சாய்ந்தமருது உள்ளூராட்சி சபைக் கோரிக்கை : ஜனாதிபதித் தேர்தலை தருணமாக்குவது எப்படி?

0 1,239

சாய்ந்­த­ம­ருது உள்­ளூ­ராட்சி மன்றக் கோரிக்கை 1987களி­லேயே முன்­வைக்­கப்­பட்­டி­ருந்த போதிலும் மக்கள் போராட்­ட­மாக உரு­வெ­டுத்து அதற்­காக தமது ஆத­ரவை நிரூ­பிக்கும் வகையில் கடந்த 2018.02.10ஆம் திகதி நடை­பெற்ற உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் சாய்ந்த­ம­ருது மக்கள் இக்­கோ­ரிக்­கையின் அடிப்­ப­டையில் போட்­டி­யிட்ட தோடம்­பழச் சின்­னத்­தி­லான சுயேச்சைக் குழு­வி­னரை பெரு­வா­ரி­யாக ஆத­ரித்து 13,239 வாக்­கு­களை சுமார் 82 சத­வீ­த­மானோர் அளித்து தமது ஆணை­யையும் விருப்­பையும் வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்­தனர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

சாய்ந்­த­ம­ருது உள்­ளூ­ராட்சி சபைக் கோரிக்­கை­யா­னது வெற்றி பெறு­வ­தி­லி­ருந்து நழுவிச் செல்­வ­தற்­கான கார­ணங்­களை நாம் நிறுத்துப் பார்க்க தவ­றி­யி­ருந்­த­மையும் எடுத்த முயற்­சியில் இருந்த இடை­யூ­று­களை சரி­யாக இனங்­கண்டு சரி­செய்து கொள்­வ­தற்கு உள்­ளூ­ராட்சி மன்ற இலக்கை நோக்­கிய அண்­மைய சபை செயற்­பாட்­டா­ளர்கள் சுய விமர்­சனம் செய்து கொள்­ளா­மையும் பிர­தான கார­ணங்­க­ளாக அமை­கின்­றன (இக்­கட்­டு­ரையில் கையா­ளப்­படும் உள்­ளூ­ராட்சி மன்ற இலக்கை நோக்­கிய அண்­மைய செயற்­பாட்­டா­ளர்கள் என்­பது சாய்ந்­த­ம­ருது – மாளி­கைக்­காடு ஜும்ஆ பள்ளி நிரு­வாக சபை­யி­ன­ரோடு இணைந்து செயற்­படும் புத்­தி­ஜீ­விகள் மற்றும் வெற்­றி­பெற்ற சுயேச்­சைக்­குழு உறுப்­பி­னர்கள் உள்­ள­டக்­கிய குழு­வி­ன­ரையே குறித்து நிற்கும் என்­பதை வாச­கர்கள் கவ­னத்திற் கொள்க).

இன்று நமது நாட்டின் அர­சியல் பேசு­பொ­ரு­ளாக உரு­வெ­டுத்­தி­ருக்கும் ஜனா­தி­பதித் தேர்தல் கெடு­பி­டி­க­ளுக்கு மத்­தியில் நமது சாய்ந்­த­ம­ருது உள்­ளூ­ராட்சி மன்றக் கோரிக்­கையை சந்­தைப்­ப­டுத்­து­வ­தற்­கான வாய்ப்பை இத்­த­ருணம் தருமா என்­கின்ற ஒரு கேள்வி நமக்குள் இன்று எழுப்­பப்­பட்டு விடை கண்­ட­றி­யப்­பட வேண்டும். அதனை நோக்­கியே இக்­கட்­டுரை நகர்த்­தப்­ப­டு­கின்­றது.
இன்­றைய ஜனா­தி­பதித் தேர்தல் கள­மென்­பது முஸ்லிம் சமூ­கத்­திற்­கான தேவைகள் குறித்த முன்­வைப்­புக்­க­ளையோ, முஸ்லிம் அடை­யாள அர­சி­யலை முன்­னி­றுத்தும் கோரிக்­கை­க­ளையோ முன்­ந­கர்த்­தக்­கூ­டிய ஒரு சூழல் இல்­லாமை இருப்­ப­தென்­பது நமது உள்­ளூ­ராட்சி மன்றக் கோரிக்­கை­யிலும் தாக்கம் செலுத்­துமா என்றால் இல்­லை­யென்­ப­துதான் அதற்கு வெளிப்­ப­டை­யான பதி­லாகும். ஏனெனில், சாய்ந்­த­ம­ருது உள்­ளூ­ராட்சி மன்றக் கோரிக்கை என்­பது முஸ்லிம் அர­சி­யலை அடை­யா­ளப்­ப­டுத்­து­கின்ற ஒன்­றல்ல என்­ப­துடன் நாட்டின் ஒரு­மைப்­பாட்­டுக்கு எதிர்த்­தா­டலை உரு­வாக்கக் கூடி­ய­து­மல்ல.
உண்­மையில் உள்­ளூ­ராட்சி மன்ற இலக்கை நோக்­கிய அண்­மைய செயற்­பாட்­டா­ளர்கள் இது தொடர்பில் எடுக்­கின்ற ஒவ்­வொரு முயற்­சி­யிலும் உளத்­தூய்மை இருக்க வேண்டும். அது இல்­லை­யெனில் அம்­மு­யற்­சிகள் வெற்­றியைத் தொட்டுக் கொள்­வதில் எப்­பொ­ழுதும் ஒரு பின்­ன­டைவைச் சந்­திப்­ப­தி­லி­ருந்து விடு­ப­டாத நிலை­யையே உரு­வாக்கும். அந்த நிலை­யில்தான் இந்த செயற்­பாட்­டா­ளர்­களின் நகர்வு அமைந்­தி­ருக்­கின்­றதா என்ற ஒரு சந்­தே­கத்தை முன்­வைக்­காமல் இருக்க முடி­யாது.

