முகத்திரை அணிந்தால் அசெளகரியம் ஏற்படலாம்

இனவாதிகளுக்கு இடமளியாது புத்திசாதுர்யத்துடன் நடந்துகொள்க முஸ்லிம் பெண்களிடம் ஜம்மிய்யதுல் உலமா வேண்டுகோள்

0 797

முகத்­திரை அணிந்து பொது இடங்­க­ளுக்குச் செல்­வதால் பல்­வேறு அசௌ­க­ரி­யங்கள் ஏற்­பட வாய்ப்­பி­ருப்­ப­தாக தெரி­வித்­துள்ள அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா, நாட்டில் தற்­போது நிலவும் சூழ்­நி­லையில் இன­வாத சக்­தி­க­ளுக்கு இட­ம­ளி­யாது நடந்­து­கொள்­ளு­மாறும் இலங்கை வேண்­டுகோள் விடுத்­துள்­ளது.

பெண்­களின் முகத்­திரை தொடர்பில் ஜம்­இய்யா விடுத்­துள்ள அறி­வித்­தலில் மேற்­கண்­ட­வாறு சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது,

அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மாவின் பிர­சாரக் குழு செய­லாளர் அஷ்ஷெய்க் எச். உமர்தீன் வெளி­யிட்­டுள்ள குறித்த அறி­வித்­தலில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

ஆடைச் சுதந்­திரம் என்­பது மனி­தனின் அடிப்­படை உரி­மை­களில் ஒன்­றாகும். எமது நாட்டின் யாப்பின் பிர­காரம் அனை­வ­ருக்கும் அச்­சு­தந்­திரம் வழங்­கப்­பட்­டுள்­ளதை யாவரும் அறிவோம்.

இந்­நி­லையில் நாட்டில் நடை­பெற்ற துன்­பியல் நிகழ்வைத் தொடர்ந்து நாட்டில் அசா­தா­ரண நிலை காணப்­பட்­ட­துடன் அவ­ச­ர­கால சட்­டமும் அமுல் செய்­யப்­பட்­டது. அவ­ச­ர­கால சட்­டத்­தின்­போது முஸ்லிம் பெண்கள் அணியும் முகத்­தி­ரைக்­கான தற்­கா­லிக தடையும் விதிக்­கப்­பட்­டது. எனினும் கடந்த 08.23 ஆம் திக­தி­யுடன் அவ­ச­ர­கால சட்டம் நீக்­கப்­பட்டு பாது­காப்­புக்­கான அனைத்து நட­வ­டிக்­கை­க­ளையும் மேற்­கொள்ளும் அதி­காரம் பாது­காப்புத் தரப்­பி­ன­ருக்கு வழங்கும் விஷேட வர்த்­த­மானி அறி­விப்பு வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. எனினும் நாட்டு மக்­களின் அச்­சமும் மனோ­பா­வமும் முழு­மை­யாக மாறி­ய­தாக தெரி­ய­வில்லை.

இந்­நி­லையில் முஸ்லிம் சகோ­த­ரிகள் முகத்­திரை அணிந்து வெளி­யே­றும்­போது பல்­வேறு அசௌ­க­ரி­யங்­க­ளுக்கு ஆளாக இட­முண்டு. அத்­துடன் நாட்டில் தற்­போது நிலவும் அர­சியல் சூழ்­நி­லையில் இன­வாத சக்­தி­க­ளுக்கு இட­ம­ளிக்­காமல் பார்த்துக் கொள்­வது எமது பொறுப்­பாகும்.

எனவே, முகத்­திரை அணிந்து பொது இடங்­க­ளுக்குச் செல்­வதால் ஏற்­படும் அசௌ­க­ரி­யங்­களைத் தவிர்ந்து கொள்­ளு­மாறும் கால நேர சூழ்­நி­லை­களை கவ­னத்­திற்­கொண்டு புத்தி சாதுர்­ய­மா­கவும், அவ­தா­னத்­தோடும் நடந்து கொள்­ளு­மாறும் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா அனை­வ­ரையும் அன்­புடன் வேண்டிக் கொள்­கி­றது. எமது அவ­தா­ன­மான செயற்­பா­டுகள் எமது உரி­மை­களை உரிய முறையில் பாது­காக்க நிச்­சயம் உத­வு­மென்ற எதிர்­பார்ப்பு ஜம்­இய்­யா­வுக்கு இருக்கின்றது.

இலங்கை முஸ்லிம்கள் வரலாறு நெடுகிலும் அனுபவித்து வந்த மதச் சுதந்திரமும், உரிமைகளும், கலாசாரமும் தொடர்ந்தும் பாதுகாக்கப்பட வேண்டுமென்பதே அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிலைப்பாடாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.