இன, சமயங்களுக்கு இடையிலான பதற்ற நிலைமைகளை உதாசீனம் செய்ய முடியாது

ஐ. நா. விசேட அறிக்கையாளர் அஹமட் சஹீட்

0 1,491

இலங்­கையில் சமய அல்­லது நம்­பிக்கை சுதந்­திரம் மதிக்­கப்­படும் நிலையைப் பலப்­ப­டுத்தும் பொருட்டு, அந்­நாட்டில் இனங்­க­ளுக்­கி­டை­யிலும், சம­யங்­க­ளுக்­கி­டை­யிலும் நீறு­பூத்த நெருப்­பாக உள்ளே கனன்று கொண்­டி­ருக்கும் பதற்ற நிலை­மை­களைத் தணிப்­ப­தற்கு அதி­கா­ரிகள் உட­ன­டி­யாக நட­வ­டிக்கை எடுக்க வேண்­டு­மென சமய அல்­லது நம்­பிக்கை சுதந்­திரம் தொடர்­பான ஐ.நா. விசேட அறிக்­கை­யாளர் அஹமட் சஹீட் குறிப்­பி­டு­கின்றார்.

இலங்­கையில் மேற்­கொண்ட 12 நாள் விஜ­ய­மொன்றின் முடி­வின்­போது சமர்ப்­பித்­தி­ருக்கும் ஓர் அறிக்­கையில் சஹீட் பின்­வ­ரு­மாறு குறிப்­பிட்­டுள்ளார்: “இலங்­கையில் இவ்­வாண்டில் இடம்­பெற்ற நாச­க­ர­மான உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்­கு­தல்கள் மற்றும் அதன் பின்னர் நிகழ்ந்த கும்பல் வன்­முறை என்­ப­வற்­றை­ய­டுத்து, இலங்­கையில் இனத்­துவ, சமய சமூ­கங்­க­ளுக்­கி­டையில் மிகவும் பாரா­தூ­ர­மான ஒரு நம்­பிக்கைக் குலைவு தோன்­றி­யுள்­ளது. இந்தப் பதற்ற நிலை­மை­களை உதா­சீனம் செய்­ய­மு­டி­யாது.”

“குண்டுத் தாக்­கு­தல்­க­ளை­ய­டுத்து அர­சாங்கம் உட­ன­டி­யாக நிலை­மை­களைப் பெரு­ம­ள­வுக்கு அல்­லது ஓர­ள­வுக்கு கட்­டுப்­பாட்டின் கீழ் கொண்­டு­வந்­தி­ருந்­தது. அதே­வே­ளையில், பல்­வேறு சம­யங்­களைப் பின்­பற்றி வரும் சமூ­கங்கள் தமது பாது­காப்பு தொடர்­பாக பெரு­ம­ள­வுக்கு கவலை கொண்­ட­வர்­க­ளாக இருந்து வரு­கின்­றார்கள். ஒரு­சில சமயத் தீவி­ர­வா­திகள் நாட்டில் வெறுப்பு மற்றும் வன்­முறை என்­ப­வற்றைத் தூண்­டி­வ­ரு­வதே இதற்­கான கார­ண­மாகும்.

“முஸ்லிம் சமூ­கத்­தி­னரை இலக்­காகக் கொண்டு முன்­னெ­டுக்­கப்­பட்டு வரும் வெறுப்பைத் தூண்டும் பிரச்­சா­ரங்­க­ளுக்கு எதி­ராக அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுக்கவேண்டும்.

இந்த வெறுப்பு பிர­சா­ரங்கள் ஒழுங்­கு­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டாத ஊட­கங்­க­ளுக்கு ஊடாக பரப்­பப்­பட்டு வரு­வ­துடன், அவற்றின் மூலம் அர­சியல் தா­யத்­திற்­காக இனங்­க­ளுக்­கி­டை­யிலும், சம­யங்­க­ளுக்­கி­டை­யிலும் முறுகல் நிலை­மைகள் தூண்­டப்­பட்டு வரு­கின்­றன.

