எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணியின் வேட்பாளராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்கவே களமிறங்குவார் என அக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவரை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தனது பெயரை வெ ளிப்படுத்த விரும்பாத குறித்த ஐ.தே.க. முக்கியஸ்தர் மேலும் குறிப்பிடுகையில், ஐக்கிய தேசியக் கட்சியின் யாப்புக்கமைய அக் கட்சியின் தலைவரே ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியும். கட்சியின் செயற்குழுவிலும் பாராளுமன்றக் குழுவிலும் இரகசிய வாக்கெடுப்பொன்று நடாத்தப்பட்டால் அதில் ரணில் விக்ரமசிங்கவே வேட்பாளராக தெரிவு செய்யப்படுவார்.
அத்துடன் சிங்கள, தமிழ், முஸ்லிம் கட்சிகள் இணைந்த கூட்டணி ஒன்று விரைவில் தோற்றுவிக்கப்படவுள்ளது. பௌத்தர்கள் உள்ளிட்ட இலங்கையின் சகல சமூகங்களினதும் ஆதரவைத் திரட்டுவதற்கு ரணில் விக்கிரமசிங்க போன்ற முதிர்ச்சிமிக்க சிரேஷ்ட தலைவரே பொருத்தமானவர்.
தமிழ் கட்சிகள் தாம் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கப் போவதில்லை என ஏற்கனவே அறிவித்துவிட்டன.
ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஏற்கனவே கணிசமான பௌத்த மக்களின் வாக்குகள் உள்ளன. அத்துடன் இம்முறை முதன் முறையாக வாக்களிக்கும் இளைஞர், யுவதிகளின் வாக்குகள் முக்கியமாக அமையப் போகின்றன.
தமது தொகுதிகளில் ஆதரவை இழந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் சில எம்.பி.க்களே சஜித் பிரேமதாசவை வேட்பாளராக முன்னிறுத்துகின்றனர். இது கட்சியைக் கடுமையாகப் பாதிப்பதுடன் தோல்விக்கு இட்டுச் செல்லும் செயற்பாடு என்பதை அவர்கள் உணராதுள் ளனர் என்றும் அவர் மேலும் குறிப்பிட் டுள்ளார்.
vidivelli