விடுபட்டுப் போகக் கூடாத விஷயங்களும் விட்டுக் கொடுக்கவே கூடாத விவகாரங்களும் – 06

அரபு மயமாக்கல் குறித்த குற்றச்சாட்டும் பதிலடியும்

0 1,488

இவ்­வ­ருடம் மே மாதம் (ஏப்ரல் 21 தாக்­கு­தலைத் தொடர்ந்து) முஸ்லிம் சமூ­கத்தின் மீதான இரா­ணுவக் கெடு­பி­டி­களும் சோதனை நட­வ­டிக்­கை­களும் வர­லாற்றில் என்­றென்றும் இல்­லா­த­வாறு தீவி­ர­ம­டைந்­ததை மிக இல­குவில் நாம் மறந்துவிட முடி­யாது. 1990 களில் கிழக்கு மாகாண முஸ்லிம் கிரா­மங்­களில் புலி­களை வேட்­டை­யாட வந்த இலங்கை இரா­ணுவம் கண்ணில் பட்ட முஸ்லிம் இளை­ஞர்­க­ளையும் அள்­ளிக்­கொண்டு சென்று டயரைப் போட்டு எரித்­தது. அதனால் மாலை­யா­னதும் யாரும் வீதியில் நிற்­ப­தில்லை. அப்­படி நிற்­ப­வர்­களும் ராணுவக் கவச வாக­னத்தின் சப்தம் தூரத்தே கேட்­கும்­போது, ஆமிக்­காரன் வாறான் என்று ஓல­மிட்­டுக்­கொண்டு ஓடி ஒளி­வது தான் எங்கள் வழக்கம். இரா­ணு­வத்தின் கண்ணில் பட்டு விடக்­கூ­டாது என்­பதே எமது ஒரே அக்­கறை.

இவ்­வ­ருட மே மற்றும் ஜூன் மாத நடுப்­ப­குதி வரை “ஆமிக்­காரன் வாறான்” என்ற இரு­பது ஆண்­டு­க­ளுக்கு முன்­னைய அலறல் மீளவும் கேட்­டது. அந்த நேரத்தில் நான் ஒரு உள­வுத்­துறை முஸ்லிம் அதி­கா­ரி­யுடன் தொடர்பு கொண்டேன். நிலைமை எப்­ப­டி­யுள்­ளது என்று விசா­ரித்­த­போது “முஸ்­லிம்­க­ளுக்கு நோன்பு ; சிங்­கள இரா­ணு­வத்­திற்கு பெருநாள்” என்று கவலைக் கிட­மான நிலை­மையை அவர் வியாக்­கி­யானம் செய்தார். முஸ்லிம் வீடு­களைச் சோதனை செய்­வ­திலும் அற்­ப­சொற்ப சந்­தே­கங்­க­ளுக்­காக எவ­ரையும் எந்த வேளை­யிலும் கைது செய்­வ­திலும் இரா­ணு­வத்­திற்கு ஒரு குதூ­கலம் என்­ப­தையே அவர் அப்­படிச் சொன்னார். சிறைகள் நிரம்பி வழி­கின்­றன. புல­னாய்வுப் பிரி­வி­ன­ருக்கு இரவு பக­லாக தலைக்கு மேல் வேலை என்று அலுத்துக் கொண்டார் அவர். ‘பயத்தின் மூலம் உங்­களைச் சோதிப்போம்’ என்ற குர்ஆன் வச­னத்தின் அர்த்­தத்தை நடை­முறை அனு­ப­வங்­க­ளி­னூடே முஸ்­லிம்கள் உணர்ந்த ஒரு தருணம் அது. நாட்டின் பல்­வேறு பகு­தி­க­ளிலும் விசித்­தி­ர­மான பல சம்­ப­வங்கள் அப்­போது நடந்­தே­றின. உட­னடிக் கைது, தடுப்­புக்­காவல், விடு­தலை என்று நூற்­றுக்­க­ணக்­கான சம்­ப­வங்கள் நடந்­தே­றி­ய­மைக்கு ஒரு முக்­கிய காரணம்; அரபு மொழி­யி­லான நூல்கள், சஞ்­சி­கைகள், ஆவ­ணங்­களை பலர் வைத்­தி­ருந்­த­மையே.

