நம்பகமான வேட்பாளரையே எமது கட்சி ஆதரிக்கும்

அ.இ.ம.கா. தலைவர் ரிஷாட்

0 678

எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யி­ட­வுள்ள வேட்­பா­ளர்­களின் விப­ரங்கள் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­விக்­கப்­பட்­டதன் பின்பே அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் எந்தக் கட்­சியைச் சேர்ந்த வேட்­பா­ள­ருக்கு ஆத­ரவு வழங்­கு­வது என்­பது பற்றி தீர்­மா­னிக்கும். முஸ்லிம் சமூ­கத்தின் அபி­லா­ஷை­களை நிறை­வேற்­று­வ­தற்கு உறுதி வழங்கும்,

நம்­ப­கத்­தன்மை கொண்ட வேட்­பா­ள­ருக்கே எமது கட்சி ஆத­ர­வ­ளிக்கும் என அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரிசாத் பதி­யுதீன் “விடி­வெள்­ளி”க்குத் தெரி­வித்தார்.

எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்தல் தொடர்பில் கட்­சியின் நிலைப்­பாடு தொடர்பில் வின­வி­ய­போதே அவர் இவ்­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில்

“ஜனா­தி­பதித் தேர்தல் வேட்­பா­ளர்கள் தொடர்பில் விப­ரங்கள் வெளி­யி­டப்­பட்­டதும் முஸ்லிம் சமூகம் தொடர்பில் நாம் முன்­வைக்கும் கோரிக்­கை­களை நிறை­வேற்­று­வ­தாக உத்­த­ர­வா­த­ம­ளிக்கும் வேட்­பா­ள­ருக்கு நாம் ஆத­ரவு வழங்­குவோம். இந்தத் தீர்­மானம் கட்­சியின் அர­சியல் உயர்­பீட கூட்­டத்­திலே மேற்­கொள்­ளப்­படும்.

அத்­தோடு நாட்டில் இன நல்­லி­ணக்­கத்தைக் கட்­டி­யெ­ழுப்பி பொரு­ளா­தார வளர்ச்­சிக்கு திட்­டங்­களை வகுத்­துள்ள வேட்­பாளர் தொடர்­பிலும் எமது கட்சி கவனம் செலுத்தும். அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் இது­வரை எந்தத் தரப்­பு­டனும் பேச்சு வார்த்­தை­களில் ஈடு­ப­ட­வில்லை.

தேர்தல் திகதி அறி­விக்­கப்­பட்டு, வேட்பு மனு­தாக்கல் செய்­யப்­படும் போதே, ஜனா­தி­பதி வேட்பாளர்­க­ளுடன் பேச்சுவார்த்­தை­களை நடாத்த முடியும் என்றார்.

இதே­வேளை, அல­ரி­மா­ளி­கையில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் நடை­பெற்ற ஐக்­கிய தேசிய முன்­ன­ணியைச் சேர்ந்த அர­சியல் கட்­சி­களின் தலை­வ­ர்­க­ளது கூட்­டத்தில் அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் தலைவர் ரிசாத் பதி­யுதீன் கலந்து கொள்­ள­வில்லை.

ஐக்­கிய தேசிய கட்­சியின் தலை­மையில் ஜன­நா­யக தேசிய கூட்­டணி ஒன்­றினை அமைப்­பது தொடர்­பிலும் ஜனா­தி­பதி வேட்­பாளர் நிய­மனம் தொடர்­பிலும் இந்தக் கூட்டம் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது. கூட்­டத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் அமைச்சர் மனோ கணேசன், ஜாதிக ஹெல உறுமயவின் தலைவலர் சம்பிக்க ரணவக்க ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

vidivelli

 

Leave A Reply

Your email address will not be published.