ரணிலின் சதுரங்க விளையாட்டு…!

0 1,514

தற்­கொலை தாக்­கு­தலை தலை­மை­தாங்கி நடத்தி தன்னை மாய்த்துக் கொண்­டபின் கடந்த நான்கு மாதங்­க­ளாக நாட்டில் பிர­ப­ல­ம­டைந்­தி­ருந்­தவர் சஹ்ரான். அந்தப் பயங்­க­ர­வா­தியை பின்­தள்­ளா­வி­டினும் பௌத்த பேரி­ன­வா­தி­க­ளாலும் ஊட­கங்­க­ளி­னாலும் பிர­ப­ல­மாக்­கப்­பட்­டவர் டாக்டர் ஷாபி. இவர்­களின் பெயர்­களை கடந்த சில­மா­தங்­க­ளாக பர­ப­ரப்­பாக பேசிக்­கொண்­டி­ருந்­த­வர்கள் ஆகஸ்ட் பதி­னோராம் திக­திக்குப் பின்னர் மஹிந்­தவின் ஜனா­தி­பதி வேட்­பாளர் அறி­விப்பை அடுத்து கோத்தா என்ற நாமத்தை உச்­ச­ரிக்க ஆரம்­பித்­தனர். அது கடந்து ஒரு வாரத்­திற்குள் காலி­மு­கத்­தி­டலில் பெரும் சனத்­தி­ரளை சேர்த்து தாமும் பல­மான மூன்றாம் சக்தி என அறி­முப்­ப­டுத்­திக்­கொண்டு வெளிக்­கி­ளம்­பிய தேசிய மக்கள் சக்­தியின் வேட்­பா­ள­ரான அநு­ரவின் நாமம் மேலெழத் தொடங்­கி­யது. இவர்­க­ளுக்­கெல்லாம் முன்­ன­தா­கவே சஜித் தனது பெயரை சந்­தைக்கு அறி­மு­கப்­ப­டுத்­தி­யி­ருந்தார். என்­றாலும் ரணிலின் அறி­விப்பு வெளி­வ­ராத நிலையில் அது உத்­தி­யோ­கப்­பற்­ற­ற்றதா­கவே இன்­று­வரை கரு­தப்­பட்டு வரு­கின்­றது. 

தெற்­கா­சி­யாவில் பழுத்த அர­சியல் தலை­வ­னாக பார்க்­கப்­படும் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் அறி­விப்பை எதிர்­பார்த்து முழு நாடும், ஏன் சர்­வ­தே­சமும் காத்து நிற்­கி­றது.

ரணில் அர­சி­யலில் நாசூக்­காக காய் நகர்த்­தக்­கூ­டி­யவர், வெற்றி கிட்­டுமோ இல்­லையோ தனது வியூ­கத்தால் அர­சியல் களத்தை சூடேற்­று­வதில் அவர் வல்­லவர். இன்றும் அதுதான் நடந்­து­கொண்­டி­ருக்­கி­றது.

பொது­ஜன பெர­மு­னவும் மக்கள் விடு­தலை முன்­னணி உள்­ள­டங்­கிய தேசிய மக்கள் சக்­தியும் தமது ஜனா­தி­பதி வேட்­பா­ளர்­களை அறி­வித்­து­விட்­டன. இம்­முறை மும்­முனை போட்டி நில­வு­மென எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்ற நிலையில் ஆளும் ஐக்­கிய தேசியக் கட்சி தமது வேட்­பா­ளரை இன்னும் அறி­விக்­காமல் இழுத்­த­டிப்பு செய்­கி­றது.

ஏன் இந்த இழுத்­த­டிப்பு என்ற கேள்­விக்­கான பதில் ரணி­லா­கத்தான் இருக்கும்.
28 தேர்­தல்­களில் தோல்­வி­களை சந்­தித்த பிறகு கட்சி தலை­மைத்­து­வத்தை பறித்­தெ­டுக்க திரை­ம­றைவில் திட்­டங்கள் வகுக்­கப்­பட்­ட­போதும் ‘சூழ்ச்­சி’­க­ளை­யெல்லாம் வெற்­றி­க­ர­மாக முறி­ய­டித்து தனது கட்சித் தலைமை பத­வியை பாது­காத்து வந்­தவர் தொடர்ந்தும் அதனை தன் வசம் வைத்­தி­ருக்க ஆசைப்­ப­டு­வதே பிர­தான கார­ண­மாகும்.

