­சியை இந்த தேர்­த­லி­லா­வது நிறுத்­த­வேண்டும். இனியும் இந்த இரண்டு பிர­தான அணி­யையும் நம்பி வாக்­க­ளிக்க முடி­யு­மென நீங்கள் நினைக்­கின்­றீர்­களா? இனியும் இவர்­களில் எவ­ரையும் மக்­களால் நம்ப முடி­யாது.

இனியும் இவர்­களால் நாட்­டினை கட்­டி­யெ­ழுப்ப முடி­யாது. தனி நபர்­களை கொண்டு இந்த நாட்டை பலப்­ப­டுத்த முடி­யாது. ஒரு நாட்­டினை கட்­டி­யெ­ழுப்பு­வது என்­பது மாயா­ஜால வேலை­யல்ல. இந்த நாட்டை நேசிக்கும் நபர்கள் மூல­மா­கவே இந்­நாட்டைக் கட்­டி­யெ­ழுப்ப வேண்டும். மக்­க­ளுக்கு ஏற்­படும் கஷ்­டங்­களை தமக்கு ஏற்­படும் கஷ்­ட­மாக நினைத்து வேலை செய்யும் நபர்­களே இந்த நாட்டை முன்­னோக்கி கொண்­டு­செல்ல முடியும். ஆனால் இந்த ஆட்­சி­யா­ளர்கள் அவ்­வாறு மக்கள் குறித்து சிந்­திக்கும் ஆட்­சி­யா­ளர்கள் அல்ல. இவர்கள் தமது சுக­போக வாழ்க்­கையை மட்­டுமே சிந்­தித்து ஆட்சி செய்­கின்­றனர். ஆகவே மக்­க­ளுக்­கான அணி இன்று உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. தேசிய மக்கள் சக்­தி­யுடன் மக்கள் இணைய வேண்­டிய தருணம் வந்­துள்­ளது. இப்­போது எமக்­குள்ள நோக்கம் இந்த தேர்­தலை அடிப்­ப­டை­யாகக் கொண்டு அடுத்த பொதுத் தேர்­தலில் ஆட்சி மாற்­ற­மொன்று வேண்டும் என்­ப­தே­யாகும். தனி­ந­பரை மாற்றி எந்த நன்­மையும் கிடைக்­கப்­போ­வ­தில்லை. ஆகவே அடுத்த பொதுத் தேர்­தலில் ஆட்சி மாற்றமொன்றை உருவாக்குவதே எமது பிரதான நோக்கமாகும். இந்த தேர்தலில் மக்களின் எதிரிக்கும் மக்களின் நண்பனுக்கும் இடையிலான போட்டியே இடம்பெறுகின்றது. இதில் பெரிய எதிரி யார், சின்ன எதிரி யார் என்ற காரணம் எல்லாம் எடுபடாது. மாற்று அணியில் உள்ளவர்களே எதிரிகள். அவர்களுக்கு எதிராக நாம் களமிறங்கியுள்ளோம். இதில் மக்கள் யாரை ஆதரிப்பது என்பது மக்களே தீர்மானிக்க வேண்டும் என்றார்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.