தலைமைத்துவத்தை மீறி செயற்படுகிறார் சஜித்

ஐ.தே.க. நடவடிக்கை எடுக்கும் என்கிறார் செயலாளர் அகில

0 667

ஐக்­கிய தேசியக் கட்­சியின் யாப்பு ஒழுக்க விதி­மு­றை­களை மீறி செயற்­பட்ட அனை­வ­ருக்­கும் எதி­ராக ஒழுக்­காற்று நட­வ­டிக்கை எடுக்க வேண்­டு­மெனக் கட்­சியின் செயற்­கு­ழுவில் தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும், ஜனா­தி­பதி தேர்தல் அறி­விக்­கப்­பட முன்­னரே சஜித் பிரே­ம­தாச பிர­சா­ரங்­களை செய்­வது கட்­சியின் தலை­மைத்­துவ கட்­ட­ளை­களை மீறிய செயல். ஆகவே அவ­ருக்கும் எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­மென

ஐக்­கிய தேசியக் கட்­சியின் பொதுச்­செ­ய­லாளர் அகி­ல­விராஜ் காரி­ய­வசம் கூறி­யுள்ளார். எவ்­வாறு இருப்­பினும் கட்சி பிள­வு­பட அனு­ம­திக்­கப்­போ­வ­தில்லை எனவும் அவர் கூறினார்.

ஐக்­கிய தேசியக் கட்­சியின் உறுப்­பி­னர்கள் ஒரு சில­ருக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்கத் தீர்­மா­னங்கள் எடுக்­கப்­பட்­டுள்ள நிலையில் கட்­சியின் பொதுச்­செ­ய­லாளர் அகில விராஜ் காரி­ய­வ­ச­மிடம் வின­வி­ய­போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார்.

அவர் மேலும் கூறு­கையில்,

ஐக்­கிய தேசியக் கட்­சிதான் இலங்­கையில் இயங்கும் கட்­சி­களில் ஜன­நா­யக ரீதியில் செயற்­படும் கட்­சி­யாகும். ஆனால் ஜன­நா­யக உரி­மைகள் இருக்­கின்ற கார­ணத்­தினால் கட்­சியில் என்ன வேண்­டு­மா­னாலும் செய்­ய­லா­மென அர்த்­த­மல்ல. இன்று கட்­சியின் ஒழுக்க விதி­மு­றை­களை மீறி சிலர் செயற்­பட்டு வரு­கின்­றனர். அவர்கள் தனிப்­பட்ட ரீதியில் என்­னுடன் நட்­பு­றவை கையாண்­ட­ாலும் கூட கட்­சியின் பொதுச் செய­லாளர் என்ற வகையில் நான் கட்­சியின் கொள்­கை­க­ளுக்கு கட்­டுப்­பட்டே உள்ளேன். எனவே, இன்று கட்­சியின் ஒழுக்­க­வி­தி­களை மீறிய நபர்­க­ளுக்கு எதி­ராக ஒழுக்­காற்று நட­வ­டிக்கை எடுக்க வேண்­டு­மெனக் கட்­சியின் செயற்­குழு என்­னிடம் கோரிக்கை விடுத்­துள்­ளது. ஆகவே என்னால் அதனை மீறி எவ­ரையும் காப்­பாற்ற முடி­யாது. எனவே கட்­சியின் யாப்­பினை மீறி ஒழுக்க விதி­மு­றை­களை தகர்த்து செயற்­படும் நபர்கள் அனை­வ­ருக்கும் எதி­ராக ஒழுக்­காற்று நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­வது உறு­தியே.
அதேபோல் அமைச்சர் சஜித் பிரே­ம­தா­சவும் சில தேர்தல் பிர­சா­ரங்­களை செய்து வரு­கின்­றமை கட்­சியின் விதி­மு­றை­க­ளுக்கு அப்­பா­லான செய­லா­கவே கரு­தப்­ப­டு­கின்­றது. ஆகவே, அவரை விசா­ரிக்க வேண்­டு­மென்ற கோரிக்­கையும் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது. இப்­போதே கட்­சியை நாச­மாக்கும் செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­வ­தாக சிலர் குற்றம் சுமத்தி வரு­கின்­றனர். எனவே அது குறித்து கவனம் செலுத்த வேண்­டி­யுள்­ளது.

மேலும், ஜனா­தி­பதி வோட்பாளர் யார் என்­பதை கூற­வேண்­டிய அவ­சி­ய­மில்லை. முதலில் கூட்­டணி அமைப்­பது குறித்தே முயற்­சிகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. ஜனா­தி­பதித் தேர்தல் அறி­விக்க முன்னர், வேட்­பு­மனு தாக்கல் திகதி அறி­விக்க முன்னர் எதற்­காக ஜனா­தி­பதி வேட்­பாளரை அறி­விக்க வேண்டும். கூட்­டணிக் கட்­சி­களின் தலை­வர்­களை வர­வ­ழைத்து பேச்­சு­வார்த்தை நடத்­தினோம். இதில் பரந்த கூட்­ட­ணி­யொன்றை அமைக்க வேண்­டு­மென்ற இணக்­கப்­பாடு எட்டப்பட்டுள்ளது. அதற்கமைய அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தலைவர், பிரதித் தலைவர் இருவரும் இணைந்தே இதில் பயணிக்கவுள்ளனர்.

அவ்வாறிருக்கையில் கட்சி பிளவுபட அவசியமில்லை. அனைவரையும் இணைந்து பயணிக்கவே எமக்கு அவசியமாக உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.