எமது உள்­ளூ­ராட்சி மன்றக் கோரிக்கை வெற்றி பெறு­வ­தற்கு உள்­ளூ­ராட்சி மன்ற அர­சி­யலை மாத்­திரம் செய்ய வேண்டும் என்­கின்ற உணர்வு முக்­கி­ய­மா­னது. அதற்கு மேலான மாகாண சபை அங்­கத்­துவம், பாரா­ளு­மன்ற உறுப்­பு­ரிமை என்­ப­ன­வற்றை மைய­மாகக் கொண்டு செயற்­படும் எண்ணம் துளி­ய­ளவும் இருக்கக் கூடாது. இந்த மனோ­நிலை இருந்­தால்தான் இப்­போ­ராட்டம் வெல்­லு­வ­தற்­கான சரி­யான பாதையில் பய­ணிக்கும் சூழலை நமக்குத் தரும்.
நமது கோரிக்கை நிறை­வு­பெ­றா­மைக்கு கல்­முனைத் தொகுதி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் தடை­யாக இருக்­கின்றார் என்­கின்ற ஒரு கார­ணத்தை முன்­வைத்து நாமும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக ஆகி­விட்டால் எம்­மீது பிர­யோ­கிக்கும் தடுப்­புகள் அனைத்­தையும் உடைத்­தெ­றிந்து விட­லாம் என்று எண்­ணு­வது ஓர் அர­சியல் அனு­ப­வ­மற்ற போக்­கா­கவே பார்க்­கப்­படல் வேண்டும். ஏனெனில், இன்­றைய நாடா­ளு­மன்ற உறுப்­பு­ரிமை முறை­மை­யென்­பது மாவட்டத் தேர்தல் முறை­மையை அடிப்­ப­டை­யாகக் கொண்­ட­தாகும். உதா­ர­ண­மாக, கல்­முனைத் தொகு­தி­யி­லி­ருந்து ஒரு தமிழ்ப் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எந்தக் கார­ணத்தைக் கொண்டும் தெரி­வாக முடி­யாது. ஆனால், அம்­பாறை மாவட்­டத்­தி­லி­ருக்கும் பொத்­துவில் தொகு­தி­யி­லி­ருந்து மாத்­தி­ரம்தான் தெரி­வாக முடியும். அவர்தான் அம்­பாறை மாவட்­டத்தில் வாழ்­கின்ற எல்லா தமிழ் மக்­களின் பிர­தி­நி­தி­யாக செயற்­பட முடியும்.