இதன் கார­ண­மா­கவே ஜனா­தி­பதி தேர்தல் தொடர்பில் ரணில் மௌனம் காப்­பதும், ஜனா­தி­பதி வேட்­பா­ளரை அறி­விப்­பதில் இழுத்­த­டிப்பு செய்­வதும் பலரை கிலி­கொள்ள வைத்­துள்­ளது.

எனவே, ஜனா­தி­பதி தேர்­தலில் சஜித் பிரே­ம­தா­சவை கள­மி­றங்­கு­வ­தற்கு ரணில் பச்­சைக்­கொடி காட்­டி­னால்­கூட அது தந்­தி­ரோ­பாய பின்­வாங்­க­லாக அமையும்.

புரிந்­து­ணர்வு ஒப்­பந்தம்

ஐக்­கிய தேசியக் கட்சி தலை­மையில் தேசிய ஜன­நா­யக முன்­னணி என்ற பெயரில் புதிய கூட்­ட­ணி­யொன்றை அமைக்கும் பணிகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. அதன், யாப்பு தயா­ரிக்கும் பணி­க­ளுக்கு அமைச்சர் ராஜித சேனா­ரத்ன, கபீர் ஹாஷிம் உள்­ளிட்டோர் நிய­மிக்­கப்­பட்­டி­ருந்­தனர். குறித்த, கூட்­ட­ணியின் யாப்பு பணிகள் நிறை­வு­பெற்­ற­வுடன் ஜனா­தி­பதி வேட்­பாளர் யார் என்­ப­தனை அறி­விக்க முடி­யு­மெனப் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­தி­ருக்­கிறார்.

இன்று 30 ஆம் திகதி கூட்­ட­ணிக்­கான புரிந்­து­ணர்வு ஒப்­பந்தம் கைச்­சாத்­தி­டப்­ப­ட­லா­மென எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. இந்த கூட்­ட­ணியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ், அமைச்­சர்­க­ளான ராஜித, அர்­ஜுன உள்­ளிட்டோர் உள்­ள­டங்கும் ஜன­நா­யக தேசிய இயக்கம், மனோ, திகா, ராதா உள்­ளிட்­டோரின் கூட்­ட­ணி­யான தமிழ் முற்­போக்கு கூட்­டணி மற்றும் சம்­பி­கவின் ஜாதிக ஹெல உறு­மய உள்­ளிட்ட பிர­தான கட்­சிகள் அங்கம் வகிக்­கு­மென எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. இது­த­விர, இதர சிறு­கட்­சிகள் மற்றும் சிவில் அமைப்­பு­களும் இணைந்­து­கொள்ளும் வாய்ப்­புகள் இருக்­கின்­றன. இதற்­கப்பால் இறுதித் தரு­ணத்தில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பும் இந்த கூட்­ட­ணி­யுடன் சங்­க­மிக்­கலாம்.

கூட்­ட­ணிக் கட்­சி­களின் எதிர்­பார்ப்பு

ஐக்­கிய தேசியக் கட்சி தமது ஜனா­தி­பதி வேட்­பா­ளரை அறி­விக்­கா­தி­ருப்­பதால் கூட்­டணிக் கட்­சி­க­ளுக்குத் திண்­டாட்டம் நில­வு­கின்­றது. இம்­முறை ஐக்­கி­ய­ தே­சியக் கட்சி உறுப்­பி­னரே ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக இருக்க வேண்டும் என்­பதில் அனைத்து கூட்­டணிக் கட்­சி­களும் உடன்­பட்­டாலும் அறி­விக்­கப்­படும் வேட்­பாளர் வெற்றி பெறக்­கூ­டி­ய­வ­ரா­கவும் தமக்கு சாத­க­மா­ன­வரா­கவும் இருக்­க­வேண்டும் என்­பதில் கவ­ன­மாக இருக்­கின்­றன.

மதில்மேல் பூனையாக மு.கா.

