யார் இந்த உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர்?

0 976

மத்­திய மாகா­ணத்தின் கண்டி மாவட்­டத்­தி­லுள்ள நாவ­ல­பிட்­டி­யவில் 29.05.1960 இல் பிறந்­தவர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர். நாவ­லப்­பிட்டி சென். மேரிஸ் கல்­லூ­ரியில் க.பொ.த. சாதா­ரண தரம் வரை கற்ற அவர், உயர் கல்­விக்­காக 1976 ஆம் ஆண்டு பேரு­வளை வந்தார். அதே வருடம் ஜாமிஆ நளீ­மிய்­யாவில் இணைந்து கல்விப் பணியைத் தொடர்ந்த அவர், பேரா­தனைப் பல்­க­லைக்­க­ழக வெளி­வாரி மாண­வ­னா­கவும் இணைந்து கொண்டார். 1984ஆம் ஆண்டு கலை­மானிப் பட்டப்படிப்­பையும் (பி.ஏ) பூர்த்தி செய்து கொண்­ட­த­னை­ய­டுத்து திரு­மண பந்­தத்தில் இணைந்தார். 4 ஆண் பிள்­ளைகள், 4 பெண் பிள்­ளை­களின் தந்­தை­யா­ரான இவர், தற்­போது ஹிங்­கு­லோயா, மாவ­னல்லை பகு­தியில் வசித்து வரு­கிறார்.

உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் மென்­மை­யா­னவர். இங்­கி­த­மா­னவர். ஆர­வா­ர­மின்றி பணி செய்­பவர். உள்­ளத்­திலும் உல­கத்­திலும் நன்­மை­களை வளரச் செய்து தீமை­களைக் குறைக்க வேண்டும் என்­ப­தற்­காக உழைத்து வரு­பவர். அமை­தியும் சுபீட்­சமும் நிறைந்த ஒரு நல்­வாழ்க்­கைக்கு வழி­காட்டும் இலட்­சி­யத்தை இலக்­காகக் கொண்­டவர். அதற்­கேற்ப பணி­யாற்றி வரு­பவர். வன்­மு­றைக்கு எதி­ரா­னவர். நன்­மு­றையே எங்கள் வழி என உரத்துச் சொல்­பவர்.
“அன்பு, சகோ­த­ரத்­துவம், பரஸ்­பர உறவு, மனித நேயம் முத­லான உய­ரிய விழு­மி­யங்­களை மேம்­ப­டுத்தல், நாட்டின் முன்­னேற்றம், அபி­வி­ருத்தி என்­ப­வற்றில் பங்­க­ளிப்பு வழங்­குதல்…” என்ற இலங்கை ஜமா­அத்தே இஸ்­லா­மியின் யாப்­புக்குள் நின்று தனது உரை­க­ளையும் எழுத்­துக்­க­ளையும் செயற்­பா­டு­க­ளையும் அமைத்து வரு­பவர்.

பொது­வாக இலங்கைப் பிர­ஜை­க­ளுக்கும் குறிப்­பாக இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கும் பய­ன­ளிக்­கக்­கூ­டிய சமூக நலத் திட்­டங்கள், நாட்டின் அபி­வி­ருத்­திக்கும் அமை­திக்­கு­மான செயற்­திட்­டங்­களை வகுப்­பதில் முன்­னின்று உழைத்து வரு­பவர்.

சமூ­கங்­க­ளுக்கு மத்­தியில் பரஸ்­பர புரிந்­து­ணர்­வையும் நல்­லெண்­ணத்­தையும் வளர்க்க உதவும் செயற்­திட்­டங்­களை முன்­னெ­டுப்­பதில் கூடுதல் கரி­சனை கொண்­டவர்.

மனித நலன்கள், மனித உரி­மைகள் முத­லா­ன­வற்றை உறு­திப்­ப­டுத்­து­வதில் தன்­னா­லான பங்­க­ளிப்பை நல்கி வரு­பவர்.