“வெறுப்பு மற்றும் வன்­முறை என்­ப­வற்றைத் தூண்­டு­வ­தற்­கான செயல்­களைத் தடுக்கும் விட­யத்தில் அரசு நட­வ­டிக்கை எடுக்கத் தவ­றினால் தீவி­ர­வாதம் தலை­தூக்­கு­வ­தற்கு உசி­த­மான ஒரு சூழல் தோன்­று­வ­துடன், சமா­தா­னத்தைக் கட்­டி­யெ­ழுப்பும் விட­யத்­திலும் நாடு பாரிய சவால்­களை எதிர்­கொள்ள நேரிடும். இனங்­க­ளுக்­கி­டை­யிலும், மதங்­க­ளுக்­கி­டை­யிலும் தோன்­றி­யி­ருக்கும் இந்த முறுகல் நிலை­மை­க­ளுடன் சம்­பந்­தப்­பட்ட சம்­ப­வங்கள், அங்­கொன்றும் இங்­கொன்­று­மாக நிகழும் வெறு­மனே தனித்த சம்­ப­வங்­க­ளாக இருந்து வரு­கின்­ற­தெனக் கரு­தப்­ப­டக்­கூ­டாது. உயிர்த்த ஞாயிறு குண்­டுத்­தாக்­கு­தல்கள், அத­னை­ய­டுத்து நாட்டில் கட்­ட­விழ்த்து விடப்­பட்ட வன்­முறைச் சம்­ப­வங்கள் என்­ப­வற்­றுக்கு நீண்ட காலத்­திற்கு முன்­ன­ரேயே இலங்­கையில் இனங்­க­ளுக்­கி­டை­யிலும், சம­யங்­க­ளுக்­கி­டை­யிலும் பதற்ற நிலை ­மை­களும், முறுகல் நிலை­மை­களும் நிலவி வந்­துள்­ளன.”

இலங்கை நீண்ட கால­மாக நிலவி வந்­தி­ருக்கும் சமய நல்­லி­ணக்கம் மற்றும் சக­வாழ்வு தொடர்­பான பாரம்­ப­ரி­யங்­க­ளையும், அதே­போல சகிப்­புத்­தன்மை மற்றும் நிலைத்து நிற்­கக்­கூ­டிய சமா­தானம் என்­ப­வற்­றையும் கொண்ட ஒரு நாடாக இருந்து வந்­துள்­ளது. சமய மற்றும் அர­சியல் வன்­முறை, பொறுப்­புக்­கூறும் நிலை இல்­லா­தி­ருத்தல், நிறு­வ­னங்கள் குறித்த அவ­நம்­பிக்கை மற்றும் பெரும்­பான்மை சமூகம் அனு­ப­வித்து வரு­வ­தாகக் கரு­தப்­படும் சிறப்­பு­ரி­மைக்கு எதி­ரான மனக்­க­சப்பு என்­பன இந்த சக­வாழ்­வுக்கும், சமா­தா­னத்­துக்கும் இப்பொ­ழுது அச்­சு­றுத்­தலை எடுத்து வந்­துள்­ளன.

“அனைத்து மக்­க­ளி­னதும் உரி­மை­களைப் பாது­காப்­ப­தற்கும், குற்­ற­மி­ழைக் கும் நபர்­களை அவர்கள் எந்த இனங்­களை, எந்த சம­யங்­களை சார்ந்­த­வர்­க­ளாக இருந்து வந்­தாலும் சரி, தமது செயல்­க­ளுக்குப் பொறுப்­புக்­கூற வைப்­ப­தற்கும் இலங்கை தீவி­ர­மான வழி­மு­றை­களை முன்­னெ­டுப்­ப­தற்­கான தருணம் இப்­பொ­ழுது வந்­துள்­ள­து”­என ஐ.நா. நிபுணர் குறிப்­பிட்டார். “வன்­முறை, இடப்­பெ­யர்ச்சி மற்றும் பெண் அடக்­கு­முறை என்­ப­வற்­றையும் உள்­ள­டக்­கிய இனத்­துவ ரீதி­யான, சமய ரீதி­யான காழ்ப்­பு­ணர்ச்­சிகள் தொடர்­பான பெண்­களின் அனு­ப­வங்­களும் வினைத்­தி­றன்­மிக்க விதத்தில் கவ­னத்தில் எடுக்­கப்­ப­டுதல்வேண்டும்”.

“நம்­பிக்கை மற்றும் சமா­தானம் என்­ப­வற்றைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கும், அதே­போல நல்­லி­ணக்­கத்தை எடுத்து வரு­வ­தற்­கு­மென சமூ­கங்­க­ளுக்­கி­டை­யிலும், சம­யங்­க­ளுக்­கி­டை­யிலும் தொடர்ச்­சி­யான ஓர் உரை­யா­ட­லுக்­கான தேவை இருந்து வரு­கின்­றது.

