விடுபட்டுப் போகக் கூடாத விஷயங்களும் விட்டுக் கொடுக்கவே கூடாத விவகாரங்களும் – 08

மத அடிப்படைவாதம்

0 1,266

அடிப்­ப­டை­வாதம் என்­பது எப்­போதும் ஒரு மதக் கருத்­தி­ய­லா­கவே (Religious Connotation) பார்க்­கப்­ப­டு­கின்­றது. மதத்தின் சில நம்­பிக்­கைகள், கோட்­பா­டுகள் மீது நெகிழ்வோ விட்­டுக்­கொ­டுப்போ அற்ற இறுக்­க­மான பற்­று­தலைக் கொண்­டி­ருப்­ப­துதான் மத அடிப்­ப­டை­வாதம் எனப் பொது­வாகக் கரு­தப்­ப­டு­கின்­றது. மத அடிப்­ப­டை­களைப் புனி­தப்­ப­டுத்தல், பொருள் கோடல்­க­ளுக்கு இடம் வழங்­காமை என்­பன இத்­த­கைய அடிப்­ப­டை­வா­தத்தின் பண்­பு­க­ளாகும்.
வேறு­வ­கையில் விளக்­கு­வ­தாயின் கருத்­துப்­பன்­மையை அது நிரா­க­ரிக்­கின்­றது. ஆப்த வாக்­கிய (Text of Secret Book) த்திற்கு நவீன கால – இட பரி­மா­ணங்­க­ளுக்­கேற்ப வியாக்­கி­யானம் வழங்­கு­வதை அது கடு­மை­யாக எதிர்க்­கி­றது. எது அடிப்­ப­டையில் உள்­ளதோ அதை அவ்­வாறே பின்­பற்ற வேண்­டு­மென வாதி­டு­கின்­றது. புனித நூல்­களின் வாக்­கி­யங்­களை அதன் பின்­னணிச் சூழலில் (context) பார்க்க வேண்­டி­ய­தில்லை எனக் கோரு­கின்­றது.

George marsden என்­பவர் அடிப்­ப­டை­வா­தத்தைப் பின்­வ­ரு­மாறு வரை­வி­லக்­க­ணப்­ப­டுத்­து­கிறார். நவீன அல்­லது மித­வாதக் கொள்­கைக்கு எதி­ரான குறிப்­பிட்ட மதக் கோட்­பா­டு­களை இறுக்­க­மாகப் பின்­பற்ற வேண்­டு­மென்ற கோரிக்­கையே அடிப்­ப­டை­வாதம் எனப்­ப­டு­கி­றது. (The demand for a strict adherence to certain theological doctrines, in reaction against modernist theology)

கிறிஸ்­தவ அடிப்­ப­டை­வாதம்

பொது­வாக கிறிஸ்­த­வத்தின் ஐந்து பாரம்­ப­ரிய இறைமைக் கோட்­பாட்டு ஆத­ர­வா­ளர்­களே தொடக்­கத்தில் அடிப்­ப­டை­வா­திகள் என அழைக்­கப்­பட்­டனர். இவர்­க­ளது கடும்­போக்கும் நெகிழ்ச்­சி­யற்ற அணு­கு­மு­றை­க­ளாலும் விரக்­தி­ய­டைந்த நவீ­னத்­து­வ­வா­திகள், அத்­த­கை­யோரை கிறிஸ்­தவ அடிப்­ப­டை­வா­திகள் என அழைக்கத் தொடங்­கினர். 20 ஆம் நூற்­றாண்டின் ஆரம்­பத்தில் அமெ­ரிக்­காவில் புரட்­டஸ்­தாந்து மத சீர்­தி­ருத்­த­வா­தி­க­ளுக்கும் பாரம்­ப­ரிய ரோமன் கத்­தோ­லிக்­கர்­க­ளுக்கும் இடையில் ஏற்­பட்ட கருத்து வேறு­பா­டு­களின் பக்­க­வி­ளை­வு­களில் ஒன்றே மத அடிப்­ப­டை­வாதம் எனலாம். ஐக்­கிய அமெ­ரிக்­காவில் தோன்­றிய பிரஸ்­பி­ரே­றியன் (Presbyterian) கருத்­தி­யலே மத அடிப்­படை வாதத்தின் துவக்­கப்­புள்­ளி­யாகும்.

