ஐ.நா. பிரதிநிதியின் பரிந்துரைகள் அமுல்படுத்தப்பட வேண்டும்

0 1,363

மத சுதந்­திரம் தொடர்­பான ஐக்­கிய நாடுகள் சபையின் விசேட அறிக்­கை­யாளர் அஹ்மட் ஷஹீத் இலங்­கைக்கு மேற்­கொண்ட உத்­தி­யோ­க­பூர்வ விஜ­யத்தின் இறு­தியில் வெளியிட்ட அறிக்கையும் ஊடகங்களுக்கு அவர் தெரிவித்த கருத்துக்களும் கவனிப்புக்குரியவையாகும். சுமார் 10 தினங்களுக்கும் மேல் இலங்கையில் தங்கியிருந்த அவர் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் நேரில் விஜயம் செய்தும் பாதிக்கப்பட்ட மக்களையும் சம்பந்தப்பட்ட முக்கியஸ்தர்களையும் சந்தித்து திரட்டிய தகவல்களின் அடிப்படையிலுமே தனது கருத்துக்களை முன்வைத்திருந்தார்.

ஏப்ரல் 21 தாக்குதலுக்குப் பின்னர் இலங்கைக்கு வருகைதந்த முக்கிய ஐ.நா. உயர் அதிகாரி என்ற வகையில் அவரது அவதானங்களும் பரிந்துரைகளும் விசேடமாக கவனத்திற் கொள்ளப்பட வேண்டியவையாகும்.

இலங்­கையில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றை­களும் அச்­சு­றுத்­தல்­களும் தொடர்ந்தும் நிகழ்­வதை தடுத்து நிறுத்த நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டா­விடின் அவர்கள் நாட்டை விட்டு வெளி­யேறும் அபாயம் ஏற்­ப­டு­மென எச்சரித்துள்ள அவர், வன்­மு­றை­களின் சூத்­தி­ர­தா­ரி­களை சட்­டத்தின் முன் நிறுத்­து­வ­திலும் சிறு­பான்­மை­யி­ன­ருக்கு பாது­காப்பு வழங்­கு­வ­திலும் பொலிசார் தோல்­வி­ய­டைந்­துள்­ள­தா­கவும் சுட்­டிக்­காட்­டியுள்ளார்.

பௌத்­தர்கள் சிறு­பான்­மை­யாக வாழும் பிர­தே­சங்­களில் கூட பௌத்த விகா­ரை­க­ளையும், புத்தர் சிலை­க­ளையும் அமைப்­ப­தற்கு அர­சாங்கம் அனு­மதி வழங்­கு­கின்­றது. எனினும் பௌத்­தர்கள் பெரும்­பான்­மை­யாக வாழும் பிர­தே­சங்­களில் ஏனைய மதத்­த­வர்கள் தமது மதம் சார்ந்த வழி­பா­டு­களை சுதந்­தி­ர­மாக முன்­னெ­டுக்க முடி­வ­தில்லை என தன்னிடம் சுட்டிக்காட்டப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் ”பெரும்­பான்­மை­யி­னத்­த­வரால் சிறு­பான்­மை­யி­னத்­தவர் மீது வன்­மு­றைகள் கட்­ட­விழ்த்து விடப்­பட்ட போது, குற்­ற­வா­ளிகள் காணொ­லிகள் மூல­மாக அடை­யாளங் காணப்­பட்­டாலும் கூட இன்­னமும் சட்­டத்தின் முன் நிறுத்­தப்­ப­ட­வில்லை. கடந்த 2014 ஆம் ஆண்டில் இடம்­பெற்ற அளுத்­கம வன்­மு­றையை இங்கு குறிப்­பிட முடியும். உயிர்த்த ஞாயி­று­ தினத் தாக்­கு­தல்­களின் பின்னர் முகத்தை மறைக்கும் வகையில் ஆடை­ய­ணி­வது தடை செய்­யப்­பட்ட நிலையில், இவ்­வி­ட­யத்தில் முஸ்லிம் பெண்­களை இலக்­கு­வைத்து அச்­சு­றுத்­த­லுக்கு உள்­ளாக்­கப்­பட்ட சம்­ப­வங்கள் பதி­வா­கி­யுள்­ளன. சமூக வலைத்­த­ளங்­கள் ஊடாக அடிப்­ப­டை­வாத, தீவி­ர­வாத கருத்­துக்கள் மற்றும் மதம் சார்­பான வெறுப்­பு­ணர்வுப் பேச்­சுக்கள் பரப்­பப்­ப­டு­வதைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட வேண்டும். அரச தலை­வர்­களும், மதத் தலை­வர்­களும் மதம் சார்­பான வெறுப்­பு­ணர்வுப் பேச்­சுக்கள் மற்றும் அடிப்­ப­டை­வா­தத்­திற்கு எதி­ரான நிலைப்­பாட்­டை வெளிப்­ப­டுத்த வேண்டும்” என்றும் அவர் தனது பரிந்துரைகளில் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கப்பால் ” இலங்கை அரசாங்கம் வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய நபர்களைச் சட்டத்தின் முன் நிறுத்துவதற்குரிய நடவடிக்கையை மேற்கொள்வதுடன், வெறுப்புணர்வை முற்றாக இல்லாதொழித்து, அத்தகைய வெறுப்புணர்வு வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்கள் நீதியைப் பெற்றுக்கொள்வதற்கான சூழ்நிலையை உருவாக்க வேண்டும். அதேபோன்று சர்வதேச சட்டங்களுக்கும், தரநியமங்களுக்கும் அமைவாக வெறுப்புணர்வுப் பேச்சுக்களைக் கண்காணிப்பதற்கான கட்டமைப்பு ஒன்றை அரசாங்கம் உருவாக்க வேண்டும்” என்றும் அவர் இலங்கை அரசாங்கத்திற்கு ஆலோசனையை முன்வைத்துள்ளார்.

அஹ்மட் ஷஹீத், தனது இலங்கை விஜயம் தொடர்பான விரிவான அறிக்கையை 2020 மார்ச் மாதம் ஜெனீவாவில் நடை­பெறவுள்ள ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையில் சமர்ப்­பிக்­கவுள்ளார்.

அந்த வகையில் ஐ.நா. பிரதிநிதி முன்வைத்துள்ள மேற்படி கருத்துக்கள் குறித்து இலங்கை அரசாங்கம் தீவிர கரிசனை செலுத்துவதுடன் அவரது பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தவும் முன்வர வேண்டும். இவற்றை மறுதலிப்பதானது மத மற்றும் மனித உரிமைகளை பேணும் விடயத்தில் இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக பொறுப்புக் கூறலிலிருந்து தப்பிக்கிறது எனும் சர்வதேசத்தின் குற்றச்சாட்டை மெய்ப்படுத்துவதாக அமைந்துவிடும்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.