தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்புக்கும் ஹஜ்ஜுல் அக்பருக்கும் தொடர்பில்லை

குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என்கிறது ஜமாஅத்தே இஸ்லாமி

0 765

இலங்கை ஜமா­அத்தே இஸ்­லா­மிக்கோ அதன் முன்னாள் தலைவர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்­ப­ருக்கோ தடை­செய்­யப்­பட்ட தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்­பு­டனோ அல்­லது வேறு எந்த பயங்­க­ர­வாத அமைப்­பு­க­ளு­டனோ எத்­த­கைய உறவும் இல்லை என ஜமா­அத்தே இஸ்­லாமி அமைப்பு தெரி­வித்­துள்­ளது.
இது விட­ய­மாக அவ்­வ­மைப்பு வெளி­யிட்­டுள்ள ஊடக அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

இலங்கை ஜமா­அத்தே இஸ்­லா­மியின் முன்னாள் அமீர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் கொழும்பு குற்றத் தடுப்பு பிரி­வி­னரால் நேற்று அதி­காலை கைது செய்­யப்­பட்டார். தேசிய தௌஹீத் ஜமா­அத்­துக்கு அவர் உத­வி­ய­தாக தமக்கு முறைப்­பா­டுகள் கிடைக்­கப்­பெற்­றுள்­ள­தா­கவும் அது­பற்றி விசா­ரித்து வாக்­கு­மூலம் ஒன்றை பெறு­வ­தற்கு அவரை கைது செய்­வ­தா­கவும் கைது செய்ய வந்த குறித்த அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர்.

இது எத்­த­கைய அடிப்­ப­டை­க­ளு­மற்ற ஒரு குற்­றச்­சாட்­டாகும் என்­பதை இலங்கை ஜமா­அத்தே இஸ்­லாமி மிக உறு­தி­யாக தெரி­வித்துக் கொள்ள விரும்­பு­கி­றது.

இலங்கை ஜமா­அத்தே இஸ்­லாமி 1954 ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் ஒரு பதிவு செய்­யப்­பட்ட, நடு­நி­லை­யான சிந்­த­னையின் அடிப்­ப­டையில் செயல்­படும் சமூக சமய இயக்­க­மாகும். அது சட்­ட­பூர்­வ­மான வழி­மு­றை­களில் வெளிப்­படைத் தன்­மை­யோடு இயங்கும் ஒரு அமைப்பு என்­ப­துடன் எல்­லா­வி­த­மான தீவி­ர­வா­தங்­க­ளுக்கும் எதி­ரா­ன­தாகும்.

உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் கடந்த 24 வரு­டங்­க­ளாக இலங்கை ஜமா­அத்தே இஸ்­லா­மியை நடு­நிலைச் சிந்­த­னை­யோடு வழி­ந­டத்­திய ஒருவர் என்­பதை பொது­வாக இந்த நாட்டு மக்­களும் குறிப்­பாக முஸ்லிம் சமூ­கத்­தி­னரும் நன்­க­றிவர்.

இலங்கை ஜமா­அத்தே இஸ்­லா­மிக்கோ அதன் முன்னாள் தலைவர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்­க­ளுக்கோ தடை­செய்­யப்­பட்ட தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்­பு­டனோ அல்­லது வேறு எந்த பயங்­க­ர­வாத அமைப்­பு­க­ளு­டனோ எத்­த­கைய உறவும் இல்லை என்­பதை ஜமாஅத் திட்­ட­வட்­ட­மாக கூற விரும்­பு­கி­றது. இந்த விசா­ர­ணை­களை மேற்­கொள்­கின்ற சட்டம் ஒழுங்கை நிலை­நாட்டும் தரப்பினர் நீதியான விசாரணைகளை மேற்கொண்டு உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் தொடர்பில் நியாயம் வழங்குவார்கள் என்று இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி உறுதியாக நம்புகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.