சாய்ந்தமருது போன்று போராட வேண்டிய நிலைக்கு பொத்துவில் தள்ளப்படலாம்

பொத்துவில் பிரதேச சபைத் தவிசாளர் எம்.எஸ். அப்துல் வாஸீத்

0 1,626

Q உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின் பொத்துவில் பிரதேச சுற்­று­லாத்­துறை எவ்­வா­றான நிலையில் உள்­ளது?

பொத்­துவில் பிர­தே­சத்தில் அறு­கம்பை உல­க­ளா­விய ரீதியில் நீர்ச்­ச­றுக்கல் போட்­டிக்கு பெயர்­பெற்ற இட­மாகக் கரு­தப்­ப­டு­கின்­றது. வரு­டாந்தம் இப்­பி­ர­தே­சத்தில் சர்­வ­தேச ரீதி­யான நீர்ச்­ச­றுக்கல் போட்டி நடை­பெ­று­வது வழக்கம். ஜுலை மாதம் இப்­போட்­டியை நடத்­து­வ­தற்­கான ஏற்­பா­டுகள் இருந்­த­போ­திலும் இத் தாக்­கு­தலின் கார­ண­மாக அதை செய்­து­கொள்ள முடி­யாமல் செப்­டம்பர் 21 ஆம் திக­திக்கு மாற்­றி­யி­ருக்­கிறோம். அறு­கம்பை பிர­தே­சத்தில் 200க்கும் அதி­க­மான பதிவு செய்­யப்­பட்ட ஹோட்­டல்கள் காணப்­ப­டு­கின்­றன. உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலைத் தொடர்ந்து இரண்டு மாதங்­க­ளாக அறு­கம்பை பிர­தே­சத்தில் எந்­த­வொரு வரு­மா­னமும் இல்­லாத நிலைதான் காணப்­பட்­டது. ஹோட்­டல்கள், ஹோம் ஸ்டே, முச்­சக்­கர வண்­டிகள், பிர­தேச சபைக்­கான வரு­மானம் என அனைத்­திலும் 100 வீத­மான தாக்­கங்கள் இதனால் ஏற்­பட்­டி­ருந்­தன. கடந்த இரண்டு வாரங்­க­ளாக எமது பிர­தே­சத்­துக்கு சுற்­றுலா பய­ணி­களின் வருகை அதி­க­ரித்து வரு­கின்­றது. தற்­போது சுற்­றுலாத் துறை­யோடு சார்ந்து தொழில் புரி­கின்ற முயற்­சி­யா­ளர்கள் பொரு­ளா­தாரப் பிரச்­சி­னை­யி­லி­ருந்து மெல்ல மெல்ல மீண்டு வரு­கி­றார்கள். நாட்டில் சுமு­க­மான நிலை ஏற்­பட்­டுள்­ளதால் சுற்­றுலா துறை­யி­னரின் வருகை மேலும் அதி­க­ரிக்கும். அத­னூ­டாக நாட்­டுக்கு அந்நிய செலா­வணி வரு­மானம் உயர்ச்­சி­ய­டையும் என்று நம்­பு­கிறோம். ஆனாலும் அடிப்­ப­டைப்­பி­ரச்­சி­னைகள் பல உள்­ளன. அவைதான் தொழிற்­று­றை­களைப் பாதிக்­கின்­றன.

Q பொத்­துவில் பிர­தேச சபையில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்­புக்கும் – முஸ்லிம் காங்­கி­ர­ஸிற்கும் இடையில் எவ்­வா­றான உறவு காணப்­ப­டு­கின்­றது?