பிரஸ்­பி­ரே­றி­யன்கள் எனப்­படும் பழை­மை­வா­திகள் கிறிஸ்­தவ சமய மரபில் 19 ஆம் நூற்­றாண்டில் தோன்­றிய ஒரு முக்­கிய குழு­வி­ன­ராகக் கரு­தப்­ப­டு­கின்­றனர். பழை­மை­வா­தத்­திலும் பாரம்­ப­ரிய நம்­பிக்கை கோட்­பா­டு­க­ளிலும் ஊறிப்­போன இவர்­களே அடிப்­ப­டை­வாத சிந்­த­னையின் மூல­கர்த்­தாக்கள். பின்னர் Baptists களி­டையே காணப்­பட்ட பழை­மை­வா­தி­களும் பிரஸ்­பி­ரே­றி­யன்­களின் நிலைப்­பாட்­டிற்கு ஆத­ரவு வழங்­கினர். 1910 – 1920 க்கு இடைப்­பட்ட பத்­தாண்­டு­களில் கிறிஸ்­தவ மதத்தின் பல்­வேறு பிரி­வி­ன­ரி­டையே இந்­தக்­க­ருத்து பர­வி­யது. கிறிஸ்­த­வத்தின் அடிப்­படைப் போத­னை­களை அசகு பிச­கின்றி அட்­சரம் தப்­பாமல் பாது­காப்­பதே அதன் நோக்கம் என்று மேற்­கொள்­ளப்­பட்ட பிர­சா­ரத்தால் பலரும் அதனை ஆத­ரித்­தனர்.

1920களில் அமெ­ரிக்­காவில் தோன்­றிய பழை­மை­வாய்ந்த, ஆனால் புரட்­சி­கர புரட்­டஸ்­தாந்து இயக்­கத்தைக் குறிக்கப் பயன்­ப­டுத்­தப்­பட்ட பதமே அடிப்­ப­டை­வா­த­மாகும். இரு­பதாம் நூற்­றாண்டின் முதல் பகு­தியில் அமெ­ரிக்­காவின் புரட்­டஸ்­தாந்துப் பிரிவைச் சேர்ந்த கிறிஸ்­தவ திருச்­ச­பை­வா­திகள் நவீ­னத்­துவ வாதிகள் (Modernist) என்றும் பழை­மை­வா­திகள் (Orthodox) என்றும் இரு கூறு­க­ளாகப் பிள­வு­பட்­டனர்.

நவீ­னத்­து­வ­வா­திகள் பைபிளை நவீன கால தேவைக்கும் இடப் பரி­மா­ணத்­திற்­கு­மேற்ப (Time and space factors) விளக்­கு­வ­தற்கு முயற்­சித்த அதே­வேளை, பழை­மை­வா­தி­களோ விவி­லி­யத்தின் கருத்­து­களை உள்­ளது உள்­ள­வாறு எவ்­வித நவீன விளக்­க­மு­மின்றி விசு­வா­சிக்க வேண்­டு­மென்­பதில் விடாப்­பி­டி­யாக இருந்­தனர். இவர்­க­ளது கருத்­துக்கள் நவீ­னத்­து­வ­வா­தி­களின் கருத்­துக்­க­ளுக்கு எதி­ராக முன்­வைக்­கப்­பட்­டன. 1920களில் இப்­ப­ழை­மை­வா­தி­களே அடிப்­ப­டை­வா­திகள் என அழைக்­கப்­பட்­டனர். இங்­கி­ருந்­துதான் இச்­சொல்­லாடல் முதன் முறை­யாக ஊட­கங்­க­ளுக்கு வந்­தது.

