கோத்தாவின் நடவடிக்கைகளை மக்கள் வேதனையுடனே பொறுத்துக் கொண்டிருந்தார்கள்

முஜிபுர் ரஹ்மான்

0 752

கோத்­தா­பய ராஜபக் ஷ பாது­காப்பு அமைச்சின் செய­லா­ள­ராக இருக்­கும்­போது மேற்­கொண்ட நெருக்­க­டி­களை பொது­மக்கள் மிகவும் வேத­னை­யு­டனே பொறுத்­தி­ருந்­தார்கள். அவ்­வா­றான நிலையில் அவர் ஜனா­தி­ப­தி­யானால் என்ன நிலை ஏற்­படும் என்­பதை மக்கள் அறி­வார்கள் என ஐக்­கிய தேசியக் கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் தெரி­வித்தார்.

கொழும்பில் நேற்று இடம்­பெற்ற நிகழ்­வொன்றின் பின்னர் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரி­விக்­கையில், கோத்­தா­பய ராஜ­பக் ஷ பாது­காப்பு அமைச்சின் செய­லா­ள­ராக இருந்த காலத்தில் பல்­வேறு சட்­ட­வி­ரோத, மனி­தா­பி­மா­ன­மற்ற நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வந்தார். இதனால் பொது­மக்கள் பல்­வே­று­வி­த­மான நெருக்­க­டி­களை சந்­தித்து வந்­தனர். அவ­ருக்கு எதி­ராக முறை­யி­டவும் முடி­யாத நிலையே அன்று இருந்­தது. அதனால் மக்கள் மிகவும் பொறு­மை­யுடன் செயற்­பட்டு அந்த ஆட்­சியை மாற்­றி­ய­மைக்க நட­வ­டிக்கை எடுத்­தார்கள்.

அவ்­வா­றான நிலையில் தற்­போது கோத்­தா­பய ராஜ­பக் ஷ இந்த நாட்டின் ஜனா­தி­ப­தி­யாகத் தயா­ராகி வரு­கின்றார்.

ஒரு அமைச்சின் செய­லா­ள­ராக இருந்­து­கொண்டு அவர் மக்­களின் கருத்­துக்­க­ளுக்கு கொஞ்­ச­மேனும் மதிப்­ப­ளிக்­காது தான் நினைத்­த­பி­ர­காரம் செயற்­பட்டார். குறிப்­பாக கொழும்பில் கொம்­ப­னித்­தெரு பிர­தே­சத்தில் தங்கள் சொந்த வீடு­களில் இருந்த மக்­களை பலாத்­கா­ர­மாக வெளி­யேற்றி நகர அபி­வி­ருத்­திக்­காக என தெரி­வித்து அவர்­களின் வீடு­களை தரை­மட்­ட­மாக்­கினார்.
அந்த மக்­களை வனாத்­த­முல்ல பகு­திக்கு கொண்­டு­சென்று குடி­ய­மர்த்­தினார். அவர்­களின் வீடு­க­ளுக்­கான நஷ்­ட­யீடும் வழங்­கப்­ப­ட­வில்லை.

அத்­துடன் கோத்­தா­பய ராஜ­பக் ஷ செய­லாளர் பத­வியில் இருக்­கும்­போது எமது நாட்டு ஊடக நிறு­வ­னங்கள் மற்றும் ஊட­க­வி­ய­லா­ளர்­களின் சுதந்­திரம் முற்­றாக குழி­தோண்டிப் புதைக்­கப்­பட்­டி­ருந்­தது.

ஊட­க­வி­ய­லா­ளர்கள் சுதந்­தி­ர­மாக எழு­தவோ செயற்­ப­டவோ முடி­யாத அச்ச நிலை­யிலே இருந்­தனர். சிரேஷ்ட ஊட­க­வி­ய­லாளர் லசந்த விக்­ர­ம­துங்க, எக்­னெ­லி­கொட, கீத் நொயார் போன்­ற­வர்­க­ளுக்கு ஏற்­பட்ட நிலை இதற்கு சிறந்த உதா­ர­ண­மாகும்.

ஆனால் இந்த அர­சாங்­கத்தில் ஊடக சுதந்­தி­ரத்தை போது­மா­ன­ளவு வழங்­கி­யி­ருக்­கின்றோம். அதனால் இன்று ஊட­கங்­க­ளினால் அதிகம் விமர்­சிக்­கப்­ப­டு­வது எமது அர­சாங்­கமே. என்­றாலும் அதற்கு எதி­ராக எமது அர­சாங்கம் செயற்­ப­ட­வில்லை. ஆனால் பொது­ஜன பெர­முன கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் கோத்­தா­பய ராஜ­பக் ஷ நாட்டின் ஜனாதிபதியானால் நாடு பாதுகாப்பற்ற நிலைக்குச் செல்லும். அவ்வாறானதொரு நிலை ஏற்படும் என்தை மக்கள் அறிவார்கள்.

அதனால் மக்கள் மீண்டுமொருமுறை தங்கள் கரங்களாலே அழிவைத்தேடிக்கொள்ள முற்படமாட்டார்கள் என்ற நம்பிக்கை எமக்கிருக்கின்றது என்றார்.

எம்.ஆர்.எம்.வஸீம்

vidivelli

Leave A Reply

Your email address will not be published.