நல்லிணக்கமும் சகவாழ்வும் பெரும்பான்மை சமூகத்திடம் இருந்தே ஆரம்பிக்க வேண்டும்

கல்முனை மாநகர முதல்வர் றகீப் தெரிவிப்பு

0 643

இலங்­கையைப் பொறுத்­த­ளவில் நல்­லி­ணக்கம், சக­வாழ்வு என்­ப­தெல்லாம் பேச்­ச­ளவில் மாத்­தி­ரமே இருக்­கின்­றன. இனங்­க­ளி­டையே சந்­தே­கமும் புரிந்­து­ணர்­வின்­மை­யுமே இன்று மேலோங்கி காணப்­ப­டு­கின்­றது. உண்­மையில் நல்­லி­ணக்கம், சக­வாழ்வு என்­பன பெரும்­பான்மை சமூ­கத்­தி­ன­ரி­ட­மி­ருந்தே ஆரம்­பிக்க வேண்டும் என்று கல்­முனை மாந­கர முதல்வர் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ஏ.எம்.றகீப் தெரி­வித்தார்.

ஜீ.ஐ.இஸட் நிறு­வ­னத்தின் ஏற்­பாட்டில் மரு­த­முனை பொது நூலக சமூக வள நிலை­யத்தில் நடை­பெற்ற நல்­லி­ணக்கம் தொடர்­பான கலந்­து­ரை­யா­டலில் உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைக் குறிப்­பிட்டார். அங்கு அவர் மேலும் தெரி­விக்­கையில்,

ஏப்ரல் 21 தாக்­கு­த­லுக்குப் பின்னர் முஸ்­லிம்கள் துன்­பு­றுத்­தப்­ப­டு­கின்ற நிலையே காணப்­ப­டு­கின்­றது. அர­சியல் ரீதி­யாக முஸ்லிம் சமூ­கத்­திற்கு எதி­ராக பரப்­புரை செய்­யப்­பட்ட போதிலும் பேராயர் மல்கம் ரஞ்சித் அத்­தாக்­கு­தலின் பின்­புலம் குறித்து யதார்த்­த­மான கருத்­துக்­களைத் தெரி­வித்­தி­ருந்­ததை பாராட்­டாமல் இருக்க முடி­யாது. அவர் போன்று எல்லா மத­கு­ருக்­களும் அர­சியல் தலை­மை­களும் இருப்­பார்­க­ளானால் எமது நாட்டில் தலை­வி­ரித்­தா­டு­கின்ற இன­வாதம் நிச்­சயம் ஓய்­வு­நி­லைக்கு வரும் எனலாம்.

பல்­லி­னங்கள் வாழ்­கின்ற எமது நாட்டில் இன்று அவ­சி­யப்­ப­டு­வது நல்­லி­ணக்­கம்தான். அது முதலில் பெரும்­பான்­மை­யி­ன­ரிடம் இருந்து சிறு­பான்­மை­யி­னரை நோக்­கி­ய­தாக அமைதல் வேண்டும். குறிப்­பாக பௌத்த குரு­மார்கள் சிறு­பான்­மை­யினர் மீதான நல்­லெண்­ணத்­தையும் அன்­பையும் வெளிப்­ப­டுத்த வேண்டும். அவ்­வாறே சிங்­கள கடும்­போக்­கு­வா­திகள் தமது அந்த நிலைப்­பாட்டைத் தளர்த்த முன்­வர வேண்டும்.

இவற்றின் மூலமே சிறு­பான்­மை­யினர் மத்­தியில் பெரும்பான்மையினர் மீதான நம்பிக்கையையும் நாட்டுப்பற்றையும் கட்டியெழுப்ப முடியும் என்பதுடன் அனைவரும் இலங்கையர் என்ற கொடியின் கீழ் ஒன்றிணைவதற்கான சூழல் ஏற்படும் என்றார்.

ஏ.எல்.எம்.ஷினாஸ்

vidivelli

Leave A Reply

Your email address will not be published.