இவ்­வாறு ஒரு பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரா­கி­விட்டார் என்­ப­தற்­காக அவரால் எல்­லா­வற்­றையும் சாத்­தி­யப்­ப­டுத்திக் கொள்ள முடியும் என்­கின்ற நிலைப்­பாடு இருக்க முடி­யாது. இதற்கு ஓர் உதா­ர­ண­மாக, அண்­மைய கல்­முனை வடக்கு பிர­தேச செய­லக தர­மு­யர்வு விவ­கா­ரத்தை குறிப்­பிட முடியும். அம்­பாறை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் கோடீஸ்­வரன் இவ்­வி­வ­கா­ரத்தில் தலை­யிட்டும் முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட முடி­யாமல் போன­தற்கு காரணம் அவர் சார்ந்து நின்று தேர்­தலில் போட்­டி­யிட்டு வெற்றி பெற்­றி­ருக்­கின்ற கட்­சியின் தலை­மைப்­பீடம் உள்­ளிட்ட உயர்­பீடம் கொண்­டி­ருக்கும் ஆளு­மை­யிலும் பிடி­மா­னத்­தி­லும்தான் தங்­கி­யி­ருக்­கின்­றது என்­பதை நிரூ­பிக்­கின்­றது. ஆதலால், நமது உள்­ளூ­ராட்சி மன்ற இலக்கை நோக்­கிய அண்­மைய செயற்­பாட்­டா­ளர்கள் இதனைக் கருத்திற் கொண்டு தமது பாரா­ளு­மன்ற உறுப்­பு­ரி­மையை பெற்றுக் கொள்­வ­தினால் மாத்­திரம் நமது உள்­ளூ­ராட்சி மன்றக் கோரிக்கை வெற்­றி­பெற முடி­யாது என்­பதை உணரப் போது­மா­னது.

கட்சி சாராது சுயேச்சைக் குழு­வாக பாரா­ளு­மன்ற உறுப்­பு­ரி­மையைப் பெற்றால் இந்தக் கட்­டுப்­பா­டுகள் இல்­லை­தானே, சுய­மாகச் செயற்­பட முடி­யும்­தானே என்ற கேள்­விகள் இங்கு எழுப்­பப்­ப­டலாம். ஆனால், அம்­பாறை மாவட்­டத்­தி­லி­ருந்து ஒரு சுயேச்­சைக்­குழு பாரா­ளு­மன்றப் பிர­தி­நி­தித்­து­வ­தத்தைப் பெற்றுக் கொள்­வ­தாயின் ஆகக் குறைந்­தது வெட்டுப் புள்­ளியைத் தாண்­டு­வ­தற்கு குறைந்­த­பட்சம் 15000 வாக்­கு­களை அக்­குழு பெற வேண்­டி­யி­ருக்கும். அதற்கு அப்பால் ஆகக் குறைந்­தது மொத்­த­மாக 35,000 வாக்­கு­களைப் பெற்­றால்தான் எஞ்­சிய வாக்­கு­களின் ஊடாக ஓர் உறுப்­பி­னரைப் பெறலாம்.
இவ்­வ­ளவு வாக்­கு­களைப் பெறு­வ­தற்கு நமது சாய்ந்­த­ம­ருது ஊர் கொண்­டி­ருக்­கும் மொத்த வாக்­கு­களை அளித்­தா­லும்­கூட இரு­ப­தா­யி­ரத்தைத் தாண்­டாது. மிகு­தி­யாக தேவைப்­ப­டக்­கூ­டிய சுமார் 16 ஆயிரம் வாக்குகளை அம்­பாறை மாவட்­டத்தில் அமைந்­தி­ருக்கும் ஏனைய முஸ்லிம் ஊர்­க­ளி­லி­ருந்து திரட்டிக் கொள்­வற்கு வலு­வு­டைய கார­ண­மாக நமது உள்­ளூ­ராட்சி மன்றக் கோரிக்கை அமைந்­தி­ராது என்­பது வெளிப்­ப­டை­யா­னது. அது மாத்­தி­ர­மன்றி இந்த 16 ஆயிரம் வாக்குகளை திரட்­டக்­கூ­டிய அள­வுக்கு சாய்ந்­த­ம­ருதைச் சேர்ந்த மக்கள் இவ்­வூ­ருக்கு வெளியே பரந்து வாழ­வு­மில்லை என்­பதும் குறிப்­பி­டத்­தக்­கது.

நமது நாட்டைப் பொறுத்­த­வரை ஆட்சி அதி­கா­ரத்­திற்கு வரக்­கூ­டிய சக்­தி­க­ளாக இருக்­கக்­கூ­டிய மஹிந்த அணி, ஐக்­கிய தேசியக் கட்சி ஆகிய இரண்டு அணி­க­ளுமே காணப்­ப­டு­கின்­றன. இவ்­வா­றான பெருந்­தே­சியக் கட்­சி­களில் அங்­கத்­து­வத்தைப் பெற்று பாரா­ளு­மன்ற உறுப்­பு­ரி­மையைப் பெற்றுக் கொள்­வ­திலும் உள்­ளூராட்சி மன்ற இலக்கை நோக்­கிய அண்­மைய செயற்­பாட்­டா­ளர்­க­ளுக்கு இட­றல்கள் இருக்­கின்­றன. ஒன்று, அக்­கட்­சி­களில் ஏற்­க­னவே முஸ்லிம் உறுப்­பி­னர்கள் பலம் பொருந்­தி­ய­வர்­க­ளா­கவும் நம்­மை­விட வாக்­குப்­பலம் உள்­ள­வர்­க­ளா­கவும் இருக்­கி­றார்கள்.

