இனவாதத் தேரில் தொடரும் ரதன தேரரின் அரசியல் பயணம்…

0 879

கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழமை அடிப்­ப­டை­வாதி சஹ்ரான் ஹாசீம் தலை­மை­யி­லான குழு­வினால் நாட்டில் மேற்­கொள்­ளப்­பட்ட ஈஸ்டர் தற்­கொலை குண்டுத் தாக்­கு­த­லினை அடுத்து முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக பல்­வேறு வகை­யான இன­வாதப் பிர­சா­ரங்கள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன.

இதில் குரு­நாகல் போதனா வைத்­தி­ய­சா­லையின் வைத்­தியர் ஷாபி சிஹாப்­தீ­னுக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­பட்ட போலி இன­வாதப் பிர­சாரம்; மிகப் பிர­பல்­ய­மாக பேசப்­பட்­ட­தொன்­றாகும்.

அது­ர­லிய ரதன தேரர்

அர­சியல் ரீதி­யாக தோல்­வி­யுற்­ற­வர்­க­ளி­னா­லேயே இந்த இன­வாத பிர­சா­ரங்கள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. அந்த அடிப்­ப­டையில் ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் தேசியப் பட்­டியல் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான அது­ர­லிய ரதன தேர­ரி­னாலும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக தொடர்ச்­சி­யாக பிர­சா­ரங்கள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன.

தற்­போது அர­சி­யலில் பாரிய பின்­ன­டைவை எதிர்­நோக்­கி­யுள்ள அது­ர­லிய ரதன தேரர், தனது செல்­வாக்­கினை சிங்­கள மக்கள் மத்­தியில் அதி­க­ரிப்­ப­தற்­காவே இந்த நட­வ­டிக்­கை­யினை மேற்­கொள்­வ­தாக சிங்­கள நண்­பர்கள் தெரி­விக்­கின்­றனர்.

எவ்­வா­றா­யினும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக அது­ர­லிய ரதன தேர­ரினால் மேற்­கொள்­ளப்­பட்ட அனைத்து இன­வாதப் பிர­சா­ரங்­களும் தோல்­வி­யி­லேயே முடி­வ­டைந்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது. 1962ஆம் ஆண்டு பிறந்த அது­ர­லிய ரதன தேரர், கம்­பஹா மாவட்ட மக்கள் பிர­தி­நி­தி­யாக 2004ஆம் ஆண்டு பாரா­ளு­மன்றம் நுழைந்தார்.

ஜாதிக ஹெல உரு­மய

திலக் கரு­ணா­ரட்­னவின் தலை­மையில் முன்­னெ­டுக்­கப்­பட்ட சிஹல உரு­மய என்ற கட்­சியே பின்னர் ஜாதிக ஹெல உரு­மய என பெயர் மாற்­றப்­பட்­டது. இந்தக் கட்­சியின் ஸ்தாபக உறுப்­பி­னர்­களில் அது­ர­லிய ரதன தேரரும் ஒரு­வ­ராவார்.

2003ஆம் ஆண்டு காலப் பகு­தியில் ஆட்­சி­யி­லி­ருந்த ஐக்­கிய தேசிய கட்சி அர­சாங்­கத்­திற்கும் தமி­ழீழ விடு­தலைப் புலி­க­ளுக்கும் இடையில் மேற்­கொள்­ளப்­பட்ட புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தத்­திற்கு எதி­ராக இந்தக் கட்சி நாட­ளா­விய ரீதியில் பாரிய பிர­சா­ரங்­களை மேற்­கொண்டு மக்கள் மத்­தியில் பிர­பல்யம் அடைந்­ததை அடுத்து 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் 2 ஆம் திகதி இடம்­பெற்ற பாரா­ளு­மன்றத் தேர்­தலில் தனித்துப் போட்­டி­யிட்டு 225 ஆச­னங்­களில் ஒன்­பது ஆச­னங்­களை ஜாதிக ஹெல உரு­மய கைப்­பற்­றி­யது.