எரிக்­கப்­பட்ட அல்­குர்ஆன் பிர­திகள்

வத்­த­ளையில் சட்­டத்­த­ரணி ஒரு­வ­ரது வீட்டில் இரா­ணுவம் சோதனை நடாத்­தி­ய­போது இரண்டு குர்ஆன் பிர­தி­களைக் கண்­டெ­டுத்­தனர். ஒரு வீட்டில் ஏன் இரண்டு பிர­திகள் என விசா­ரிக்கத் தொடங்­கினர். நல்­ல­வேளை அந்த மனிதர் ஒரு சட்­டத்­த­ர­ணி­யாக இருந்தார். சிங்­க­ளத்தில் சர­ள­மாக உரை­யாற்­றவும் தெரிந்­த­வ­ராக இருந்தார். இரண்டு அல்ல, ஒரு மரணம் நிகழ்ந்தால் நாங்கள் சுற்றி இருந்து பாரா­யணம் செய்­வ­தற்கு குறைந்­தது 10 பிர­தி­க­ளேனும் தேவை. என்­னிடம் இரண்டு தான் உள்­ளது; இன்னும் சில பிர­தி­களை வாங்கி எடுக்க வேண்டும் என்று ஒரு­வாறு இரா­ணு­வத்தை வாய­டைக்கச் செய்­துள்ளார் அவர். சாதா­ரண கல்வி அறி­வற்ற ஒரு சரா­சரி ஏழை மனி­த­ராக அவர் இருந்­தி­ருந்தால் நிச்­சயம் அவர் கைது செய்­யப்­பட்­டி­ருப்பார்.

கண்டி, கலு­க­முவ பகு­தியில் முஸ்­லிம்கள் நூற்­றுக்­க­ணக்­கான குர்ஆன் பிர­தி­களை ஆறு­களில் வீசி­யெ­றிந்­தனர். அவை வெவ்­வேறு சிங்­களக் கிரா­மங்­களில் கரை­யொ­துங்­கின. சின்ன மக்­கம்­என அழைக்­கப்­படும் அக்­கு­றணையில் பல நூற்­றுக்­க­ணக்­கான அல்­குர்ஆன் பிர­தி­களை முஸ்­லிம்கள் எரித்­தனர். பெரும்­பாலும் முஸ்­லிம்­களின் வீடு­களில் காணப்­பட்ட ஒன்­றுக்கு மேற்­பட்ட அல்­குர்ஆன் பிர­திகள் அரு­கி­லுள்ள பள்­ளி­வா­சல்­க­ளுக்கு கொண்டு சேர்க்­கப்­பட்­டன.

ஸஹீஹுல் புஹாரி, ஸஹீஹுல் முஸ்லிம் உள்­ளிட்ட ஹதீஸ் கிரந்­தங்கள் மற்றும் அரபு நூல்கள் அனைத்தும் மத்­ரஸா நூல­கங்­களை நிரப்­பின. மௌல­வி­மார்கள், ஆலிம்கள், மத்­ர­ஸாக்­க­ளி­லி­ருந்து பாதியில் நின்­ற­வர்­களின் வீடு­களில் தேங்கிக் கிடந்த அரபு நூல்­களைச் சிலர் தீ மூட்டி எரித்­தனர். குறிப்­பாக அரபு சஞ்­சி­கைகள் அனைத்தும் போல எரித்து சாம்­ப­லாக்­கப்­பட்­டன. சிலர் இரா­ணு­வத்தின் உள­வி­யலை உரசிப் பார்ப்­ப­தற்கு தமது அலு­மாரித் தட்­டுக்­களின் தொடக்­கத்தில் சில சிங்­களப் புத்­த­கங்­க­ளையும் செருகி வைத்­தனர். அரபு சஞ்­சி­கைகள் இலட்­சக்­க­ணக்கில் எரிக்­கப்­பட்­டன என்­பதை நான் நன்கு அறிவேன்.

