முஸ்லிம் எம்.பி.க்கள் மீண்டும் பதவிகளை ஏற்றமை முஸ்லிம்களை நட்டாற்றில் விட்டமைக்கு ஒப்பானது

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஸுஹைர்

0 724

இந்­நாட்டு முஸ்­லிம்­களின் நலன்­களை முன்­னி­றுத்தி தம் அமைச்சு, இரா­ஜாங்க அமைச்சு பிர­தி­ய­மைச்சு பத­வி­களை இரா­ஜி­நாமா செய்த முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் மீண்டும் பத­வி­களை ஏற்­றமை இந்­நாட்டு முஸ்லிம் சமு­தா­யத்தை நட்­டாற்றில் விட்­ட­மைக்கு ஒப்­பான செயல் என்று முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி எம்.எம். ஸுஹைர் தெரி­வித்­துள்ளார்.

ஜனா­தி­பதித் தேர்­த­லொன்றை எதிர்­நோக்­கி­யுள்ள சூழலில் முஸ்லிம் சமூ­கத்தின் மீது ஏற்­ப­டுத்­தப்­பட்ட அழுத்­தங்கள், நெருக்­க­டிகள் குறித்தும் முஸ்­லிம்­களின் எதிர்­காலம் குறித்தும் ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யிடும் பிர­தான கட்­சி­க­ளு­டனும், அவற்றின் அபேட்­ச­கர்­க­ளு­டனும் சுதந்­தி­ர­மாகப் பேச்­சு­வார்த்­தை­களை நடாத்தி நியா­ய­மான தீர்­வு­களைப் பெற்­றுக்­கொள்ளக் கிடைத்­தி­ருந்த சந்­தர்ப்­பத்தை முஸ்லிம் எம்.பிக்கள் மீண்டும் அமைச்சு பத­வி­களை ஏற்­றதன் ஊடாக இச்­ச­மூகம் இழந்­துள்­ளது எனவும் அவர் கூறி­யுள்ளார்.

தற்­போ­தைய அர­சியல் சூழல் மற்றும் இலங்கை முஸ்லிம் சமூகம் முகம் கொடுத்­துள்ள நிலை­மைகள் தொடர்பில் விடுத்­துள்ள அறிக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டுள்ளார்.

அந்த அறிக்­கையில் அவர் மேலும் குறிப்­பிட்­டி­ருப்­ப­தா­வது, அண்­மையில் பெரும்­பான்மை சமூ­கத்தைச் சேர்ந்த சிலர் இந்­நாட்டு முஸ்லிம் சமூ­கத்தின் மீது மேற்­கொண்ட அழுத்­தத்தை அடிப்­ப­டை­யாகக் கொண்டு முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தம் அமைச்சு, இரா­ஜாங்க அமைச்சு, பிர­தி­ய­மைச்சு பத­வி­களை இரா­ஜி­நாமா செய்­தனர். அந் நட­வ­டிக்­கையை முஸ்­லிம்கள் சரி­கண்டு வர­வேற்­றனர். ஆனால் பெரும்­பான்மை சமூ­கத்தைச் சேர்ந்த சிலர் ”நாம் எல்­லோ­ரையும் இரா­ஜி­நாமா செய்யச் சொல்­ல­வில்­லையே. மீண்டும் அமைச்சு பத­வியை ஏற்­றுக்­கொள்­ளுங்கள்” என்று கோரும் அள­வுக்கு நிலைமை ஏற்­பட்­டது.

இந்­நாட்டு முஸ்­லிம்­க­ளுக்கு பெரும்­பான்­மை­யினர் ஏற்­ப­டுத்திக் கொடுத்த அரு­மை­யான சந்­தர்ப்பம் இது­வாகும். இந்த சந்­தர்ப்­பத்தை உச்­ச­ளவில் பயன்­ப­டுத்தி பெரும்­பான்­மை­யினர் மத்­தியில் பரப்­பப்­படும் பொய் பிர­சா­ரங்­களை முறி­ய­டித்து சக­வாழ்­வையும் நல்­லி­ணக்­கத்­தையும் உறு­தி­யான முறையில் கட்­டி­யெ­ழுப்பி இருக்­கலாம்.

