சிறிய விசாரணை ஒன்றுக்கு வாருங்கள் என அழைத்துச் சென்றே கைது செய்தனர்

சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பரின் உறவினர் தெரிவிப்பு

0 1,048

”ஐந்து பொலிஸ் அதி­கா­ரிகள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வேளையில் மாவ­னெல்­லையில் உள்ள வீட்­டுக்கு வந்து உஸ்தாத் இருக்­கி­றாரா எனக் கேட்­டார்கள். அவரை கைது செய்­வ­தற்­கான நீதி­மன்ற உத்­த­ரவு எதுவும் அச்­ச­மயம் பிறப்­பிக்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை. உஸ்­தா­துக்கு எதி­ராக முறைப்­பாடு ஒன்று செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும் அது தொடர்பில் சிறி­ய­தொரு விசா­ர­ணையை மேற்­கொள்ள வேண்­டி­யுள்­ளது எனக் கூறியே பொலிசார் அழைத்துச் சென்­றார்கள். எனினும் ஞாயிற்­றுக்­கி­ழமை மாலையில் ஊட­கங்கள் மூல­மா­கவே அவர் கைது செய்­யப்­பட்ட செய்­தியை நாம் அறிந்து கொண்டோம்” என கைது செய்­யப்­பட்­டுள்ள ஜமா­அத்தே இஸ்­லா­மியின் முன்னாள் தலைவர் உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்­பரின் உற­வினர் ஒருவர் தெரி­வித்­த­தாக துருக்­கியை தள­மாக கொண்டு செயற்­படும் ‘அன­டொலு ஏஜன்சி’ செய்தி வெளி­யிட்­டுள்­ளது. 

தடை­செய்­யப்­பட்ட பயங்­க­ர­வாத அமைப்­பு­க­ளுக்கு உதவி செய்­த­தாக குற்­றம்­சாட்­டப்­பட்டு நேற்று முன்­தினம் கைது செய்­யப்­பட்ட உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்­பரை சந்­திப்­ப­தற்கு அவ­ரது உற­வி­னர்­க­ளுக்கோ அல்­லது சட்­டத்­த­ர­ணி­க­ளுக்கோ நேற்றுவரை அனு­மதி வழங்­கப்­ப­ட­வில்லை என்றும் அந்த செய்­தியில் மேலும் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்­ப­ருக்கு எதி­ராக முன்­வைக்­கப்­பட்­டுள்ள குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் அடிப்படையற்றவை என ஜமாஅத்தே இஸ்லாமி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

vidivelli 

Leave A Reply

Your email address will not be published.