சுருக்­கப்­பட்ட ஒக்ஸ்போர்ட் அக­ராதி (Shorter oxford dictionary) அடிப்­ப­டை­வாதம் என்ற சொல்­லுக்கு இவ்­வாறு வரை­வி­லக்­கணம் தரு­கி­றது. கிறிஸ்­தவ வாச­கத்தின் (Bible Text) அடிப்­ப­டை­யான பழை­மை­யான பாரம்­ப­ரியக் கொள்­கை­களை ஏற்­றுக்­கொண்டு பின்­பற்­றுதல் (Strict Adherence to Traditional orthodox tenants held to be fundamental to Christian faith)

அடிப்­ப­டை­வாதம் என்­பது மித­வாதம், நவீ­னத்­துவம் ஆகி­ய­வற்­றுக்கு எதி­ரா­ன­வை­யென இவ்­வ­க­ராதி கூறு­கின்­றது. 1919 இல் உலக கிறிஸ்­தவ அடிப்­ப­டை­வாத சங்கம் (world Christian fundamentalist Associations) மிகவும் பலம்­பெற்று விளங்­கி­யது. அப்­போ­தெல்லாம் அடிப்­ப­டை­வாதம் என்ற பதம் கிறிஸ்­தவ மதத்தின் அடிப்­ப­டை­க­ளுக்­காகப் போரா­டு­ப­வரைக் குறித்­தது. 1920களில் சார்ல்ஸ் டார்­வினின் பரி­ணா­மக்­கொள்கை பள்­ளிக்­கூ­டங்­களில் போதிக்­கப்­ப­டு­வதை இவ்­வ­டிப்­படை வாதிகள் கடு­மை­யாக எதிர்த்து வந்­தனர்.

எனினும், 1920 களுக்குப் பின்னர் கிறிஸ்­தவ அடிப்­படை வாதத்தின் செல்­வாக்கு மேற்­கு­லகில் படிப்­ப­டி­யாக இழக்கத் துவங்­கி­யது. அதே­வேளை, வளர்ந்து வரும் இஸ்­லா­மிய அர­சியல் விழிப்­பையும் ஜன­நா­யக எழுச்­சி­யையும் குறிப்­ப­தற்கு இச்­சொல்­லாடல் முஸ்லிம் உல­கிற்கு எதி­ராகப் பயன்­பாட்­டுக்கு வந்­தது.

எவ்­வா­றா­யினும் மேலைத்­தேய உலகில் தோன்­றிய கிறிஸ்­தவ அடிப்­ப­டை­வாதம் 19 ஆம் நூற்­றாண்டின் பின்­னரைக் கூறு­க­ளி­லி­ருந்து வேக­மாக வளர்ந்து வந்­துள்­ளதைத் தெளி­வாக அவ­தா­னிக்­கலாம். 1878 – 1897 வரை­யான காலப்­பி­ரிவில் நடை­பெற்ற நயா­கரா விவி­லிய மாநாட்­டி­லேயே (Niagara Bible Conference) அடிப்­ப­டை­வாதம் என்ற சொல் முதலில் கையா­ளப்­பட்­ட­தாகக் கூறப்­ப­டு­கின்­றது. அம்­மா­நாடே கிறிஸ்­தவ சம­யத்தின் அடிப்­ப­டை­வாதப் போத­னைகள் எவை என்­பதை வரை­யறை செய்து பிர­க­ட­னப்­ப­டுத்­தி­யமை கவ­னத்­திற்­கு­ரி­யது. 1910 இல் அத்­த­கைய 05 அடிப்­ப­டைகள் குறித்த 12 தொகுப்பு நூல்கள் வெளி­யி­டப்­பட்­டன. அதற்கு Milton மற்றும் Layman Stewart ஆகிய சகோ­த­ரர்கள் நிதி­யா­த­ரவு வழங்­கினர்.