அக்­கட்­சி­களில் இருக்­கக்­கூ­டிய சிங்­கள உறுப்­பி­னர்கள் பொது­வாக இந்த முஸ்லிம் உறுப்­பி­னர்­களை விட அதி­க­ரித்த வாக்­குப்­ப­லத்­துடன் இருப்­பதும் மற்றும் குறிப்­பாக அம்­பாறை மாவட்ட முஸ்லிம் மக்­க­ளிடம் அதிக செல்­வாக்கைச் செலுத்­து­கின்ற முஸ்லிம் கட்­சி­க­ளான முஸ்லிம் காங்­கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் மற்றும் தேசிய காங்­கிரஸ் ஆகி­யன பெருந்­தே­சியக் கட்­சி­க­ளோடு ஏதோ ஒரு வகையில் தங்­களை இணைத்துக் கொண்­ட­வர்­க­ளா­கவே காணப்­ப­டு­கின்­றனர். இவற்­றினை மீறி நாம் கட்சி உறுப்­பு­ரி­மையைப் பெற்று பெருந்­தே­சியக் கட்­சி­களில் நாடா­ளு­மன்ற உறுப்­பு­ரி­மை­யையோ, மாகாண சபை உறுப்­பு­ரி­மை­யையோ பெறு­வது என்­பது முயற்­கொம்பை தடவிப் பார்ப்­ப­தற்கு ஒப்­பா­னது.

முஸ்லிம் மக்­க­ளிடம் அதிக செல்­வாக்­குடன் திக­ழக்­கூ­டிய முஸ்லிம் காங்­கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் மற்றும் தேசிய காங்­கிரஸ் ஆகிய கட்­சி­களில் ஏதா­வது ஒன்­றுடன் இணைந்து நமது நாடா­ளு­மன்ற அல்­லது மாகா­ண­சபை உறுப்­பு­ரி­மையை உறுதி செய்து கொள்ள முடி­யாதா என்­கின்ற இதன் அடுத்த பக்­கத்தை எடுத்து நோக்­கி­னாலும் நமது உள்­ளூ­ராட்சி மன்ற இலக்கை நோக்­கிய அண்­மைய செயற்­பாட்­டா­ளர்­க­ளுக்கு அறவே சாத்­தி­ய­மில்லை என்­ப­தையே உறுதி செய்­கின்­றது. அது எவ்­வாறு என்­பதை இம்­மூன்று கட்­சி­க­ளி­னதும் நமது உள்­ளூ­ராட்சி மன்றக் கோரிக்­கையில் இன்­று­வரை கடைப்­பி­டித்துக் கொண்­டி­ருக்­கின்ற செயற்­பாடு கட்­டியம் கூறத்­தக்­கது. அவற்­றினை தனித்­த­னி­யாகப் பார்ப்போம்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­மைத்­து­வத்தை கடந்த இரண்டு மாதங்­க­ளுக்குள் உள்­ளூ­ராட்சி மன்ற இலக்கை நோக்­கிய அண்­மைய செயற்­பாட்­டா­ளர்கள் சந்­திப்­பு­களை மேற்­கொண்­ட­போது அமைச்சர் ரவூப் ஹக்கீம் மிகத் தெளி­வா­கவும் வெளிப்­ப­டை­யா­கவும் சொன்ன விடயம் யாதெனில், கல்­முனை வடக்கு உப பிர­தேச செய­லக தர­மு­யர்த்­து­த­லுக்­கான எல்லை தீர்க்­கப்­பட்டால் சாய்ந்­த­ம­ரு­துக்­கான உள்­ளூ­ராட்சி மன்றக் கோரிக்­கையும் நிறைவு பெறும் என்­ப­தாகும். இதற்கு முன்னர் அமைச்சர் ரவூப் ஹக்­கீ­மு­ட­னான இக்­கு­ழு­வி­னரின் சந்­திப்­பு­க­ளிலும் கல்­முனை மாந­கர சபை என்­பது நான்கு உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளாகப் பிரிக்­கப்­படும் ஒரே சந்­தர்ப்­பத்­தில்தான் சாய்ந்­த­ம­ரு­துக்­கான உள்­ளூ­ராட்சி மன்­றமும் வழங்­கப்­படும் என்றே இடித்­து­ரைத்துக் கூறப்­பட்டு வந்­தி­ருக்­கின்­றது.