கடந்த ஆண்டு புதிய முறையில் நடை­பெற்ற உள்­ளூ­ராட்சி தேர்­தலில் எங்­க­ளது கட்­சிக்கு 6 ஆச­னங்கள் கிடைக்கப் பெற்­றி­ருந்­தாலும் புரிந்­து­ணர்­வி­னு­ட­னான பேச்­சு­வார்த்­தையின் அடிப்­ப­டையில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு உதவித் தவி­சா­ள­ரையும் எங்­க­ளது கட்­சி­யான முஸ்லிம் காங்­கி­ர­ஸுக்கு தவி­சா­ள­ரையும் பெற்­றி­ருக்­கின்றோம். குறிப்­பாக என்னைத் தெரிவு செய்த மக்­களுள் தமிழ் மக்­களும் கணி­ச­மா­ன­ளவு வாக்­க­ளித்­துள்­ளார்கள். தமிழ் மக்­க­ளி­னு­டைய தேவை­களை பரி­பூ­ர­ண­மாக பூர்த்தி செய்­வதில் தவி­சாளர் என்ற அடிப்­ப­டையில் நான் முன்­னு­தா­ர­ண­மாகத் திகழ்­கின்றேன். தமிழ் மக்­க­ளுக்கு அபி­வி­ருத்­தி­க­ளையும், சேவை­க­ளையும் வழங்­கு­வதில் சரி­யான சம­மான வாய்ப்­புகள் இந்த சபை­யினால் அவர்­க­ளுக்கு வழங்­கப்­ப­டு­கின்­றன என்­பதை உறு­தி­படக் கூறு­கின்றேன். இது­வரை எமது பிர­தே­சத்தில் அவர்­க­ளுக்கும் எங்­க­ளுக்கும் கட்சி அர­சி­யலில் எந்­த­வி­த­மான முரண்­பா­டு­களும் ஏற்­ப­ட­வில்லை.

Q அண்­மைக்­கா­ல­மாக நாட்டில் இன முரண்­பா­டுகள் அதிகரித்துள்ளன. பொத்­துவில் பிர­தே­சத்தைப் பொறுத்­த­வ­ரையில் மூவின மக்­களும் வாழ்ந்து கொண்­டி­ருக்­கின்­றனர். இந்­நி­லையில் தொடர்ந்தும் இப்­பி­ர­தே­சத்தில் சக­வாழ்வைப் பேணு­வ­தற்கு உங்­க­ளு­டைய சபை­யினால் எவ்­வா­றான நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன?

எனக்குத் தெரிந்­த­ளவில் கடந்த 1990 ஆம் ஆண்டு யுத்த காலத்­திலும், 2004 ஆம் ஆண்டு சுனாமி அனர்த்­தத்­திலும், ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்­குதல் சம்­பவம் போன்ற பிரச்­சி­னை­களின் போதும் பொத்­து­வி­லி­லுள்ள மூவின மக்­களும் சௌஜன்­யத்­தோடும் ஒற்­று­மை­யோடும் வாழ்ந்து கொண்­டி­ருக்­கின்றோம். எமக்கு அர­சியல் அதி­கா­ர­மாக ஒரு பிர­தேச சபை மாத்­திரம் இருந்­திட்­ட­போ­திலும் அண்­மையில் நடை­பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் சம்­ப­வத்தின் போதும் பாது­காப்பு தரப்பின் பல்­வேறு மட்­டங்­க­ளுடன் ஏற்­ப­டுத்திக் கொண்ட நல்­லு­றவின் அடிப்­ப­டையில் எங்­க­ளது பிர­தே­சத்தில் எந்­த­வி­த­மான பிரச்­சி­னை­களும் ஏற்­ப­ட­வில்லை. அந்த வகையில் பாது­காப்புத் தரப்­பி­ன­ருக்கு நாங்கள் நன்றி கூறக் கடமைப் பட்­டி­ருக்­கின்றோம்.

இங்­குள்ள மூவின மக்­களும் நாட்டின் நிலை­மை­களை புரிந்­து­கொண்டு ஒற்­று­மை­யாக வாழ­வேண்டும் என்ற எதிர்­பார்ப்­புடன் இருந்து கொண்­டி­ருக்­கின்ற நிலையில் வெளி­யி­லி­ருந்து வரு­கின்ற சில­ரினால் குழப்­பங்கள் ஏற்­ப­டுத்த முயற்­சிக்கப் பட்­டாலும் கோமாரி இரா­ணுவ முகாமின் படை­யினர் இந்தப் பிர­தே­சத்தில் எவ்­வித அசம்­பா­வி­தங்­களும் ஏற்­பட்­டு­விடக் கூடாது என்­பதில் உறு­தி­யாக இருந்­த­மை­யினால் இப்­பி­ர­தே­சத்தில் எது­வி­த­மான பிரச்­சி­னை­களும் எழாமல் தவிர்க்­கப்­பட்­டது. நாங்கள் தொடர்ந்தும் அரச அதி­கா­ரிகள், பாது­காப்பு தரப்­பினர், மும்­மதத் தலை­வர்கள் என எல்­லோ­ரையும் சபை­யிலும் அழைத்து கலந்­து­ரை­யா­டல்­களை செய்து எமது பிர­தே­சத்தில் எவ்­வி­த­மான முரண்­பா­டு­களும் வராமல் பாதுகாக்க முயற்சி செய்து கொண்­டி­ருக்­கின்றோம்.