அமெ­ரிக்­காவின் வடக்கு திருச்­சபை (தற்­போது இது அமெரிக்க பெப்டிஸ்ட் திருச்­சபை) இக்­கா­லத்தில் அடிப்­ப­டை­வா­தத்­திற்குப் பெயர் போனவை. அத்­தி­ருச்­ச­பையைச் சேர்ந்த மத­கு­ருக்கள் அடிப்­ப­டை­வா­திகள் எனப்­பட்­டனர். 19 ஆம் நூற்­றாண்டின் இறு­தியில் இது கிறிஸ்­தவ உலகில் மிகப்­பெரும் சர்ச்­சை­களை உரு­வாக்­கி­யது. ஏற்­க­னவே நாம் குறிப்­பிட்ட பிரஸ்­பி­றே­ரிய பிரி­வினர் வகுத்­தி­ருந்த 05 அடிப்­ப­டைகள் இக்­கா­லத்தில் கூர்­மை­யான விவா­தத்­திற்கு உட்­பட்­டன.

அடிப்­ப­டை­வா­திகள் எனக் கரு­தப்­பட்டோர் வகுத்த அந்த 5 அடிப்­ப­டை­களும் பின்­வ­ரு­மாறு அமைந்­தி­ருந்­தன.

1.விவி­லிய, புனித ஆப்த வாக்­கி­யங்கள் தவ­று­க­ளுக்கு உட்­ப­டா­தவை.

2. இயே­சுவின் கன்னிப் பிறப்பு

3. இயேசு இறந்தார் என நம்­பு­வது பாவ­மாகும்.

4. இயேசு மீண்டும் உடல் ரீதியில் உயிர்த்­தெ­ழுவார்.

5. இயேசு வெளிப்படுத்திய அற்புதங்கள் உண்மையானவை.

1910களில் இந்த ஐந்து அடிப்­படை அம்­சங்­க­ளையும் விவா­தித்­த­வர்­களும் அவற்றை ஆணித்­த­ர­மாக வலி­யு­றுத்­தி­ய­வர்­களும் அடிப்­ப­டை­வா­திகள் என அறி­யப்­பட்­டனர். இதுவே கிறிஸ்­தவ உலகில் அடிப்­ப­டை­வாதம் தோன்றி வளர்ந்த பின்­ன­ணி­யாகும். 1979 ஈரா­னியப் புரட்­சியைத் தொடர்ந்து அர­சியல் இஸ்­லாத்தை (Political Islam) குறிப்­ப­தற்கும் அது பற்­றிய ஒரு பீதியை (Phobia) உல­க­ளவில் உரு­வாக்­கு­வ­தற்கும் “இஸ்­லா­மிய” எனும் அடை­மொ­ழி­யுடன் இந்த சொல் ஊடகப் பயன்­பாட்­டுக்கு வந்­தது.

யூத அடிப்­ப­டை­வாதம்

மத அடிப்­ப­டை­வாதம் குறித்த புல­மைத்­துவ விவா­தங்­களில் இஸ்­லா­மிய கிறிஸ்­தவ மதங்கள் மட்­டு­மின்றி யூத மதமும் தொடர்­பு­று­வதை அவ­தா­னிக்­கலாம். வர­லாற்று ரீதியில் யூதம் கிறிஸ்­த­வத்­திற்கு முன்­னை­ய­தா­கவே கரு­தப்­ப­டு­கின்­றது. எனினும் கிறிஸ்­தவ அடிப்­ப­டை­வாதம் என்­பது மதக்­கொள்­கை­களை மித­வாத/ நவீன வியாக்­கி­யா­னங்­க­ளின்றி பற்­றி­யொ­ழு­கு­தலைக் குறித்­து­நிற்க, யூத மத அடிப்­ப­டை­வாதம் முற்­றிலும் அர­சியல் மயப்­பட்­டி­ருப்­பதை வர­லாற்­றாய்­வா­ளர்கள் எடுத்­து­ரைப்பர்.