இங்கு புதிய சபை­களை உரு­வாக்­கு­வதில் இருக்­கின்ற பிரச்­சினை என்­ன­வெனில் கல்­முனை மாந­கர சபையின் வடக்கு எல்­லை­யாக தாள­வட்டான் சந்தி அல்­லது நீதி­மன்ற வீதியை திட்­ட­வட்­ட­மாக வரை­ய­றுக்க வேண்­டு­மென கல்­மு­னைக்­குடி – கல்­முனை முஸ்லிம் சமூகம் விடாப்­பி­டி­யாகக் கோரி நிற்­கின்­றன. மேற்­கு­றித்த எல்­லையை தமிழ்த் தரப்­பி­னர்கள் ஒரு­போதும் ஏற்க மாட்­டார்கள் என்­ப­துதான் இன்­று­வரை காணப்­ப­டு­கின்ற ஓர் உறு­தி­யான நிலைப்­பா­டாகும்.

இத­னால்தான் பல சந்­தர்ப்­பங்­களில் கல்­முனை மாந­கர சபை நான்கு உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளாக வகுக்­கப்­பட வேண்­டு­மென்ற அபிப்­பி­ராயம் முன்­வைக்­கப்­பட்ட சந்­தர்ப்­பங்­க­ளி­லெல்லாம் இது சாய்ந்­த­ம­ரு­துக்­கான உள்­ளூ­ராட்சி மன்றம் வழங்­கப்­படக் கூடாது என்­பதை வலி­யு­றுத்­து­வ­தற்­கான மறு­பெ­ய­ரி­டுதல் என்று அழுத்தம் திருத்­த­மாக பதிவு செய்து வந்­தி­ருக்­கின்றேன். இதனை உணர்ந்­து­கொள்ள முடி­யா­த­வர்­க­ளாக எமது உள்­ளூ­ராட்சி மன்ற இலக்கை நோக்­கிய அண்­மைய செயற்­பாட்­டா­ளர்கள் இருப்­பது என்­பது இந்த விட­யத்தில் புரி­யா­த­வர்­க­ளாக இருப்­ப­தையே எடுத்துக் காட்டும்.

எல்லை விவ­கா­ரத்தை முடி­வுக்கு கொண்டு வரு­கின்ற ஆளு­மை­யு­டைய தலை­மை­யாக அதா­வது, கல்­மு­னைக்­குடி – கல்­முனைச் சமூ­கத்­தி­ன­ரையும் அவர்­களின் காவ­ல­னாகக் கரு­தப்­ப­டு­கின்ற முன்னாள் இரா­ஜாங்க அமைச்சர் ஹரீ­ஸையும் மீறி அல்­லது புறந்­தள்­ளி­விட்டு தீர்வு எடுக்கக் கூடி­யவர் என்­பதை ஆதா­ரப்­ப­டுத்­தி­விட்டு, முஸ்லிம் காங்­கி­ரஸின் பின்னால் இவர்கள் இழு­பட்டுச் சென்றால் ஒரு சரி­யான செயற்­பா­டாக இருக்க முடியும். இந்­நிலை மு.காவின் தலை­மை­யிடம் இல்­லாத நிலையில் தொடர்ந்தும் நமது உள்­ளூ­ராட்சி மன்ற இலக்கை நோக்­கிய அண்­மைய செயற்­பாட்­டா­ளர்கள் நம்­பிக்­கொண்டு செயற்­ப­டு­வ­தா­னது நமது மக்­களின் உணர்­வுக்குச் செய்­கின்ற மாபெரும் துரோ­க­மா­கவும் ஏமாற்றுச் செயற்­பா­டா­க­வுமே அமைய முடியும்.

அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் தலை­மைத்­து­வமும் சாய்ந்­த­மருது உள்­ளூ­ராட்சி மன்றக் கோரிக்கை விவ­கா­ரத்தில் ஆரம்­பத்தில் அதற்கு சார்­பா­கவும் அந்த மக்­களின் நியா­யங்­களை விளங்கிக் கொண்­ட­வ­ரா­கவும் தன்னைக் காண்­பித்துக் கொண்­ட­போ­திலும் கடந்த 2018 பெப்­ர­வரி 10ஆம் திகதி உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் நடை­பெ­ற­வுள்­ள­தாக அறி­விப்­புகள் வெளி­வந்த நிலையில், தமது முன்­னைய நிலைப்­பாட்டை மாற்றி கல்­மு­னைக்­குடி – கல்­முனை முஸ்லிம் சமூ­கத்தின் கருத்தை உள்­வாங்கி கல்­முனை மாந­க­ர­சபை நான்­காகப் பிரிக்­கப்­ப­டு­கின்ற போதுதான் சாய்ந்­த­ம­ரு­துக்­கான உள்­ளூ­ராட்சி மன்­றத்தை உரு­வாக்க முடி­யு­மென்ற நிலைப்­பாட்­டுக்கு தன்னை உட்­ப­டுத்திக் கொண்­டது. அதற்கு இசை­வா­கவே குறித்த உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­த­லின்­போது சாய்ந்­த­மருது வட்­டா­ரங்­களை மையப்­ப­டுத்தி அக்­கட்சி சார்பில் எந்த வேட்­பா­ள­ரையும் போட்டி நிலைக்கு நிறுத்­தாது தவிர்ந்தும் கொண்­டது.