அதே­நேரம் முஸ்லிம் சமூ­கத்தின் மீதான இந்த அழுத்தம் இந்­நாடு ஜனா­தி­பதித் தேர்­த­லொன்றை எதிர்­நோக்கி இருக்கும் நிலையில் தான் தோற்­று­விக்­கப்­பட்­டது. அதனால் எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிடும் பிர­தான அர­சியல் கட்­சி­க­ளது தலை­வர்­க­ளோடும். வேட்­பா­ளர்­க­ளோடும் முஸ்லிம் சமூகம் எதிர்­கொண்­டுள்ள நெருக்­க­டிகள், பிரச்­சி­னைகள் குறித்த பேச்­சு­வார்த்­தை­க­ளையும் பேரம்­பே­சு­தல்­க­ளையும் சுயா­தீ­ன­மாக நடாத்தி இருக்க முடியும். அவற்றின் ஊடாக முஸ்லிம் சமூகம் எதிர்­கொண்­டுள்ள நெருக்­க­டிக்­ளையும், பிரச்­சி­னை­க­ளையும் கூட குறைக்­கவும் தணித்­தி­ருக்­கவும் முடியும்.

இருந்த போதிலும் இவை எதையும் கருத்தில் எடுத்து தூரநோக்­கோடு சிந்­தித்து செயற்­ப­டாது முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் மீண்டும் அமைச்சுப் பத­வி­களை ஏற்­றுக்­கொண்­டுள்­ளனர். தற்­போ­தைய சூழலில் அவர்கள் அமைச்சுப் பத­வி­களை மீண்டும் ஏற்­றி­ருக்­கக்­கூ­டாது. அது தான் பெரும்­பா­லான முஸ்­லிம்­களின் கருத்­தா­கவும் உள்­ளது.

எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்­தலில் ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்சி, ஐக்­கிய தேசியக் கட்சி, ஸ்ரீ லங்கா பொது­ஜன பெர­முன, மக்கள் விடு­தலை முன்­னணி ஆகிய நான்கு கட்­சி­களும் போட்­டி­யிடும் நிலைமை காணப்­ப­டு­கின்­றது. அக்­கட்­சிகள் தம் அபேட்­ச­கர்­களை தேர்­தலில் நிறுத்­து­வ­தற்­கான சாத்­தி­யங்கள் தான் பெரும்­பாலும் நிலவிக் கொண்­டி­ருக்­கின்­றன.

இவ்­வா­றான சூழலில் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அமைச்சு பத­வி­களை மீண்டும் ஏற்­காது இருந்­தி­ருந்தால் முஸ்லிம் சமூகம் எதிர்­கொண்­டுள்ள நெருக்­க­டிகள், பிரச்­சி­னைகள் குறித்து ஒவ்­வொரு கட்­சி­யோடும் அதன் அபேட்­ச­க­ரோடும் சுதந்­தி­ர­மாக இருந்து பேசி இருக்­கலாம். அதன் ஊடாக முஸ்லிம் சமூ­கத்தின் நெருக்­க­டி­க­ளுக்கு நியா­ய­மான தீர்­வு­களைப் பெற்­றி­ருக்­கலாம். அவற்­றிற்­கான உத்­த­ர­வா­தங்­களை தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் உள்­ள­டக்­கக்­கூட வழி செய்­தி­ருக்க முடியும்.