எனது நூல­கத்தில் முஜ்­தமஃ எனப்­படும் இஸ்­லா­மிய உலகின் முதல்­தர அரபு சஞ்­சிகைகள் சுமார் 800 அளவில் இருந்­தன. கஹ்மிர் முஸ்­லிமா, அத்­தஃவா, றாபிதா, பிலஸ்தீன் முஸ்­லிமா, அத்­த­கத்­தமுல் இல்மி என அரபு உலகில் வெளி­வந்த 25 க்கும் மேற்­பட்ட சஞ்­சி­கைகள் என்­னிடம் இருந்­தன. இஸ்­லா­மிய சமூ­கங்­களின் வர­லாற்று முது­சங்­க­ளா­கவே அவற்றைப் படித்து பாது­காத்து வைத்­தி­ருந்தேன். அவற்றை எரிப்­ப­தற்கு எனக்கு மனம் இடம் தர­வில்லை. அதனால் அவற்றை ஒரு அரபுக் கலா­சாலை நூல­கத்­திடம் கொண்டு சேர்த்தேன். ஆனால் எனது அரபு நூல்கள் இன்னும் என்­னி­டமே உள்­ளன. எனது நூல­கத்தில் அவை தனி­யான அலு­மா­ரி­களில் உயிர் வாழ்­கின்­றன. குர்ஆன் பிர­திகள் உள்­ளிட்ட இஸ்­லா­மிய அரபு நூல்­க­ளையும் எரித்துச் சாம்­ப­லாக்­கிய பல ஆலிம்­களை நான் அறிவேன். ‘கைது செய்­யப்­பட்டு விடு­வோமா’ என்ற உளப்­பீ­தியே (Fear Psychosis) இத்­தனை விசித்­தி­ரங்­க­ளுக்கும் பின்னால் இருந்­தது. இதில் எத­னையும் குறை­யா­கவோ தவ­றா­கவோ நாம் கரு­த­மு­டி­யா­த­ள­வுக்கு நிலைமை மிக மோச­மா­ன­தா­கவும் பதற்றம் நிறைந்­த­தா­கவும் இருந்­ததை யாரும் மறுக்க முடி­யாது. விமா­னத்தில் குர்ஆன் ஓதி வந்த ஒரு­வரும் இந்தக் காலப்­ப­கு­தி­யில்தான் பல மணி நேரம் தடுத்து வைத்து விசா­ர­ணைக்­குட்­ப­டுத்­தப்­பட்டார்.
இத்­த­கைய கொதிப்­பான தரு­ணத்­தி­லேயே எரியும் தீயில் எண்ணெய் வார்ப்­பது போல் ஞான­சாரர், கம்­மன்­பில, சம்­பிக்க போன்ற மத­வாத/ இன­வாத மேலா­ளர்கள் இலங்­கையை அரபு மய­மாக்­கவும், சவூதி மய­மாக்­கவும், இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வா­திகள் முயல்­வ­தாக குற்றம் சாட்­டினர். பிர­தமர் ரணில் கூட இலங்­கையை அரபு மய­மாக்க நாம் அனு­ம­திக்க மாட்டோம்” என்றார். இந்த வார்த்­தைகள் எட்டாம் தரம் கற்ற இரா­ணுவப் படை­யி­ன­ருக்கு அரபு மொழியில் புத்­த­கங்­களை வைத்­தி­ருந்த முஸ்­லிமைக் கூட பயங்­க­ர­வா­தி­யாகப் பார்க்க தூண்­டு­த­ல­ளித்­தி­ருக்­கலாம்.