ஐக்­கிய தேசியக் கட்­சியின் வேட்­பா­ள­ராக மக்கள் எதிர்­பார்க்கும் சஜித் பிரே­ம­தாஸ வர­வேண்டும் என்­பதை ஆரம்­பத்தில் பிரே­ரித்­தவர் மு.கா. தலைவர் ஹக்கீம் என்று கூறப்­ப­டு­கின்­றது. எனினும், ஐ.தே.க. தமது வேட்­பா­ளரை அவ­ச­ர­மாக அறி­விக்க வேண்­டு­மென மு.கா. எதிர்­பார்க்­கி­றது. வேட்­பாளர் அறி­மு­கத்தின் பின்­னரே தமது நிலைப்­பாட்டை அறி­விக்க முடி­யு­மென ஹக்கீம் தெரி­வித்­துள்ளார்.

அவ­ச­ரப்­ப­டாத அ.இ.ம.கா.

ஜனா­தி­பதி தேர்­தலில் தாம் யாரை ஆத­ரிக்கப் போகிறோம் என்­பதை அறி­விப்­பதில் அவ­ச­ரப்­ப­டப்­போ­வ­தில்­லை­யென அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் தலைவர் ரிஷாத் பதி­யுதீன் தெரி­வித்­தி­ருக்­கின்றார். இருந்­தாலும் அ.இ.ம.கா. தரப்­பினர் கடந்த வாரம் பொது­ஜன பெர­மு­னவின் தவி­சாளர் பசில் ராஜபக் ஷவை திரை­ம­றைவில் சந்­தித்­த­தாகக் கதைகள் அடி­ப­டு­கின்­றன. எனினும் இது உறு­தி­செய்­யப்­ப­ட­வில்லை.

எச்­ச­ரிக்கும் ஹெல உறு­மய

ஜனா­தி­பதி வேட்­பா­ளரை அறி­விப்­பதில் ஐக்­கிய தேசி­யக்­கட்சி தொடர்ந்தும் இழுத்­த­டிப்பு போக்கை கடைப்­பி­டிக்­கு­மானால் மாற்று நட­வ­டிக்­கையில் இறங்­கு­வோ­மென ஜாதிக ஹெல உறு­ம­யவின் பொதுச்­செ­ய­லா­ள­ரான அமைச்சர் பாட்­டலி சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்­தி­ருக்­கிறார்.

காத்­தி­ருக்கும் முற்­போக்கு கூட்­டணி

ஜனா­தி­பதி வேட்­பாளர் யார் என்­பதை ஐக்­கிய தேசி­யக்­கட்சி உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­வித்த பின்­னரே – அவர் தொடர்பில் ஆராய்ந்து – பேச்சு நடத்தி தமது நிலைப்­பாட்டை அறி­விப்­ப­தற்கு தமிழ் முற்­போக்கு கூட்­டணி காத்­தி­ருக்­கின்­றது.

கூட்­ட­ணியின் இணைத்­த­லை­மை­க­ளான திகா, மனோ, இராதா மற்றும் எம்.பி.க்களான திலகர், வேலு­குமார் உள்­ளிட்டோர் கடந்த வாரம் ஜனா­தி­பதி தேர்தல், புதிய அர­சியல் கூட்­டணி உட்­பட சம­கால அர­சியல் நிலை­வ­ரங்கள் தொடர்பில் கலந்­து­ரை­யா­ட­லொன்றை நடத்­தி­யி­ருந்­தனர்.

ஐ.தே.க.வுக்குள் அழுத்தம்

ஐ.தே.க.வின் செயற்­குழு, பாரா­ளு­மன்­றக்­குழு கூட்­டங்­களை ஒரே நேரத்தில் நடத்தி ஜனா­தி­பதி வேட்­பா­ளரை பெய­ரி­டு­மாறும் சஜித் ஆத­ரவு எம்.பி.க்கள் வலி­யு­றுத்தி வரு­கின்­றனர். இது தொடர்­பான எழுத்து மூல­மான கோரிக்கை கடந்த வாரம் பிர­த­ம­ரிடம் கைய­ளிக்­கப்­பட்­டது.

