நியூசிலாந்து தாக்குதலின் பின்னர் ஏராளமானோர் இஸ்லாத்தை தழுவியுள்ளனர்

0 1,027

நியூசிலாந்தில் அமைந்­துள்ள இரண்டு பள்­ளி­வா­சல்­களில் கடந்த மார்ச் மாதம் 15 ஆந் திகதி இடம்­பெற்ற தாக்­கு­தலின் பின்னர் பலர் இஸ்­லாத்தை தழு­வி­யுள்­ளனர்.

இஸ்­லாத்தை தழு­வு­வோரின் எண்­ணிக்கை அதி­க­ரிப்பு

இஸ்­லாத்தை தழுவும் நியூ­சி­லாந்து நாட்­ட­வர்­களின் எண்­ணிக்கை அதி­க­ரித்து வரு­வ­தாக நியூ­சி­லாந்து சர்­வ­தேச இஸ்­லா­மிய சங்­கத்தைச் சேர்ந்த இமாம் நிஸாமுல் ஹக் தான்வி தெரி­வித்தார்.

அனை­வரும் பள்­ளி­வா­ச­லுக்கு வரு­கின்­றனர். நியூ­சி­லாந்து பழங்­கு­டி­யினர், முன்னாள் கிறிஸ்­த­வர்கள் மற்றும் ஓர் இந்­து­கூட வந்­துள்­ளனர் எனவும் அவர் தெரி­வித்தார்.

தாக்­குதல் நடை­பெற்று சில வாரங்­களின் பின்னர் நாளொன்­றிற்கு மூன்று தொடக்கம் ஐந்து பேர் வெலிங்டன் பள்­ளி­வா­ச­லுக்கு வந்து இஸ்­லாத்தை தழு­வினர் எனவும் தான்வி தெரி­வித்தார். தாக்­கு­தலின் பின்­ன­ரான அடுத்த மாதம் நாளொன்­றிற்கு ஒருவர் அல்­லது இருவர் பள்­ளி­வா­ச­லுக்கு வந்து இஸ்­லாத்தில் இணைந்து கொண்­டனர்.

உள்ளூர் இஸ்­லா­மிய சங்­க­மான ‘மனா­வது’ அமைப்பின் தவி­சா­ள­ரான ஸுல்­பிகார் பூடொன் இஸ்­லாத்தைத் தழு­விய ஆறு­பேரை சந்­தித்­த­தா­கவும் மேலும் பலர் தொடர்பில் கேள்­வி­யுற்­ற­தா­கவும் தெரி­வித்தார்.

ஒடா­கோவில் அண்­மையில் நடை­பெற்ற திறந்த பள்­ளி­வாசல் நிகழ்­வின்­போது கையே­டு­க­ளுக்குத் தட்­டுப்­பாடு ஏற்­பட்­ட­தா­கவும் மேலு­மொரு திறந்த பள்­ளி­வாசல் நிகழ்­வினை நடத்தத் திட்­ட­மி­டப்­பட்­டுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­படும் அதே­வேளை, ஒக்­லேண்ட் பள்­ளி­வா­ச­லுக்கும் ஏரா­ள­மானோர் வருகை தரு­வ­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

தாக்­குதல் நடை­பெற்று ஒரு சில தினங்­களே கடந்­தி­ருந்த நிலையில் இறுதி மரி­யா­தையைச் செலுத்­து­வ­தற்­காக நொட்­டிங்ஹாம் ஷயா­ரி­லி­ருந்து பீஸ்டன் நகரில் அமைந்­துள்ள இப்­ராஹீம் பள்­ளி­வா­ச­லுக்கு வரு­கை­தந்த பிரித்­தா­னியப் பெண்­ம­ணி­யொ­ருவர் முஸ்­லி­மா­கவே அங்­கி­ருந்து வெளி­யே­றினார்.

கிரைஸ்ட்சேர்ச் பள்­ளி­வா­சலில் மேற்­கொள்­ளப்­பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் கூறுவதற்காக ஆல் பிளக்ஸ் ரக்பி விளையாட்டு வீரர் ஒபா துங்காபாஸி தனது அணியில் விளையாடும் முஸ்லிம் வீரருடன் வந்திருந்த நிலையில் இஸ்லாத்தைத் தழுவினார்.
நியூசிலாந்து நாட்டவர்களான முஸ்லிம்களின் எண்ணிக்கை சுமார் 60,000 ஆக அதிகரித்துள்ளதாக நியூசிலாந்து சர்வதேச இஸ்லாமிய சங்கத்தின் தலைவர் தாஹிர் நவாஸ் தெரிவித்தார்.