அது மாத்­தி­ர­மன்றி அவர் இந்த விவ­கா­ரத்தில் நடை­பெற்ற பேச்­சு­வார்த்தை மேசை­க­ளிலும் கல்­முனை வடக்கு உப பிர­தேச செய­லக பேச்­சு­வார்த்­தை­க­ளிலும் பகி­ரங்­க­மாக சாய்ந்­த­ம­ரு­துக்கு முதலில் உள்­ளூ­ராட்சி மன்­றத்தை வழங்­குங்கள் எல்லைப் பிரச்­சினை உடை­ய­வற்றை பின்னர் அது தொடர்பில் ஒரு பேச்­சு­வார்த்­தைக்கு வந்து முடி­வுக்கு கொண்டு வாருங்கள் என்று வலி­யு­றத்­தாமல் இருப்­ப­தென்­பதே சாய்ந்­த­ம­ரு­துக்­கான உள்­ளூ­ராட்சி மன்றக் கோரிக்­கையை கல்­முனை மாந­கர சபையின் நான்கு பிரிப்­பு­க­ளு­டனே தொடர்­பு­ப­டுத்தி இன்­று­வரை அக்­க­ருத்தில் அக்­கட்சி உடும்­புப்­பி­டி­யாக இருக்­கின்­றது என்­ப­தையே நிரூ­பிக்­கின்­றது.

தேசிய காங்­கி­ரஸைப் பொறுத்­த­வரை நான்கு பிரிப்பு ஊடா­கவே சாய்ந்­த­ம­ரு­துக்­கான உள்­ளூ­ராட்சி மன்றம் வழங்­கப்­படல் வேண்­டு­மென்ற போக்கை கடைப்­பி­டித்து வரு­கின்ற ஒரு கட்­சி­யாகும். 2009ஆம் ஆண்டு தொடக்கம் இந்தக் கருத்தை இவர்கள் வலி­யு­றுத்தி வந்­த­போ­திலும் 2010 இலி­ருந்து 2015 வரை தேசிய காங்­கி­ரஸின் தலைவர் மாகாண சபைகள் உள்­ளூ­ராட்சி அமைச்­ச­ராக இருந்தும் இந்த விவ­கா­ரத்தை முடி­வுக்கு கொண்­டு­வரத் தவ­றி­யி­ருக்­கின்றார் என்ற பகி­ரங்க குற்­றச்­சாட்டும் அக்­கட்சி மீதும் உள்­ளது.

2014ஆம் ஆண்டு ஜனா­தி­பதித் தேர்தல் நெருங்­கிய காலப்­ப­கு­தியில் நான்கு பிரிப்­புக்­கான முயற்­சி­களை எடுத்து அது தடைப்­பட்­ட­தாக ஒரு பரப்­பு­ரையைச் செய்­தது. ஆனால் இந்த நான்கு பிரிப்­புக்­கான முயற்­சிகள் உண்­மையில் நடை­பெற்­ற­தற்­கான ஆதா­ரங்கள் இது­வரை வெளிப்­படைத் தன்­மை­யாக மக்­க­ளி­டத்தில் சென்­ற­டை­ய­வில்லை என்­பதே இங்கு நோக்­கத்­தக்­கது. எனவே, தேசிய காங்­கி­ரஸின் முயற்­சி­கள்­கூட கல்­முனை மாந­கர சபை நான்கு பிரிப்­பு­க­ளா­கவே நடை­பெற வேண்டும் என்றும் அந்த நேரத்­தில்தான் சாய்ந்­த­ம­ருது உள்­ளூ­ராட்சி மன்றம் வழங்­கப்­படல் வேண்­டு­மென்ற முன்­னெ­டுப்­பு­க­ளும்தான் அவர்­க­ளிடம் இருந்து வரு­கின்­றன.

