முகத்திரைக்கான தடை குறித்து நீடிக்கும் சந்தேகம்

0 1,466

ஏப்ரல் 21 இல் மேற்­கொள்­ளப்­பட்ட தற்­கொலை குண்டுத் தாக்­குதல் சம்­ப­வங்­க­ளை­ய­டுத்து முஸ்லிம் சமூகம் பல சவால்­க­ளையும் அசௌ­க­ரி­யங்­க­ளையும் எதிர்­கொண்­டது. அவற்றில் முஸ்லிம் பெண்கள் அணியும் நிகாப் மற்றும் புர்­கா­வுக்­கு விதிக்கப்பட்ட தடை இன்று தெளி­வற்ற நிலைக்குத் தள்­ளப்­பட்­டுள்­ளது.

நாட்டில் கடந்த நான்கு மாதங்­க­ளாக அமுல்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த அவ­ச­ர­காலச் சட்டம் நீக்­கப்­பட்­டுள்ள நிலையில் அச்­சட்­டத்தின் கீழ் தடை­செய்­யப்­பட்ட முகத்தை முழு­மை­யாக மறைக்கும் புர்கா மற்றும் நிகாப் ஆடை­க­ளுக்கு விதிக்­கப்­பட்ட தடை தொடர்ந்தும் அமுலில் இருக்­கி­றதா? இல்­லையா? என்­பது தொடர்பில் தெளி­வற்ற நிலை உரு­வா­கி­யுள்­ளது. கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி மேற்­கொள்­ளப்­பட்ட தற்­கொலை குண்டுத் தாக்­குதல் சம்­ப­வத்­தை­ய­டுத்து மறு­தினம் 22 ஆம் திகதி முதல் நாட்டில் அவ­ச­ர­கால சட்டம் அமுல்­ப­டுத்­தப்­பட்­டது. ஜனா­தி­ப­தி­யினால் அமுல்­ப­டுத்­தப்­பட்ட அவ­ச­ர­கால சட்­டத்­திற்கு பாரா­ளு­மன்றம் ஏப்ரல் 24 ஆம் திகதி அனு­மதி வழங்­கி­யது. அன்று முதல் ஒவ்­வொரு மாதமும் 22 ஆம் திகதி அவ­ச­ர­கால சட்­டத்தை ஜனா­தி­பதி நீடித்து வந்தார்.

அவ­ச­ர­கால சட்ட விதி­களின் கீழ் தேசிய பாது­காப்­பினை கருத்­திற்­கொண்டு முகத்தை முழு­மை­யாக மூடி ஆடை அணிய தடை விதித்து ஜனா­தி­ப­தி­யினால் வர்த்­த­மானி அறி­வித்தல் ஒன்றும் வெளி­யி­டப்­பட்­டது. தற்­போது அவ­ச­ர­கால சட்டம் நீக்­கப்­பட்­டுள்ள நிலையில் முகத்தை மூடி ஆடை அணிய விதிக்­கப்­பட்ட தடையும் நீங்­கி­யுள்­ளதா? இல்­லையா? என்­பதில் தொடர்ந்தும் குழப்பம் நீடித்து வரு­கி­றது. முஸ்லிம் பெண்கள் பொது இடங்­களில் முகத்தை மறைத்து ஆடை அணி­வது தண்­ட­னைக்­கு­ரிய குற்­றமா? இல்­லையா? என்­பது இது­வரை தெளி­வு­ப­டுத்­தப்­ப­ட­வில்லை.

தடை நீங்கிவிட்டது. முஸ்லிம் பெண்கள் நிகாப் அணியலாம் எனும் பிரசாரத்தை ஒருசாரார் முன்னெடுத்து வருகின்றனர். எனினும் இவ்வாறு அணிய முடியுமா என்பது இதுவரை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