மே 23 ஆம் திகதி சுமார் 20 பஸ் வண்­டி­க­ளிலும் இரா­ணுவ ட்ரக் வண்­டி­க­ளிலும் வந்­தி­றங்­கிய முப்­ப­டை­யினர் திஹா­ரியை சல்­ல­டை­போட்டுத் தேடினர். இறு­வட்­டுகள், வாள்கள் வைத்­தி­ருந்­த­தா­கவும் தமது கைத்­தொ­லை­பே­சியில் சில போட்­டோக்கள், வீடி­யோக்கள் இருந்­த­தா­கவும் அப்­பா­விகள் சிலர் கைதாகி அடுத்த நாள் காலையில் விடு­விக்­கப்­பட்­டனர்.

பாரா­ளு­மன்றத் தெரி­வுக்­குழு முன் ஆஜ­ரான காத்­தான்­கு­டியைச் சேர்ந்த ஒருவர் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்­புல்லாஹ் 2000 ஆம் ஆண்டின் தொடக்­கத்­தி­லேயே காத்­தான்­கு­டியில் அரபு மய­மாக்கல் திட்­டத்தை ஆரம்­பித்து விட்டார் என்று வழங்­கிய வாக்­கு­மூலம் ‘டெய்லி மிரர்’ பத்­தி­ரி­கையில் கொட்­டெ­ழுத்தில் பிர­சு­ர­மா­கி­யி­ருந்­ததைப் படித்தேன். எனக்கு ஒரு பக்கம் வெறுப்பும் இன்­னொரு புறம் வேடிக்­கை­யா­கவும் இருந்­தது. உண்­மையில் அரபு மய­மாக்கல் என்று சிங்­களத் தேசி­ய­வா­தி­களும் இன­வா­தி­களும் ரணில் போன்ற அர­சி­யல்­வா­தி­களும் கூறு­வ­தென்ன? சில முஸ்லிம் லிப­ரல்­வா­தி­களும் எதிர்­வாதம் புரி­வ­தற்­காக அரபு மய­மாக்கல் குறித்துப் பேசிக் கொண்­டி­ருப்­ப­தென்ன? இந்த வாதத்தை மிக நிதா­ன­மா­கவும் அறி­வார்ந்த வகை­யிலும் பார்க்க வேண்­டிய ஒரு தேவை உள்­ளது.