மனித நலன் காக்க எல்லா வழி­க­ளிலும் உழைக்க வேண்டும், மனித குலம் மகிழ்ச்­சி­யா­கவும் ஆரோக்­கி­ய­மா­கவும் இருக்க வேண்டும், எமது நாட்டில் வாழும் அனை­வரும் அடிப்­படை வாழ்க்கைத் தரத்தைப்  பெறு­வது உத்­த­ர­வா­தப்­ப­டுத்­தப்­பட வேண்டும் என அழுத்தம் திருத்­த­மாக பேசி வரு­பவர்.

பன்­மைத்­து­வத்தை அங்­கீ­க­ரித்தல், இன, மத, சாதி, மொழி, பிர­தேச வேறு­பா­டு­க­ளுக்­கப்பால் ‘நாம் இலங்­கையர்’ என்ற தேசிய அடை­யா­ளத்­துடன் தேசத்தை நேசித்தல், பாது­காத்தல் அதன் உண்­மை­யான அபி­வி­ருத்­தியில் பங்­க­ளிப்புச் செய்தல், இவற்­றி­னூ­டாக சக­வாழ்வைக் கட்­டி­யெ­ழுப்­புதல் அவ­ரது கனவு. அதற்­காக தனது பேனா முனையை ஆயு­த­மாகப் பயன்­ப­டுத்தி வரு­பவர்.
இயற்கை வளங்­களைப் பாது­காப்­பது மட்­டு­மல்ல அவற்றை வளப்­ப­டுத்தி, விருத்தி செய்து அடுத்த பரம்­ப­ரைக்கு ஒப்­ப­டைக்க வேண்டும் என்­ப­தற்­காக தேசிய மர­ந­டுகை வேலைத் திட்­டத்­திற்கு முன்­னு­ரிமை வழங்கி வரு­பவர்.
நீதியை நிலை­நாட்­டு­கின்ற, மக்கள் நலனை முன்­னி­றுத்தி வெளிப்­படைத் தன்­மை­யோடு செயற்­ப­டு­கின்ற ஒரு சிறந்த ஆட்­சியை இந்த நாடு கொண்­டி­ருக்க முன்­னெ­டுக்­கப்­படும் அர­சியல் பணி­க­ளுக்கு துணை நிற்க வேண்டும் என அழுத்திச் சொல்­பவர்.

நாட்டின் இறை­மை­யையும் தேசிய ஒரு­மைப்­பாட்­டையும் உறு­திப்­ப­டுத்­து­கின்ற… சமூ­கங்­க­ளுக்­கி­டையே ஒற்­று­மை­யையும் சக­வாழ்­வையும் ஊக்­கு­விக்­கின்ற… உண்­மையின் பக்கம் மட்­டுமே மக்­களை வழி­ந­டத்­து­கின்ற விழு­மி­ய­மிக்க ஊடக கலா­சாரம் (Value based media Culture)ஒன்றைக் கட்­டி­யெ­ழுப்­பு­வதன் தேவையை வலி­யு­றுத்தி வரு­பவர்.

இஸ்­லாத்தைக் கற்­ப­தற்கு ஊக்­க­ம­ளித்தல்… இஸ்­லாத்தைப் பற்­றிய சரி­யான புரி­தல்­களை முன்­வைத்தல்… இஸ்­லாத்தை நடை­மு­றைப்­ப­டுத்த முஸ்­லிம்­க­ளுக்கு வழி­காட்­டல்­களை வழங்­குதல்… இஸ்­லா­மிய வழியில் வாழ விரும்பும் தனி மனி­தர்­க­ளையும் அத்­த­கை­ய­வர்­களைக் கொண்ட இஸ்­லா­மியக் குடும்­பங்­க­ளையும் உரு­வாக்­குதல் முத­லான உயர்ந்த இலட்­சி­யங்­க­ளோடு வாழ்ந்து வரு­பவர்.

நடு­நிலைச் சிந்­த­னை­யுடன் வாழ்ந்து வரும் உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர், நடு­நிலைச் சிந்­த­னை­யின்பால் முஸ்லிம் சமூ­கத்தை வழி­ந­டத்தும் முயற்­சி­களில் மும்­மு­ர­மாக ஈடு­ப­டு­பவர்.

