கோத்தாவின் குடியுரிமை குறித்து விசாரணை

அமைச்சர் வஜிரவும் விசாரணைக்கு உள்ளாகும் சாத்தியம்

0 801

பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக அறி­விக்­கப்­பட்­டுள்ள முன்னாள் பாது­காப்பு செயலர் கோத்­தா­பய ராஜபக் ஷ, 2005 ஆம் ஆண்டு அமெ­ரிக்க பிர­ஜை­யாக இருந்த போது ஹம்­பாந்­தோட்டை – மெத­மு­லன வாக்­காளர் இடாப்பில் பெயர் உள்­வாங்­கப்­பட்ட விதம் மற்றும் தற்­போது அவர் இலங்கை கடவுச் சீட்­டொன்­றினை பெற்­றுக்­கொண்ட விதம் தொடர்பில் விசேட விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன. குற்றப் புல­னாய்வுப் பிரிவின் சிறப்புக் குழு­வொன்று இது தொடர்பில் விசா­ர­ணை­களை நடாத்­தி­வ­ரு­வ­தாக பொலிஸ் தலை­மை­யக தக­வல்கள் விடி­வெள்ளிக்குத் தெரி­வித்­தன.

பொலிஸ் தலை­மை­ய­கத்­துக்கு கிடைக்­கப்­பெற்­றுள்ள இரு­வேறு முறைப்­பா­டு­க­ளுக்­க­மைய இந்த விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன.

2005 ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்தல் இடம்­பெற்ற சமயம், கோத்­தா­பய ராஜபக் ஷ அமெ­ரிக்கப் பிர­ஜை­யாக இருந்­துள்ளார். எனினும் அவ­ரது பெயர் ஹம்­பாந்­தோட்டை மாவட்டம் – மெத­மு­லன வீட்டில் வசிப்­போரின் வாக்­காளர் பெயர் பட்­டி­யலில் இணைக்­கப்ப்ட்­டுள்­ளது. வெளி­நாட்டுப் பிரஜை ஒரு­வரின் பெயர் எவ்­வாறு வாக்­காளர் இடாப்பில் இடம்­பெற்­றது, அவர் அதன் கீழ் வாக்­க­ளித்­தாரா உள்­ளிட்ட விட­யங்­களை வெளிப்­ப­டுத்த சி.ஐ.டி.யின் சிறப்­புக்­குழு விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளது.

இது தொடர்பில் சில வாக்­கு­மூ­லங்­க­ளையும் பதிவு செய்­துள்ள சி.ஐ.டி., 2005 ஆம் ஆண்டு வாக்­காளர் இடாப்பு உள்­ளிட்ட ஆவ­ணங்­க­ளையும் பரி­சீ­லித்து வரு­கின்­றது.

இத­னி­டையே, கடந்த மே மாதம் கோத்­தா­பய ராஜபக் ஷவால், முறை­யற்ற விதத்தில் இரட்டை பிர­ஜா­வு­ரிமை தொடர்பில் குறிப்­பி­டப்­ப­டாத இலங்கை கடவுச் சீட்­டொன்­றினைப் பெற்றுக் கொண்­டுள்­ள­தாகக் கூறப்­படும் விவ­காரம் தொடர்பில் விசா­ர­ணைகள் தீவி­ரப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. இந்த விசா­ர­ணை­க­ளுக்குத் தேவை­யான பல்­வேறு ஆவ­ணங்­களை உட­ன­டி­யாகத் தம்­மிடம் கைய­ளிக்­கு­மாறு குற்றப் புல­னாய்வுப் பிரிவு குடி­வ­ரவு மற்றும் குடி­ய­கல்வு திணைக்­க­ளத்­திடம் கோரி­யுள்­ள­தக அறிய முடி­கின்­றது. எவ்­வா­றா­யினும், இரட்டை பிரஜா உரி­மையை அகற்­றிக்­கொண்­ட­தாக, இந்த இலங்கை கட­வுச்­சீட்டைப் பெற்­றுக்­கொள்­வ­தற்­காக கோத்­தா­பய ராஜபக் ஷவினால் ஆவ­ணங்கள் சில சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும், அதன் நம்­ப­கத்­தன்­மையை உறுதி செய்­து­கொள்­ளவும், மேல­திக தக­வல்­களை வெளிப்­ப­டுத்­தவும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தனவிடமும் விசாரணை செய்து விசேட வாக்கு மூலமொன்றைப் பதிவுசெய்ய சி.ஐ.டி. திட்டமிட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

அதன்படி இந்த இரு விடயங்கள் தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.