பௌத்த தேரர்­க­ளான இந்த ஒன்­பது பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் ஊடாக முதற் தட­வை­யாக தேரர்கள் பாரா­ளு­மன்றம் சென்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.
எவ்­வா­றா­யினும் இந்தக் கட்­சிக்குள் பல தட­வைகள் பாரிய பிள­வுகள் இடம்­பெற்ற போதிலும் தனது பாரா­ளு­மன்ற உறுப்­பு­ரி­மை­யினை அது­ர­லிய ரதன தேரர் 2004ஆம் ஆண்­டி­லி­ருந்து இன்­று­வரை பாது­காத்து வரு­கின்றார்.

2004ஆம் ஆண்டு நடை­பெற்ற பாரா­ளு­மன்ற தேர்­தலில் தனித்துப் போட்­டி­யிட்ட ஜாதிக ஹெல உரு­மய 2010ஆம் ஆண்டு அப்­போ­தைய ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவுடன் இணைந்து ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பில் போட்­டி­யிட்­டது. எனினும் இந்த தேர்­தலில் குறைந்­த­ள­வான ஆசனங்­க­ளையே கைப்­பற்­றி­யது.

பின்னர் 2015ஆம் ஆண்டு இடம்­பெற்ற ஜனா­தி­பதி தேர்­தலில் இந்தக் கட்சி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விற்கு ஆத­ர­வ­ளித்­த­துடன் பாரா­ளு­மன்ற தேர்லில் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான ஐக்­கிய தேசிய முன்­ன­ணியில் போட்­டி­யிட்டு மூன்று ஆச­னங்­களை மாத்­திரம் கைப்­பற்­றி­யது.

இதில் அது­ர­லிய ரதன தேரர், தேசியப் பட்­டியல் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக நிய­மிக்­கப்­பட்டார். எவ்­வா­றா­யினும் 2004, 2005, 2010 மற்றும் 2015 ஆகிய ஆண்­டு­களில் இடம்­பெற்ற அனைத்து தேர்­தல்­க­ளிலும் இவர் முன்­னிலை பேச்­சா­ள­ராக செயற்­பட்டார்.

எனினும், 2015ஆம் ஆண்டின் பிற்­பாடு ஜாதிக ஹெல உரு­ம­ய­விற்குள் ஏற்­பட்ட பிள­வை­ய­டுத்து அது­ர­லிய ரதன தேரர் அக்­கட்­சி­யி­லி­ருந்து ஓரங்­கட்­டப்­பட்டார். இதனால் பாரா­ளு­மன்­றத்தில் சுயா­தீ­ன­மாக செயற்­ப­ட­வுள்­ள­தாக அறி­வித்த அவர், ஜாதிக ஹெல உரு­மய அங்கம் வகிக்கும் பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான அர­சாங்­கத்­திற்கு எதி­ராக செயற்­பட்டார். எனினும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் நல்­லுறவைப் பேணியே வந்தார்.

இவ்­வா­றான நிலையில் கடந்த ஒக்­டோபர் 26ஆம் திகதி நாட்டில் இடம்­பெற்ற அர­சியல் ஸ்திரத்­தன்­மையின் போது ஜனா­தி­பதி மைத்­ரி­பால சிறி­சே­ன­வினால் பிர­த­ம­ராக நிய­மிக்­கப்­பட்ட மஹிந்த ராஜபக் ஷவிற்கு இவர் ஆத­ர­வ­ளித்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

எனினும், இந்த ஆத­ர­வ­ளிப்பின் ஊடாக மக்கள் மத்­தியில் தான் இழந்­துள்ள செல்­வாக்­கினை கட்­டி­யொ­ழுப்ப அது­ர­லிய ரதன தேர­ரினால் முடி­ய­வில்லை. இவ்­வா­றான நிலையில் அடுத்த தடவை எவ்­வாறு பாரா­ளு­மன்றம் செல்ல முடி­யு­மெனத் தவித்துக் கொண்­டி­ருந்த இவ­ருக்கு சஹ்ரான் ஹாசீம் தலை­மை­யி­லான குழு­வினால் மேற்­கொள்­ளப்­பட்ட தற்­கொலை குண்டுத் தாக்­குதல் தீனி போட்­ட­தாக இருந்­தது.

முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான பிர­சாரம்

ஏற்­க­னவே விடு­தலைப் புலி­க­ளுக்கு எதி­ரான பிர­சா­ரத்­தினை மேற்­கொண்டு மக்கள் மத்­தியில் பிர­பல்­ய­ம­டைந்­ததைப் போன்று இந்த தற்­கொலை தாக்­கு­த­லினை அடிப்­ப­டை­யாக வைத்து முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ராக பிர­சா­ரத்­தினை முன்­னெ­டுத்து பிர­பல்­ய­ம­டைய முயற்­சித்தார்.

இவரின் இந்தப் பிர­சார செயற்­பாடு கட்­டுக்­க­டுங்­காத நிலையில் சென்­ற­போதும் அதனை கட்­டுப்­ப­டுத்த அர­சாங்கம் எந்த நட­வ­டிக்­கை­யி­னையும் மேற்­கொள்­ளாமை பாரிய தவ­றாகும். எவ்­வா­றா­யினும் இவ­ரது பிர­சார நட­வ­டிக்­கைகள் அனைத்தும் தோல்­வி­யி­லேயே நிறை­வ­டைந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

அதா­வது, அமைச்சர் றிசாத் பதி­யு­தீ­னிற்கு எதி­ராக கூட்டு எதிர்க்­கட்­சி­யி­னரால் நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணை­யொன்று பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்­டி­ருந்­தது.

இதற்கு ஆத­ர­வாக வாக்­க­ளிக்க தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பின் சில பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் கிறிஸ்­தவ பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் தயா­ரா­க­வி­ருந்­தனர். இந்த நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணை­யினை வெற்றி கொள்­வதன் ஊடாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான அர­சாங்­கத்­தினை வீட்­டுக்கு அனுப்ப கூட்டு எதிர்க்­கட்­சி­யினர் தயா­ராக­வி­ருந்­தனர்.

இந்த சந்­தர்ப்­பத்தில் ரிஷாத் பதீ­யு­தீனை அமைச்சர் பத­வி­யி­லி­ருந்தும், அசாத் சாலி மற்றும் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்­புல்லாஹ் ஆகி­யோ­ரினை ஆளுநர் பத­வி­யி­லி­ருந்தும் நீக்­கு­மாறு கோரி கண்டி, தலதா மாளி­கைக்கு முன்­பாக அது­ர­லிய ரதன தேரர் உண்­ணா­வி­ர­தத்­தினை மேற்­கொண்டார்.

இத­னை­ய­டுத்து அனைத்து முஸ்லிம் அமைச்­சர்கள், இரா­ஜாங்க அமைச்­சர்கள் மற்றும் பிரதி அமைச்சர் ஆகியோர் கூட்­டாக இணைந்து தமது பத­வி­யினை இரா­ஜி­னாமாச் செய்­தனர்.

இதனால் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் செல்­வாக்கு அதி­க­ரித்­த­துடன் கூட்டு எதிர்க்­கட்­சியின் பகல் கன­விற்கு ஆப்பு வைக்­கப்­பட்­டது. இதனால் ஆத்­தி­ர­ம­டைந்த கூட்டு எதிர்க்­கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், அது­ர­லிய ரதன தேரரை கூட்டு எதிர்க்­கட்­சியின் பாரா­ளுன்ற குழுக் கூட்­டத்தில் கடு­மை­யாக விமர்­சித்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

அத்­துடன் கடந்த ஓகஸ்ட் 11ஆம் திகதி இடம்­பெற்ற ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவின் வரு­டாந்த மாநாட்டில் கலந்­து­கொள்ள இவர் முயற்­சித்த போது, அதற்கு குறித்த கட்­சியின் தலைமை பீடம் அனு­மதி வழங்­க­வில்லை என்­பது முக்­கிய விட­ய­மாகும்.

இத­னை­ய­டுத்து குரு­நாகல் போதனா வைத்­தி­ய­சா­லையின் வைத்­தியர் ஷாபி சிஹாப்­தீ­னுக்கு எதி­ராக போலிக் குற்­றச்­சாட்­டொன்­றினை முன்­வைத்தார். எனினும் குற்­றப்­பு­ல­னாய்வு பிரி­வி­னரின் நடு­நி­லை­யான விசா­ர­ணை­யினால் குறித்த வைத்­தியர் குற்­ற­மற்­றவர் என நிரூ­பிக்­கப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

