பௌத்த விகாரைகளுக்கு மட்டும் நிதி ஒதுக்கி வருகிறீர்

ஏனைய மதங்களை அவமானப்படுத்தாதீர் என்கிறார் வாசு

0 1,480

பெளத்த விகா­ரைகளுக்கு மட்டும் நிதி ஒதுக்­கப்­பட்டு அபி­வி­ருத்­திகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. அப்­ப­டி­யல்­லாது ஏனைய மத அபி­வி­ருத்­தி­க­ளுக்கும் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். நல்­லி­ணக்கம் என்­பது இரண்டு தரப்­பி­னரின் ஒத்­து­ழைப்­போடு உரு­வாக்­கப்­ப­டு­வ­தாகும் என அமைச்சர் சஜித் பிரே­ம­தாச மீது சபையில் வாசு­தேவ எம்.பி. சாடினார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை மத்­திய கலா­சார நிதியம் தொடர்­பி­லான விவாதம் இடம்­பெற்ற வேளையில் அது தொடர்­பி­லான விவா­தத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றிய எதிர்க்­கட்சி உறுப்­பினர் வாசு­தேவ நாண­யக்­கார, “மத நல்­லி­ணக்கம் என்­பது வெறு­மனே ஒரு தரப்பை பலப்­ப­டுத்­து­வதைக் கொண்டு கையாள முடி­யாது. பெளத்த விகா­ரைகள் குறித்து மட்டும் அல்­லாது ஏனைய மத அபி­வி­ருத்­தி­க­ளுக்கும் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். நல்­லி­ணக்கம் என்­பது இரண்டு தரப்­பி­னரின் ஒத்­து­ழைப்­போடு உரு­வாக்­கப்­ப­டு­வ­தாகும். பொது இணக்­கப்­பாடு எட்­டப்­பட வேண்டும். ஆனால் அதில்தான் சிக்­கலே உள்­ளது. உரிமை கூறும் தன்­மை­யில்தான் பிரச்­சினை எழு­கின்­றது. ஆனால் அத­னையும் தாண்டி நல்­லி­ணக்­கத்தை உரு­வாக்க வேண்டும் என்றே நாமும் கூறு­கின்றோம்” என்றார். 

இதனை அடுத்து அமைச்சர் சஜித்துக்கும் வாசு­தேவ எம்.பிக்கும் இடையில் வாத பிர­தி­வாதம் உரு­வா­கி­யது.

சஜித்:- உரிமை கோரலில் எந்தப் பிரச்­சி­னை­களும் இல்லை, மத அபி­வி­ருத்­திகள் நல்­லி­ணக்க அடிப்­ப­டையில் முன்­னெ­டுக்­கவே முயற்­சி­களை எடுக்­கின்றோம்.

வாசு­தேவ:- ஆனால் ஒரு மதத்­த­வ­ருக்கு செய்யும் நட­வ­டிக்கை இன்­னொரு மதத்­த­வ­ருக்கு அவ­மா­ன­மாக கரு­தப்­படும் என்றே நான் கூறு­கின்றேன்.

சஜித்:- அது உண்­மையே. விகா­ரைகள் எவ்­வாறு அபி­வி­ருத்தி செய்­யப்­ப­டுமோ அதேபோல் கடந்த காலங்­களில் நாச­மாக்­கப்­பட்ட இஸ்­லா­மிய பள்­ளி­வா­சல்­களும் அபி­வி­ருத்தி செய்­யப்­படும். கம்­பஹா, கண்டி, குரு­நாகல் மாவட்­டங்­களில் நாச­மாக்­கப்­பட்ட சகல பள்­ளி­வா­சல்­களும் திருத்­தப்­படும். புத்­த­சா­ச­னத்­துக்கு கொடுக்கும் அதே முக்­கி­யத்­து­வத்தை ஏனைய மதங்­க­ளுக்கும் கொடுத்து அனை­வ­ரையும் பாது­காக்­கவே நாம் நட­வ­டிக்கை எடுக்­கின்றோம்.

