ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம்கள் அவசரப்பட்டு முடிவு எடுக்கக் கூடாது

ஜனாதிபதி சட்டத்தரணி ஸுஹைர் வேண்டுகோள்

0 844

தற்­போது நாடு எதிர்­நோக்­கி­யுள்ள ஜனா­தி­பதித் தேர்தல் மிக முக்­கி­ய­மா­ன­தொன்­றாக விளங்­கு­கின்­றது. இத்­தேர்­தலில் நான்கு பிர­தான கட்­சி­களும், மூன்று அபேட்­ச­கர்­களும் போட்­டி­யி­டக்­கூ­டிய சாத்­தி­யங்கள் நில­வு­கின்­றன. ஆனாலும் இத்­தேர்தல் தொடர்பில் முஸ்­லிம்கள் தேர்தல் விஞ்­ஞா­ப­னங்­க­ளையும் கட்­சி­க­ளது அபேட்­ச­கர்கள் குறித்தும் கவனம் செலுத்­தாமல் அவ­ச­ரப்­பட்டு முடி­வு­களை எடுத்­து­வி­டக்­கூ­டாது என்று முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும், ஜனா­தி­பதி சட்­டத்­த­ர­ணி­யு­மான எம்.எம். ஸுஹைர் வேண்­டுகோள் விடுத்­துள்ளார் தற்­போ­தைய அர­சியல் நிலைமை தொடர்பில் விடுத்­துள்ள அறிக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டுள்ளார்.

அந்த அறிக்­கையில் அவர் மேலும் குறிப்­பிட்­டி­ருப்­ப­தா­வது, இன்­றைய கால­கட்­டத்தில் இந்­நாட்டு முஸ்­லிம்கள் பல­வி­த­மான பிரச்­சி­னை­க­ளுக்கும் நெருக்­க­டி­க­ளுக்கும் முகம் கொடுத்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். இந்­நாட்டில் ஆயிரம் வரு­டங்­க­ளுக்கும் மேலாக வாழும் முஸ்­லிம்கள் இதர சமூ­கங்­க­ளுடன் ஒற்­று­மை­யா­கவும் சக­வாழ்­வு­டனும் புரிந்­து­ணர்­வு­டனும் வாழ்ந்து வரு­கின்ற போதிலும், அண்­மைக்­கா­ல­மாக இச்­ச­மூகம் முன்­னொரு போதும் இல்­லாத வகையில் வேத­னை­க­ளுக்கும் கவ­லை­க­ளுக்கும் உள்­ளா­கி­யுள்­ளது.

குறிப்­பாக ஏப்ரல் 21 சம்­ப­வத்­திற்கு பின்னர் இந்­நாட்டு முஸ்லிம் சமூகம் பல்­வே­று­வி­த­மான பிரச்­சி­னை­களை எதிர்­கொண்டு வரு­வது யாவரும் அறிந்த விட­யமே. முஸ்­லிம்­களின் பாது­காப்பு தொடர்­பி­லான அச்­சு­றுத்தல், பயங்­க­ர­வாதம் தொடர்­பான விசா­ர­ணை­களில் முஸ்லிம் விரோத வெளி­நாட்டு உளவுப் பிரி­வு­களின் சட்­ட­வி­ரோத ஆதிக்கம், ஓரி­ரு­வரின் செயல்­க­ளுக்­காக முழு முஸ்லிம் சமூ­கத்­தையும் தீவி­ர­வா­திகள், பயங்­க­ர­வா­திகள் என முத்­திரை குத்தும் முயற்­சிகள், பொது­நிர்­வாக உள்­நாட்­ட­லு­வல்கள் அமைச்சு உடை தொடர்பில் வெளி­யிட்­டுள்ள சுற்­ற­றிக்­கையால் முஸ்லிம் பெண்கள் எதிர்­கொள்ளும் நெருக்­க­டிகள், பரீட்­சைகள் திணைக்­களம் நடாத்தும் பரீட்­சை­க­ளுக்கு தோற்றும் மாண­வர்கள் எதிர்­கொள்ளும் பிரச்­சி­னைகள், பள்­ளி­வா­சல்கள் கட்­டு­வது தொடர்­பி­லான பிரச்­சி­னைகள், மத்­ர­ஸாக்­களை நடாத்தி செல்­வது தொடர்­பி­லான பிரச்­சி­னைகள், முஸ்­லிம்­களை ஆன்­மிக ரீதியில் நல்­வ­ழிப்­ப­டுத்தும் பணியில் ஈடு­படும் அமைப்­புக்கள் எதிர்­கொள்ளும் சவால்கள் உள்­ளிட்ட பல­வித பிரச்­சி­னை­களை இந்­நாட்டு முஸ்லிம் சமூகம் தற்­போது எதிர்­கொண்­டுள்­ளது.