யூதர்­க­ளுக்கு மூஸா நபி மூலம் அரு­ளப்­பட்ட தூய தௌறாத் மற்றும் அதன் தொடர்ச்­சி­யாக வந்த இன்ஜீல் என்­ப­வற்­றின்­படி, யூதர்­க­ளுக்குத் தனித்து வாழும் ஒரு தேசம் கிடை­யாது. பூமியின் பல்­வேறு பகு­தி­க­ளிலும் அவர்கள் சித­ற­டிக்­கப்­பட்­டி­ருப்­பது இறை­வனின் விதி­யாகும். எனினும் 19 ஆம் நூற்­றாண்டின் நடுப்­ப­கு­தி­யி­லி­ருந்து யூதர்கள் தமக்­கொரு நாடு அவ­சி­ய­மென்று அர­சியல் வேண்­டு­கோ­ளுடன் செயற்­படத் துவங்­கினர். ஹேர்ஸல் என்­பவர் இத்­த­கைய யூத இனத் தேசி­யத்தைக் கட்­டி­யெ­ழுப்­பினார். அதற்­கான பெரும் பிர­சா­ரங்கள் ஐரோப்­பாவில் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. இது ஸியோ­னிஸம் எனும் ஓர் அர­சியல் கோட்­பா­டாக வளர்ச்­சி­யுற்­றது.

ஸியோ­னிஸம் பலஸ்­தீனில் அர­பு­க­ளுக்கு சொந்­த­மான நிலத்தை ஆக்­கி­ர­மித்து ஒரு நாட்டைப் பிர­க­டனம் செய்யும் நிலைக்கு வளர்ச்­சி­யுற்­றது. இத்­த­கைய இனத்­தே­சியம் 20 ஆம் நூற்­றாண்டில் தொடக்கக் கூறு­களில் இரா­ணுவ வடிவம் பெற்­றது. இந்த இரா­ணுவ வடிவம் கொண்ட அர­சியல் கோட்­பாடு யூத அடிப்­ப­டை­வாதம் (Jews Fundamentalism) எனப் பொது­வாக அழைக்­கப்­ப­டு­கி­றது.

இந்­தி­யாவில் “அகன்ற பாரதம்” மற்றும் “இந்து இந்­தியா” என்ற கோஷங்­க­ளோடு மேலெ­ழுந்த கருத்­தியல் இந்­துத்­துவா எனப்­ப­டு­கின்­றது. கடந்த 200 ஆண்­டு­க­ளுக்கு மேலாக மதச்­சார்­பற்ற இந்­தி­யாவை ஒரு இந்து மத­வாத நாடாக மாற்ற முயலும் RSS (ராஸ்­தி­ரிய சிவ­சேன சங்), விஸ்வ ஹிந்து பரிசத் (VHP), பஜ்­ரங்தள் என்­ப­வற்றின் வழி­யாக வளர்ச்­சி­ய­டைந்து வந்த BJP இன்று இந்­தி­யாவின் ஆட்சி பீடத்தைக் கைப்­பற்­றி­யுள்­ளது. இந்­தி­யாவின் மதச் சார்­பின்­மைக்கு மிகப்­பெரும் சவா­லாக மாறி­யுள்ள இத்­த­கைய இந்­துத்­துவக் கொள்கை இந்­துத்­துவ அடிப்­ப­டை­வா­த­மா­கவே பார்க்­கப்­ப­டு­கின்­றது. ஆக, அர­சி­யலை இந்­து­மதக் கோட்­பா­டு­க­ளுடன் இணைக்­கும்­போது ஒரு பெரிய வாக்கு வங்­கியைத் தக்­க­வைக்க முடி­யு­மென்ற கொள்­கை­யோடு இந்து அடிப்­ப­டை­வாதம் செயற்­ப­டு­வ­தாக அ.மாக்ஸ், அருந்­ததி ராய் போன்­ற­வர்கள் குறிப்­பி­டு­கின்­றனர்.

