நிகாப், புர்கா விவகாரம் :

அவசர கால சட்டம் நீக்கப்பட்ட நிலையிலும் தெளிவற்ற நிலை

0 881

இலங்­கையில் கடந்த நான்கு மாதங்­க­ளாக அமுல்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த அவ­சர கால சட்டம் நீக்­கப்­பட்­டுள்ள நிலையில், அதன் கீழ் தடை செய்­யப்­பட்ட முகத்தை முழு­மை­யாக மறைக்கும் புர்கா மற்றும் நிகாப் போன்ற ஆடை­க­ளுக்கு விதிக்­கப்­பட்ட தடை தொடர்ந்தும் அமுலில் இருக்­குமா இல்­லையா என்­பது தொடர்பில் தெளி­வற்ற நிலை ஏற்­பட்­டுள்­ளது. 

கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நடத்­தப்­பட்ட பயங்­க­ர­வாதத் தாக்­குதல் சம்­ப­வத்­தை­ய­டுத்து, ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி இரவு முதல் அவ­சர கால சட்­டத்தை பாது­காப்பு அமைச்­ச­ரான ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அமுல்­ப­டுத்­தி­யி­ருந்தார்.

பொது­மக்கள் பாது­காப்பு கட்­டளைச் சட்­டத்தின் இரண்­டா­வது சரத்தில் ஜனா­தி­ப­திக்கு வழங்­கப்­பட்­டுள்ள அதி­கா­ரத்­திற்கு அமை­யவே அவ­சர கால அமு­லாக்கம் தொடர்­பான வர்த்­த­மானி வெளி­யி­டப்­பட்­டி­ருந்­தது.

அதனைத் தொடர்ந்து, ஜனா­தி­ப­தி­யினால் அமுல்­ப­டுத்­தப்­பட்ட அவ­சர கால சட்­டத்­திற்கு பாரா­ளு­மன்றம் ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி அனு­மதி வழங்­கி­யது. அன்று முதல் ஒவ்­வொரு மாதமும் 22ஆம் திகதி அவ­சர கால சட்­டத்தை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நீடித்து வந்­தி­ருந்தார்.

இந் நிலையில் அவ­சர கால சட்ட விதி­களின் கீழ், தேசிய பாது­காப்பை கருத்திற்கொண்டு முகத்தை முழு­மை­யாக மூடி ஆடை அணிய தடை விதித்து வர்த்­த­மானி வெளி­யி­டப்­பட்­டது.

இந் நிலையில் அவ­சர கால சட்டம் நீக்­கப்­பட்­டுள்ள நிலையில், முகத்தை மூடி ஆடை அணிய விதிக்­கப்­பட்ட தடையும் நீங்­கி­யுள்­ளதா, இல்­லையா என்­பதில் தொடர்ந்தும் குழப்பம் நீடிக்­கின்­றது.

அத்­த­கைய நிகாப் மற்றும் புர்கா ஆடை­களை பொது வெளியில் அணி­வது தண்­டனைக்குரிய குற்­றமா இல்­லையா என்­பதில் குழப்பம் தொடர்­கின்­றது. எனினும், அவ­சர கால சட்டம் நீக்­கப்­பட்ட போதும் நாட்டின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்தும் வகையில் ஒவ்­வொரு மாவட்­டத்­திற்கும் பொலி­ஸா­ருக்கு ஒத்­து­ழைப்­பு­களை வழங்க இரா­ணுவம் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக இரா­ணுவ ஊடகப் பேச்­சாளர் பிரி­கே­டியர் சுமித் அத்­த­பத்து தெரி­வித்தார்.

பொது­மக்கள் பாது­காப்பு கட்டளைச் சட்டத்தின் 12 ஆவது சரத்திற்கமைய, ஜனா­தி­ப­திக்கு வழங்­கப்­பட்­டுள்ள அதி­கா­ரங்­களை பயன்­ப­டுத்­தியே ஜனா­தி­பதி இந்த தீர்­மா­னத்தை எட்­டி­யுள்­ள­தாக பிரிகேடியர் சுமித் அத்தபத்து கூறினார்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.