வாசு­தேவ :- இன­வாதம், மத­வா­தத்தை தூண்டும் தேவை யாருக்கு உள்­ளது. நாட்டில் மக்கள் மத்­தியில் பிள­வு­களை ஏற்­ப­டுத்தும் நபர்­க­ளுக்கே இந்த தேவை உள்­ளது. ஆனால் எமக்கு அவ்­வா­றான எந்­த­வொரு நோக்­கமும் இல்லை.

சஜித்:- நீங்கள் அவ்­வாறு செயற்­படும் நப­ரல்ல. ஆனால் உங்­களின் அணியின் கண்­ணா­டியில் சென்று பார்த்தால் அவ்­வாறு செயற்­ப­டு­வது யாரென்று தெரியும்.

வாசு­தேவ :- மக்­களின் எண்­ணங்­களில் மாற்­றங்கள், தன்­மை­களில் மாற்­றங்கள், உணர்­வு­களில் பார­மான மாற்­றங்கள் இருக்க முடியும். ஐக்­கிய தேசிய கட்சி 1958இலும் அதேபோல் 1983 ஆம் ஆண்­டிலும் கல­வ­ரங்­களை செய்து இன­வாத, மத­வாத குழப்­பங்­களை ஏற்­ப­டுத்தும் தலை­வர்­களை கொண்ட கட்சி. இந்த குற்­றத்தை எமது பக்கம் சுமத்த முயற்­சிப்­ப­தென்றால் அதனை ஆத­ாரங்­க­ளுடன் கூற­வேண்டும். எமது பக்கம் இன­வாதம் பரப்பும் தலை­வர்கள் இல்லை. பண்டா -– செல்­வ­நா­யகம் உடன்­ப­டிக்­கைக்கு எதி­ராக ஜே.ஆர்.ஜய­வர்­தன செயற்­பட்­டதை நீங்கள் மறந்­தி­ருக்க முடியும். 1983 ஆம் ஆண்டு சிறில் மத்­தியூ வீதியில் இறங்கி தமிழ் மக்­க­ளுக்கு எதி­ராக கல­வரம் செய்­ததை நீங்கள் மறந்­தி­ருக்க முடியும். இதெல்லாம் நீங்கள் மறந்­தி­ருக்க முடியும். ஆனால் எமக்கு இன­வாத, மத­வாத பிள­வுகள் தேவை­யில்லை. வேலை செய்யும் மக்­களை ஒன்­றி­ணைக்க வேண்டும் என்­பதே எமது நோக்கம். பண்­டா­ர­நா­யக்க -– செல்­வ­நா­யகம் உடன்­ப­டிக்­கையை அன்று எதிர்த்­ததே ஐக்­கிய தேசிய கட்­சிதான் . ஆத­ரங்­க­ளுடன் நாம் கூறு­கின்றோம், ஆனால் ஆதாரம் இல்­லாத கருத்­துக்­களை நீங்கள் கூறு­கின்­றீர்கள் என்றார்.

இதனை அடுத்து ஐக்­கிய தேசிய கட்­சியின் உறுப்­பி­னர்கள் வாசு­தேவ எம்.பிக்கு எதி­ராகக் குரல் எழுப்­பினர். எனினும் அவர்­களின் கருத்­துக்­களை நிரா­க­ரித்த வாசு­தேவ எம்.பி, சஜித் பிரே­ம­தாச ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக கள­மி­றங்­கு­வது குறித்தே இன்று பாரா­ளு­மன்­றத்தில் விவாதம் இடம்­பெற்று வரு­கின்­றது. சஜித் ஜனா­தி­பதி வேட்பாளரானால் நான் அவருக்கு எதிராகவே செயற்படுவேன். ஆனால் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வேன். ஏனென்றால் எமக்கு தேர்தலில் போட்டியிட புதிய எதிராளி ஒருவருடன் நாம் போட்டியிடுவோம். அதில் எம்மால் இருக்கும் நிலைமைக்கு அப்பால் உறுதியாக வெற்றியொன்றை பெற்றுக்கொள்ளும் போராட்டத்தை முன்னெடுக்க முடியும். அப்படி நான் நினைக்கின்றேன் எனவும் குறிப்பிட்டார்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.