மித­வாதக் குரல்­க­ளுக்­கான வெளிகள் வழங்­கப்­ப­டுதல் வேண்டும் மக்கள் தமது கரி­ச­னை­களை முன்­வைப்­ப­தற்கும், மனக்­கு­றை­களைத் தீர்த்துக்கொள்­வ­தற்கும் அந்த வெளிகள் திறந்து விடப்­ப­டுதல் வேண்டும்” என ஐ .நா. நிபுணர் குறிப்­பிட்டார்”.

“நல்­லி­ணக்கம் மற்றும் சமா­தான சக­வாழ்வை மேம்­ப­டுத்­துதல் ஆகிய பிரச்­சி­னைகள் தொடர்­பாக பல்­வேறு அரச நிறு­வ­னங்கள், சிவில் சமூக அமைப்­புக்கள் மற்றும் சமயத் தலை­வர்கள் ஆகிய தரப்­புக்­க­ளினால் உற்­சா­க­மூட்­டக்­கூ­டிய பல முன்­மு­யற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்டு வந்­தி­ருப்­ப­தனை நான் பார்த்­துள்ளேன்.

“எவ்­வா­றி­ருப்­பினும், சமய அல்­லது நம்­பிக்கைச் சுதந்­திரம் என்­பது சமய சகிப்­புத்­தன்­மையை மட்டும் குறிக்­க­வில்லை; குறிப்­பிட்ட நம்­பிக்­கையைக் கொண்­டி­ருப்­ப­தற்­கான அல்­லது நம்­பிக்­கையைக் கொண்­டி­ரா­தி­ருப்­ப­தற்­கான, சொந்தத் தெரிவின் அடிப்­ப­டையில் ஒவ்­வொரு தனி­ந­பரும் ஏற்­றத்­தாழ்­வற்ற விதத்தில் நடத்­தப்­ப­டு­வ­தற்­கான உரிமை தொடர்­பான ஒரு விட­ய­மாக அது இருந்­து­வ­ரு­கின்­றது.

அந்த நம்­பிக்­கையை அல்­லது நம்­பிக்­கை­யின்­மையை அவர் அந்­த­ரங்­க­மாக அல்­லது பகி­ரங்­க­மாக வெளிப்­ப­டுத்­தக்­கூ­டிய நிலையும் இருந்து வருதல் வேண்டும்”.

சட்­டத்தின் ஆட்­சியைப் பலப்­ப­டுத்­துதல், மூல­கா­ர­ணங்­களைக் கவ­னத்தில் எடுத்தல், அனை­வ­ருக்­கு­மான கல்­வியை விருத்தி செய்தல் மற்றும் சமய பன்­மு­கத்­தன்­மையைப் பாது­காத்தல் என்­ப­வற்­றையும் உள்­ள­டக்­கிய பல்­வேறு வழி­மு­றை­களின் மூலம் சமய தீவி­ர­வா­தத்­திற்கு எதி­ராக ஈடு­கொ­டுக்கும் ஆற்­றலைக் கட்­டி­யெ­ழுப்ப முடி­யு­மென ஐ.நா. நிபுணர் கூறினார்.

தேர்­தல்­க­ளுக்கு முன்­ன­ருள்ள காலப் பிரி­வின்­போது, மக்கள் அடிப்­படை சுதந்­தி­ரங்­களை அனு­ப­விப்­ப­தற்கு இய­லு­மை­யுடன் கூடிய ஒரு சூழ்­நி­லையை உரு­வாக்க வேண்­டு­மெ­னவும், தேர்தல் ஆதா­யத்­திற்­காக இனத்­துவ– சமய பதற்ற நிலை­மை­களைப் பயன்­ப­டுத்­திக்­கொள்ள வேண்டாம் எனவும் அரசாங்கத்திடமும், ஏனையவர்களிடமும் நான் கேட்டுக் கொள்கின்றேன்” என சஹீட் கூறினார்.

தனது விஜயத்தின்போது அவர் அரச அதிகாரிகளையும், உள்ளூர்மட்ட அதிகாரத் தரப்புக்களையும் சந்தித் தார். அவர் நாட்டின் வடக்கு, கிழக்கு, மத்திய மற்றும் வடமேல் ஆகிய மாகாணங்களுக்கு விஜயம் செய்ததுடன் இனக்குழுக்கள், சமய அல்லது நம்பிக்கை சமூகங்கள், சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் ஐ.நா. முகவரகங்கள் ஆகிய தரப்புக்களை சேர்ந்த பிரதிநிதிகளுடன் சந்திப்புக்களை நடத்தினார். தனது முடிவுகள் மற்றும் பரிந்துரைகள் என்பவற்றை உள்ளடக்கிய அறிக்கையை விசேட அறிக்கையாளர் 2020 மார்ச் மாதத்தில் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கவுள்ளார்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.