2019 ஹஜ் விவகாரம் : 21 ஆம் திகதிக்கு முன் முறைப்பாடு அளிக்குக

0 626

இவ்­வ­ருடம் ஹஜ் யாத்­திரை மேற்­கொண்ட ஹஜ்­ஜா­ஜிகள் பலர் முகவர் நிலை­யங்­க­ளினால் தங்­க­ளுக்கு இழைக்­கப்­பட்ட தவ­று­க­ளையும் ஊழல்­க­ளையும் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­திடம் முறை­யிட்­டுள்­ளனர். மேலும் முறைப்­பா­டுகள் இருப்பின் அவற்றை எதிர்­வரும் செப்­டெம்பர் மாதம் 21 ஆம் திக­திக்கு முன்பு பதிவுத் தபாலில் பின்­வரும் விலா­சத்­துக்கு அனுப்பி வைக்­கு­மாறு முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம். மலிக் வேண்­டுகோள் விடுத்­துள்ளார்.

இவ்­வ­ருட ம் ஹஜ் கட­மையை நிறை­வேற்­று­வ­தற்குச் சென்­றி­ருந்த யாத்­தி­ரி­கர்­களில் பெரும் எண்­ணிக்­கை­யானோர் நாடு திரும்­பி­யுள்­ளனர். இறு­தி­யாக இலங்கை ஹஜ் யாத்­தி­ரிகர் குழு­வினர் எதிர்­வரும் 4 ஆம் திகதி நாடு திரும்­ப­வுள்­ளனர் எனவும் அவர் கூறினார்.

முறைப்­பா­டு­களை அனுப்ப வேண்­டிய விலாசம்.

ஹஜ் முறைப்­பாடு,
பணிப்­பாளர்,
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்,
இல.180 ரி.பி. ஜாயா மாவத்தை,
கொழும்பு – 10.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.