அரபு மய­மாக்கம் என்­பதை மொழி­ம­ய­மாக்கம் அல்­லது கலா­சார மய­மாக்கம் என்ற எந்தக் கோணத்­தி­லி­ருந்து இவர்கள் பிரச்­சி­னை­யாக முன்­வைக்­கின்­றனர் என்­பது தெரி­ய­வில்லை. மொழி­ம­ய­மாக்கம் என்ற அர்த்­தத்தில் எத்­த­கைய குற்­றச்­சாட்­டையும் எவரும் முன்­வைக்க முடி­யாது. ஒரு சமூகக் குழுமம் இந்த ஆடை­யைத்தான் உடுத்த வேண்டும், இந்த மொழி­யைத்தான் பேச வேண்டும் என்று எந்த அர­சாலோ தனி­ம­னி­த­னாலோ சட்டம் வகுக்க முடி­யாது.
அரபு, உல­கி­லுள்ள செம்­மொ­ழி­களில் (Classical Language) ஒன்று. சீன, மென்­டரின், ஸ்பானிஷ், ஹிந்தி என்ற தர­வ­ரி­சையில் உலகில் ஆகக்­கூ­டிய மக்கள் பேசும் ஐந்­தா­வது மொழி­யாக அரபு விளங்­கு­கின்­றது. 22 அரபு நாடுகள் உள்­ளன. மொத்­த­மாக 400 மில்­லியன் அரபு முஸ்­லிம்கள் உலகில் வாழ்­கின்­றனர். அரபைத் தாய்­மொ­ழி­யாகக் கொண்ட எகிப்தின் எகிப்­திய கிறிஸ்­த­வர்கள், லெப­னானின் மொனரைட் கிறிஸ்­த­வர்­களும் உள்­ளனர். அரபு உல­க­மொ­ழி­களில் ஒன்று. இலங்­கையில் க.பொ.த. உயர்­தர கலைப்­பி­ரிவு பாடப்­ப­ரப்பில் செம்­மொ­ழி­களில் ஒன்­றாக அர­பு­மொழி அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. பேரா­தனைப் பல்­க­லைக்­க­ழ­கத்தில் 40 ஆண்­டு­க­ளுக்கு மேலாக அரபு மொழி போதிக்­கப்­ப­டு­கின்­றது. தென்­கி­ழக்குப் பல்­க­லையில் அரபு இஸ்­லா­மிய கற்கை பீடம் தனி­யாக இயங்­கு­கின்­றது. 450 க்கும் மேற்­பட்ட அரபு மொழிப் போத­னை­யையும் இஸ்­லா­மியக் கற்­கை­க­ளையும் வழங்கும் இஸ்­லா­மிய கல்வி நிறு­வ­னங்கள் நாட்டில் உள்­ளன. இந்­நி­லையில் இஸ்­லா­மிய துறை­சார்ந்­தோரின் வீடு­களில் இஸ்­லாத்தைக் கற்­ப­தற்கும் வாசிப்­ப­தற்­கு­மான உசாத்­து­ணை­க­ளாக அரபு நூல்­களும் குர்ஆன், ஹதீஸ் விளக்­க­வு­ரை­களும் இருப்­பது சர்வசாதா­ரணம். முஸ்­லிம்­களில் ஒரு சிலர் தீவி­ர­வா­தி­க­ளாக இருப்­பதால் முஸ்­லிம்­களிள் மார்க்க மொழி­யான அரபு மொழியைத் தீவி­ர­வா­தத்தின் மொழி­யாக முத்­திரை குத்­து­வது பத்தாம் பச­லித்­தனமாகும்.

காத்­தான்­கு­டியின் ஒரு சில இடங்­களில் வீதி­களின் பெயர்ப்­ப­லகை அரபு மொழியில் இருந்­ததை நான் கண்­ணுற்­றுள்ளேன். இப்­போதும் அவை அகற்­றப்­பட்­டு­விட்­டன. அதே­வேளை அரபுக் கல்­லூ­ரி­களின் பெயர்ப்­ப­ல­கைகள் யாவும் அரபு மொழி­யி­லேயே உள்­ளன. அவை அவ்­வாறு தான் இருக்க வேண்டும். இந்­நி­லையில் அத்­த­கைய அரபு மொழி­யி­லான பெயர்ப்­ப­ல­கை­களை அகற்­று­மாறு பொலிஸார் அடா­வடி செய்த சம்­ப­வங்கள் ஏறா­வூ­ரிலும், ஓட்­ட­மா­வ­டி­யிலும், காத்­தான்­கு­டி­யிலும் பதி­வா­கின.

ஏறா­வூரில் பொலிஸார் குறித்த நாட்­க­ளுக்குள் இத்­த­கைய அரபுப் பெயர்ப்­ப­லகை நீக்­கப்­பட வேண்டும் என்று கட்­டளை பிறப்­பித்து மிரட்­டி­ய­போது அலி ஸாஹிர் மௌலா­னாவின் தலை­யீட்டால் அது நிறுத்­தப்­ப­டாது. ஓட்­ட­மா­வ­டியில் அமீர் அலி முன்­வந்து பொலி­ஸாரின் வேண்­டு­கோளை புறக்­க­ணித்­த­தாக பத்­தி­ரிகை செய்தி வெளி­யா­னது. காத்­தான்­குடி பள்­ளி­வாசல்கள் மற்றும் முஸ்லிம் நிறு­வ­னங்கள் சம்­மே­ளனம் நீதி­மன்­றத்தின் உத்­த­ர­வோடு வந்தால் நாம் அகற்­றுவோம் என்று பொலி­ஸா­ருக்கு புத்­தி­சா­துர்­யமாய் பதி­லடி வழங்­கி­யது.