மியன்­மாரின் அர­சியல் காட்­சிகள் பௌத்த மதத்தை முன்­னி­றுத்­தியே அரங்­கேற்­றப்­ப­டு­வதால் அடிப்­ப­டை­வாதம் அந்த மதத்­துடன் தொடர்­புற்­றுள்­ள­தாக அடிப்­ப­டை­வாதம் குறித்த ஆய்­வா­ளர்கள் கரு­து­கின்­றனர். எடுத்­துக்­காட்­டாக மதத் தலை­வர்கள் மதத்தின் பெயரால் வன்­மு­றை­களைத் தூண்­டு­வதும் அடிப்­ப­டை­வா­தமே என இத்­த­கைய அர­சியல் ஆய்­வா­ளர்கள் வாதிக்­கின்­றனர். மியன்­மாரில் கடந்த சில ஆண்­டு­க­ளாக 969 –இயக்கம் விராது என்ற மத­கு­ரு­வினால் ஸ்தாபிக்­கப்­பட்டு வழி­ந­டத்­தப்­பட்­டது. இவ­ரது வெறுப்புப் பேச்சும், பிர­சா­ரமும் ரோஹிங்ய முஸ்லிம் சிறு­பான்மை மக்­க­ளுக்­கெ­தி­ரான வன்­மு­றையைத் தூண்­டி­ய­தாகக் குற்றம் சுமத்­தப்­ப­டு­கின்­றது. இதுவும் ஒரு­வகை அடிப்­ப­டை­வா­தமே என ஆய்­வா­ளர்கள் தெரி­விக்­கின்­றனர்.

சம­கா­லத்தில் அடிப்­ப­டை­வாதம் குறித்து இன்­னொரு சுவா­ரஷ்­ய­மான விவாதம் மேற்­கி­ளம்­பி­யுள்­ளது. அதாவது, அடிப்படைவாதம் எப்போதும் மதநிலைப்பட்டதாக (Religious) மட்டுமே இருக்க வேண்டும் என்பதில்லை. மாறாக, மதம் சாரா கருத்தியல்களும் (Non–Religious Ideologies) அடிப்படைவாதமாக இருக்கலாம் அல்லது மாறலாம் என்ற ஒரு கருத்து இப்போது காரசாரமாக விவாதிக்கப்படுகின்றது. அத்தகைய அடிப்படைவாதம் பொதுவாக மதச்சார்பற்ற அடிப்படைவாதம் (Secular Fundamentalism) என அழைக்கப்படுகின்றது.

“ஒரு கொள்கையோ கோட்பாடோ சமூகத்திற்கும் மக்களுக்கும் எதிராகத் தீவிரமாகப் பிரயோகிக்கப்படுமானால் அது அடிப்படைவாதமே. தீவிரவாதம் என்பது மதங்களுக்கு மட்டும் உரியதல்ல” என்று வாதிடுவதே இப்புதிய பார்வையாகும். உதாரணமாக முதலாளித்துவம் (Capitalism) அதன் உச்சநிலையில் இன்று உருவாக்கியுள்ள ஒரு அடிப்படைவாதத்தை Market Fundamentalism என புதிய கோட்பாட்டாளர்கள் வாதிக்கின்றனர்.

அறிவியல் தொழில்நுட்பம் கூட எல்லைமீறி வளர்ச்சியுற்று மனித நலன்களுக்கெதிராக அவை பிரயோகிக்கப்படும் பட்சத்தில் அவைகூட அடிப்படைவாதம் என்ற நிலைக்குத் திரும்புவதாக இவர்கள் வாதாடுகின்றனர். ஆக, அடிப்படைவாதம் என்பது ஒரு பக்கத் தீவிரம் அல்லது ஒரு எல்லை கடந்த நிலை என்ற ஒரு விரிந்த அர்த்தத்தில் இன்று விவாதிக்கப்படுகின்றது. எல்லா அடிப்படைவாதங்களினதும் விளைவு ஒன்றே. அது அழிவு அல்லது மிகப்பெரிய இழப்பு அவ்வளவுதான்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.