இந் நிலையில்தான் நிகாப் மற்றும் புர்­கா­வுக்கு விதிக்­கப்­பட்ட தடை நீக்­கப்­பட்­டுள்­ளதா? இல்­லையா? என்­பது தொடர்பில் மக்­க­ளுக்கு தெளி­வு­களை வழங்­கு­மாறு அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் பதில் பொலிஸ் மா அதி­ப­ரையும் பாது­காப்புச் செய­லா­ள­ரையும் கோரி­யுள்ளார். பாது­காப்புத் தரப்­பி­னரால் அல்­லது அர­சாங்­கத்­தினால் புர்கா மற்றும் நிகாப் தடை தொடர்­பில தெளி­வு­களை வழங்­கும்­வரை முஸ்லிம் பெண்கள் முகத்­தி­ரை­ய­ணிந்து பொது இடங்­க­ளுக்குச் செல்­வதைத் தவிர்க்­கு­மாறும் பாது­காப்புத் தரப்­பி­ன­ருக்கு பூரண ஒத்­து­ழைப்­பு­களை வழங்­கு­மாறும் முஸ்லிம் சமூ­கத்தை அமைச்சர் ஹலீம் வேண்­டி­யுள்ளார். ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸிலும் இதே கோரிக்­கையை மக்­களிடம் முன்வைத்­துள்­ளது.

இதே­வேளை, முஸ்லிம் பெண்கள் அணியும் நிகாப் மற்றும் புர்­கா­வுக்கு நிரந்­தர தடை விதிப்பதற்கான முயற்­சிகளை அரசாங்கம் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­மையும் இந்த இடத்தில் கவனிக்கத்தக்கதாகும். கடந்த ஜூலை மாதம் 30 ஆம் திகதி நீதி மற்றும் சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு அமைச்சர் தலதா அத்­து­கோ­ரள நிகாப் மற்றும் புர்­காவை நிரந்­த­ர­மாகத் தடை செய்­வ­தற்கு அமைச்­ச­ரவைப் பத்­தி­ர­மொன்­றினைத் தாக்கல் செய்­தி­ருந்தார். அமைச்­ச­ரவை அமைச்­சர்கள் இதற்கு ஆத­ரவும் வழங்­கி­னர். எனினும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அமைச்­ச­ரவைப் பத்­தி­ரத்தில் உள்­ளங்­கி­யுள்ள விட­யங்கள் குறித்து ஆரா­யப்­பட வேண்டும் என்றும் அதற்கு கால அவ­காசம் வழங்­கு­மாறு வேண்டிக் கொண்டதற்கமைய அமைச்­ச­ர­வை அங்­கீ­காரம் வழங்­கு­வதை பிற்­போ­ட்­டது.
இந்­நி­லையில் அமைச்­ச­ரவைப் பத்­திரம் எந்தச் சந்­தர்ப்­பத்­திலும் மீண்டும் கலந்­து­ரை­யா­டப்­பட்டு முகத்­திரை தடைக்கு அங்­கீ­காரம் வழங்­கப்­ப­டலாம் என்பதற்கான சாத்தியங்களும் உள்ளன. இதற்கிடையில் முகத்­திரை தடைக்கு துணை­போக வேண்டாம் என்று முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளிடம் கோரிக்கை விடுத்து 6000 இற்கும் மேற்பட்டோர் தெஹிவளை பள்ளிவாசலில் ஒன்றுகூடியமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கதாகும். இம் மாநாட்டில் உரையாற்றிய அமைச்­சர்­க­ளான ரவூப் ஹக்­கீமும், ரிசாத் பதி­யு­தீனும் முகத்திரை தடைக்கான சட்டமூலம் கொண்டுவரப்படுவதை அனுமதிக்க முடியாது எனக் குறிப்பிட்டிருந்தனர்.

இப் பின்னணியிலேயே தற்போது அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டுள்ள போதிலும் முகத்திரை அணியலாமா இல்லையா என்ற சர்ச்சை தோன்றியுள்ளது. இது தொடர்பில் பொலிஸ் பேச்சாளர் நேரடியாக கருத்துக் கூற மறுத்துள்ளார். எனினும் முகத்திரை அணிந்து செல்வோருக்கு எதிராக தேவையற்ற சங்கடங்கள் பாதுகாப்புத் தரப்பினராலும் ஏனையோராலும் ஏற்படுத்தப்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. அந்த வகையில் முஸ்லிம் சமூகம் நாட்டின் நிலைமைகளைக் கருத்திற் கொண்டு சமயோசிதமாக நடந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். இது விடயத்தில் அரசியல் மற்றும் மார்க்க தலைமைகள் நாட்டின் தேசிய பாதுகாப்பையும் இன நல்லிணக்கத்தையும் முற்படுத்தி வழிகாட்டல்களையும் தீர்மானங்களையும் மேற்கொள்ள முன்வர வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறோம்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.