ஐ.தே.கவின் 55 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் கையொப்­பத்­து­டன்­கூ­டிய மேற்­படி கோரிக்கை கடி­தத்தை கட்­சியின் தவி­சா­ள­ரான அமைச்சர் கபீர் ஹாசீமும், சிரேஷ்ட உறுப்­பி­னரும் அமைச்­ச­ரு­மான ரஞ்சித் மத்­தும பண்­டா­ரவும் இணைந்து அல­ரி­மா­ளி­கையில் வைத்து பிர­த­ம­ரிடம் கைய­ளித்­தனர்.
இது­த­விர, ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக சஜித் பிரே­ம­தா­சவை கள­மி­றக்­கு­மா­று­கோரி சஜித் அணி உறுப்­பி­னர்­களால் மாவட்­டந்­தோறும் பேர­ணிகள் நடத்­தப்­பட்­டு­வ­ரு­கின்­றன.

இதன் ஆரம்­ப­கட்­ட­மாக பாரிய கூட்டம் பது­ளையில் அமைச்சர் ஹரீன் நடத்­தி­யி­ருந்தார். பின்னர் மாத்­த­றையில் மங்­கள முன்­னெ­டுத்­தி­ருந்தார். இதனை நாடு­மு­ழு­வதும் முன்­னெ­டுத்துச் செல்ல சஜித் அணி­யினர் நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­கின்­றனர்.

ஒழுக்­காற்று நட­வ­டிக்­கைகள்

கட்சித் தலை­மை­யையும், கொள்­கை­க­ளையும் கடு­மை­யாக விமர்­சித்து கட்­சிக்குள் பிளவை ஏற்­ப­டுத்தும் வகையில் செயற்­படும் உறுப்­பி­னர்­க­ளுக்கு எதி­ராக ஒழுக்­காற்று நட­வ­டிக்கை எடுப்­ப­தற்கு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க உத்­தே­சித்­துள்ளார்.

இதன் ஆரம்­ப­கட்ட செயன்­மு­றை­யாக கட்சி உறுப்­பி­னர்­க­ளிடம் சுய விளக்கம் கோரப்­ப­ட­வுள்­ளது என்றும், அதன்­போது கட்­சியின் யாப்பை மீறும் வகையில் செயற்­பட்­டி­ருந்தால் – கருத்­து­களை முன்­வைத்­தி­ருந்தால் ஒழுக்­காற்று நட­வ­டிக்கை எடுப்­ப­தற்கு முடி­வெ­டுக்­கப்­பட்­டுள்­ளது.

அதே­வேளை, கட்­சியின் அனு­மதி இல்­லாமல் பேர­ணி­க­ளுக்­கான ஏற்­பா­டு­களை செய்யும் தொகுதி அமைப்­பா­ளர்­க­ளுக்கு எதி­ராக கடும் நட­வ­டிக்கை எடுப்­ப­தற்கும் கட்சி தலைமை தீர்­மா­னித்­து­விட்­ட­தா­கவும் கூறப்­ப­டு­கின்­றது.

அஜித் பெரேரா, சுஜீ­வ­வுக்கு நட­வ­டிக்கை

சஜித் ஆத­ரவு அணி அமைச்­சர்­க­ளான சுஜீவ சேன­சிங்க, அஜித் பி. பெரேரா ஆகி­யோ­ருக்கு எதி­ராக ஐக்­கிய தேசியக் கட்சி ஒழுக்­காற்று நட­வ­டிக்­கையை ஆரம்­பித்­துள்­ளது.

கட்சித் தலை­மைக்கு எதி­ராக விமர்­ச­னங்­களை முன்­வைத்து கட்­சியின் யாப்பை மீறும் வகையில் செயற்­பட்­ட­தா­லேயே இரு­வ­ரி­டமும் விளக்கம் கோரு­வ­தற்கு ஒழுக்­காற்று நட­வ­டிக்கை குழு தீர்­மா­னித்­துள்­ள­தாக கட்­சியின் செய­லாளர் அகில விராஜ் காரி­ய­வசம் தெரி­வித்­துள்ளார்.