Q பொத்­துவில் பிர­தே­சத்­துக்கு கிடைக்­கப்­பெறும் வரு­மான வழி­களில் சுற்­று­லாவும் மிக முக்­கி­ய­மான வழி­யாகக் காணப்­ப­டு­கின்­றது. இத்­து­றையை மேம்­ப­டுத்­து­வ­தற்கு பொத்­துவில் பிர­தேச சபையின் பங்­க­ளிப்பு எவ்­வாறு உள்­ளது?

சுற்­று­லாத்­து­றையில் அனு­ம­திக்­கப்­பட்ட வரு­மா­னங்­களை பெறக் கூடி­ய­தாக இருந்­தாலும் அண்­மையில் நடந்த அசம்­பா­வி­தங்­களைப் போன்று சில சம்­ப­வங்கள் இடம்­பெ­று­கின்ற போது வரு­மா­னங்­களில் தாக்­கங்கள் ஏற்­ப­டு­கின்­றது. இருப்­பினும் சுற்­று­லாத்­து­றையின் அபி­வி­ருத்­திக்­காக நவீ­ன­ரக மின்­வி­ளக்­கு­களை பொருத்­து­வ­தற்­காக முன்னாள் இரா­ஜாங்க அமைச்சர் ஹரீஸின் 15 மில்­லியன் ரூபா நிதி ஒதுக்­கீட்டில் மேற்­கொள்­வ­தற்­காக நட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றது. அதற்­கு­மே­ல­தி­க­மாக சுற்­று­லாத்­துறை அமைச்சர் ஜோன் அம­ர­துங்க 10 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்து ஊரணி கொட்­டுக்கள் வீதி அமைப்பு பணி­களை திறந்து வைத்­தி­ருக்­கிறார். சுற்­றுலாத் துறைக்கு பேர்­போன ஊரணி கொட்­டுக்கள் வீதி பிர­தேச சபையின் முன்­மொ­ழி­வுக்­க­மைய ஒரு வழிப் பாதை­யாக திறந்து வைக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. அத்­தோடு சுற்­றுலாத் துறை­யி­னரின் தேவை­க­ளுக்கு அமைய அவர்­க­ளது கோரிக்­கை­க­ளையும் நாங்கள் நிறை­வேற்றி வரு­கிறோம்.

சுற்­று­லாப்­ப­ய­ணி­க­ளுக்கு வச­தி­களை ஏற்­ப­டுத்தி கொடுக்கும் பொருட்டு அவர்­க­ளுக்­கான சுற்­றுலா தகவல் மையம் ஒன்றை அமைக்க நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றது. ஹோட்டல் உரி­மை­யா­ளர்­களின் கழிவு தொடர்பில் நாளாந்தம் அகற்­று­வதில் பிரச்­சி­னைகள் காணப்­பட்­டாலும் அவர்­க­ளோடு இணைந்து முகா­மைத்­துவ நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­கின்றோம். ஏனென்றால் எங்­க­ளிடம் இருக்­கின்ற ஆளணி பற்­றாக்­குறை கார­ண­மாக பிர­தேச சபையால் சுற்­றுலாத் துறைக்கு முற்­று­மு­ழு­தான சேவை­களை வழங்­கு­வதில் குறை­பா­டுகள் காணப்­ப­டு­கின்­றன. அதனை நிவர்த்­திப்­ப­தற்கு பல்­வேறு முயற்­சி­களை நாங்கள் மேற்­கொண்டு வரு­கின்றோம்.

Q சுற்­று­லாத்­து­றை­யினால் பொத்­துவில் மீன­வர்­களும் பாதிக்­கப்­ப­டு­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. அவர்கள் தங்­க­ளது பொரு­ளா­தா­ரத்தை ஈட்டிக் கொள்­வ­தற்­கான மாற்­றீ­டுகள் என்­ன­வென்று தெளிவு­ப­டுத்த முடி­யுமா?