வைத்­தியர் ஷாபி சிஹாப்­தீ­னுக்கு எதி­ராக அது­ர­லிய ரதன தேர­ரினால் முன்­வைக்­கப்­பட்­டுள்ள போலிக் குற்­றச்­சாட்­டினால் இன்று எமது நாட்டின் வைத்­தி­யத்­துறை சர்­வ­தேச ரீதியில் பாரிய சர்ச்­சை­களை எதிர்­நோக்­கி­யுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

மேற்­கு­றிப்­பிட்ட இரண்டு விட­யங்­க­ளிலும் பாரிய தோல்­வி­யினை அது­ர­லிய ரதன தேரர் எதிர்­நோக்­கி­ய­துடன் சிங்­கள மக்கள் மத்­தியில் காணப்­பட்ட குறைந்­த­ள­வான செல்­வாக்­கி­னையும் தற்­போது இழந்­துள்­ள­மை­யினை அவ­தா­னிக்க முடி­கின்­றது.

இவ்­வா­றான நிலையில் கல்­முனை உப பிர­தேச செய­லக தர­மு­யர்த்தல் விவ­கா­ரத்தில் தமிழ் மக்­க­ளுக்கு ஆத­ர­வ­ளிப்­ப­தற்­காக கல்­முனை சென்ற அது­ர­லிய ரதன தேர­ருக்கு முஸ்லிம் தரப்­பி­னரால் வழங்­கப்­பட்ட தெளி­வூட்­ட­லை­ய­டுத்து குறித்த விட­யத்­தி­லி­ருந்து அவர் பின்­வாங்­கினார்.

மட்­டக்­க­ளப்பு கெம்பஸ்

இவ்­வா­றான நிலையில் தற்­போது அவர் கையில் எடுத்­துள்ள விடயம் தான் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்­புல்­லாஹ்­வினால் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தின் எல்லைக் கிரா­ம­மான புனா­னையில் நிர்­மா­ணிக்­கப்­பட்டு வரும் மட்­டக்­க­ளப்பு கெம்பஸ் விவ­கா­ர­மாகும்.

இந்த கெம்பஸ் விவ­காரம் தொடர்பில் அண்­மையில் கொழும்பில் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்­புல்லாஹ் கருத்து தெரி­விக்­கையில்,
“மட்­டக்­க­ளப்பு கெம்­ப­ஸினை ஒரு­போதும் அர­சாங்­கத்­தினால் சுவீ­க­ரிக்க முடி­யாது. எனினும் இந்த விவ­கா­ரத்தில் அர­சாங்­கத்­துடன் இணைந்து செயற்­பட எப்­போதும் தயா­ரா­க­வுள்ளோம்.

இந்தப் பல்­க­லை­க­ழ­கத்தின் முகா­மைத்­துவ செயற்­பட்டில் 50:50 என்ற அடிப்­ப­டையில் அர­சாங்­கத்­துடன் இணைந்து செயற்­பட முடியும். சவூதி அரே­பி­யாவின் ஜித்தா நக­ரினை தள­மாகக் கொண்டு செயற்­படும் அல் ஜுபைல் நன்­கொடை மன்­றத்தின் ஊடாக உல­கி­லுள்ள பல நாடு­களின் கல்வி நட­வ­டிக்­கை­க­ளுக்­காக நிதி­யு­தவி வழங்­கப்­ப­டு­கின்­றது.

அந்த அடிப்­ப­டை­யி­லேயே குறித்த அமைப்­பினால் மட்­டக்­க­ளப்பு கெம்­பஸின் நிர்­மாணப் பணிக்கு வட்­டி­யின்றி இலகு கடன் அடிப்­ப­டையில் கட­னு­தவி வழங்­கப்­பட்­டது. இந்த நிதி­யினை பல்­க­லைக்­க­ழக கல்வி நட­வ­டிக்­கைகள் ஆரம்­பிக்­கப்­பட்ட திக­தி­யி­லி­ருந்து ஐந்து வரு­டங்­களின் பின்னர் 15 வரு­டங்­க­ளுக்குள் செலுத்தி முடிக்க வேண்டும். இங்கு எந்­த­வித ஷரீஆ கற்­கை­நெ­றியும் கற்­பிக்­கப்­ப­ட­வில்லை.