ஆனால் அமைச்சுப் பத­வி­களை மீண்டும் ஏற்­றதன் ஊடாக அந்த பொன்­னான சந்­தர்ப்­பத்தை முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தவ­ற­விட்­டுள்­ளனர். இதே­போன்­ற­தொரு தவ­றைத்தான் 2015 இலும் முஸ்லிம் கட்­சிகள் விட்­டன. முஸ்லிம் சமூகம் எதிர்­கொள்ளும் பிரச்­சி­னைகள் குறித்து எவ்­வித பேரம்­பே­சு­தல்­க­ளையும் மேற்­கொள்­ளாது ஜனா­தி­பதி அபேட்­ச­க­ருக்கு ஆத­ரவு நல்­கினர்.
இப்­போது அமைச்சுப் பத­வி­களை மீண்டும் ஏற்­றதால் இவர்கள் தம்மை ஒரு முகா­முக்குள் மட்­டுப்­ப­டுத்திக் கொண்­டுள்­ளனர். இதன் விளை­வாக ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிடும் நான்கு பிர­தான கட்­சி­க­ளோடும் அவற்றின் அபேட்­ச­கர்­க­ளோடும் முஸ்­லிம்கள் முகம் கொடுத்­தி­ருக்கும் நெருக்­க­டிகள் குறித்து சுதந்­தி­ர­மாகப் பேச முடி­யாத நிலையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளனர். ஒரு அணிக்குள் இருந்து கொண்டு சுதந்­தி­ர­மான பேச்­சு­வார்த்­தை­க­ளையோ பேரம் பேசு­தல்­க­ளையோ நடாத்­தவும் முடி­யாது. முஸ்­லிம்கள் தொடர்­பான விட­யங்­களை தேர்தல் விஞ்­ஞா­ப­னங்­களில் உள்­ள­டக்­கவும் கிடைக்­காது.

இன்­றைய கால­கட்­டத்தில் இந்­நாட்டு முஸ்­லிம்கள் பல்­வேறு வித­மான பிரச்­சி­னை­க­ளுக்கு முகம் கொடுத்துக் கொண்­டி­ருக்­கின்­றனர். குறிப்­பாக ஏப்ரல் 21 தாக்­கு­தலின் பின்னர் உரு­வா­கி­யுள்ள நிலைமை, உள்­நாட்டு யுத்தம் முடி­வுற்று பத்து வரு­டங்கள் கடந்தும் இற்­றை­வ­ரையும் வடக்கு முஸ்­லிம்கள் மீண்டும் சொந்த இடங்­க­ளுக்கு செல்ல முடி­யாத நிலை நீடிக்­கின்­றமை உள்­ளிட்ட பல விட­யங்கள் உள்­ளன.

ஆனால் அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்­காது எதி­ர­ணியில் இருந்­த­படி எத்­த­னையோ விட­யங்­களை தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு சாதித்­துள்­ளது. அவற்றில் பாது­காப்பு படை­யினர் வச­மி­ருந்த பல மக்­களின் காணிகள் விடு­விக்­கப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

இதே­நேரம் பேராயர் கர்­தினால் மல்கம் ரன்ஜித், ஏப்ரல் 21 தாக்­கு­தலின் பின்­னணி, அதில் சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் உள்­ளிட்ட விட­யங்­களைப் பகி­ரங்­கப்­ப­டுத்தி பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு நியாயம் பெற்­றுக்­கொ­டுக்­காமல் எந்­த­வொரு ஜனா­தி­பதி அபேட்­ச­கரும் தம்மை சந்­திக்க வர­வேண்டாம் என்று குறிப்­பிட்­டி­ருக்­கின்றார்.

இருப்­பினும் முஸ்லிம் கட்­சிகள் ஜனா­தி­பதி அபேட்­ச­கரை அறி­வித்த பின்னர் தமது முடி­வு­களை அறி­விப்போம் எனக் கூறி­யுள்­ளன. ஆனால் ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யிடும் பிர­தான கட்­சிகள் தேர்தல் விஞ்­ஞா­னத்தைத் தயா­ரிப்­ப­தற்­கான கலந்­து­ரை­யா­டல்­களைக் கூட ஆரம்­பித்து விட்­ட­தா­கவே தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

இவ்­வா­றான சூழலில் முஸ்லிம் கட்­சிகள் முஸ்லிம் சமூகம் முகம் கொடுத்­துள்ள நிலைமை குறித்து ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிடும் கட்­சி­க­ளோடும் அபேட்­ச­கர்­க­ளோடும் பேரம்­பே­சு­தல்­களை நடாத்தி அவற்­றுக்கு பெற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய தீர்­வு­களை தேர்தல் விஞ்­ஞா­ப­னங்­களில் உள்­ள­டக்­கு­வது குறித்து கவனம் செலுத்தி செயற்பட வேண்டிய காலம் இது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.