இவ்­வா­றான சூழ­லில்தான் நாடு ஜனா­தி­பதித் தேர்­தலை எதிர்­கொண்­டுள்­ளது. இத்­தேர்­தலில் அபேட்­ச­கர்­க­ளாக நிற்கும் வேட்­பா­ளர்­க­ளு­டனும் அவர்கள் சார்ந்த கட்­சி­க­ளு­டனும் சுதந்­தி­ர­மாக இருந்து பேசி முஸ்­லிம்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு நியா­ய­மான தீர்­வு­களைப் பெற்­றுக்­கொள்­வதும், முஸ்­லிம்­களின் அபி­லா­ஷைகள், எதிர்­பார்ப்­புக்­களை அவர்­க­ளது தேர்தல் விஞ்­ஞா­ப­னங்­களில் உள்­ள­டக்கிக் கொள்­வதும் அவ­சி­ய­மா­னது. இவை தொடர்பில் பெரும்­பான்­மை­யினர் ஏற்­ப­டுத்தித் தந்த பேரம் பேசக்­கூ­டிய அரிய வாய்ப்பு முஸ்லிம் எம்.பிக்கள் மீண்டும் அமைச்சு பத­வி­களை ஏற்­றதன் ஊடாக இழக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த சூழலில் முஸ்­லிம்கள் பொறுப்­பு­ணர்­வு­டனும் தூர நோக்­கு­டனும் சிந்­தித்து செயற்­பட வேண்­டிய காலம் இது. அதனால் எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிடும் அபேட்­சகர் யார்? அவ­ரது பின்­னணி என்ன? அவ­ரது கொள்கை, கோட்­பாடு யாது? அந்த அபேட்­சகர் இந்­நாட்டு முஸ்­லிம்கள் முகம் கொடுத்­துள்ள நெருக்­க­டி­க­ளுக்கும் பிரச்­சி­னை­க­ளுக்கும் வழங்கும் தீர்­வுகள் யாவை? என்­பன தொடர்பில் மாத்­தி­ர­மல்­லாமல் எந்த அபேட்­சகர் தமது தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் முஸ்­லிம்­களின் எதிர்­பார்ப்­புக்கும் அபி­லா­ஷை­க­ளுக்கும் இட­ம­ளித்­துள்ளார் என்­பது குறித்தும் கவனம் செலுத்தி முடி­வுகள் எடுக்­கப்­பட வேண்டும். இவ்­வி­ட­யத்தில் ஊர் மற்றும் பிர­தேச மட்­டத்தில் கலந்­து­ரை­யா­டல்கள் நடாத்­தப்­பட்டு தூர நோக்­கோடு தீர்­மா­னங்கள் எடுக்­கப்­ப­டு­வது காலத்தின் தேவை­யாகும். இவ்­வி­ட­யங்கள் தொடர்பில் கவனம் செலுத்­தாது அற்ப நலன்­களை அடைந்து கொள்­வ­தற்­காக கட்­சி­க­ளையோ அபேட்­ச­கர்­க­ளையோ ஆத­ரிப்­பதைத் தவிர்த்து சமூ­கத்­திற்­கு­ரிய பாது­காப்பு உள்­ளிட்ட ஏனைய விட­யங்கள் குறித்தும் கவ­னத்தில் எடுத்து ஊர் மட்­டத்­தி­லுள்ள சகல கட்­சி­க­ளதும் பிர­தி­நி­தி­க­ளுடன் கலந்­தா­லோ­சிப்­பது இன்றியமையாததாகும்.
கடந்த 2015 ஜனாதிபதி தேர்தலில் இந்நாட்டு முஸ்லிம் சமூகம் எடுத்த முடிவைப் பார்த்து தான் முஸ்லிம் கட்சிகள்கூட முடிவுகளை எடுத்தன என்பதையும் மறந்துவிடக் கூடாது. அதனால் பல்வேறுவிதமான நெருக்கடிகள், பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்திருக்கும் இன்றைய சூழலில் எம்மை எதிர்நோக்கியுள்ள ஜனாதிபதி தேர்தலின் மூலம் நியாயமான தீர்வுகளை பெற்றுக்கொள்வதில் முஸ்லிம்கள் பொறுப்புணர்வோடு செயற்படுவது காலத்தின் அவசியத் தேவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

vidivelli 

Leave A Reply

Your email address will not be published.