இவ்வருட ஹஜ் கடமையை மேற்கொள்வதற்கு ஹஜ் முகவர் நிலையமொன்றுக்கு உரிய கட்டணங்களைச் செலுத்தி பயணிக்கத் தயாராக இருந்த 8 ஹஜ் விண்ணப்பதாரிகளை இறுதி நேரத்தில் கைவிட்ட ஹஜ் முகவர் பாதிக்கப்பட்டுள்ள ஹஜ் விண்ணப்பதாரிகள் செலுத்திய கட்டணங்களைத் திருப்பிச் செலுத்துவதாக உறுதியளித்து முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துக்கு கடிதம் கையளித்துள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம். மலிக் தெரிவித்தார்.
இவ்வருட ஹஜ் ஏற்பாடுகளின்போது ஹஜ் முகவர் ஒருவர் 8 ஹஜ் விண்ணப்பதாரிகளிடம் ஹஜ் கடமைக்கான கட்டணங்களைப் பெற்றுக்கொண்டு இறுதி நேரத்தில் கைவிட்டமையினால் அவர்கள் ஹஜ் கடமையினை நிறைவேற்ற முடியாமற்போனது.
குறிப்பிட்ட 8 ஹஜ் விண்ணப்பதாரிகளும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் முறைப்பாடு களைச் செய்திருந்தனர். ஹஜ் முகவர் விசாரணைக்குட்படுத்தப்பட்டார். இதனையடுத்து 8 ஹஜ் விண்ணப்பதாரிகளில் இருவரின் கட்டணங்களை ஹஜ் முகவர் திருப்பிச் செலுத்தியதுடன் ஏனைய அறுவர் செலுத்திய கட்டணங்களை எதிர்வரும் 10 ஆம் திகதி செலுத்துவதாக கடிதம் மூலம் உறுதியளித்துள்ளார். அவ்வாறு 10 ஆம் திகதி கட்டணங்கள் செலுத்தப்படாவிட்டால் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
ஏ.ஆர்.ஏ.பரீல்
vidivelli