இது­கு­றித்த கடிதங்கள் அவ்­வி­ரு­வ­ருக்கும் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளன. அதில் கட்சி யாப்பின் 6 சரத்­து­களை அப்­பட்­ட­மாக மீறும் வகையில் இரு­வரும் செயற்­பட்­டுள்­ளனர் என சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

சஜித் மீது பாய்தல்

ஐக்­கிய தேசியக் கட்­சியின் யாப்பு ஒழுக்க விதி­மு­றை­களை மீறி செயற்­பட்ட அனை­வ­ருக்கும் எதி­ராக ஒழுக்­காற்று நட­வ­டிக்கை எடுக்க வேண்­டு­மெனக் கட்­சியின் செயற்­கு­ழுவில் தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும், ஜனா­தி­பதி தேர்தல் அறி­விக்­கப்­பட முன்­னரே சஜித் பிரே­ம­தாச பிர­சா­ரங்­களை செய்­வது கட்­சியின் தலை­மைத்­துவ கட்­ட­ளை­களை மீறிய செயல். ஆகவே அவ­ருக்கும் எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­மென ஐக்­கிய தேசியக் கட்­சியின் பொதுச்­செ­ய­லாளர் அகி­ல­விராஜ் காரி­ய­வசம் கூறி­யுள்ளார். எவ்­வாறு இருப்­பினும் கட்சி பிள­வு­பட அனு­ம­திக்­கப்­போ­வ­தில்லை எனவும் அவர் கூறி­யுள்ளார்.
அதேபோல் அமைச்சர் சஜித் பிரே­ம­தா­சவும் சில தேர்தல் பிர­சா­ரங்­களை செய்து வரு­கின்­றமை கட்­சியின் விதி­மு­றை­க­ளுக்கு அப்­பா­லான செய­லா­கவே கரு­தப்­ப­டு­கின்­றது. ஆகவே, அவரை விசா­ரிக்க வேண்­டு­மென்ற கோரிக்­கையும் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது என்றும் அகில சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

சாடும் பொன்­சேகா

“சஜித் பிரே­ம­தாச கட்­சியின் நிகழ்ச்சி நிரலை முன்­னெ­டுக்­க­வில்லை. எனவே, எந்த அடிப்­ப­டையில் ஆத­ரவு வழங்­கு­வது? கட்சி தலை­வரின் கட்­ட­ளை­யையும், யாப்­பையும் மீறும் வகையில் செயற்­படும் உறுப்­பி­னர்­க­ளுக்கு எதி­ராக தரா­தரம் பாராது ஒழுக்­காற்று நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வேண்டும்.
கட்­சி­யாகக் கூடி பேசித் தீர்­மானம் எடுக்­காமல் குழுக்­க­ளாகப் பிரிந்து கிளர்ச்சி செய்­ப­வர்கள் பத­வி­களை துறக்­க­வேண்டும். அதை­வி­டவும் கட்­சி­யை­விட்டு வெளி­யேற்­று­வதே சிறப்­பாக இருக்கும்” என்று ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சேகா கிரி­பத்­கொ­டையில் இடம்­பெற்ற கூட்­ட­மொன்றில் குறிப்­பிட்­டி­ருந்தார்.

கருவின் அமைதி

ஐ.தே.க.வின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரி­யவின் பெயரும் அடி­பட்டு வரு­கின்­றது. தன்னை ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக நிய­மித்தால் அதற்கு முகம்­கொ­டுக்கத் தயா­ரென ஏற்­கெ­னவே கரு அறி­வித்­தி­ருந்தார்.

ரணி­லுக்கும் கருவை ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக நிய­மிக்கும் விருப்பம் இருப்­ப­தா­கவே கூறப்­ப­டு­கின்­றது. எனினும், கரு எந்­த­வி­தத்­திலும் ஆர்ப்­பா­ட­மில்­லாமல் தொடர்ந்து அமை­தி­யாக செயற்­பட்டு வரு­கின்றார்.
இந்­நி­லையில், கரு சபா­நா­யகர் பத­வி­யி­லி­ருந்து வில­கு­வ­தாக செய்­தி­யொன்று பர­வி­யி­ருந்­தது. எனினும், குறித்த விடயம் வதந்­தி­யென சபா­நா­யகர் அலு­வ­லகம் அறி­வித்­தி­ருந்­தது.