இந்தச் சம்­ப­வங்கள் எதை உணர்த்­து­கின்­றன? வெறும் மொழியை தீவி­ர­வா­தத்தின் குறி­யீ­டாகக் கருதும் அள­வுக்கு சிங்­கள தேசிய வாதத்தின் வீச்சு விரி­வ­டைந்து வலு­வ­டைந்து வரு­கின்­றது. ஆனால் இது ஒரு வகை குருட்டுத் தேசி­ய­வாதம் (Blind Nationalism ) தான் என்­பதை மக்­களை உணர்ச்­சி­யூட்டும் இத்­த­கைய கிணற்றுத் தவ­ளைகள் உணர்­வ­தில்லை. அறி­வீ­னமே இதற்கு காரணம்.

இலங்­கை­யி­லி­ருந்து பணிப்­பெண்­க­ளாக செல்லும் நான்கு பேரில் மூன்று பேர் சிங்­களப் பெண்கள். அவர்­க­ளுக்கு தொடர்­பா­ட­லுக்­கான அரபு பேச்சு மொழி கற்­பிக்­கப்­ப­டு­கி­றது. அல்­லது அரபு நாடு­க­ளுக்குச் சென்று வீட்டுப் பணிப்­பெண்­க­ளாக கட­மை­யாற்றும் அவர்கள் நாள­டைவில் அரபைப் பேசு­வ­தற்­கேனும் கற்­றே­யாக வேண்­டிய நிலை உள்­ளது. இன்று உலகில் இடம்­பெ­யரும் தொழி­லாளர் படை­ய­ணியின் (Migrant working force ) தவிர்க்க முடி­யாத மொழி­களில் ஒன்று அரபு. கொரிய, ஜப்பான் மொழி போன்று அரபு மொழியும் வேலை­வாய்ப்­புக்­களின் மொழி. இலங்­கையைச் சேர்ந்த 1.5 மில்­லியன் மக்கள் இன்று அரபு நாடு­களில் வேலை­வாய்ப்பைப் பெற்று பல்­லாண்­டு­க­ளாக அங்­கேயே வாழ்­கின்­றனர். இலங்­கையின் அன்­னிய செலா­வ­ணியில் முத­லிடம் வகிப்­பது மத்­திய கிழக்கு வீட்டுப் பணிப்­பெண்கள் ஊடாகக் கிடைக்கும் வரு­மா­னமே. மத்­திய வங்கி ஆண்­ட­றிக்கை சொல்லும் செய்தி அதுதான். இதற்கு மேலாக சவூதி, குவைத், கட்டார் போன்ற அரபு நாடுகள் கடந்த நான்கு தசாப்­தங்­க­ளாக இலங்கை அர­சுக்கு வழங்­கிய நன்­கொ­டைகள், மானி­யங்கள், உதவித் தொகைகள், வட்­டி­யில்லா இல­குக்­க­டன்கள் பல­நூறு பில்­லியன் அமெ­ரிக்க டொலர்கள் என்­பன எந்த அர­சி­யல்­வா­தி­யாலும் மறுக்க முடி­யுமா. (கட்­டு­ரை­யாளர் தற்­போது இலங்­கைக்கு அரபு– முஸ்லிம் நாடுகள் இது­வரை வழங்­கிய நிதி­யு­தவி குறித்து ஒரு தனி­யான ஆய்வில் ஈடு­பட்­டுள்ளார் என்­பதை மகிழ்ச்­சி­யுடன் நினை­வூட்­டு­கிறார்)

