அப்­பாவி மக்­களை அடிப்­ப­டை­வா­தத்­தின்பால் தள்­ளி­வி­டவே சட்டம் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது

பொலிசாரை அறிவுறுத்த வலியுறுத்துகிறார் பிமல் ரத்நாயக்க

0 839

ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்

அப்­பாவி மக்கள் அடிப்­ப­டை­வா­தத்­தின்பால் தள்­ளப்­படும் வகை­யிலே சிவில் மற்றும் சர்­வ­தேச உரி­மைகள் தொடர்­பான சர்­வ­தேச ஒப்­பந்த சட்டம் பொலி­ஸா­ரினால் மிகவும் பிழை­யான முறையில் பயன்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றது. இது­தொ­டர்­பாக பிர­தமர் பொலி­ஸா­ருக்கு அறி­வு­றுத்த நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டு­மென மக்கள் விடு­தலை முன்­னணி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பிமல் ரத்­நா­யக்க தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வாய்­மூல விடைக்­கான கேள்வி நேரத்­தின்­போது, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விடம் கேட்­கப்­பட்ட கேள்­வி­யொன்­றுக்கு இடைக்­கேள்­வி­யொன்றை முன்­வைத்து குறிப்­பி­டு­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரி­விக்­கையில்,

இன, மத­வா­தத்தை தூண்­டு­ப­வர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்கும் நோக்­கத்­திலே சிவில் மற்றும் சர்­வ­தேச உரி­மைகள் தொடர்­பான சர்­வ­தேச ஒப்­பந்த சட்டம் தயா­ரிக்­கப்­பட்­டது. ஆனால் அண்­மைக்­கா­லமாக பொலி­ஸா­ரினால் இந்த சட்டம் மிகவும் பயங்­க­ர­மான முறையில் பயன்­ப­டுத்­தப்­பட்டு வரு­வதை காணக்­கூ­டி­ய­தாக இருக்­கின்­றது.

குறிப்­பாக, இந்த சட்­டத்தின் கீழ் எழுத்­தாளர் ஒருவர் கைது செய்­யப்­பட்டார். இதற்கு முன்னர் மஹி­யங்­கனை பிர­தே­சத்தில் பெண்­ணொ­ருவர் அணிந்­தி­ருந்த ஆடை தொடர்பில் கைது செய்­யப்­பட்டார். தற்­போது திரு­கோ­ண­மலை பிர­தே­சத்தில் பெண்­ணொ­ருவர் அணிந்­தி­ருந்த சாரியில் ஏதோ­வொன்று இருந்­த­தாக தெரி­வித்து கைது செய்­யப்­பட்­டி­ருக்­கின்றார்.

அதனால் சிவில் மற்றும் சர்­வ­தேச உரி­மைகள் தொடர்­பான சர்­வ­தேச ஒப்­பந்த சட்­டத்தை இவ்­வாறு அப்­பாவி மக்­களை அடிப்­ப­டை­வா­தத்­துக்குள் தள்­ளும்­வ­கையில் பயன்படுத்தாமல், உண்மையாகவே இனவாத, மதவாத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக பயன்படுத்துமாறு பொலிஸாருக்கும் அதனுடன் தொடர்புபட்ட துறைகளுக்கும் பிரதமர் அறிவுறுத்தவேண்டும் என்றார்.

ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்

vidivelli

Leave A Reply

Your email address will not be published.