‘இராப்­போ­சன விருந்து’

ஜனா­தி­பதி வேட்­பாளர் யார்? என்ற சர்ச்­சையால் ஐக்­கிய தேசி­யக்­கட்சி உறுப்­பி­னர்கள் இரு அணி­க­ளாக பிரிந்து நின்று அர­சியல் சமரில் ஈடு­பட்­டு­வ­ரு­கின்­றனர். இதனால் சிறி­கொத்த சொற்போர் கள­மாக மாறி­விட்­டது என்றே கூற­வேண்டும்.

மறு­பு­றத்தில் காத்­தி­ருந்தே களைத்­துப்போய், பொறு­மை­யி­ழந்­து­வரும் பங்­கா­ளிக்­கட்­சிகள், எந்­நே­ரத்தில் வேண்­டு­மா­னாலும் பொங்­கி­யெ­ழுந்து மாற்று நட­வ­டிக்­கையில் இறங்­கக்­கூடும் எனவும் முன்­னெச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

இவ்­வாறு பர­ப­ரப்­புக்கும், விறு­வி­றுப்­புக்கும் மத்­தியில் ஐக்­கிய தேசி­யக்­கட்சி உறுப்­பி­னர்கள் இரு அணி­க­ளாக பிரிந்­து­நின்று இராப்­போ­சன விருந்து அர­சி­யலில் ஈடு­பட்­டு­வ­ரு­கின்­றனர்.

சஜித் ஆத­ரவு அணி அமைச்­ச­ரான சுஜீவ சேன­சிங்­கவே இந்த ‘டின்னர்’ அர­சி­ய­லுக்கு துவக்கப் புள்­ளி­வைத்தார். ‘டின்னர் பார்ட்டி’ என்ற போர்வையில் சுஜீவவின் இல்லத்தில் முகாமிட்ட சஜித் ஆதரவு உறுப்பினர்கள், ஜனாதிபதி தேர்தல் குறித்து விரிவாக அலசி ஆராய்ந்தனர்.

இதையடுத்து அவசர – அவசரமாக ரணிலின் சகாவான சரத் பொன்சேகா வும் தனது இல்லத்தில் இராப்போசன விருந்தை ஏற்பாடு செய்தார்.

இதில் ரணிலுக்கு விசுவாசமான உறுப்பினர்கள் பங்கேற்று, கூட்டணி குறித்தும், ஜனாதிபதி தேர்தல் சம்பந்தமாகவும் கலந்துரையாடினர்.
அதன்பின்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கட்சி உறுப்பினர்களுக்கு அலரிமாளிகையில் இராப்போசன விருந்து வழங்கினார். இதில் சஜித் ஆதரவு அணி உறுப்பினர்களும் பங்கேற்றிருந்தனர்.

இந்நிலையில் அமைச்சர் மங்கள சமரவீரவின் வீட்டில் நேற்றுமுன்தினம் இரவு ஐ.தே.க. உறுப்பினர்களுக்கு இராப்போசன விருந்து வழங்கப்பட்டுள்ளது. இதில் சஜித் ஆதரவு அணி உறுப்பினர்களே பங்கேற்றிருந்தனர்.
இதற்கு பதிலடி நடவடிக்கையாக அமைச்சர் ரவி கருணாநாயக்கவும் இராப்போசன விருந்து வைப்பதற்கு தயாராகிவருகிறார் என தகவல் கசிந்திருக்கிறது. எது எப்படியோ அரசியல் அவதானிகளுக்கு ரணிலின் இழுத்தடிப்பும் பெரும் விருந்துதான்.

ஜனாதிபதித் தேர்தலுக்குரிய காலம் எழுமாறாக குறிப்பிடப்பட்டாலும் உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
ஜனாதிபதி தேர்தலுக்கான தினம் அறிவித்த பின்னர், அல்லது அதே தினத்திலோ அண்மித்த திகதியொன்றில்தான் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவிப்பாரென எதிர்பார்க்கலாம்.

எஸ்.என்.எம்.ஸுஹைல்

vidivelli

Leave A Reply

Your email address will not be published.