இலங்­கைக்­கான பெற்­றோ­லி­யத்­தையும் இயற்கை எரி­வா­யு­வையும் அரபு நாடு­க­ளி­லி­ருந்தே பெரு­ம­ளவு தரு­விக்­கின்றோம். குக்­கி­ரா­மங்கள் தோறும் கடந்த 30 ஆண்டு கால இடை­வெ­ளி­களில் முளைத்­துள்ள வீடுகள் அரபு நாடு­களில் இருந்து கிடைக்­கப்­பெற்ற வரு­மா­னங்கள் மூலம் விளைந்­தவை என்­பதை யாரால் மறுக்க முடியும்? இப்­படி அரபு நாடுகள் மூலம் ஏகப்­பட்ட பயன்­பா­டு­க­ளையும் நன்­மை­க­ளையும் அனு­ப­வித்துக் கொண்டு அரபு மொழி நூலை வைத்­தி­ருப்­ப­வனைத் தீவி­ர­வா­தி­க­ளாக சித்­தி­ரிப்­பதும், கைது செய்­வதும் எவ்­வ­ளவு கேவ­ல­மான ஒரு செயல் என்­பதை நாம் உணர்த்த வேண்­டி­யுள்­ளது.

அரபு கலா­சா­ர­ம­ய­மாக்கல் என்­ப­தையே அரபு மய­மாக்கம் கரு­து­கின்­றது எனில், இதில் இரண்டு பார்­வைகள் உள்­ளன. முத­லா­வது அரபு நாடு­களின் ஆடை அமைப்பு, பொழுதுபோக்கு முறை, உணவு பழக்கம் போன்ற ஏதேனும் ஒன்றை அல்­லது மூன்­றையும் இலங்கை முஸ்­லிம்கள் பின்­பற்­று­வது இலங்­கையின் அர­சி­ய­ல­மைப்­புக்கோ சட்­டங்­க­ளுக்கோ முர­ணா­ன­தல்ல. இலங்­கையை இஸ்­லா­மி­ய­ம­ய­மாக்கி விடப் போகி­றார்கள் என்று இஸ்­லா­மி­யப்­பீ­தியை சந்­தைப்­ப­டுத்த எத்­த­னிக்கும் சக்­திகள், முகம் மூடும் பெண்­களை விகா­ர­மாக முன்­னி­றுத்­து­கின்­றனர். உண்­மையில் பெண்கள் முகத்தை மூடி நிகாப் அணியும் பழக்கம் இலங்கை முஸ்லிம் சமூ­கத்தின் சமீ­பத்­திய தோற்­றப்­பா­டாகும். இலங்­கையின் திறந்த பொரு­ளா­தாரக் கொள்கை , மத்­திய கிழக்­கிற்­கான இடம்­பெ­யர்வு மற்றும் சில­ரது இறுக்­க­மான சமய நோக்கு இதற்­கான கார­ண­மாக இருக்­கலாம். இதனை பண்­பாட்டு ரீதியில் தவ­றா­ன­தா­கவோ நாட்டின் பாது­காப்­புக்கு அச்­சு­றுத்­த­லா­ன­தா­கவோ யாரும் கருத வேண்­டி­ய­தில்லை. ஏனென்றால் ஒரு சமூகம் இதைத்தான் உடுக்க வேண்டும். இதைத்தான் உண்ண வேண்டும் என்று தீர்­மா­னிக்கும் உரிமை எந்­த­வொரு அர­சுக்கும் கிடை­யாது.