பொத்­துவில் பிர­தே­சத்தில் இது கடல் வெளியில் வரு­கின்ற காலப்­ப­கு­தி­யாகும். இக்­கா­லப்­ப­கு­தியில் மீன­வர்கள் தங்­க­ளது பட­கு­களை நிறுத்தி வைப்­ப­தற்கு இடம் இல்­லாத ஒரு நிலை காணப்­ப­டு­கி­றது. மீன­வர்­களை அவ்­வி­டத்­தி­லி­ருந்து அப்­பு­றப்­ப­டுத்தி அவர்­க­ளு­டைய பட­கு­களை நிறுத்­து­வ­தற்கு பாது­காப்­பான வோட்யார்ட் ஒன்றை நிறு­வு­வ­தற்கு சர்­வோ­த­ய­புறம், குடா­கள்ளி, அறு­கம்பை பாலத்தை அண்­டிய பிர­தேசம் என்று மூன்று இடங்­களை தெரிவு செய்­தி­ருக்­கிறோம். சுற்­று­லாத்­துறை அமைச்சர் ஜோன் அம­ர­துங்க இங்கு வருகை தந்த போது குடாக்­கடல் பிர­தே­சத்தை வோட்யார்ட் அமைப்­ப­தற்­கான உகந்த இட­மாக தெரிவு செய்­தி­ருக்­கி­றார்கள்.

சுற்­று­லாத்­துறை ஆறு மாதமும் மீன்­பிடித் துறை ஆறு மாதமும் என்று இரண்டும் ஒரே காலப்­ப­கு­தியில் வரு­வதால் அசௌ­க­ரி­யங்கள் ஏற்­ப­டு­கின்­றன. வெளி­நாட்டுப் பிர­தி­நி­திகள் இங்கு ஓய்­வுக்­காக வரு­கி­றார்கள். இந்­நி­லையில் மீன­வர்­களின் செயற்­பா­டுகள் கரை­யோரம் அசுத்­தப்­ப­டுத்­தப்­ப­டு­வது, அவர்­க­ளுக்கு இடை­யூ­று­களை ஏற்­ப­டுத்­து­வ­தாக அமை­கின்­றது. இந்த வோட்யார்ட் அமைக்­கப்­ப­டு­மாக இருந்தால் சுமார் 200 பட­கு­களை அங்கு நிறுத்த முடியும். அத்­தோடு மீன­வர்­க­ளுக்­கான இதர வச­தி­க­ளையும் அங்கு பெறக்­கூ­டி­ய­தாக அமையும். இத்­திட்டம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­மானால் சுற்­று­லாத்­து­றையும் மீன்­பிடித் துறையும் ஒரே நேரத்தில் பிரச்­ச­ினை­யின்றி பய­ணிக்க முடியும்.

Q பொத்­துவில் கோட்­டத்தில் கல்­வியில் வீழ்ச்சி நிலை காணப்­ப­டு­வ­தாக மக்கள் முறை­யி­டு­கின்­றனர். இந்­நிலை ஏன் ஏற்­ப­டு­கின்­றது என்­பதை தெளி­வு­ப­டுத்த முடி­யுமா?

அக்­க­ரைப்­பற்று வல­யக்­கல்வி அலு­வ­ல­கத்தின் கீழ் நாங்கள் இருப்­பது தான் கல்­வியில் வீழ்ச்சி அடை­வ­தற்கு முக்­கிய காரணம் என்று நான் கரு­து­கிறேன். ஆசி­ரி­யர்கள், அதி­பர்கள் ஒரு சிறிய தேவைக்­காக 50 கிலோ­மீட்டர் வரை பய­ணித்து அக்­க­ரைப்­பற்­றுக்கு செல்ல வேண்டி ஏற்­ப­டு­கி­றது. அதிபர் கூட்­டங்­க­ளுக்­காக 25 பேர் அங்கு போக வேண்டி ஏற்­ப­டு­கி­றது.

சுமார் 400 ஆசி­ரி­யர்கள் வெளி பிர­தே­சங்­க­ளி­லி­ருந்து இங்கு வந்து கல்வி கற்றுக் கொடுக்­கின்­றார்கள். இந்­நி­லை­மை­களும் எமது பிர­தே­சத்தின் கல்வி வளர்ச்­சியை பின் தள்­ளு­கின்­றது. அதனால் தான் பொத்­துவில் பிர­தே­சத்­துக்கு ஒரு வல­யக்­கல்வி அலு­வ­ல­கத்தைப் பெற்று அதன் மூல­மாக எமது பிர­தே­சத்தின் கல்­வியை உயர்த்­தலாம் என்று எண்­ணி­யி­ருந்தோம்.

