மத்ரஸா கல்வி சட்ட வரைபு கல்வி அமைச்சினால் ஆராய்வு

0 694

மத்­ரஸா கல்­வியை தனி­யான ஒரு சட்­டத்தின் கீழ் நிர்­வ­கிப்­ப­தற்­கான நட­வ­டிக்­கைகள் கல்வி அமைச்­சினால் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. முஸ்லிம் சமய விவ­கார அமைச்­சினால் நிய­மிக்­கப்­பட்­டி­ருந்த நிபு­ணத்­துவ குழு தயா­ரித்த மத்­ரஸா கல்வி சட்ட வரைபு தற்­போது கல்வி அமைச்சின் நிபு­ணத்­துவக் குழு­வினால் ஆரா­யப்­பட்டு வரு­கின்­றது என முஸ்லிம் சமய விவ­கார அமைச்சின் உதவிச் செய­லாளர் எம்.கே.முஹைஸ் தெரி­வித்தார்.

நாட்டில் இயங்­கி­வரும் மத்­ர­ஸாக்­களை தனி­யான சட்­டத்தின் கீழ் நிர்­வ­கிப்­ப­தற்கு அர­சாங்கம் மேற்­கொண்­டுள்ள தீர்­மானம் தொடர்பில் வின­வி­ய­போதே அவர் இவ்­வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில், மத்­ரஸா கல்­விக்கு தனி­யான சட்­ட­மொன்­றினை இயற்­றிக்­கொள்­வ­தற்கு அமைச்­ச­ரவை ஏற்­க­னவே அங்­கீ­காரம் வழங்­கி­யுள்­ளது. முஸ்லிம் சமய விவ­கார அமைச்சும், கல்­வி­ய­மைச்சும் இணைந்து இதற்­கான சட்­ட­வ­ரை­பினைத் தயா­ரிப்­ப­தற்கும் அனு­மதி வழங்­கப்­பட்­டது. அதற்­கி­ணங்க முஸ்லிம் சமய விவ­கார அமைச்­சினால் நிய­மிக்­கப்­பட்ட நிபு­ணத்­துவக் குழு தயா­ரித்த சட்­ட­வ­ரைபு கல்­வி­ய­மைச்­சுக்குக் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது.

கல்­வி­ய­மைச்சின் நிபு­ணத்­துவக் குழு அச்­சட்­ட­வ­ரை­பினை ஆராய்ந்து வரு­கி­றது. அக்­குழு தற்­போது இரு அமர்­வு­களை நடாத்­தி­யுள்­ளது.

குழுவின் ஆலோ­ச­னைக்­க­மைய திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­பட்­டதன் பின்பு சட்­ட­வ­ரைபு கல்வி அமைச்­ச­ரிடம் கைய­ளிக்­கப்­படும். பின்பு மேல­திக நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­படும்.

1983 ஆம் ஆண்­டுக்கு முன்பு மத்­ரஸா கல்வி கல்­வி­ய­மைச்சின் கீழேயே நிர்­வ­கிக்­கப்­பட்டு வந்­தது. அதன் பின்பே முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­திடம் கைய­ளிக்­கப்­பட்­டது என்றார்.

நாட்டில் இயங்­கி­வரும் மத்­ர­ஸாக்கள் அடிப்­படை வாதத்தைப் போதித்து வரு­வ­தா­கவும், மத்­ர­ஸாக்­க­ளிலே அடிப்­படை வாதிகள் உரு­வாக்­கப்­ப­டு­வ­தா­கவும் அண்­மைக்­கா­ல­மாக பெரும்­பான்மை இன­வா­தி­களால் குற்றம் சுமத்­தப்­பட்டு வந்­தது. இந்­நி­லையில் ஏப்ரல் 21 ஆம் திகதி மேற்­கொள்­ளப்­பட்ட தற்­கொலைத் தாக்­கு­தல்­க­ளை­ய­டுத்து மத்­ர­ஸாக்­க­ளுக்கு எதிர்ப்பு வலுப்பெற்றது.

இதனையடுத்தே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மத்ரஸா கல்விக்கென தனியான சட்டமொன்றினை இயற்றிக்கொள்ளுமாறு அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீமுக்கு பணிப்புரை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.