ஆனால் இன­வா­திகள் மற்றும் மதத் தேசி­ய­வா­திகள் சிலர் பௌத்த நாட்­டிற்கு விடுக்­கப்­படும் ஓர் அச்­சு­றுத்­த­லா­கவே நிகாபைச் சித்­தி­ரித்து பூதா­க­ரப்­ப­டுத்தி வரு­வதால் அது குறித்து மீள் சிந்­திப்பு அவ­சியம் என்ற கருத்து முஸ்லிம் பொது வெளியில் விவா­திக்­கப்­பட்டு வரு­கின்­றது. யதார்த்­தத்தில் ‘நிகாப்’ இஸ்­லா­மிய சட்­ட­வி­ய­லு­டனோ அடிப்­படை போத­னை­க­ளு­டனோ தொடர்­பு­பட்ட ஒரு சமயப் பெறு­மானம் கொண்ட ஆடை அமைப்­பல்ல. அது மிகத்­தெட்டத் தெளி­வா­னது. அது அர­பு­லகில் சில அரபுப் பெண்­களால் விரும்பி அணி­யப்­பட்ட ஒன்று. பின்னர் அது அரபு பண்­பாட்டின் குறி­யீ­டா­கவும் (Symbol) அடை­யா­ள­மா­கவும் (Identity) மாற்றம் பெற்­றது அவ்­வ­ள­வுதான். ஆனால் அதனை இலங்கையில் தடை செய்வதற்கான சட்டபூர்வ நியாயப்பாடுகள் எதுவும் இல்லை. ஒரு ஜனநாயக நாட்டில் வாழும் ஒரு பிரஜை தான் விரும்பும் ஆடையை அணியும் சுதந்திரமும் உரிமையும் உள்ளவன். இதை அனைத்து சர்வதேச மனித உரிமை பட்டயங்களும் அங்கீகரித்துள்ளன. கலாசாரத்தில் கை வைக்கும் அதிகாரம் எந்தவொரு அரசுக்கும் இல்லை. ஆனால் அது இலங்கை முஸ்லிம்களின் கலாசாரம் தானா என்பதை சற்று நிதானித்துப் பார்க்க வேண்டியுள்ளது.

“அரபு மய­மாக்கல்” குறித்து பாரா­ளு­மன்றத் தெரி­வுக்கு முன்னால் தோன்­றிய நபர் ஹிஸ்­புல்லாஹ் மீது குற்றம் சாட்­டி­யதை மீண்டும் இங்கு நான் நினை­வு­ப­டுத்த வேண்டும். நகரை அலங்­க­ரிக்கும் அதே­வேளை அயன மண்­டலம், சீதோஷ்ண நிலைக்கு ஏற்ற வகை­யிலும் பொருத்­த­மான பொரு­ளா­தாரப் பண்­ட­மாகக் கரு­தப்­படும் ஈச்சம் மரங்கள் காத்­தான்­கு­டியில் நடப்­பட்­டன. இன்று அவை காய்த்து கனிந்து கனி­களைத் தரு­கின்­றன. ஈச்சம் மரத்­திற்கும் தீவி­ர­வா­தத்­திற்கும் என்ன தொடர்பு? காத்­தான்­கு­டியில் சில வீதி­களில் குறிப்­பாகக் கடற்­க­ரையில் வந்து முடியும் வீதி­களில் “லாஇ­லாஹ இல்­லல்லாஹ், அல்­லாஹு அக்பர்” போன்ற வாச­கங்கள் செதுக்­க­லாக நடப்­பட்­டுள்­ளன. இவற்றை உதா­ர­ணங்­காட்டி காத்­தான்­கு­டி இலங்­கை­யி­லுள்ள ஓர் இஸ்­லா­மிய சாம்­ராஜ்யம் என்று புலம்­பு­வது மொட்டைத் தலைக்கும் முழங்­கா­லுக்கும் முடிச்­சுப்­போடும் பத்தாம் பச­லித்­த­ன­மாகும்.

ரதன தேர­ருக்கும், ஞான­சா­ர­வுக்கும் அவல் கொடுப்­ப­தற்கும் அல்வா கொடுப்பதற்கும் நம்மவர்கள் தனிப்பட்ட கோபதாபங்களைப் பயன்படுத்தாமல் இருக்கக்கடவது.

vidvelli

Leave A Reply

Your email address will not be published.