அக்­க­ரைப்­பற்று வலய கல்வி அலு­வ­ல­கத்தின் கீழ் அட்­டா­ளைச்­சேனை, பொத்­துவில், அக்­க­ரைப்­பற்று ஆகிய மூன்று கோட்­டங்கள் காணப்­ப­டு­கின்றன. இவற்றில் பொத்­துவில் கோட்டம் முன்பு கல்­வியில் முன்­னி­லையில் இருந்­தது. ஆனால் மாற்­றாந்தாய் மனப்­பான்­மை கார­ண­மா­கவும் நான் கூறிய பிரச்­சி­னை­களின் கார­ண­மா­கவும் எமது கோட்­டத்தின் கல்வி நிலை வீழ்ச்சி அடைந்­தது. ஆனால் இப்­பி­ரச்­சி­னை­களை தீர்க்­கின்ற போதும் எமது பிர­தே­சத்தின் கல்வி வளர்ச்சி மேம்­படும். அதனை மீண்டும் நிலை­நி­றுத்­து­வ­தற்கு நாங்கள் பாரிய முயற்­சி­களை மேற்­கொண்டு வரு­கின்றோம்.

Q பொத்­துவில் பிர­தே­சத்தில் குடிநீர் உட்­பட பல அடிப்­படைப் பிரச்­சி­னைகள் காணப்­ப­டு­வ­தாக மக்கள் முறை­யி­டு­கின்­றனர். இப்­பி­ரச்­சி­னைகள் தொடர்பில் தெளிவு­ப­டுத்த முடி­யுமா?

இலங்­கையில் ஏனைய பாகங்­களில் நீர் வழங்­கு­வது போன்று பொத்­து­வி­லுக்கு நீர் வழங்­கப்­ப­டு­வ­தில்லை. சுமார் 30 நிமி­டங்­க­ளுக்கு மாத்­தி­ரம்தான் நீர் வழங்­கப்­ப­டு­கின்­றது. இதனால் உல்­லா­சத்­துறை, விவ­சாயம் போன்ற பல விட­யங்­களில் பாரிய பிரச்­சி­னைகள் ஏற்­ப­டு­கின்­றன. பொத்­துவில் பிர­தே­சத்தை கல்வி வீழ்ச்­சி­யி­லி­ருந்து மேம்­ப­டுத்­து­வ­தற்கு வலயக் கல்வி அலு­வ­லகம் நிறு­வப்­பட வேண்டும். அத்­தோடு இங்­குள்ள வைத்­தி­ய­சாலை நோயா­ளி­களை அக்கரைப்பற்று, அம்பாறை போன்ற வைத்தியசாலைகளுக்கு பரிமாற்றும் பரிமாற்ற நிலையமாகவே செயற்படுகின்றது. அதைவிடுத்து இங்குள்ள வைத்தியசாலை மக்களின் தேவை கருதி வசதியுடன் கூடிய ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட வேண்டும். சுமார் 2300 ஏக்கர் காணிப் பிரச்சினைகள் இப்பிரதேசத்தில் காணப்படுகின்றன.
இவ்வாறான பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். அதற்கு ஒரு அரசியல் அதிகாரம் தேவை. சுமார் 30,000 வாக்குகளைக் கொண்ட பொத்துவில் பிரதேச மக்களின் வாக்களிப்பின் விலை என்ன என்று நான் வினவுகின்றேன்.
இங்கு ஒரு மாகாண சபை அங்கத்தவர் அதிகாரம் கூட இல்லை. பிரதேச சபை அதிகாரத்தை மாத்திரம் வைத்துக்கொண்டு எமது மக்களின் பிரச்சினைகளெல்லாம் தீர்க்க முடியாதுள்ளது. இப்பிரச்சினைகள் எல்லாம் வெளிக்கொணரப்படாமல் தீர்க்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருக்கின்றன.

எனவே எமது பிரதேசத்தின் பிரச்சினைகளை வெளிக்கொணர்ந்து தீர்ப்பதற்கு பாராளுமன்ற உறுப்புரிமை அதிகாரம் வழங்கப்பட வேண்டும். எதிர்வரும் காலங்களில் ஏதாவது ஒரு தேர்தலை நாங்கள் எதிர்கொள்ள இருக்கின்றோம். எமது அபிலாசைகள் நிறைவேற்றப்படாது போனால் சாய்ந்தமருது மக்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் போல் நாங்களும் செயற்படுவதற்கு தள்ளப்படுவோம் என்பதை எமது கட்சிக்கும் ஏனைய அரசியல் மட்டங்களுக்கும் நாங்கள் தெளிவுபடுத்தி இருக்கிறோம்.

நேர்காணல்: எம்.ஐ. சம்சுடீன், ஏ.மொஹமட் பாயிஸ்

vidivelli

Leave A Reply

Your email address will not be published.