ஆக, மொத்­தத்தில் இம்­மூன்று கட்­சி­களும் சாய்ந்­த­ம­ருதுக்­கென்று முதலில் உள்­ளூ­ராட்சி மன்­றத்தை வழங்­கு­வ­தற்கு ஆயத்­த­மாக இல்லை. மாறாக நான்கு பிரிப்­புக்கள் ஏக காலத்தில் நடை­பெற வேண்டும் என்ற பின்­பு­லத்­தில்தான் தங்­கி­யி­ருக்­கின்­றது என்­பது சந்­தே­கத்­திற்கு அப்பால் உறு­திப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது. ஆயின் இக்­கட்­சி­க­ளோடும் இணைந்து பாரா­ளு­மன்ற உறுப்­பு­ரிமை, மாகாண சபை உறுப்­பு­ரி­மையைப் பெற்றுக் கொள்­வ­தற்­காக ஒரு இணக்­கப்­பாட்­டிற்கு நமது உள்­ளூ­ராட்சி மன்ற இலக்கை நோக்­கிய அண்­மைய செயற்­பாட்­டா­ளர்கள் செல்ல முடி­யாத தடுப்புச் சுவர் மிகப் பல­மாக கட்­டி­யெ­ழுப்­பப்­பட்­டி­ருக்­கின்­றது. இதனை மீறி நாம் இணைந்­தாலும் அக்­கட்­சியின் தலை­மைத்­து­வங்கள் நான்கு பிரிப்­பின்­போது சாய்ந்­த­ம­ரு­துக்­கான உள்­ளூ­ராட்சி மன்றம் என்ற கோரிக்­கையைக் கைவிட்டு முதலில் சாய்ந்­த­ம­ரு­துக்கு வழங்க வேண்டும் என்­பதை வலி­யு­றுத்தக் கூடி­ய­வர்­க­ளாக மாறு­வார்கள் என்­ப­தற்கு எந்­த­வி­த­மான உத்­த­ர­வா­தங்­க­ளுக்­கான அறி­கு­றி­களும் தென்­ப­ட­வில்லை என்­பது திட்­ட­வட்­ட­மா­னது.

நம்மை நோக்கி உறு­தி­யாக வரக்­கூ­டி­ய­தாக ஜனா­தி­பதி தேர்தல் காணப்­ப­டு­கின்­றது. இதனை நமது சாய்ந்­த­ம­ருது உள்­ளூ­ராட்சி மன்­றத்தை சாத்­தி­யப்­ப­டுத்திக் கொள்­வ­தற்­கான தரு­ண­மாக மாற்றிக் கொள்­வ­தில்தான் எமது கோரிக்­கையின் எதிர்­காலம் தங்­கி­யி­ருக்­கின்­றது. அந்த வகையில் ஜனா­தி­ப­தி­யாக ஆட்­சி­ய­தி­கா­ரத்­திற்கு வரக்­கூ­டிய வல்­ல­மை­யு­டைய போட்­டி­யா­ளர்­க­ளாக இரண்டு பேர்­க­ளி­டை­யேதான் பலத்த போட்டி நிலவும் என்­ப­துவே இது­கா­ல­வரை நமது நாட்டின் ஜனா­தி­பதித் தேர்தல் வர­லாறு எண்­பித்­தி­ருக்­கின்­றது. அவ்­வா­றா­னவர்­களை இனங்­கண்டு நமது கோரிக்கை தொடர்­பி­லான பேச்­சு­வார்த்­தை­களை நடாத்தி அவர்­க­ளுக்­கான ஆத­ரவை வழங்கி நமது கோரிக்­கையை வெல்­லு­கின்ற காலத்தை நாம் கடந்­து­விட்டோம்.

ஏனெனில், முஸ்லிம் மக்­க­ளி­டையே அதிக செல்­வாக்­கு­டைய மேற்­கு­றிப்­பிட்ட மூன்று முஸ்லிம் கட்­சி­களும் ஏதோ ஒரு வகையில் பிர­தான ஜனா­தி­பதி வேட்­பா­ளர்­க­ளான இரண்டு அணி­யிலும் சங்­க­மித்துக் கொள்­ளு­கின்ற நிலைப்­பாடே மிகப் பகி­ரங்­க­மாகத் தெரி­கின்­றது. இவர்­க­ளுக்கு ஏற்­க­னவே அவர்­க­ளிடம் அதிக செல்­வாக்கு இருப்­ப­தினால் நமது கோரிக்­கையோ நமது உள்­ளூ­ராட்சி மன்ற இலக்கை நோக்­கிய அண்­மைய செயற்­பாட்­டா­ளர்­க­ளையோ ஒரு பொருட்­டாக பார்ப்­ப­தற்­கான சூழ­லையும் இழந்து நிற்­கின்றோம்.