அதே­போன்று சவூதி நிதி­யத்தின் ஒரு தலை­யீடும் இந்த பல்­க­லைக்­க­ழ­கத்தில் இல்லை. இந்த நிர்­வா­கி­க­ளாக எமது நாட்­டினை சேர்ந்­த­வர்­களே உள்­ளனர். இலாப நோக்­க­மற்ற அடிப்­ப­டை­யி­லான இதன் பல்­க­லைக்­க­ழ­கத்தின் ஊடாக கிடைக்­கப்­பெறும் வரு­மா­னத்தில் 90 சத­வீ­த­மா­னவை பல்கலைக்க­ழத்­திற்கே செல்லும். மிகுதி 10 சத­வீ­தத்­தினை மாத்­தி­ரமே கம்­பஸின் பணிப்­பா­ளர்கள் பெற முடியும்” என்றார்.

இவ்­வா­றன நிலையில் இந்த பல்­க­லைக்­க­ழகம் தொடர்பில் ஆராய்­வ­தற்­காக நிதி­ய­மைச்சர், உயர் கல்­வி­ய­மைச்சர் மற்றும் சர்­வ­தேச வர்த்­தக அமைச்சர் ஆகி­யோரைக் கொண்ட அமைச்­ச­ரவை உப குழு­வொன்­றினை அமைச்­ச­ரவை நிய­மித்­துள்­ளது.

இந்தக் குழுவின் செயற்­பாடு ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ள நிலை­யி­லேயே அது­ர­லிய ரதன தேரர், குறித்த கெம்­ப­ஸிற்கு எதி­ரான பொய் பிர­சா­ரத்­தி­னையும் முன்­னெ­டுத்­துள்ளார்.

இதன் ஓர் அங்­க­மாக கடந்த சில மாதங்­க­ளுக்கு முன்னர் கெம்­ப­ஸிற்கு பலவந்தமாக நுழைந்து குறித்த பல்கலைக்கழகத்தினை பார்வையிட்டார். இவ்வாறான நிலையில் மட்டக்களப்பு கெம்பஸிற்கு எதிராக மட்டக்களப்பு, கிரான் பிரதேசத்தில் கடந்த திங்கட்கிழமை (19) மக்கள் சந்திப்பொன்றையும் ஆர்ப்பாட்டமொன்றினையும் அவர் ஏற்பாடு செய்திருந்தார். தமிழ் மக்களினால் தோற்கடிக்கப்பட்ட சில தமிழ் அரசில்வாதிகளும் அவர்களின் ஆதரவாளர்கள் சிலர் மாத்திரமே இதில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

சஹ்ரான்களை உருவாக்கும் ஹிஸ்புல்லாவின் பல்கலைக்கழகத்தை அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருமாறு இதன்போது கோரிக்கை விடுத்தனர். அத்துடன் இந்த பல்கலைக்கழகமானது இஸ்லாமிய தீவிரவாத தற்கொலைதாரிகளை உருவாக்குவதற்கும், மதவாத உரமூட்டும், மூளைச்சலவை செய்யும் கோட்பாடு சார்ந்த இடமாகும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டினர்.

எனினும், குறித்த நிகழ்வு எதிர்பார்த்த மக்கள் ஆதரவின்றி பிசுபிசுத்துப் போனமை குறிப்பிடத்தக்கது. எவ்வாறாயினும் முஸ்லிம்களுக்கு எதிராக அதுரலிய ரதன தேரரினால் தற்போது முன்வைக்கப்படும் போலிப் பிரசாரங்களை சிங்கள மக்கள் கணக்கிலெடுப்பதில்லை.

அது மாத்திரமல்லாமல், தமிழ் மக்களின் ஆதரவுடன் இந்த பிரசாரங்களை முன்னெடுக்க அவர் முயற்சித்து வருகின்றார். எனினும் அதற்கு தமிழ் மக்கள் இதுவரை சந்தர்ப்பம் வழங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும் அதுரலிய ரதன தேரரினால் முன்வைக்கப்படும் பிரசாரங்கள் போலியானவை என்பதனை முஸ்லிம் மக்கள் ஏனைய சமூகத்தினருக்கு உடனடியாக தெரிவிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பது கட்டாயமாகும்.

றிப்தி அலி

vidivelli

Leave A Reply

Your email address will not be published.