மெகான் லவ்­லேடி

அமெ­ரிக்­காவில் பிறந்த இவர் தனது ஏழா­வது வயதில் தனது குடும்­பத்­தி­ன­ருடன் அமெ­ரிக்­கா­வி­லி­ருந்து நியூ­சி­லாந்­திற்கு வந்து குடி­யே­றினார்.
சில ஆண்­டு­க­ளுக்கு முன்னர் மெகான் லவ்­லே­டியின் ஆண் நண்பர் அவ­ரது கண்­ணெ­தி­ரி­லேயே புகை­யி­ர­தத்தில் மோதுண்டு உயி­ரி­ழந்தார்.

அதன் பின்னர் கண்­ணீ­ரொடு வாழ்ந்த மெகான் லவ்­லேடி ‘எனக்கு மட்டும் ஏன் இப்­படி நடக்­கி­றது ?’ என தனக்­குத்­தானே கேட்­டுக்­கொண்டார். கடவுள் சர்வ வல்­லமை படைத்த ஒருவன் என்றால், இவ்­வா­றான நெருக்­க­டி­யி­லி­ருந்து பாது­காக்க அவனால் ஏன் முடி­யாமல் போய்­விட்­டது? இவ்­வா­றான சிந்­த­னைகள் மத நம்­பிக்­கை­யி­லி­ருந்து அவரைத் தூர­மாக்­கின.

கிரைஸ்ட்சேர்ச் தாக்­கு­தலின் பின்னர் ஹெக்லி பூங்­காவில் இடம்­பெற்ற வெள்­ளிக்­கி­ழமைத் தொழு­கைக்கு தாக்­கு­தலின் அதிர்ச்­சி­யி­லி­ருந்து இது­வரை மீளா­தி­ருக்கும் ஆயி­ரக்­க­ணக்­கா­னோ­ரோடு மெகானும் சென்றார்.

அங்கு இமாம் தொழுகை நடத்­தி­ய­விதம் அவ­ரது உள்­ளத்தைக் கவர்ந்­தது.
அதில் ஒரு ரிதம் இருந்­தது, எனக்குள் உணர்­வு­களை ஏற்­ப­டுத்­தி­யது எனத் தெரி­வித்த மெகான், அவர்­க­ளைப்­போன்ற உடல் அசை­வு­களை நானும் செய்ய வேண்­டு­மென விரும்­பினேன். ஆனால், எனக்கு எப்­படி அவற்றைச் செய்­வ­தென்­பது தெரி­யாது.

நான் வெறு­மனே அழு­து­கொண்டு நின்றேன் எனவும் அவர் குறிப்­பிட்டார்.
நான் எனது வீட்டில் இருப்­ப­து­போ­லவே உணர்­கின்றேன். ஒரு­போதும் இல்­லா­த­வாறு ஒரு சமூ­கத்தின் அங்­கத்­த­வராக இருப்­ப­தையும் உணர்­கின்றேன்.
அல்லாஹ் தனது வீட்­டிற்கு என்­னையும் அழைத்­துள்ளான் எனவும் அவர் தெரி­வித்தார்.

மிக அண்­மையில் இஸ்­லாத்தில் இணைந்­து­கொண்ட நியூ­சி­லாந்துப் பெண்­மணி மெகான் லவ்­லேடி ஆவார். ஆன்­மீக ரீதி­யாகவும் உணர்­வு­பூர்­வ­மா­கவும் தேடல்­களில் ஈடு­பட்­டி­ருந்த மெகான் லவ்­லே­டியின் தேடல் மார்ச் 15 பயங்­க­ர­வாதத் தாக்­கு­தலின் பின்னர் முடி­வுக்கு வந்­தது என ரேடியோ நியூ­சி­லாந்து அறி­வித்­தது.

எம்.ஐ.அப்துல் நஸார்

vidivelli

Leave A Reply

Your email address will not be published.