நமக்கு இருக்­கின்ற ஒரே­யொரு வழி நமது சாய்ந்­த­ம­ருது மக்­களின் பெரும்­பா­லான ஒன்­றித்த வாக்குப் பலத்தை வைத்து, ஜனா­தி­பதித் தேர்­தலை அடுத்து வரக்­கூ­டிய பொதுத் தேர்­தலில் ஆட்­சி­யா­ளர்­க­ளாக வரக்­கூ­டிய கட்சி எமது வாக்குப் பலத்தை நோக்கித் திரும்பிப் பார்க்க வைக்க வேண்டும். இந்த நகர்வின் ஊடா­கத்தான் நமது கோரிக்­கையை வென்­றெ­டுப்­ப­தற்கு தேவை­யான வகை­யி­லான பேச்­சு­வார்த்­தையை ஏற்­ப­டுத்தி அதற்­கான உத்­த­ர­வா­தங்­க­ளையும் பெற்றுக் கொள்ளக் கூடி­ய­வர்­க­ளாக எம்மை மாற்ற வேண்டும். அந்த தேர்தல் உடன்­ப­டிக்­கையில் எமது வாக்குப் பலத்தை மீண்டும் உறு­திப்­ப­டுத்தும் வகையில் எமது உள்­ளூ­ராட்சி மன்ற இலக்கை நோக்கிய அண்மைய செயற்பாட்டாளர்களினால் அடையாளப்படுத்தப்படுகின்ற ஒருவரை வேட்பாளராக நிறுத்தி எமது விருப்பு வாக்கை அவருக்கு மட்டும் அளித்து நாம் சார்ந்து உடன்படிக்கை செய்கின்ற கட்சிக்கும் வாக்களிக்க உடன்பட வேண்டும்.

இதேநேரம், அந்தப் பொதுத்தேர்தலினூடாக ஆட்சியை அமைத்து ஒழுங்குபடுத்தி அதன் பிற்பாடு நமது கோரிக்கையை நிறைவு செய்வதற்கு தேவைப்படும் காலங்களைக் கவனத்திலெடுத்து அதுவரை நமக்கென்று ஒரு தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்புரிமை தரப்படல் வேண்டும். அவ்வுறுப்புரிமையானது சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்ற உருவாக்க வர்த்தமானி அறிவித்தல் வெளிவருகின்ற அன்றே இராஜினாமா செய்து கட்சியிடமே திருப்பியளிப்பது என்ற நிபந்தனையுடன் உருவாக்கப்படல் வேண்டும்.

இங்கு மேற்படி பாராளுமன்ற உறுப்பினராக பெயரிடப்படுபவர் ஏற்கனவே கட்சி அரசியல் சார்ந்து நின்று விமர்சனத்திற்குட்பட்டவராக இருக்கக் கூடாது என்பதுடன் கேட்கப்படும் நேரத்தில் தனது உறுப்புரிமையை இராஜினாமாச் செய்து கையளிக்கக்கூடியவரான நம்பகத் தன்மையுடையவராகவும் இருத்தல் வேண்டும் என்பதில் மிக அவதானமாக செயற்படல் வேண்டும்.
அது மாத்திரமன்றி கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தோடம்பழ சுயேச்சை அணிக்கு வேட்பாளர்களைத் தெரிவு செய்கின்றபோது தவறிழைக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டிலிருந்து தம்மை விடுவிக்கும் பாங்கினையும் இங்கு கடைப்பிடிக்க வேண்டிய கடப்பாடு எமது உள்ளூராட்சி மன்ற இலக்கை நோக்கிய அண்மைய செயற்பாட்டாளர்கள் மீது இருக்கின்றது என்பதையும் மறந்துவிடக் கூடாது.

இந்நிலையை நாம் உருவாக்கிக் கொள்வதற்கு ஜனாதிபதித் தேர்தலை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதற்கு இருக்கின்ற ஒரே வழி ஆட்சி அதிகாரத்திற்கு வரமுடியாத ஜனாதிபதி வேட்பாளரை நிறுத்துகின்ற ஒரு கட்சியைத் தேர்ந்தெடுத்து அவர்களின் தேர்தல் பிரசார மேடைகளை நமது இலக்கை சரியாக வெளிப்படுத்துவதற்கும் நமது மக்களை அதன்பால் அணி திரட்டுவதற்கும் ஓர் ஊடகமாகப் பயன்படுத்துவதில்தான் நமது சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றக் கோரிக்கையை அடைந்து கொள்வதற்கான நிலை இருக்கின்றதேயன்றி வேறு வழியில்லை.

எம்.எம்.எம்.நூறுல்ஹக்

vidivelli

Leave A Reply

Your email address will not be published.