உயர்ந்த நோக்­கத்­திற்­காக உழைக்கும் அனை­வ­ரு­டனும் இணைந்து பணி­யாற்­று­வ­துடன் மனிதம் மேலோங்க இணையும் அனை­வ­ரு­டனும் கைகோர்த்து நல்­ல­தொரு தேசம் காண வேண்டும் எனும் நோக்கில் 1994 முதல் 2018 வரை இலங்கை ஜமா­அத்தே இஸ்­லா­மிக்கு தலை­மைத்­துவம் வழங்கி வழி­ந­டத்தி வந்­தவர்.

இவை எல்­லா­வற்­றுக்கும் அவ­ரது உரை­களும் சொற்­பொ­ழி­வு­களும் விரி­வு­ரை­களும் கட்­டு­ரை­களும் ஆக்­கங்­களும் தகுந்த சான்­றா­தா­ரங்கள்.

அல்­ஹ­ஸனாத் மாத இதழ், எங்கள் தேசம் பத்­தி­ரி­கை­யிலும் விடி­வெள்ளி, நவ­மணி ஆகிய தேசிய நாளி­தழ்­க­ளிலும் பல்­வேறு தலைப்­பு­களில் 250 இற்கும் மேற்­பட்ட கட்­டு­ரை­களை எழு­தி­யுள்ளார். அவற்றுள் சில:

·பல்­லின சமூ­கத்தின் மத்­தியில் பண்­பாட்டு எழுச்­சியின் தேவை ·முஸ்­லிமின் தேச அடை­யாளம் ·நல்­ல­வர்­களே! உங்­க­ளுக்­குதான் இந்தச் செய்தி! ·பயங்­க­ர­வாதம் ஒழி­யுமா? ·சமூக ஒரு­மைப்­பாட்டின் மையப்­புள்­ளி·­தன்­பாட்­டி­லி­ருந்து சமூக வாழ்வில் பங்­கெ­டுக்கும் பண்­பாடு நோக்கி, சகோ­தர சிங்­கள மக்­க­ளுடன் ஒரு சில நிமி­டங்கள், பயங்­க­ர­வாதம் தொடர்பில் பண்­பட்­ட­வர்­களின் பார்வை, நல்­லாட்சி மல­ரட்டும்!, சிறு­பான்மை சூழலில் முஸ்­லிம்­களின் அடை­யா­ளங்கள், இலங்­கை­யர்கள் இல்­லாத இலங்கை (தேச அடை­யா­ளத்தை இழந்து நிற்கும் இலங்­கை­யர்கள்), நாக­ரிக வளர்ச்­சியை நலி­வ­டையச் செய்யும் சமூக நோய்கள், மனி­தர்­களை மதிப்­பதில் நாமும் அவர்­களும், வட கிழக்கில் இன­மு­றுகல், காரணம்?, எமது மண்ணின் உடன் பிறப்பா? முரண்­பாடு,அமை­தி­யின்­மைக்கு ஓர் அதி­ச­ய­மான காரணம், தீர்க்­கப்­பட வேண்­டி­யது மக்­களின் பிரச்­சி­னை­களா? அர­சியல் தலை­வர்­களின் பிரச்­சி­னை­களா?, அறிவு இருக்­கி­றது ஒழுக்­க­மில்­லையா? அல்லது அறிவே ஒழுக்கமிழந்து தவிக்கிறதா? ·விழுமியங்களற்ற ஓர் உலகை நோக்கி மனித சமூகத்தை வழிநடத்தும் புதிய மதம்,யதார்த்தங்களை ஏற்றுக் கொள்ளல்…, பிறந்து வாழ்தலும் அறிந்து வாழ்தலும், திரை பெண்களுக்கா? ஆண்களுக்கா?, முஸ்லிம் தனியார் சட்டத்திருத்தம் கரை சேருமா?, பாதை தெளிவானது, பயணிக்க யார் தயார்? (1997), ஆழிப் பேரலையின் அடியினிலே (2005), அழைப்பின் நிலம் (2012), பெண் நீதமும் நிதர்சனமும் (2014), தனி மனித, சமூக வாழ்வில் இறை நியதிகள் (2014), அழைப்பின் வழியில் அலைக்கழியாத பயணம் (2016), அழைப்பின் மொழி (2016), ஸூரதுல் கஃப் விளக்கவுரை (2016), முஸ்லிம் கான்தா எந்தும (2019) முதலான நூல்களை எழுதி மக்கள் மனம் வென்றவர்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.